நிலத்தில் விழுந்த
கோதுமை மணி
உங்கள் ஜெபங்கள் உங்கள் சகோதிர சகோதிரிகளுக்காக.
உலகிலேயே கிறிஸ்தவர்கள் அதிகமாக
கொடுமைபடுத்தப்படும் நாடுகள் இங்கே பட்டியலில் இடம்பிடிக்க போராடுகின்றன.
கொலை,
தலை துண்டித்தல்,
கடத்தல்,
கிறிஸ்தவ பெண்களை கற்பழித்து கொல்வது, கிறிஸ்தவ குடும்பங்களை மிரட்டி
மதம் மாற செய்வது, கிறிஸ்தவர்கள் யாரும்
இருக்க கூடாது,
வேரோடு அழித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் அதிவேகமாக செயல்பட்டு வரும்
நாடுகளில் முதல் பத்து நாடுகளை இங்கே பட்டியலிட்டு உள்ளோம்.
இதில் சென்ற ஆண்டு (2015) 5ம் இடத்தில் இருந்த சோமாலியா கிறிஸ்தவர்கள்
மீது கடுமையான கொலைவெறி தாக்குதல்களை கையாண்டு இரண்டாம் இடத்தில் உள்ளது.
ஆப்கானிஸ்தானும், சவுதி அரேபியாவும் பட்டியலில் இறங்கி இருந்தாலும்
இன்னமும் முதல் பத்து இடங்களில் சிகப்பு வர்ணத்தை பூசி கொண்டுள்ளது.
இங்கு வாழும் மற்ற மதத்தை சேர்ந்தவர்கள் தாங்கள் கிறிஸ்தவர்களாக மாறுவதை
அறிவிக்கவோ, மாறவோ முடியாது. மாறினால் மரண தண்டனை தான். ஆனாலும்
இப்படிப்பட்ட இடங்களில் தொடர்ந்து இயேசு கிறிஸ்துவை ஏற்றுகொள்ளும் மக்கள்
பெருகி வருகின்றனர்.
முக்கியமாக சிரியா தேசம் சென்ற ஆண்டில் இருந்து 3ம் இடத்திற்கு வேகமாய்
முன்னேறி விட்டது.
இங்கு வாழ்ந்த பல லட்சம் கிறிஸ்தவ குடும்பங்கள் உயிரோடு இல்லை. பல
ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ தேவாலங்கள் சுவடுகள் இல்லாமல் போனது. இதற்க்கு
காரணம் இங்கு வேகமாய் இயங்கி வரும் இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்கள்.
சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வெட்டி வெட்டி கொன்றது. இன்னமும்
பல லட்சங்கள் வீடு இழந்து பல நாடுகளுக்கு சிதறடிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய ஆப்ரிக்கா பட்டியலில் சென்ற ஆண்டு இல்லை. ஆனால் போகோ ஹராம்,
முஜாகிதீன், என்ற இஸ்லாமிய தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்து பல
ஆயிரங்கள் காணமல் போயின. இந்த ஆண்டு இடம்பிடித்து அதுவும் 16ம் இடத்தை
பிடித்தது.
நைஜீரியா நாடு இந்த பட்டியலில் 13ம் இடத்தில் உள்ளது. இந்த ஆண்டு நடந்த
கொலைகள் சென்ற ஆண்டு மொத்த உலகத்திலும் நடந்த கொலைகளுக்கு சமமாக
கருதப்படுகிறது. அவ்வளவு கொடுமைகளை நைஜீரிய நாடு தாங்கி வருகிறது.
ஆனால் இந்த ஆப்ரிக்க தேசங்களில் ஒரு வருடத்திற்கு 6 லட்சம் பேர்
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை சொந்த ரட்சகராக ஏற்றுக்கொண்டு வருகின்றனர்.
எங்கு கிறிஸ்தவம்
சிதறடிக்கப்படுகிறதோ அங்கு கிறிஸ்தவம் வேகமாய் வளர்கிறது.
கிறிஸ்தவம் வெளிப்படையாக இருந்தாலும்
கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறை
கட்டவில்கப்பட்டுள்ளது. சபைகள் இடிப்பதும், கிறிஸ்தவர்களை கொல்வதும் இந்த
நாடுகளில் மேலோங்கி வருகிறது. இந்த நாடுகளில் மிக முக்கியமாக
எகிப்த்து,
மியான்மர்,
கொலம்பியா
ஜோர்டான்,
ஓமன்,
இந்தியா,
ஸ்ரீலங்கா
போன்ற நாடுகள் மேல் அம்பு குறிகளை அடையாளம் கண்டுள்ளது.
மிக முக்கியமாக கொலம்பியா நாடு கடுமையான கிறிஸ்தவ அடக்குமுறைகளை கண்டு வருகிறது.
இந்தியா தேசமும் மூன்று படி மேலேறி உள்ளது. வட மாநிலங்களில் வீடு வீடாக
புகுந்து கிறிஸ்தவர்களை மிரட்டும் அவலம் தொடர்கதையாகி வருகிறது.
மிசனரி நண்பர்கள் கட்டாயமாக
வெளியேற்றப்பட்டு கொடுமைகளுக்கு ஆளாகி வருகின்றனர். இந்திய தேசத்திற்காக
அதிக பாரத்தோடு ஜெபியுங்கள்.
இன்று தமிழகத்தில், ஆந்திராவில் பல ஆலயங்கள் கட்ட அனுமதி
கொடுக்கப்பட்டாலும் இந்துத்துவா நண்பர்கள் வீண் பழிகளை சுமத்தி கட்ட
முடியாமல் செய்கின்றனர். இதற்காகவும் ஜெபியுங்கள்.
புதிதாக ஸ்ரீலங்கா இந்த 30 நாடுகள் பட்டியலில் வேகமாக இணம் கண்டுள்ளது.
இதற்க்கு காரணம் தமிழர்களை காப்பாற்ற கிறிஸ்தவர்கள் தான் அதிக உதவி
செய்கின்றனர் என்ற குற்றச்சாட்டு தான்.
இது உண்மையாய் இருந்தாலும், தங்களை தேடி வரும் ஆத்துமாக்களுக்கு
படிப்பறிவு, உண்ண உணவு, படுக்க இடம் கொடுக்கத்தான் தேவன் நம்மை
படைத்திருக்கிறார்.
அதை செய்தால் உங்களை சிறையில் அடைத்து பின் கொலையும் செய்வார்களாம் இந்த
அரசாங்கம். இதனால் தான் ஸ்ரீலங்கா
கிறிஸ்தவர்களை ஒடுக்கும் நாடுகளில் இந்தியாவிற்கு அடுத்ததாக உள்ளது.
இந்த 30 நாடுகளுக்காக தொடர்ந்து ஜெபியுங்கள். இந்த நாளிலும் பல உயிர்களை
கொடூரமாக கொலை செய்திருப்பார்.
பலர் கர்ப்பை இழந்திருப்பர், பலர் ரத்தத்தை இழந்திருப்பர், குடும்பத்தை
இழந்திருப்பர். அதனால் தான் இன்னமும் கொலைகள் இந்த நாடுகளில் நடந்து
வருகிறது.
யாரும் கிறிஸ்தவராய் மாறவில்லை என்றால் கொடுமைகள் நடக்க வாய்ப்பில்லை.
அப்படி கொடுமைகள் நடக்கவில்லை என்றால் இந்த பட்டியலில் நாடுகள் இடம்
பெற்றிருக்க முடியாது.
ஆகவே இங்கே குறிப்பிடப்பட்டுள்ள நாடுகளில் தொடர்ந்து இயேசுவின் நாமம்
வேகமாய் பரவி வருகிறது. பல ஆயிரங்கள் இயேசு கிறிஸ்துவை
ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இது கடைசி காலம். ராஜ்யத்திற்கு விரோதமாய் ராஜ்யமும் ஜனத்திற்கு
விரோதமாய் ஜனமும் எழும்பும்.
உங்களை சிறைகளில் போடுவார், உங்களை கொலை செய்கிறவர்கள் நல்லவர்கள் என்று
சொல்லும் காலம் வரும் என்ற வேத வசனங்களை
மறந்துவிடாதீர்கள்.
நிச்சயமாய் இயேசு கிறிஸ்து சொன்ன வார்த்தைகள் நிறைவேறும். வரப்போகிறவர்
நிச்சயம் வருவார். அப்போது கிறிஸ்துவின் நிமித்தம் பாடுபட்டு
கொலையுண்டவர்கள் இயேசுவின் நாமத்தில் உயிரோடு எழுவர்.
அவர்களின் கண்ணீர் துடைக்கப்படும். நித்திய நித்திய காலமாய் இயேசுவோடு
சுகமாய் தங்கி இருப்பார்.
அங்கு பசி இருக்காது, கூக்குரல் இருக்காது. சந்தோஷம் மட்டுமே நிலையை இருக்கும்.
உங்கள் ஜெபங்களை இயேசுவின் பாதத்தில் ஊற்ற மறவாதிருங்கள்.
ஆமென்.
கிறிஸ்துவின் பணியில்
தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்