அரிமத்தியா
ஊரானாகிய
யோசேப்பைப் பற்றி
இச்செய்தியில்
தியானிக்கப்
போகிறோம். இவனைப்
பற்றி வெகு சில
குறிப்புகளே வேதத்தில்
கொடுக்கப்பட்டிருந்தால
ும், இவன் செய்தவைகளை
வைத்துப்
பார்க்கும்பொழுது
இவன் எப்படிப்பட்டவன்,
எப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை
வாழ்ந்தான் என்பதை நாம்
கண்டுகொள்ள
முடியும். மத்தேயு
27:57ஆம் வசனத்தையும்,
தொடர்ச்சியாக
சொல்லப்படுகிற சில
வசனங்களையும்
வாசித்துப் பாருங்கள்.
"சாயங்காலமானபோது
, இயேசுவுக்குச்
சீஷனும்
ஐசுவரியவானுமாயி
ருந்த யோசேப்பு
என்னும் பேர்கொண்ட
அரிமத்தியா
ஊரானாகிய ஒரு
மனுஷன் வந்து,
பிலாத்துவினிடத்தில்
போய், இயேசுவின்
சரீரத்தைக் கேட்டான்.
அப்பொழுது,
சரீரத்தைக்
கொடுக்கும்படி
பிலாத்து
கட்டளையிட்டான்" (மத்.
27:57,58). இதில்
அரிமத்தியா
ஊரானாகிய
யோசேப்பைப் பற்றி
சொல்லியிருப்பது
என்னவென்றால்,இவன்
இயேசுவுக்கு ஒரு சீஷன்,
ஐசுவரியவான் என்று
சொல்லியிருக்கிறது.
மாற்கு 15:43இல்,
"கனம்பொருந்திய
ஆலோசனைக்காரனும்
அரிமத்தியா ஊரானும்
தேவனுடைய ராஜ்யம்
வரக்
காத்திருந்தவனுமாகி
ய யோசேப்பு என்பவன்
வந்து,
பிலாத்துவினிடத்தில்
துணிந்து போய்,
இயேசுவின் சரீரத்தைக்
கேட்டான்" என்று
வாசிக்கிறோம்.
சகோதரனே, இந்த வசனம்
சொல்லுவதிலே சில
வார்த்தைகளை நாம்
கவனிக்க வேண்டும்.
ஆலோசனைக்காரன் –
யூதர்களுடைய சனகரிப்
சங்கத்திலே
தெரிந்தெடுக்கப்பட்டவர்கள்
ஆலோசனை சங்கத்திலே
Counselors என்ற
பொறுப்பிலே
இருப்பார்கள். இந்த
அரிமத்தியா ஊரானும்
அதிலே ஒருவனாக
இருந்தபடியினால்,
சமுதாயத்திலே நல்ல
அந்தஸ்துடையவனாக
இருந்தான். அது
மட்டுமல்ல, அவனைக்
குறித்து,
"தேவனுடைய ராஜ்யம்
வரக்
காத்திருந்தவன்"என்றும்
சொல்லியிருக்கிறது.
லூக்கா 23:50-53 வரை உள்ள
வேதபகுதியிலும்
அரிமத்தியா
ஊரானாகிய
யோசேப்பைப்
பற்றிப்பார்க்கலாம்.
"யோசேப்பு என்னும்
பேர் கொண்ட ஒரு
ஆலோசனைக்காரன்
இருந்தான்; அவன்
உத்தமனும்
நீதிமானுமாயிருந்தா
ன். அவன் யூதருடைய
பட்டணங்களிலொன்றாக
ிய
அரிமத்தியாவிலிருந்
து வந்தவனும்,
தேவனுடைய
ராஜ்யத்துக்குக்
காத்திருந்தவனும்,
யூதர்களுடைய
ஆலோசனைக்கும்
செய்கைக்கும்
சம்மதியாதவனுமாயிர
ுந்தான். அவன்
பிலாத்துவினிடத்தில்
போய், இயேசுவின்
சரீரத்தைக் கேட்டு, அதை
இறக்கி, மெல்லிய
துப்பட்டியிலே சுற்றி,
கன்மலையில்
வெட்டப்பட்டதுமாய்
ஒருக்காலும்
ஒருவனும்
வைக்கப்படாததுமாயிர
ுந்த ஒரு கல்லறையிலே
வைத்தான்".
பாருங்கள், மத்தேயு
இவ்வாறு
சொல்லுகிறார்:
அரிமத்தியா
ஊரானாகிய
யோசேப்பை சீஷனாகவும்
ஐசுவரியவானாகவும்
இருந்தான் என்று. சீஷன்
என்பவன் தன்னைத்தான்
வெறுத்து தன்
சிலுவையை
எடுத்துக்கொண்டு
அனுதினமும்
இயேசுவைப்
பின்பற்றுகிறவன்.
அப்படியானால் இந்த
அரிமத்தியா
ஊரானாகிய
யோசேப்பும்
இயேசுவைப்
பின்பற்றுகிறவனாக
இருந்தான். ஆனால்
"ஐசுவரியவான்" என்று
சொல்லப்பட்டிருக்கிறது.
இயேசு
ஐசுவரியவானைப் பற்றி
என்ன
சொல்லியிருக்கிறார்?
ஐசுவரியவான் பரலோக
ராஜ்ஜியத்தில்
பிரவேசிப்பதைப்
பார்க்கிலும் ஒட்டகமானது
ஊசியின் காதில்
நுழைவது
எளிதாயிருக்கும்
என்று. அப்படியென்றால்,
அரிமத்தியா
யோசேப்பு எப்படி
சீஷனாகவும்,
ஐசுவரியவானாகவும்
இருந்தான்? மிகவும்
முரண்பாடான இரண்டு
காரியங்களை இவன் எப்படி
செய்ய முடிந்தது? வேதம்
சொல்லுகிறது,
"ஐசுவரியம்
விருத்தியானால் உன்
இருதயத்தை அதின்மேல்
வையாதே". இந்த
அரிமத்தியா
யோசேப்பு அவன் தன்
ஐசுவரியத்தையோ,
பணத்தையோ நம்பாமல்
இயேசுவையே
நம்பியிருந்தபடியினால்,
அவன் உத்தமனும்
நீதிமானுமாயிருந்து
இயேசுவுக்கு ஒரு உத்தம
சீஷனாக இருந்தான்.
அதைத்தான் நாம்
ஆச்சரியமாகப்
பார்க்கிறோம்.
சகோதரனே, சகோதரியே
இன்றைக்கு நீங்கள்
எப்படிப்பட்டவர்களாய்
இருக்கிறீர்கள்?
தேவனுக்காக துணிந்து
நிற்பீர்களா? நீங்கள்
துணிந்து
நிற்கவேண்டிய காலம்
வெகு விரைவில் வந்து
கொண்டிருக்கிறது.
எங்கும் ஆலயங்கள்
இடிக்கப்படுகின்றன.
கிறிஸ்தவர்கள்
துன்புறுத்தப்படுகிறார்
கள். இந்த நேரத்திலே நீங்கள்
தைரியமாய்
இயேசுவுக்கென்று
சிலுவை
சுமக்கிறவர்களாய்
இருப்பீர்களா? இந்த
அரிமத்தியா ஊரான்
அப்படிப்பட்டவனாக
இருந்தான். பாருங்கள்,
அவன் யூதருடைய
பட்டணங்களிலொன்றாகிய
அரிமத்தியாவிலிருந்த
ு வந்தவனும்,
தேவனுடைய
ராஜ்யத்துக்குக்
காத்திருந்தவனும்,
யூதர்களுடைய
ஆலோசனைக்கும்
செய்கைக்கும்
சம்மதியாதவனுமாயிரு
ந்தான். இயேசுவை அவர்கள்
பிடிப்பதற்கும்,
விசாரித்து அவர் மரண
ஆக்கினைக்குள்ளாக
அவரைத் தீர்த்ததையும் இந்த
யோசேப்பு
ஏற்றுக்கொள்ளவில்லை.
தன்னை சங்கத்தை விட்டு
நீக்கினாலும்
பரவாயில்லை என்று,
பதவிக்காக இயேசுவை
மறுதலியாமல் அவன்
தைரியமாக,
அவர்களுடைய
ஆலோசனைக்கும்
செய்கைக்கும்
சம்மதிக்கவேயில்லை.
மாற்கு 15:43இல் "…
யோசேப்பு என்பவன்
வந்து,
பிலாத்துவினிடத்தில்
துணிந்து போய்,
இயேசுவின் சரீரத்தைக்
கேட்டான்" என்று
வாசிக்கிறோம். சீஷர்கள்
கைவிட்டு
ஓடிவிட்டார்கள்.
ஆசாரியர்கள்
இயேசுவைப்பற்றி
பேசினவர்களையெல்லாம்
ஆலயத்துக்குப்
புறம்பாக்கினார்கள். இனி
இவனுடைய பதவி
பறிபோகலாம், அந்தஸ்து
மாறலாம். ஆனாலும்,
அவன்
இயேசுவினிடத்தில்
கொண்டிருந்த
அன்பினால் இவ்வாறு
செய்தான். வேதம் என்ன
சொல்லுகிறது,
"பூரண அன்பு பயத்தைப்
புறம்பே
தள்ளும்" (1யோவான் 4:18)
. இவனும் ஒரு அந்தரங்க
சீடனாய்த்தான் இருந்தான்.
ஆனால், இயேசுவின்
மரணம் இவனை
அசைத்துவிட்டது.
துணிந்துபோய், என்ன
நடந்தாலும்
பரவாயில்லை, இந்த
இயேசுவை நான்
அடக்கம்பண்ணுவேன் என்று
இயேசுவின் சரீரத்தைக்
கேட்டான்.
சகோதரனே, கொஞ்சம்
சிந்தித்துப் பாருங்கள்.
இயேசுகிறிஸ்துவை
பூமிக்குத் தருவதற்கு
ஒரு மரியாள்
தேவைப்பட்டாள்.
மரியாளைப் போல அந்த
பாக்கியம் பெற்றவர்கள்
உலகத்திலே முன்போ,
இப்பொழுதோ,
பின்போ இருக்கவே
முடியாது.
அதேவிதமாக, இயேசு
கிறிஸ்துவின்
பூலோக வாழ்க்கையை
முடிக்கவும் ஒரு
யோசேப்பு
தேவைப்பட்டான். அவன்
துணிந்து வந்து
இயேசுவின் சரீரத்தைக்
கேட்டு, இவனும்
நிக்கோதேமுவும்சேர்
ந்து வெள்ளைப்
போளமிட்டு மெல்லிய
துப்பட்டியால் சுற்றி தன்
சொந்தக் கல்லறையில்
ஒருவனும் ஒருக்காலும்
வைக்கப்படாததுமாயிருந்
த கல்லறையில் வைத்து
ஒரு பெரிய கல்லை
வைத்தான். உலகத்திலே
யாருக்குமே கிடைக்காத
ஒரு அரிய வாய்ப்பு!
சகோதரனே, சகோதரியே
இந்த அரிமத்தியா
யோசேப்பு அவன்
இயேசுவின் மேல் உள்ள
அன்பை
வெளிக்காட்டினான்.
இன்றைக்கு நீங்களும்
இயேசுகிறிஸ்துவை
நேசிக்கிறேன் என்று
சொல்லுவீர்களென்றால்,
அந்த அன்பை உங்கள்
வாழ்க்கையில்
வெளிக்காட்டுவீர்களா?
மேலும் அரிமத்தியா
யோசேப்பைக் குறித்து,
"தேவனுடைய
ராஜ்யத்துக்குக்
காத்திருந்தவன்" என்று
சொல்லப்பட்டிருக்கிறது.
அந்நாட்களில் ஒவ்வொரு
யூதனும் தேவனுடைய
ராஜ்யம் வரவும், மேசியா
வரவும்
எதிர்பார்த்திருந்தனர்.
மேசியா வருவார், ரோம
சாம்ராஜ்யத்திலிருந்து
விடுவித்து தன்னுடைய
ராஜ்யத்தை ஆரம்பிப்பார்
என்று யூதர்கள்
மேசியாவுக்காகக்
காத்திருந்தார்கள். ஆனால்,
இயேசு மேசியாவாக
வந்தபொழுது அவரை
ஏற்றுக்கொள்ளாமல்
புறக்கணித்தார்கள்.
ஆனால், இந்த அரிமத்தியா
ஊரானாகிய யோசேப்பு
கனம்பொருந்திய
ஆலோசனைக்காரன்
இயேசுவை
மேசியாவாக
ஏற்றுக்கொண்டதினால்,
அவரை இவன் நேசித்து
அவருக்கு சீடனானான்.
அவரை
ஏற்றுக்கொண்டதினால்
தன் உள்ளத்திலே
தேவனுடைய
ராஜ்யத்தை அனுபவித்தா
ன். அதை வெளிப்படையாக
அவன் தன்னுடைய
அன்பைக்காட்ட அவனுக்கு
ஒரு வாய்ப்புக்
கிடைத்தது. இயேசுவின்
சரீரத்திற்கு மூன்றாம்
நாள் காலையிலேயே
சுகந்தவர்க்கமிட சிலப்
பெண்கள் வந்தார்கள். ஆனால்,
அவர்களுக்கோ
இயேசுவுக்கு ஒரு
நன்மை செய்யும்
பாக்கியம்
கிடைக்கவேயில்லை. ஏன்?
இயேசு
உயிர்த்தெழுந்துவிட்ட
ார்!
ஆம்! இவர்களுக்கு
இயேசுவின் சரீரத்திற்கு
சுகந்த வர்க்கமிடும்
பாக்கியம்
கிடைக்கவேயில்லை.
எனவே, இந்த அரிமத்தியா
ஊரான்தான் அந்த
பாக்கியவான். ஆனாலும்,
இவன் அந்தரங்க சீடனாய்
இருந்தபடியினால்,
அநேகர் இவனை ஒரு
கோழை என்றுதான்
சொன்னார்கள். ஒரு
வேலைக்காரியின்
முன்னாக மறுதலித்த
பேதுரு ஆலோசனை
சங்கத்திலே
ஜீவாதிபதியைக்
கொலை செய்தீர்கள் என்று
தைரியமாகப்
பேசவில்லையா?
இயேசுவின் மரணமும்,
பரிசுத்த ஆவியின்
நிறைவும்
பேதுருவைப்
பெலப்படுத்தவில்லையா?
அதேபோல
அரிமத்தியாவும்
இயேசுவின்
மரணத்தினால்
தைரியமடைந்து சீஷர்கள்
கைவிட்டு
ஓடிவிட்டார்கள்,
உறவினர்களும்
மற்றவர்களும் தூரத்திலே
நின்று பார்த்துக்
கொண்டிருக்கும்பொழ
ுது இவன் துணிந்து
போய்
பிலாத்துவினிடத்திலே
அவருடைய சரீரத்தைக்
கேட்டு வாங்கி, அவன்
மெல்லிய துப்பட்டியால்
சுற்றி, ஒருவரும்
வைக்கப்படாத தனக்கென்று
வைத்திருந்த ஒரு
கல்லறையில் இவரை
வைத்தானே. தனக்கென்று
வைத்திருந்ததையெல்லா
ம் தேவனுக்கென்று
கொடுத்தானே. இவன்
கோழையா? இல்லவே
இல்லை. அவன் ஒரு
தைரியசாலி.
இயேசுவை நீங்கள்
சந்தித்திருப்பீர்களென்றால்,
இயேசுவின் அன்பு
உங்களுடைய உள்ளத்தில்
இருக்குமென்றால் அது
பயத்தைப் புறம்பே தள்ளி
உங்களையும்
தைரியசாலியாக்கும்.
நீங்கள் எங்கும் இயேசுவை
அறிவிப்பீர்கள்!
சுவிசேஷம் சொல்லப்
புறப்படுவீர்கள்!
பிரியமானவர்களே,
இயேசுவின்
மரணத்தையும் இந்த
அரிமத்தியாவையும்
இணைத்துப் பாருங்கள்.
எவ்வளவு ஆச்சரியமான
ஒரு மாற்றம். உங்களுக்குள்
இந்த மாற்றம்
வந்திருக்கிறதா?
இல்லையென்றால்
ஆண்டவரிடத்திலே
அழுது கேளுங்கள்.
ஆண்டவரே உம்மை
ஏற்றுக்கொள்ளவும்
வெளிப்படையாய்
அறிவிக்கவும் என்னைப்
பெலப்படுத்தும் என்று
கேளுங்கள். ஆண்டவர்
உங்களை
பெலப்படுத்துவார்,
உங்களை சீடனாக
ஏற்றுக்கொள்வார்.
தேவனுடைய ராஜ்யத்தில்
உங்களுக்கும் ஒரு பங்கு
கிடைக்கும்.
நன்றி: சத்திய வசனம்