இயேசுவின் பிரசங்கமும் இன்றைய நவீன பாஸ்டர்களின் பிரசங்கமும் (இது ஒரு சில பாஸ்டர்களுக்கு மட்டுமே பொருந்தும்)

1. உன்னையே முழுவதுமாக கொடுப்பதே ஆசீர்வாதம் - இயேசு

* உன்னிடத்தில் உள்ளதைக் கொடுத்தால்தான் ஆசீர்வாதம் - பாஸ்டர்

2. தேவனுடைய அங்கீகாரமே ஆசீர்வாதம் - இயேசு

* தேவன் அங்கீகரித்த
பின்தான் ஆசீர்வாதம் - பாஸ்டர்

3. இயேசுவைப் பின்பற்றினால் சிறிய வீடு பெரிதாகும் - பாஸ்டர்

* மனுஷகுமாரனுக்கே தலை சாய்க்க இடமில்லை - இயேசு

4. பேதுருவைப் பார்த்து இயேசு, "உன்னுடைய மரணத்தினாலே என்னை மகிமைப் படுத்துவாய்"

* விசுவாசிகளைப் பார்த்து பாஸ்டர், "உங்களுடைய கார், பங்களா, சரீர சுகம்
இவற்றினால் தேவனை மகிமைப் படுத்துவீர்கள்"

5. பணக்கஷ்டம், சரீர வியாதியோடு, உள்ளவர்கள் கிரியை இல்லாத செத்த
விசுவாசம் உள்ளவர்கள் - பாஸ்டர்

* சுகபோகமாய் வாழ்கிறவர்கள் உயிரோடே செத்தவர்கள் - இயேசு

6. விஷேசித்த பிரார்த்தனை மையங்கள், ஜெப கோபுரங்கள் மூலமாகத்தான் ஜெபிக்க வேண்டும்

* பிதாவை எங்கும் தொழுது கொள்ளும் காலம் வந்திருக்கிறது - இயேசு

7. ஜெபக்கோபுரங்களையும் சபைகட்டிடங்களைத் திறந்து வைக்க
அரசியல்வாதிகளான ஏரோதுவையும் , பிலாத்துவையும் அழைத்து விழாவை சிறப்பிக்க
வேண்டும் - பாஸ்டர்

* ஏரோதும் பிலாத்தும் மனந்திரும்பாததால் அவர்களின் ஜெபமும் அருவருப்பானது - இயேசு

8. அமாவாசை, பௌர்ணமி இரவில் ஜெபித்தால் விஷேசித்த பலன் கிட்டும் - பாஸ்டர்

* இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள் - இயேசு

9. பிள்ளைகளுக்கு பூச்சாண்டியைக் காட்டி மிரட்டி சாப்பாடு ஊட்டுவது போல,
கர்த்தரின் சாபத்தை வைத்து மிரட்டினால் தான் மக்கள் ஒழுங்காக சபைக்கு
வருவார்கள் - பாஸ்டர்

* ஒருவன் என்னில் அன்பாயிருந்தால் என்னுடைய கட்டளைகளுக்குக் கீழ்படிவான் - இயேசு

10. ஸ்தாபனங்களின் கீழும், மேலை நாட்டு மக்களின் ஆதரவும் இருந்தால் தான்
ஊழியம் செய்ய முடியும் - பாஸ்டர்

* சகல தேசத்திற்கும் சென்று சுவிஷேசம் அறிவியுங்கள் நான் முடிவு
பரியந்தம் உங்களுடனேகூட
இருப்பேன் - இயேசு

11. நான் நடத்தும் கூட்டத்திற்கு வாருங்கள்,
என்னுடைய விசுவாசமுள்ள ஜெபம் உங்களை குணப்படுத்தும் - பாஸ்டர்

* உன் விசுவாசமே உன்னை இரட்சித்தது - இயேசு

12. "இயேசுவின் உருவத்தை" (தரிசனத்தில்) கண்ட விசுவாசியே பாக்கியவான் - பாஸ்டர்

* என்னைக் காணாமலிருந்து விசுவாசிக்கிறவனே பாக்கியவான்- இயேசு

13. அரசியல் வாதிகளின் துணையில்லாமல் சுவிசேஷத்தால் வரும்
பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியாது - பாஸ்டர்

* என்னையன்றி உங்களால் ஒன்றும் செய்ய முடியாது - இயேசு

14. ரெவரெண்ட், பாஸ்டர் என்றே என்னை அழைக்க வேண்டும் - பாஸ்டர்

* மனுஷக்குமாரனையே பெயல் செபூல் என்றழைத்தால் உங்களை மக்கள் எவ்வாறு
அழைப்பார்கள்? - இயேசு

15. என்னுடைய மாதப்பத்திரிக்கையும், ஜெப எண்ணெயும் உங்கள் சரீரத்தை
குணமாக்கும் - பாஸ்டர்

* விசுவாசமுள்ள ஜேபம் பிணியாளியை சுகமாக்கும் - இயேசு

16. சபைக் கட்டிடத்திற்கு அதிகமாகப் பணம் கொடுத்தவர்களின் பெயர்கள்
வரிசைக் கிரமமாய் ஆலய முகப்பு வாசலில் பொறிக்கப் படும் - பாஸ்டர்

* வலது கை கொடுத்ததை இடது கை அறியாதிருப்பதாக - இயேசு

17. ஆரம்ப கால ஊழியத்தில் வெள்ளை கலர் சட்டை அல்லது ஜிப்பா மற்றும் ஜோல்னா பை
அணிந்திருந்தால்தான் பரிசுத்தம், பின்னர் ஊழியத்தில் வளர்ந்தபோது
கோர்ட், சூட் ( எந்த கலராக இருந்தாலும்) அணிதலே பரிசுத்தம் - பாஸ்டர்

* புறம்பான அலங்காரமல்ல உள்ளான அலங்காரமே முக்கியம் - இயேசு

18. அதிகமாக கொடுத்தவர்கே சபை மக்கள் முன்பாகப் பாராட்டு- பாஸ்டர்

* 2 காசு போட்ட ஏழை விதைவைக்கே எனது பாராட்டு -இயேசு

19. மக்களின் அமோக ஆதரவைப் பெற்றவர்களே சபையின் தலைமைப் பதவியில்
அமரவேண்டும் - பாஸ்டர்

* பரிசுத்த ஆவியின் சாட்சியைப் பெற்றவனே சபையின் கடைமட்ட வேலையைக்கூட
செய்ய வேண்டும் -இயேசு

20. என்னை விட திறமையானவர்கள்
(ஆவிக்குரியற்றில்) எத்தனை பேர் சபையில் இருந்தாலும் சீனியாரிட்டி
பிரகாரம் எனக்குக் கீழ் தான் அவர்கள் அடங்கியிருக்க வேண்டும் - பாஸ்டர்

* என்னை விசுவாசிக்கிறவன் என்னைப் பார்கிலும் பெரிதான கிரியையை செய்வான் - இயேசு

21. என்னையும், என் குடும்பத்தையும், என் வீட்டையும் பராமரித்து சேவை
செய்ய எப்போதும் எனக்கு சில விசுவாசிகள் தேவை - பாஸ்டர்

* ஆண்டவராகிய நானே உங்களுடைய கால்களைக் கழுவினதுண்டானால் நீங்கள்......-இயேசு...!!!

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.