நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்ட பிறகு "சீஷத்துவத்திற்குரிய
விலைக்கிரயம் எவைகள்?" என்பதை அறிந்துகொள்ள
பல வருடங்கள் நாம் காத்திருப்பதற்குத் தேவன் விரும்பவேயில்லை.
தன்னிடம் ஜனங்கள் வந்தவுடனேயே அவர்களுக்கு "சீஷத்துவத்தின் விலைக்கிரயத்தை
" இயேசு கூறிவிட்டார். அது மாத்திரமல்லாமல், சீஷனாய் மாறுவதற்கு
விருப்பம் இல்லாத ஒரு விசுவாசி, தன் சாரத்தை இழந்துபோன உப்பைப் போலவே
தானும் தேவனுக்கு யாதொரு பயனும் அற்றவனாய் மாறிவிடுவான் என்ற உண்மையையும்
இயேசு தெரிவித்தார் (லூக்கா 14:35).
முதல் நிபந்தனையாக, சீஷனாக மாறிட விரும்பும் ஒரு விசுவாசி, தன் ஆண்டவரைத்
தொடர்ச்சியாய் பின்பற்றுவதற்குத் தடையாக நின்றிடும்தன் உறவினர்களின்
யாதொரு பிடிப்பிலிருந்தும் விடுதலை பெற்றிருக்க வேண்டும்
(லூக்கா 14:26).
இரண்டாவது நிபந்தனையாக, அந்த விசுவாசி தன்னைத்தானே வெறுத்திடவும், தன்
சுய-ஜீவியத்தை ஒவ்வொரு நாளும் மரணத்திற்குக் கொண்டுவரவும் விருப்பம்
கொண்டிருத்தல் வேண்டும்!(லூக் 14:27).
மூன்றாவது நிபந்தனையாக, தன் சொந்த உடமைகளின்மீது கொண்ட நேசத்தையும்
விட்டுவிட வேண்டும்!! (லூக்கா 14:33).
ஒரு சீஷனாக விரும்பும் யாவருக்கும், இந்த மூன்று நிபந்தனைகளும் குறைந்தபட்ச
அவசியமாயிருக்கிறது!!
முதல் நிபந்தனை கூறுகிறபடி, நம் உறவினர் - பந்துக்களிடம் நாம் கொண்டுள்ள
இயற்கையானதும், விசேஷித்த விதத்திலும் கொண்டிருக்கும் நேசத்தை நாம்
துண்டித்திடவேண்டும். இதை இயேசு கூறும்போது, "யாதொருவன் என்னிடத்தில்
வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரரையும்
சகோதரிகளையும் வெறுக்காவிட்டால் எனக்கு சீஷனாயிருக்க மாட்டான்" என
கூறினார்
(லூக்கா 14:26).
இயேசு கூறிய இந்த வார்த்தைகள் உண்மையில் மிகவும் ஆணித்தரமானதாகும்.
"வெறுக்க வேண்டும்!" என்ற வாக்கியத்தின்
பொருள் என்ன?
"கொல்ல வேண்டும்!" என்பதே
வேதவாக்கியத்தின்படியான பொருளாகும்!!
(1யோவான் 3:15).
இங்கு நாம் எதை மரணத்திற்குள்ளாய்
கொண்டு வரவேண்டும்?
நம் சொந்த உறவினர்கள்மீது நாம் வைத்திருக்கும் இயற்கையான பாசப் -
பிணைப்பையே நாம் மரணத்திற்கு கொண்டு வரவேண்டும்!
அப்படியானால், நாம் அவர்களை
அன்புகூர்ந்திடக்கூடாதா?
அப்படி இல்லை. . .
நாம் யாவரையும் அன்புகூர்ந்திடவே வேண்டும். உண்மையில் சம்பவிப்பது
யாதெனில், நாம் அவர்கள்மீது கொண்ட மனுஷீக - அன்பை விட்டுவிடும்போது,
தேவன் அதைத் தன் தெய்வீக அன்பினால்
நிறைத்துவிடுவார்!
இதன் மூலமாய் நம்முடைய உறவினர்களிடம் நாம் வைத்திருக்கும் அன்பு "தூய்மை"
கொண்டதாய் மாறிவிடுகிறது.
ஆம், தேவனே நம் நேசத்திற்கு முதலிடம் கொண்ட வராகிவிடுகிறார். . .
நம் உறவினர்கள் அல்ல!!
இன்று அநேகர் தேவனுக்கு கீழ்ப்படிவதேயில்லை! அதனிமித்தமே இவர்கள், தங்கள்
தகப்பன், தாய் மற்றும் மனைவி
போன்றவர்களுக்கு. . . . மனத்தாங்கல்
ஏற்படுமேயென்று அஞ்சுகிறார்கள்.
ஆனால் ஆண்டவரோ நம் ஜீவியத்தில் முதலிடமே கேட்கிறார்! அவ்வாறு அவருக்கு
நாம் முதலிடம் தராவிட்டால், நாம் அவருடைய சீஷர்களாய் இருந்திட முடியாது!!
நம்முழு ஜீவியத்திற்கும்
இயேசுவே ஆண்டவராய் இருந்திட வேண்டும். அப்படியில்லையென்றால், அவர் நமக்கு
ஆண்டவராய் இருந்திடவே மாட்டார்!
தமிழ் வடிவம் :
டி. ரத்தினகுமார்