ஆதி. 6:3 இன் முதல் வாக்கியத்தின் இறுதி வார்த்தையை சிலர் வல்லமை என்றும்
மொழிபெயர்த்துள்ளனர். இதன்படி இவ்வாக்கியம்
"என் ஆவி எப்போதும் மனிதனுக்கு
வல்லமையளிப்பதில்லை" எனும் அர்த்தமுடையது.
எனினும் ஜலப்பிரளய அழிவு மனிதனில் இருக்கும் தேவஆவியின் வல்லமையை எவ்வாறு
குறைக்கும் என்பதற்கு
இவ்விளக்கத்தினால் எவ்வித பதிலும் கொடுக்கமுடியாதுள்ளமையினால்
இவ்விளக்கமும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை.
நாம் தமிழ் வேதாகமத்தில் இவ்வாக்கியம் என் ஆவி என்றென்றைக்கும் மனுஷனோடே
போராடுவதில்லை என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதில் போராடுவதில்லை
எனும் வார்த்தை பழைய கிரேக்க மொழிபெயர்ப்பை அடிப்படையாகக் கொண்ட
வார்த்தையாகும்.
நம் தமிழ் வேதாகமம் மொழிபெயர்க்கப்பட்ட காலத்தில்
அதிகாரபூர்வமானதாகக் கருதப்பட்ட ஆங்கில வேதாகமத்தின் தமிழாக்கமே
இதுவாகும். இதன்படி தேவன் இனிமேல் மனிதனுடைய பாவத்திற்கு எதிராகப் பேசி
அவனோடு
தர்கித்துக்கொண்டிருக்க மாட்டார் என்பதே இவ்வாக்கியத்தின் அர்த்தமாகும்.
அதாவது மனிதனுடைய பாவத்திற்கு எதிராகப் பேசுவதன் மூலமாக அதுவரை காலமும்
மனிதனோடு போராடி வந்தவர் இனிமேல் அவ்வாறு செய்யமாட்டார் என்பதாகும்.
இது ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய விளக்கமாக தென்படுகின்ற போதிலும்
இதுவும் ஏனைய விளக்கங்களைப் போலவே இவ்வாக்கியத்திலுள்ள ஆவியை பரிசுத்த
ஆவியாகவே கருதுகின்றது. இதனால் இவ்விளக்கமும் சரியானதொன்றாக இல்லை.
அண்மைக்காலத்தில் எபிரேய மொழியிலாளர்கள் மூலமொழியில் இவ்வாக்கியத்தின்
கடைசி வாரத்தையின் சரியான அர்த்தம் "இருப்பதில்லை" என்பதை
அறியத்தந்துள்ளனர். தற்போது ஆங்கில உலகில் உபயோகிக்கப்பட்டு வரும் புதிய
சர்வதேச மொழிபெயர்ப்பு வேதாகமம் "இவ்வர்த்தத்துடனும் இவ்வார்த்தை
மொழிபெயர்க்கப்படலாம் என்பதை அறியத்தருகின்றது.
"செப்துவஜின்ட்" என அழைக்கப்படும் கிரேக்க மொழிபெயர்ப்பிலும் ஆரம்பகால
அரபிக்,
லத்தீன்,
சிரிய
மொழிபெயர்ப்புகளிலும் இவ்வர்த்தத்துடனே இவ்வார்த்தை
மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
மொழியியல் ரீதியாக இவ்வர்த்தமே சரியானது என்று சுட்டிக் காட்டுகின்றனர்.
இவ்வாக்கியத்தின் ஆரம்ப வார்த்தையான "என் ஆவி" என்பது மனிதனை உயிரோடு
வைத்திருப்பதற்காகத் தேவன் அவனுக்கு கொடுத்துள்ள ஜீவ ஆவியாக இருப்பதனால்
வாக்கியத்தின் இறுதி வார்த்தை "இருக்காது" என்று மொழிபெயர்க்கப்பட்டாலே
வாக்கியம் அர்த்தமுள்ளதாக இருக்கும்.
அதாவது
ஜலப்பிரளயத்தினால் உலகை அழிக்கத் தீர்மானித்த தேவன் என் ஆவி மனிதனில்
என்றென்றைக்கும் இருக்காது என்று கூறுகின்றார். மரணத்தின்போது ஜீவ ஆவி
மனிதனை விட்டு செல்கின்றது. (லூக் 16.19-31)
ஜலப்பிரளயத்தினால் மக்கள் மரிக்கப்போவதனால் அவர்களை உயிரோடே
வைத்திருப்பதற்காகத் தேவன் அவர்களுக்கு கொடுத்த ஜீவஆவி எப்போதும்
அவர்களில் இருக்காது என்றே தேவன் அறியத்தருகின்றார்.
"தேவன் தன் ஆவியை மனிதர்களிலிருந்து எடுப்பதன் மூலமாக அவர்களது வாழ்வு
முடிவடைந்து விடுவது பற்றியே இவ்வாக்கியம் கூறுகிறது.
ஆதி 6.3 இன்
ஆரம்பவாக்கியத்தின்
இறுதி வார்த்தை "இருப்பதில்லை" எனும் அர்த்தமுடையது. "என் ஆவி
என்றென்றைக்கும் மனிதனில் இருப்பதில்லை" எனக்கூறும் தேவன் அவன்
இருக்கப்போவது நூற்றிருபது வருஷம் என்றார்.
அதாவது இன்னும் 120 வருடங்கள் மட்டுமே மனிதனுக்குத் தான் கொடுத்த ஜீவ ஆவி
மனிதனில் இருக்கும் என்றே தேவன் அறிவித்துள்ளார்.
ஆதியாகமம் 6ம் அதிகாரத்தின் ஆரம்ப வசனங்கள் தேவன் ஜலப்பிரளயத்தினால் உலகை
அழிக்கத் தீர்மானித்துள்ளதைப் பற்றியே அறியத்தருகின்றன.
(ஆதி 6.1-. அதேசமயம் தேவன் உலகை அழிக்கத் தீர்மானித்து 120 வருடங்களின்
பின்பே உலகம் அழிந்தது.
எனவே அவன்
இருக்கப்போவது 120 வருடங்கள் தானே எனும்
தேவ அறிவிப்பானது இன்னும் 120 வருடங்கள் மட்டுமே மனிதனை உயிரோடு
வைத்திருக்கும் தேவனருளிய ஜீவஆவி அவனில் இருக்கும் என்பதை அறியத்
தருகிறது.
அப்படியிருந்தும் சில கிறிஸ்தவர்கள் இவ்வசனத்தை ஆதாரமாகக்கொண்டு "தேவன்
மானிட ஆயுட் காலத்தை 120 வருடங்களாக வரையறை செய்துள்ளார். எனக்
கருதுகின்றனர்.
அதாவது உலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் 120 வருடங்கள் உயிர்வாழ்வான்
என சிலர் போதிக்கின்றனர். ஆனால் ஆதியாகமப் புத்தகத்தில் இதற்குப்
பின்னரும் பலர் 120 வருடங்களுக்கும் அதிகமாக வாழ்ந்துள்ளமையால்
(ஆதி 11:10-26).
ஆதி 6:3 இலுள்ள தேவ அறிவிப்பை மானிட ஆயுட் கால வரையறையாகக் கருதமுடியாது.
அது தேவன் உலகை அழிப்பதாக அறிவித்ததற்கும் உலகை அழித்தற்கும் இடைப்பட்ட காலமாகும்.
அந்த 120 வருடங்களே
1 பேதுரு 3.20 இல் பூர்வகாலத்திலே நோவா பேழையை ஆயத்தம் பண்ணும் நாட்களிலே
தேவன் நீடிய பொறுமையோடே காத்திருந்த காலம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே உலகத்தை ஜலப்பிரளயத்தினால் அழிக்கத் தீர்மானித்த தேவன், ஆதியாகமம்
6:3 இல் மனிதன் இருக்கப்போவது 120 வருடங்கள் என்பதனால் என் ஆவி
என்றைக்கும் மனிதனில் இருப்பதில்லை எனக் கூறியுள்ளார்
ஆதி 6.3 அடிப்படையாகக் கொண்டு மனிதனின் ஆயுட்காலம் 120 என கூறுவது ஏற்படையதுதானா? 120 வயதைத் தாண்டியும் மனிதர்கள் இவ்வுலகதில் வாழ்ந்து வருகின்றனர். அப்படியால் அவ்வசனத்தின் உண்மையான அர்த்தம் என்ன? பாகம் 2
0
March 30, 2016
Tags