சிலுவை சுமத்தலின் சித்தாந்தம்!

சகோ.எம்.எஸ்.வசந்தகுமார்
கிறிஸ்தவ வாழ்வு
சிலுவை சுமக்கும்
வாழ்க்கையாகும். நாம்
இயேசுகிறிஸ்துவை
உண்மையாய்ப் பின்பற்றிச்
செல்பவர்களாயின்,
சிலுவை
சுமக்காதவர்களாக இருக்க
முடியாது. "ஒருவன்
என் பின்னே வர
விரும்பினால், அவன்
தன்னைத்தான்
வெறுத்து, தன்
சிலுவையை
எடுத்துக்கொண்டு,
என்னைப்
பின்பற்றக்கடவன்" (மாற்கு
8:34) என்று
இயேசுகிறிஸ்து
தெளிவாகத்
தெரிவித்திருப்பதிலிர
ுந்து, சிலுவை
சுமக்காமல், அவரைப்
பின்பற்றிச்
செல்லமுடியாது
என்பதனை
அறிந்துகொள்ளக்
கூடியதாயுள்ளது.
எனினும் சிலுவை
சுமத்தலின் சித்தாந்தம்
என்ன என்பதனை அநேகர்
அறியாதிருப்பதனால்,
இயேசுவின் இந்தக்
கட்டளையைக்
கைக்கொள்ளாதவர்களாகவ
ே இருக்கின்றனர்.
இயேசுகிறிஸ்து,
தன்னைப் பின்பற்றி
வருபவர்கள் சிலுவையை
எடுத்துக்கொண்டு
வரவேண்டும் என்று
கூறியதன் அர்த்தம், அவரைப்
பின்பற்றுபவர்கள்
மரத்தினால் ஒரு
சிலுவையைச் செய்து
அதை சுமந்துகொண்டு
செல்லவேண்டும் என்பதல்ல.
இயேசு உருவக
மொழியிலேயே (figure
of speech) இக்கட்டளையைக்
கொடுத்துள்ளார்.
எனவே, சொல்லர்த்தமாய்
(literally) இதைத் தவறாக நாம்
புரிந்து
கொள்ளக்கூடாது.
இயேசுகிறிஸ்துவினு
டைய காலத்தில் ஒரு
மனிதன் சிலுவையைச்
சுமந்து கொண்டு
வீதியிலே சென்றால்,
அவன் மரண தண்டனையை
அனுபவிக்கப்
போகின்றான் என்பதனை
மக்கள்
அறிந்துகொள்வார்கள்.
எனவே,
இயேசுகிறிஸ்து
சிலுவையை
எடுத்துக்கொண்டு
வரும்படி கூறியது,
தற்கொலை
செய்துகொள்ள
வரும்படி அழைக்கிறார்
எனும் அர்த்தத்தைத்
தருவதைப் போன்று
உள்ளது. இக்கருத்து
திருமறை
உபதேசத்துக்கு
முரணானது. எனவே,
இயேசு கிறிஸ்து
உருவக மொழியையே
இங்கு
உபயோகித்துள்ளார்
என்பதனை மறவாது,
அதனடிப்படையில்
இக்கட்டளையை நாம்
விளங்கிக்கொள்ள
வேண்டும்.
இயேசுகிறிஸ்துவின்
இக்கட்டளையை சரியான
விதத்தில்
புரிந்துகொண்டு,
சிலுவை சுமத்தலின்
சித்தாந்தத்தைப் பிழையற
விளக்கிய பெருமை
அப்போஸ்தலனாகிய
பவுலையே சேரும்.
சிலுவை
சுமத்தலைப்பற்றிய
இயேசுவின் உபதேசத்தை
பலரும் பலவிதமாகத்
தவறாகப்
புரிந்துகொண்டிருக்க
ையில், இந்தத்
தப்பபிப்பிராயங்களை
நீக்கி, உண்மையை
உலகுக்கு விளக்கும்
வண்ணம் பவுல், தான்
கலாத்தியருக்கு எழுதிய
நிருபத்தில்,
"கிறிஸ்துவினுடைய
வர்கள் தங்கள்
மாம்சத்தையும் அதின்
ஆசை இச்சைகளையும்
சிலுவையில்
அறைந்திருக்கிறார்கள்"
(கலா.5:24) என
எழுதியுள்ளார்.
பவுலினுடைய
விளக்கத்தில்இருந்து
நாம் அறிந்துகொள்வது
யாதெனில்,
சிலுவையைச்
சுமந்துகொண்டு
இயேசுவைப் பின்பற்றிச்
செல்வதென்பது, நமது
மாம்சத்தையும் அதன் ஆசை
இச்சைகளையும்
சிலுவையில்
அறைவதாகும். அதாவது,
நமது மாம்சமும் மனதும்
விரும்பும் பாவ
ஆசைகளைப் பூர்த்தி
செய்யாமலிருப்பதாகும்.
"மாம்சம் ஆவிக்கு
விரோதமாகவும்,
ஆவி மாம்சத்துக்கு
விரோதமாகவும்
இச்சிக்கிறது; நீங்கள்
செய்யவேண்டுமென்றிர
ுக்கிறவைகளைச்
செய்யாதபடிக்கு,
இவைகள்
ஒன்றுக்கொன்று
விரோதமாயிருக்கிற
து" (கலா.5:17).எனவே,
நாம் மாம்சத்தையும் அதன்
ஆசை இச்சைகளையும்
சிலுவையில்
அறையாவிட்டால்,
மாம்சத்தின் கிரியைகளே
(கலா. 5:19-21) நம்மில்
காணப்படும். இவை நாம்
தேவனுடைய ராஜ்யத்தைச்
சுதந்தரிப்பதற்கு
தடையாய் அமைவதனால்
(கலா.5:21), நாம்
இயேசுகிறிஸ்துவைப்
பின்பற்றுகிறவர்களாயின்,
மாம்சத்தின்
கிரியைகளை
உருவாக்கும்
மாம்சத்தையும் அதன் ஆசை
இச்சைகளையும்
சிலுவையில்
அறைந்தவர்களாயிருக்க
வேண்டும். அப்போது
மட்டுமே இயேசு
கிறிஸ்து
கூறியவண்ணம், நாம்
நம்முடைய சிலுவையை
எடுத்துக்கொண்டு
அவரைப் பின்பற்றிச்
செல்பவர்களாயிருப்போம்
.
சிலுவையை
எடுத்துக்கொண்டு
செல்வதை பவுல்,
மாம்சத்தையும் அதன் ஆசை
இச்சைகளையும்
சிலுவையில்
அறைவதற்கு
ஒப்பிட்டிருப்பதிலிருந்த
ு, இயேசுவின்
இக்கட்டளையானது,
நம்முடைய நடைமுறை
வாழ்வுக்கான
பிரயோகத்தை
அறிந்துகொள்ளக்
கூடியதாயுள்ளது.
சிலுவை மரணத்தின்
அம்சங்கள், நம்
மாம்சத்தையும், அதன்
ஆசை இச்சைகளையும்
சிலுவையில்
அறைவதைப்பற்றிய
சத்தியங்களை நமக்கு
அறியத்தருவதனால்
அவைகளைத்
தனித்தனியாக ஆராய்ந்து
தியானிப்போம்.
(அ) கொடிய
குற்றங்களுக்கான மரண
தண்டனையாகும்
ரோம சாம்ராஜ்ஜியத்தில்,
கொடிய குற்றங்களை
செய்தவர்களுக்கே
சிலுவை மரணமானது
தண்டனையாக
வழங்கப்பட்டது. ஒரு
மனிதனுக்கு சிலுவை
மரணம்
விதிக்கப்படுகிறதென்றா
ல் அவன் கொடூரமான,
மூர்க்கமான, பயங்கரமான,
கொடிதான குற்றத்தைச்
செய்தவனாகவே
இருப்பான்.
இல்லையென்றால்,
அவனுக்கு
வேறுவகையான
தண்டனைகளே
கொடுக்கப்படும். எனவே
மாம்சத்தையும் அதன் ஆசை
இச்சைகளையும்
சிலுவையில்
அறைவதைப் பற்றி பவுல்
கூறும்போது, நமது
மாம்சமும் அதன் ஆசை
இச்சைகளும் பயங்கரமான,
கொடூரமான,
மூர்க்கமான குற்றங்களைச்
செய்கின்றது என்பதை
நமக்கு உணர்த்துகிறார்.
எனவே நமது மாம்சத்தின்
கிரியைகளை
அழிப்பதற்காக நாம் அதை
சிலுவையில் அறைய
வேண்டும் என்பதனையே
நமக்குத்
தெரிவிக்கின்றார்
என்பதனை
மறுப்பதற்கில்லை.
மாம்சத்தின் ஆசை
இச்சைகள்
நிறைவேற்றப்படுவதினா
ல் ஏற்படும் மாம்சத்தின்
கிரியைகளான
"விபசாரம், வேசித்தனம்,
அசுத்தம், காம விகாரம்,
விக்கிரகாராதனை,
பில்லிசூனியம்,
பகைகள், விரோதங்கள்,
வைராக்கியங்கள்,
கோபங்கள், சண்டைகள்,
பிரிவினைகள்,
மார்க்கபேதங்கள்,
பொறாமைகள்,
கொலைகள், வெறிகள்,
களியாட்டுகள்
முதலானவைகளே" (கலா
.5:19-21) இவை யாவும்
பெரிதான
குற்றங்களாகும்.
ஏனெனில்,
இப்படிப்பட்டவைகளைச்
செய்கிறவர்கள்
தேவனுடைய
ராஜ்ஜியத்தை
சுதந்தரிப்பதில்லை
(கலா.5:21) என வேதம்
கூறுவதனால்,
இப்படிப்பட்டவைகளைச்
செய்யத் தூண்டும்
மாம்சமும் அதன் ஆசை
இச்சைகளும் கொடிதான
குற்றங்களைச் செய்ய
ஏதுவாயுள்ளது என்பதை
உணர்ந்தவர்களாக
அவைகளை நாம்
சிலுவையில் அறைய
வேண்டும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.