வேத ஆராய்ச்சி 1

நாம் எங்கு உட்கார கூடாது

1) பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் – சங் 1:1,2

2) விணரோடு (விணாக நேரத்தை போக்குபவர்கள்) உட்கார கூடாது – சங் 26:4

3) அவிசுவாசிகளோடு உட்கார கூடாது – லூக் 22:55

4) சகோதரனுக்கு/சகோதரிக்கு விரோதமான பேச்சுகள் பேச உட்கார கூடாது – சங் 50:20

5) துன்மார்க்கர் உட்காரும் இடத்தில் – சங் 26:5

6) பொல்லாத மனுஷர் உட்காரும் இடத்தில் – நீதி 24:1

7) பெருமைக்கு உட்கார கூடாது – லூக் 14:8,9

8) மாய்மாலம் பண்ண உட்கார கூடாது – எசேக் 33:31

நம்மிடம் இருக்க கூடாத "மை"

1) பெரு"மை" –
யாக் 4:6

2) கொடு"மை" –
நீதி 3:31

3) தீ"மை" –
2 தீமோ 4:14

4) மன்னியா"மை" –
மாற்கு 11:26

5) கீழ்படியா"மை" –
எபேசி 5:6

6) மேட்டி"மை" –
ரோ 11:20

7) பொறா"மை" –
நீதி 24:19

8) பகை"மை" –
லேவி 19:17

நம்மிடம் இருக்க வேண்டிய "மை"

1) செம்"மை" –
சங் 125:4

2) நன்"மை" செய்தல் –
யாக் 4:17

3) மகி"மை" –
யோ 5:44

4) அழியா"மை"யை தேடுதல் – ரோ 2:7

5) வல்ல″மை" –
எபேசி 1:19

6) அடி"மை" தேவனுக்கு –
லூக் 1:38

7) ஒரு"மை" -
எபேசி 4:11

8) மேன்"மை" பாராட்டுதல் கர்த்தர் நாமத்தை குறித்து – சங் 20:7

9) தாழ்"மை" –
யாக் 4:10

10) பொறு"மை" –
2 தெச 3:5

11) உண்"மை" –
எபி 10:22

12) எளி"மை" –
மத் 5:3

மோசே இடம் காணப்பட்ட நல்ல குணஙகள்

1) மிகுந்த சாந்தமுள்ளவன் – எண 12:3

2) உண்மையுள்ளவன் –
எபி 3:2

3) விசுவாசத்தில் பெரியவன் – எபி 11:24

4) தாழ்மையுள்ளவன் (நான் எம்மாத்திரம்) – யாத் 3:11, 4:19

5) துன்பத்தை அனுபவிப்பதை தெரிந்து கொண்டான் –
எபி 11:26

6) கர்த்தரை நோக்கி ஜெபிக்கிறவன் –
யாத் 32:13

7) தேவ சமுகத்தில் இருந்த போது முகம் பிரகாசித்தது – யாத் 34:28-33

8) கர்த்தர் தனக்கு கற்பித்த படயெல்லாம் செய்தான் – யாத் 40:1-38

9) செய்கையிலும், வாக்கிலும் வல்லவன் – அப் 7:22

10) தன் பிழையை ஒத்து கொண்டான் (இந்த முறை பாவம் செய்தேன்)

11) புசியாமலும் குடியாமலும் 40 நாள் (3 முறை) உபவாசம் இருந்தான் – யாத் 34:28-30

12) கிருபை பெற்றவன் –
யாத் 33:17

13) தேவனிடத்தில் நற்சாட்சி பெற்றவன் – எண 12:7,8,3

14) கை சுத்தமாயிருந்து (பரிசுத்தவான்) – எண் 16:14,15

15) மகிமையின் பிரகாசத்தால் முடபட்டார் – யாத் 24:15-18

16) கர்த்தர் சத்தம் கேட்டு நடுங்கினார் (தேவ பயம் காணபட்டது) - அப் 7:32

17) தனக்கு விரோதமாக பேசின மிரியாமை மன்னித்து அவளுக்காக ஜெபித்தான் – எண் 12:13

18) உலக மேன்மையை வெறுத்தான் (பார்வோன் குமாரத்தியின் மகன்) –
எபி 11:24

19) அநித்தியமான பாவ சந்தோஷங்களை வெறுத்தான் – எபி 11:25

20) இனி வரும் பலன் மேல் நோக்கமாக இருந்தான் –
எபி 11:26

21) கிறிஸ்துவின் நிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியம் என்று
எண்ணினான் – எபி 11:26

இயேசுவின் சிஷர்கள் இடம் காணபட்ட தவறுகள் என்னென்ன?

பிரியமானவர்களே, நம்முடைய வாழ்கையில் மாம்சத்தை வெல்ல எப்படி
சிரமப்படுகிறோமோ, அப்படித்தான் இயேசு கிறிஸ்துவின் 11 சீடர்களும்
சிரமப்பட்டார்கள்.

ஆனால் முடிவில் அவர்கள் மாம்சத்தை ஜெயித்து, பரிசுத்தமாய் நடந்து,
கர்த்தரின் சித்தப்படி ஊழியம் செய்து மரித்தார்கள்.

அவர்களுடைய வாழ்வில் வந்த மாம்ச போராட்டங்கள் என்ன தெரியுமா?

1) பயத்தினால் நடுங்கினார்கள் – மத் 8:25

2) அற்ப விசுவாசம் காணபட்டது – மத் 8:26

3) பண ஆசை காணபட்டது (யூதாஸ்) – லூக் 22:47

4) தேவ அன்பு காணபடவில்லை – யோ 21:15

5) மேட்டிமை (நான் பெரியவன்) காணபட்டது – லூக் 9:46

6) வாக்கு வாதம் காணபட்டது – லூக் 9:46

7) மாம்ச சுபாவம் வெளிபட்டது (மல்குஸ் காதை பேதுரு வெட்டினான்) – யோ 18:10,11

8) குற்றம் கானும் பழக்கம் இருந்தது – மத் 26:8

9) ஜெபிக்க வேண்டிய நேரத்தில் தூங்கினார்கள் –
மத் 26:40

10) முறுமுறுத்தார்கள் –
யோ 6:61

11) ஆவிக்குரிய ஜிவியத்தில் வெது வெதுப்பான நிலை காணபட்டது – மத் 26:40

12) பின்மாற்றம் காணபட்டது (மீன் பிடிக்க போனார்கள்) – யோ 21:1-7

13) இயேசுவை மறுதலிக்கும் பழக்கம் காணபட்டது (பேதுரு 3 முறை மறுதலித்தான் –
மத் 26:69-74

14) உறுதியற்ற நிலை காணபட்டது – மத் 26:56

15) சுயசித்தம் செய்தார்கள் – மாற் 10:13

16) இயேசுவை தவறாக புரிந்து கொண்ட சிஷர்கள் (இயேசுவை பிசாசு என்று
எண்ணினார்கள் (Negative thoughts) – மத் 14:25, 26

17) எரிச்சல் காணபட்டது – மாற்கு 10:41

18) எல்லாரும் ஓடி போனார்கள் -மாற்கு 14:50

19) உயிர்த்தெழுந்த இயேசுவை நம்பவில்லை – மாற்கு 16:11-14
முடிவலோ, அவர்கள் இவை எல்லாவற்றையும் ஜெயித்தார்கள்.
நீங்கள் எப்படி?

தேடுங்கள்

(1) கர்த்தரை தேடுங்கள் –
ஆமோஸ் 5:4
கர்த்தர் இஸ்ரவேல் வம்சத்தாருக்குச் சொல்லுகிறது
என்னவென்றால்: என்னைத் தேடுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்.

(2) தேவனுடைய இராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள் –
மத்தேயு 6:33
முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது
இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்.

(3) மேலானவைகளை
தேடுங்கள் –
கொலொ 3:1
நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய
வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள்.

( மத்தேயு 7:8 - ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்;
தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்)

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.