08.The Astor Bloodline
அஸ்டர் செல்வமாக்கும் மந்திர தந்திரங்களை அறிந்தவன்.
இவன் ஒரு யூதன். இவன் ஜேர்மனியைச் சேர்ந்தவன். இவன் ஆரம்பத்தில் கம்பளி
விற்று பின்பு கள்ளக்கடத்தல் வேலை செய்ய ஆரம்பித்தான்.
கம்பளித் தொழிற்சாலை, ஓப்பியம், கள்ளக்கடத்தல், நிலம்வீடு வாங்கி விற்றல்
இவர்களின் குடும்பத் தொழில்.
இசைக்கருவித் தொழிற்சாலை இவர்களிடம் உண்டு.
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள மிகப் பிரமாண்டமான பெரிய
கட்டிடங்களில் நூற்றுக் கணக்கானது இவர்களுக்குச் சொந்தம்.
09.The Bundy Bloodline
இவர்கள் மந்திர மாயவித்தையை செய்கின்றவர்கள்.
முதல் ஃவண்டி குடும்பம் 1635 இலேயே அமெரிக்காவிற்கு வந்து குடியேறினார்கள்.
மேலும் இவர்கள் சாத்தானின் உந்து சக்தியால் பல கொலைகளை கொடுரமாகச் செய்பவர்கள்.
10.The Collins Bloodline
இந்தக் குடும்பம் பூசாரிக் குடும்பம். தங்கள் இரத்தத்திலேயே மந்திர
மாந்தீரக சக்தி இருப்பதாக கூறுகின்றார்கள்.
அமெரிக்க உள்நாட்டுப் போருக்கு முன்பு குடும்பங்கள் பிரிந்து பல
இடங்களுக்கு குடிபெயர்ந்தது. அதில் ஒரு பிரிவு கொலின்ஸ் என்ற குடும்பப்
பெயரை ரொட்ஸ் (Todds) என்று மாற்றிக் கொண்டது. இந்தப் பெயர் சாத்தான்,
மாந்திரிகம் என்பதோடு தொடர்புடையது.
அமெரிக்க ஜனாதிபதிகளான மாடிசன், லிங்கன் ஆகிய இருவரும் இந்தக் குடும்பப்
பெண்களை திருமணம் செய்தார்கள்.
கொலின்ஸ் குடும்பத்திற்கு இருக்கும் மந்திர சக்தியால் பணத்தை பலமடங்கு
பெருக்கச் செய்ய முடியும் என்று இல்லுமினாட்டி உறுதியாக நம்பியது.
இந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். கப்பல் தொழில், வங்கி, பத்திரிகை என
பலதுறைகளில் வியாபாரம் செய்கின்றார்கள்.
உலகத்தின் செய்தி தொடர்பாடல் (media) இவர்களது கட்டுப்பட்டிலேயே உள்ளது.
கொலின்ஸ் என்ற பெயர் அமெரிக்காவின் பல பகுதிகளுக்கு சூட்டப்பட்டுள்ளது.
11.The DuPont Bloodline
இந்தக் குடும்பத்தின் முக்கியத்தொழில் வெடிமருந்து.
இந்தக் குடும்பப் பூர்வீகம் ஃபிரான்ஸ்.
இவர்கள் அமெரிக்காவில் ஆரம்பித்த வெடிமருந்து தொழிற்சலைக்கு ஃபிரான்ஸ்
அரசாங்கம் மிக அதிநவீன இரகசிய இயந்திரங்களையும் வெடிமருந்து தயாரிக்கும்
முறைகளையும் அதற்கான ஆட்களையும் அனுப்பி உதவியது.
12.The Freeman Bloodline
1099ல் கிழக்கு பிரான்ஸில் அமைக்கப்பட்ட ஒரு இரகசியக் குழு பிரியாரி ஆஃப்
சியோன் ஆகும். இதில் லியானாடோ டாவின்சி கிராண்ட் மாஸ்ட்டராக
இருந்திருக்கின்றார்.
இக் குழுதான் Knight templar என்கின்ற மத இராணுவ அமைப்பை ஏற்படுத்தியது.
இவர்கள் யூதர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் எதிராக போரிடுபவர்கள்.
இது பழமைவாத ரோமன் கத்தோலிக்கர்களைக் கொண்ட குழு.
இந்தக் குழுவில் கிராண்ட் மாஸ்ட்டராக ஃபிரீமேன் குடும்பம் இருக்கிறது.
13.The Kennedy Bloodline
இவர்களது பூர்வீகம் அயர்லாந்த்.
ஜோன் எஃப் கென்னடியின் தந்தை ஜோசப் கென்னடி சீனியர் வங்கி, பங்குச்
சந்தை, சினிமா, மது விற்பனை என்று பல துறைகளில் பணத்தை அள்ளிக்
குவித்தவர்.
அவர் மிகப்பெரிய சொத்தை விட்டுவிட்டுப் போனதால்தான் அவருக்குப்பின் வந்த
கென்னடிகள் அரசியலால் தாராளமாக தங்கள் நேரத்தைச் செலவிட முடிந்தது.
இவர்களுக்கும் உலகமெங்கிலும் பல கம்பெனிகள் உண்டு. Kennedy real estate
holding என்பது இவர்களுடைய கம்பெனியிலே மிகப் பெரியது.
அயர்லாந்தில் இருந்து பல தலைமுறைகளுக்கு முன்பே இடம்பெயர்ந்து
அமெரிக்காவுக்கு குடியேறினவர்களில் 2 இலட்சம் கென்னடிக் குடும்பங்கள்
இருந்தபோதும், ஜோன் எஃப் கென்னடி குடும்பமே சாத்தானுக்குரிய
குடும்பமாகும்.
14.The Li Bloodline
ஹாங்காங்கை தன் முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பெருஞ்செல்வந்தன்
லீ கா ஷிங்க் தான் இல்லுமினாட்டியின் அங்கத்துவன்.
இந்த லீ குடும்ப அனுமதியில்லாமல் இன்றும் ஹாங்காங்கில் யாரும் பெரிய
தொழில் தொடங்க முடியாது.
மாஃபியா கும்பலைவிட மோசமான ட்ரையாட்ஸ் (triads) என்கின்ற இரகசியக்
குழுவை நடத்தி வருகிறவர்கள் இவர்கள் தான். இதில் அங்கத்தவராக சேர்வதற்கு
இரத்த சரித்திரம் மிக முக்கியம். சேர்க்கை சடங்கு 8 மணிநேரம் நடக்கும்.
சடங்கு நடனம், ரகசிய கைகுலுக்கும் முறை, இரத்தப் படையல், விரலைக் குத்தி
இரத்த திலகமிடல், இரத்த சபதம் செய்தல் என்று பல சம்பிரதாயங்கள் உண்டு.
இவர்கள் நிலத் தொழில், கப்பல் தொழில் அழகு சாதனங்கள், மருந்துகள்
விற்பனை, பங்குச்சந்தை என பல துறைகளை தமக்குச் சொந்தமாக
வைத்திருக்கிறார்கள். இவர்கள் மின் தயாரிப்பு தொழிற்சாலைகளை
நடத்துகின்றார்கள். Canadian Impertial bank of commerce இவர்களுடையது.
இவர்கள் பல மதங்களைச் சேர்த்து ஒரு மதமாக்கி அங்கே அந்த மதத்தின் மறைவில்
பல காரியங்களை செய்துவருவார்கள்.