ஒரு சமயம், யாரோ ஒருவர் ஒரு பெரிய கட்டிட வேலை நடக்கும் ஸ்தலத்தின்
வழியாய் நடந்து சென்று
கொண்டிருந்தார். அந்த கட்டிட வேலையில் அநேக ஜனங்கள் வேலை செய்து
கொண்டிருந்தார்கள்.
அங்கு நடந்த பணியைப் பார்த்த போது, ஏதோ ஒரு பெரிய கட்டிடத்தைக்
கட்டுகிறார்கள் என்பது மாத்திரம் தெளிவாய் தெரிந்தது.
சில ஜனங்கள் தரையில் ஆழமான குழிகளைத் தோண்டி கொண்டிருந்தார்கள்! சிலர்
மரத்தடிகளை தூக்கிச் சென்றார்கள்! சிலர் சிமெண்டையும் மணலையும் கலந்து
குழைத்துக் கொண்டிருந்தார்கள். . . .
இவ்வாறு அங்கு பல வேலைகள் நடந்து கொண்டிருந்தது. சிலரை கூப்பிட்டு இங்கு
என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? என்று அவர் கேட்டார்.
ஒருவர் கூறினார் "செங்கற்களை சுமந்து வருகிறோம்!"
மற்றொருவர் "தச்சு வேலை செய்து கொண்டிருக்கிறேன்!" என்றார்.
மற்றொருவர் "நான் சிமெண்டும் மணலும் குழைத்து
கொண்டிருக்கிறேன்!" என்றார்.
கடைசியாக, அங்கு நின்று கொண்டிருந்தவர்களில் ஒருவர் "நான் இந்த
ஸ்தலத்தில் ஒரு பொறியாளராக பணியாற்றுகிறேன்"
எனக்கூறி, "இந்த இடத்தில் ஓர்பேராலயத்தை கட்டிக்கொண்டிருக்கிறோம்!" எனக் கூறினார்.
நாம் மனைவியர்களாய், தாய்மார்களாயிருந்து, மிகச் சாதாரண அன்றாட வேலைகளைச்
செய்து கொண்டிருக்கும்பொழுது, அந்த கட்டிட
வேலைக்காரர்களைப் போலவே "பிள்ளையின் மூத்திரத் துணியை மாற்றிக்கொண்டிருக்கிறேன்!"
அல்லது "வீட்டை பெருக்கி
க்கொண்டிருக்கிறேன்!"
அல்லது "சமைத்துக் கொண்டிருக்கிறேன்!"
அல்லது "பாத்திரம் விளக்கிக் கொண்டிருக்கிறேன்!" எனப் பல்வேறாக கூறலாம்.
ஆனால், தேவனோ இந்த 'எல்லா பணிகளையும்'
கொண்டு, நமக்குள்ளாக தன்னுடைய பரிசுத்த ஆலயத்தை கட்டிக்
கொண்டிருக்கிறார்! என்பதை நாம் அறிய வேண்டும்!!
இவ்வாறு, நம் வீட்டிலுள்ள அலுவல்களும், நம் குடும்ப ஜீவியமும் இணைந்தே,
'இயேசு கிறிஸ்துவின் மகிமைக்காக' அவர் வாசம் செய்யும் ஆலயமாய் நம்
குடும்பம் கட்டப்பட்டு வருகிறது!!
ஒரு ரூபாய் காசை வைத்து, நான் ஒரு உவமானம் கேள்விப்பட்டிருக்கிறேன்.
உங்கள் கண்களுக்கு முன்பாக, அந்த ஒரு ரூபாய் நாணயத்தை கண்ணுக்கு அருகில்
வைத்தால்.... உங்களுக்கு முன்பாக உதித்துக் கொண்டிருக்கும் சூரியனைக்கூட
நீங்கள்
காண இயலாது! எனக்கூறினார்.
இதுபோலவே நாம் அன்றாட சந்திக்கும் உலக காரியங்கள், நம் சம்பாத்தியங்கள்,
நம் சேமிப்புகள்.....
ஆகிய இவைகள், நம் ஆவிக்குரிய பார்வையை மறைத்துவிட முடியும்!
தாய்மார்களாகிய நாம் தேவனுடைய வெளிச்சத்தை இழந்திடக்கூடாது.
நான் வசிக்கும் பெங்களூர் நகரத்தில் தண்ணீர் பற்றாக்குறை அடிக்கடி
ஏற்படும். ஆகவே, தண்ணீரை சிக்கனமாய் பயன்படுத்தி, தண்ணீர் கிடைக்கும்
போதெல்லாம் எங்கள் தேவைகளுக்கு சேர்த்து வைக்க நான் சுறுசுறுப்பாய்
இருப்பேன்.
இவ்வாறு, வீட்டிலுள்ள அநேக சிறுசிறு காரியங்களைக் குறித்து நான் அதிக
பாரமும், சிந்தையும் கொண்டிருப்பேன்.
ஆனால், இயேசுவோ
"தேவையானது ஒன்றே!"
எனக் கூறியதை நான் அறிந்திருந்தேன்.
இயேசுவின் பாதத்தில் அமர்வதும், அவரை கவனித்து கேட்பதும் மரியாளின் நல்ல
பங்காய் இருந்தது!!
(லூக் .10:42).
எனக்கு இருந்த கவலையோ, இவ்வளவு நெருக்கமான வீட்டுவேலையின் மத்தியில்
இயேசுவின் பாதத்தில் அமர நேரம் இல்லையே என்பதுதான்!
அதன்பின்புதான், என் அன்றாட வேலையின் நெருக்கத்தின் மத்தியில், என் மனது
ஆண்டவரிடத்தில் அமர்ந்திருக்க முடியும் என்பதைக்
கற்றுக்கொண்டேன்!
இவ்வாறாக மார்த்தாளின் சுறுசுறுப்பான கரங்களை கொண்டவளாய் நான் இருந்தாலும்,
மரியாளின்
இருதயத்தைபெற்று வாழ முடியும் என்பதை நான் கற்றுக்கொண்டேன்.
அன்றாட பல்வேறு கடமைகளை நாம் செய்திடும் சமயத்திலும் கூட, நம் இருதயம்
கர்த்தரை கவனித்து கேட்கும்படி தூண்டுதல் பெற்றதாயிருக்க முடியும்!
இது அனைத்து தாய்மார்களுக்கும் உரிய நல்ல பங்கு!!
தமிழ் வடிவம் :
டி. ரத்தினகுமார்
மரியாளின் தியானமும், மார்த்தாளின் சுறுசுறுப்பும் தேவை! - சகரியா பூணன்
0
March 26, 2016
Tags