இயேசு, சீஷர்களை மீனவர்களைப் போலவே "மனுஷர்களைப் பிடிக்கிறவர்கள்" என்று
அழைத்தார். ஆனால், குணப்படாத கிறிஸ்தவத் தலைவர்களோடும், குழுக்களோடும்
அல்லது ஓட்டு வாங்கும் நோக்கம் கொண்ட அரசியல் தலைவர்களின் ஒத்துழைப்பின்
பின்னணியோடும் கைகோர்த்து செய்திடும்
இன்றைய சுவிசேஷ ஊழியம்
"ஏராளமான பொத்தல்கள் நிறைந்த கிழிந்த வலை கொண்டு" மீன்பிடிப்பதற்கே
ஒப்பாயிருக்கிறது!
ஆனால் இயேசுவைப் பாருங்கள்! தன் சுவிசேஷ கூட்டங்களை துவக்கி வைப்பதற்கென
அன்னாவோடோ, காய்பாவோடோ அல்லது ஏரோதோடோ அல்லது பிலாத்தோடோ சேர்ந்து கூட்ட
மேடையில் உட்கார்ந்திருப்பது போல் நீங்கள் 'கற்பனை செய்துகூட' பார்க்க
முடியாதே!!
ஆனால் இன்றைய சுவிசேஷகர்களோ இதைச் செய்வது மாத்திரமல்லாமல், இந்த
'குணப்படாத' தலைவர்களை தங்கள் மேடையில் வைத்து, அவரைப் புகழவும்
செய்கிறார்கள்!!
இனி அடுத்து என்ன?
இந்தப் பொத்தல் கொண்ட வலைகளில் பிடிக்கப்படும் மீன்களை "மரித்த
நிலையிலிருக்கும் சபைகளான"... அந்த கடலுக்குள்ளேயே மீண்டும்
போய்விடுவதற்கு விட்டுவிடுகிறார்கள்! எதற்கு? அடுத்த சுவிசேஷக்
கூட்டங்களில் அவர்களை மீண்டும்
பிடிப்பதற்குத்தான்!?. . . பிடித்து? மீண்டும் கடலுக்குள் விடுவதற்குத் தான்!!
இவ்வாறாகத்தான் இன்றைய நாட்களில் ஏராளமான "சபை பாகுபடற்ற கூட்டங்கள்"
இந்த சுவிசேஷகர்களால் திரும்பத் திரும்ப நடத்தப்பட்டு. . . அந்தந்த
சுவிசேஷகர்கள் தங்கள் கூட்டங்களில் கை உயர்த்துவோரின் கைகளையும், தீர்மான
அட்டைகளையும் அகமகிழ எண்ணிக்கொண்டிருக் கிறார்கள்! இந்த லட்சணம் கொண்ட
சுவிசேஷ ஊழியங்கள் பரலோகத்தின் தூதர்களுக்கல்ல. . . சாத்தானின்
சேனைகளுக்குகே மிகுந்த மகிழ்ச்சியைக் கொண்டு வருவதாய் இருக்கிறது! பின்
என்ன? "இரட்டிப்பான நரகத்தின் மகன்களாய்" மாற்றப்படும் இவர்களுக்காக
பரிசுத்த தூதர்கள் எங்ஙனம் களிகூர்ந்திட முடியும்?
ஆகவே இன்றைய சுவிசேஷ கூட்டங்களில் எடுக்கப்படும் புள்ளி விபரங்கள்
முற்றிலுமாய் வஞ்சகம் நிறைந்த ஏமாற்று வேலையாகவே காணப்படுகிறது.
"இயேசு பாவங்களை மன்னிக்கிறார்! நோய்களை சுகமாக்குகிறார்!!" என்ற சுவிசேஷ
செய்தியோடு அற்புதங்களும், அடையாளங்களும் நிகழ்ந்தாலுமேகூட. . .
இவர்களில், எத்தனை பேர் சீஷர்களாய் மாறினார்கள்?எத்தனைபேர் கிறிஸ்துவின்
சரீரமாய் கட்டப்பட்டார்கள்? என்பது இன்னமும் கேள்விக்குறியாகவே
இருக்கிறது!!
கேளுங்கள் . . .
நம் ஆண்டவரின் அப்போஸ்தலர்கள் 'இதுபோன்ற' சுவிசேஷ ஊழியங்களை ஒருபோதும்
செய்ததே இல்லை. இவர்களோ, தங்கள் கூட்டங்களில்
மனந்திரும்பியவர்களை ஸ்தல சபைகளுக்கு கொண்டுவந்து! அவர்களை சீஷர்களாய்
மாறும்படி செய்து! ஆவிக்குரிய வாழ்க்கையில் ஊன்ற கட்டப்படும்படியே
நடத்தினார்கள்!!
தமிழ் வடிவம் :
டி. ரத்தினகுமார்