மதிப்பிட 1:
------------
மோசே எழுதிய நியாய பிரமாணத்தின்படி ஒரு அடிமையின் மதிப்பு, 30 சேக்கல் வெள்ளி.
(யாத் 21:32) :
அந்த மாடு ஒரு அடிமையானவனையாவது ஒரு
அடிமைப்பெண்ணையாவது முட்டினால், அதற்கு உடையவன் அவர்களுடைய எஜமானுக்கு
முப்பது சேக்கல் நிறையான வெள்ளியைக் கொடுக்கக்கடவன்; மாடு
கல்லெறியப்படவேண்டும்.
ஒரு மனிதனை அடிமையாக வாங்க வேண்டுமானால் கொடுக்க வேண்டிய விலை 30 சேக்கல்
வெள்ளி. ஆகவே இது ஒரு அடிமை மனிதனின் மதிப்பு.
இன்றைக்கு ஒரு மனிதனை அடிமையாக்கிக் கொள்ள (அ) வாழ்நாள் முழுவதும் உங்கள்
சேவகன் ஆக்கிக் கொள்ள எவ்வளவு பணம் தேவைப்படும்? எனபதை கணக்கிட்டுக்
கொள்ளுங்கள்.
மதிப்பிட 2:
-------------
யூதாஸ் பெற்ற 30 வெள்ளிக் காசில் எருசலேம் நகரில் ஒரு நிலம வாங்கப்பட்டது
என்பதை கீழுள்ள வசனத்தின் மூலம் அறியப் பெறுகிறோம்.
மத்தேயு 27:7
அந்நியரை
அடக்கம்பண்ணுவதற்குக் குயவனுடைய நிலத்தை அதினாலே கொண்டார்கள்.
இன்றைய சூழலில் எருசலம் போன்ற நாட்டின் தலை நகரத்தில் அந்நியரை அடக்கம்
பண்ணும் நிலம் வாங்க
எவ்வளவு பணம் தேவைப்படும் என்பதை கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
அதாவது சென்னை போன்ற நகரில் குறைந்தது ஒரு ஏக்கர் நிலம் வாங்க எவ்வளவு
பணம் வேண்டும் எனபதை தோராயமாக கணக்கிடுங்கள்.
நான் மேலே சொன்னது போல ஒரு மனிதனின் மதிப்பு, (அ) ஒரு நாட்டின் தலை
நகரில் ஒரு ஏக்கர் நிலத்தின் மதிப்பு தான் 30 வெள்ளிக் காசின் மதிப்பு
ஆகும்.
எங்கே கணக்கிட்டு பதில் சொல்லுங்கள் பார்ப்போம் புலிகளே!
நன்றி: கதம்பம்