டார்வினின் பரினாம கொள்கை சரியா? ஒரு அலசல் பாகம் 1

பரிணாம கொள்கை (Theory of Evolution)

இந்த கொள்கையை ஆராய்வதற்க்கு முண்பு நாம் அறிவியலை புரிந்துக்கொள்ள வேண்டும்

அறிவியலின் (Science) ஒரு பகுதி "தேற்றங்களாகவும்" (Theorems) மற்றொரு
பகுதி "கொள்கைகளாகவும்" (Theories) அமைந்துள்ளது.

தேற்றம் என்றால் என்ன?

அறிவியலில் ஐயமின்றி நிறுவப்பட்ட உண்மையை "தேற்றம்" என்கின்றோம்.

(எ.கா.)
ஒரு முக்கோணத்தின் உட்கோணங்களின் கூடுதல் 180¤ (இரு செங்கோணங்கள்) என்பது
ஒரு தேற்றம். எந்த முக்கோணத்தை எடுத்துக் கொண்டாலும் இது உண்மை, இது
மாறாது. இதற்க்கு எதிரான எடுத்துகாட்டு கிடையாது. இதற்கு எதிரான கருத்தோ,
வாதமோ கிடையாது.

கொள்கை என்றால் என்ன?

கொள்கை என்பது தேற்றத்தை போன்றது அல்ல. "பல அடிப்படை கண்டுபிடிப்புகள்,
ஆதாரங்கள் ஆகியவற்றை கொண்டு 'இப்படி இருக்கலாம்' என்று யுகித்து
அவற்றிற்க்கு விளக்கமாக கூறப்படும் தத்துவம் ஓரு கொள்கை ஆகும்".
கொள்கைகள் தவறு என்று நிரூபிக்க முடியும்.

(எ.கா. 1)

டால்டனின் அணுக் கொள்கை

இந்த கொள்கை அணுவை பிரிக்க முடியாது என்று கூறுகிறது. உலகின் அறிவியல்
வல்லுனர்கள் யாவரும் அதை உண்மை என நம்பியதுடன் உலகெங்கும் மாணவர்களுக்கு
கற்றும் தந்தனர். அணுவை பிரிக்கும் முறையை கண்டுபிடித்து அணு குண்டு
தயாரித்த போது இக்கொள்கை தவறு என்று நிரூபிக்கப்பட்டது.

ஒரு கொள்கை பற்றிய ஆராய்சியின் போது அது சற்று திருத்தப்படலாம்,
மாற்றப்படலாம், தவறானது என தள்ளப்படலாம்.

ஒரு கொள்கைக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகள் இருக்கக்கூடும்.
இவ்வாறு இருந்தால் அனைத்து கருத்துக்களையும் மாணவர்களுக்கு கற்று தர
வேண்டும். பரினாம கொள்கையில் இது கடைப்பிடிக்க வில்லை.

அண்டத்துக்குரிய பரினாம கொள்கை (Cosmic evolution)

1.மிகவும் எடை குறைந்த தனிமமாகிய நீரக (ஹைட்ரஜன்) அணுவானது, பேரண்டத்தில்
ஆங்காங்கே தானாக உருவாகிறது.

2.கோடிக்கணக்கான ஆண்டுகளாக இவ்வாறு உண்டான அணுக்கள் மேம்பாடடைந்து,
உயிரகம் (ஆக்ஸிஜன்), வெடியம் (நைட்ரஜன்), இரும்பு, பொன், வெள்ளி, ஈயம்,
தோரியம், யுரேனியம் போன்ற பொருட்களாயின.

3.இவற்றின் வேதியல் சேர்க்கையால் மூலக்கூறுகள் (Molecules) ஏற்ப்பட்டன.

4.இவ்விதமாக நீர், மண், உப்பு போன்ற யாவும் உண்டாகி பூமி, கோள்கள்,
சூரியன், விண்மீன்கள், பேரண்டம் போன்ற யாவும் உண்டாயின.

மேலே குறிபிட்டதை தான் அண்டத்துக்குரிய பரினாம கொள்கை கூறியது ஆகும்.

என்ன ரொம்ப போரடிக்குதா.......

நான் நேரடியா மேட்ருட்கு வரேன்....

இந்த கொள்கையின் அடிப்படையிலேயே தவறு இருக்கிறது. ஏனெனில், நீரக
(நைட்ரஜன்) அணுவை விட சிறியவை பல உண்டு. இதை துணை அணுப் பொருட்கள் (Sub
atomic particles) என்று அறிவியல் கூறுகிறது. இயற்கையாக 200க்கும்
அதிகமாக இவை இருக்கிறது. குறிப்பாக மிசான் என்று அழைக்கப்படும் துணை
அணுப் பொருள் கோடிக்கணக்கில் உலகை சந்திக்கிறது. எனவே நீரக அணு
பேரண்டத்தின் தொடக்கப் பொருள் அல்ல.

மேலும், தொடக்கத்தில் இந்த அணு எவ்வாறு தானாக உருவாகும் என்பதற்க்கு
இக்கொள்கை பதிலேதும் கூறவில்லை

இல்லாத ஒன்று (இல்லாத நபர், சக்தி), இல்லாததற்காக (காரணமின்றி),
இல்லாததின் (இல்லாத ஆற்றலின்) வாயிலாக, இல்லாத பொருளின் மேல் செயல்பட்டு,
யாவற்றையும் உருவாக்கியது என்று கூறுவதை நம்புவது எப்படி?

எந்த ஒரு பொருளும் தானாக மேம்பாடடைந்ததற்கான எந்த ஒரு ஆதாரமும் இல்லை.
மேலும் அணு எண்கள் அதிகமாயுள்ள தோரியம், யுரேனியம் போன்றவை
கதிர்வீச்சினால் தன்மை குறைந்த ரேடியம் ஈயம் ஆக மாறிக்கொண்டிருக்கின்றன
என்பதே உண்மை. ஒரு பொருள் கூட மேம்படடையவில்லை.

சூரியன் ஒரு நிமிடத்திற்கு 25 கோடி டன் நிறையை இழக்கிறது. இவ்வாறு
ஒவ்வொரு விண்மீணும் தொடர்ந்து தங்கள் ஆற்றலை, எரிபொருளை, நிறையை இழந்துக்
கொண்டிருக்கின்றன. எனவே, பேரண்டமானது முன்னேற்றம் அடைக்கிறது என்பது
உண்மை இல்லை. அழிவின் பாதையில் செல்கிறது என்பதே உண்மை.

வெப்ப விசையியலின் முதலாம் விசையின் படி ஆற்றலானது வெப்பமாக, இயற்கை
ஆற்றலாக, நிலை ஆற்றலாக, மின்சாரமாக மாறக்கூடியது எனினும் பேரண்டத்தின்
மொத்த ஆற்றலின் அளவு மாறாதது. பரினாம கொள்கையின் படி நீரக அணுக்கள் தானாக
உருவாகிறது எனில் அவற்றிற்க்கு நிறை (Mass) உண்டு. E=mc2 என்ற விதியின்
படி புதிய அணுக்கள் உருவாகும் போது பேரண்டத்தின் ஆற்றலானது E அதிகரிகிறது
என்று பொருள். இது விசையியலின் முதாலம் விதிக்கு எதிரானது.

விசையியலின் இரண்டாம் விதியின் படி மொத்த ஆற்றல் மாறாது எனினும் பயனுள்ள
வேலை செய்வதற்க்கு கிடைக்கும் ஆற்றல் குறைந்து வருகிறது. அதாவது காலம்
செல்ல செல்ல பேரண்டம் தனது செயல் திறனில் குறைந்து வருகிறது. ஆனால்
பரினாம கொள்கை பேரண்டம் மேம்பாடடைகிறது என்று கூறுகிறது. எனவே விசையின்
இரண்டு விதியுமே பரினாம கொள்கை தவறு என்று கூறுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.