வேதாகமத்தில் திருத்தம் செய்கிற ஒருவரோடு அமர்ந்து தியானிக்க வேண்டாம்.
பரிசுத்த வேதாகமத்தோடு நாம் ஈடுபடுகையில் நாம் அதனை மாற்றாமல், வேதம்
நம்மில் மாற்றம் கொண்டுவர அனுமதிப்போம்.
அப்போஸ்தலன் பவுல் வாழ்ந்த காலத்திலேயே, ஜனங்கள் வேதாகம வார்த்தைகளை
திருத்தி மாற்றம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.
உதாரணம்:
சிலுவையில் அறையப்பட்ட கள்வர்களில் எந்த கள்வன் பரலோகத்திற்குப் போனான்?
பலர் வலது பக்கத்துக்கள்வன்
என்று நினைக்கிறார்கள் ஆனால் வேதம் எந்தக் கள்வன் என்று ஒரு இடத்தில் கூட
சொல்லவில்லை.
சாஸ்திரிகள் எத்தனை பேர் வந்து இயேசுவை தொழுதுகொண்டார்கள்?
பலர் மூன்று சாஸ்திரிகள் என்று நினைக்கிறார்கள், இயேசுவின் பிறப்பைக்
குறித்த படக்காட்சிகளிலும் இப்படியே காண்பிப்பதுண்டு. ஆனால் வேதம் எத்தனை
பேர் என்று எந்த ஒரு இடத்திலும் குறிப்பிடவில்லை.
இம்மாதிரியான வேதாகமக் கூட்டல்கள் நம்மிடம் உண்டு என்பதை அறியவே இந்த
எடுத்துக்காட்டுகள்.
வெளி 22:18. இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற
யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது:
ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில்
எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார்.
இதன் அர்த்தம் என்ன?
யாரும் கர்த்தர்
வெளிப்படுத்தின அளவுக்கு மீறி வார்த்தைகளை வேதத்தில்
சேர்க்கவும் கூடாது, அதை பிரசங்கத்தில் பேசக்கூடாது, வேறு எந்த ஒரு
புஸ்தகத்திலும் எழுதக்கூடாது அப்படித்தானே!
காரியம் இப்படியிருக்க, இன்றைய சில
பிரசங்கிமார்கள் நரகத்தையும்,
பரகோகத்தையும், தாங்கள் நேரில் பார்த்ததாக சொல்லி வெளிப்ப்டுத்தல்
புஸ்தகத்தில் சொல்லப்பட்ட பரலோகத்தை பிரசங்கிப்பதை விட்டுவிட்டு அதைவிட
கூடுதலாக விளக்கம் கொடுப்பது அந்த வசனத்தைக்
கூட்டுவதாகத்தானே அர்த்தம்.
இப்படி பல வேதாகமக் கூட்டல்கள் நம்மையும் அறியாமல் இருக்கின்றன. இவற்றால்
என்ன பிரச்சனை என்கிறீர்களா, எப்போதும் ஒரு சிறு தீக்குச்சிதான் ஒரு
காட்டையே எரிக்க போதுமானதாக இருக்கும்.