மாற்கு 13:35ல் சேவல் கூவும் நேரம் என்ற பதம் காணப்படுகிறதல்லவா?
"நீங்களும் விழித்திருங்கள்; ஏனெனில், வீட்டெஜமான் சாயங்காலத்திலோ,
நடுராத்திரியிலோ, சேவல் கூவும் நேரத்திலோ, காலையிலோ, எப்பொழுது வருவான்
என்று நீங்கள் அறியீர்கள்."
அது குறிப்பாக எந்த நேரம் என்று தெரியுமா?
அது அதிகாலை 2:30 மணியிலிருந்து 3:00 மணிவரைக்கும்
இடையிலான நேரம்.
கிரேக்குவிலே இந்த நேரத்திற்கு "அலெக்டோரோபோனியா" என்று பெயர்.
இந்த நேரத்தில் தான்
இரவுக் காவலர்கள், மூன்றாவது ஷிப்ட் மாற்றிக் கொள்வது வழக்கம்.
இந்த வசனம் மூலம் ரோமர்கள் இரவை நான்கு பாகங்களாக பிரித்துள்ளது புலப்படுகிறது.
சாயங்காலம்,
நடுராத்திரி,
சேவல் கூவும் நேரம்
காலை
ஆனால், எபிரேயர்கள் இரவை நான்கு ஜாமங்களாக பிரித்து வழங்கினர்.
இயேசு கிறிஸ்து தமது உவமையில் ரோமர்கள் வழங்கிய கால அளவுகளை
பயன்படுத்தியது கவனிக்கத்தக்கது.
நன்றி: கதம்பம்