மத்தேயுவும் லூக்காவும் முரண்பாடான சம்பவங்களை எழுதியுள்ளார்கள் என வாதிடுவது அர்த்தமற்றது.ஏனெனில் முரண்பாடுகளையல்ல, ஒன்றுமைகளையே நாம் அதிகளவில் இரண்டிலும் காணலாம்.மறைந்த இறையியலாளர் ஜேம்ஸ் ஓர் என்பார் கன்னிப்பிறப்பைப் பற்றி தான் எழுதிய நூலில், இரண்டு குறிப்புகளுக்குமிடையேயுள்ள 12 ஒற்றுமைகளை கூட்டிக் காட்டியுள்ளார்.
(1) ஏரோது ராஜாவின் இறுதிநாட்களில் இயேசு பிறந்தார் மத். 2:1,13 , லூக் 1:5
(2) அவர் பரிசுத்த ஆவியானாலேயே கர்ப்பந்தரிக்கப்பட்டார். மத்.1:18,20 , லூக் 1:35
(3) அவருடைய தாயார் ஒரு கன்னிப் பெண் மத்.1:18,25,23 லூக் 1:27,34
(4) யோசேப்புக்கு அவள் மனைவியாக நியமிக்கப்பட்டிருந்தாள் மத்.1:18 லூக் 1:27, 2:4
(5) யோசேப்பு தாவீதின் வம்சத்தைச் சேர்ந்தவன் மத்.1:16,20 , லூக் 1:27, 2:4
(6) இயேசு பெத்தலகேமில் பிறந்தார். மத்.2:1 , லூக் 2:4-6
(7) தேவ அறிவுறுத்தலின்படி அவருக்கு இயேசு எனும் பெயர் கொடுக்கப்பட்டது. மத்.2:1 , லூக் 1:31
(8) அவர் இரட்சகர் என அழைக்கப்பட்டார். மத்.1:21 , லூக் 2:11
(9) மரியாள் கர்ப்பவதியாயிருந்தது யோசேப்புக்கு தெரிந்திருந்தது. மத்.1:18-20 , லூக் 2:4
(10) அவள் கர்ப்பவதி என்று அறிந்து அவளை யோசேப்பு ஏற்றுக் கொண்டான். மத். 1:20,24,25 , லூக் 2:4
(11) தேவதூதன் மூலம் தகவல்கள் கொடுக்கப்பட்டன. மத். 1:20 , லூக் 1 :27, 28
(12) இயேசுவின் பிறப்பின் பின் யேசேப்பும் மரியாளும் நாசரேத்தில் குடியிருந்தனர். -மத். 2:23, லூக் 2:39.
உண்மையில் இத்தனை ஒற்றுமைகளைக் கொண்ட இரு குறிப்புகளும் முரண்பாடுடையது, நம்பகமற்றது என வாதிடுவது நியாயமற்றதும் அர்த்தமற்றதும், அறிவீனமானதுமான செயல் என்பதில் எவ்விதமான சந்தேகமுமில்லை.
மத்தேயுவினதும், லூக்காவினதும் ஆதாரக் குறிப்புகளிடையே எவ்விதமான முரண்பாடும் இல்லை என்பது உண்மையினும் இருவர் குறிப்பிடும் வம்சவராற்று அட்டவணைகளையும் சற்று ஆழமாக ஆராய்ந்து பார்த்தால், ஒருசில வித்தியாசங்களையும் அவதானிக்கலாம் என்பதும் உண்மையே. எனினும் ஒரு வம்சவரலாறு நம்பகமற்றது, பிழையானது எனும் முடிவுக்கு வ்நதுவிடும் அளவுக்கு மற்றறையது வேறுபட்டுவிடவில்லை.பொதுவான ஒற்றுமையே நாம் இரண்டிலும் காணலாம்.மத்தேயுவின் வரலாற்று அட்டவணையில் பெண்களின் பெயர்களையும் வரலாறானது பதினான்கு தலைமுறைகளைக் கொண்ட மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டிருப்பதையும் நாம் காணலாம். ஆனால் லூக்காவினது, வழமையான வம்சவரலாற்று அட்டவணையை போலல்லாது, பின்நோக்கிச் செல்கின்றது. ஜேம்ஸ் ஓர் குறிப்பட்டது போல “இயேசுவை தாவீதின் ராஜ பரம்பரையில் வந்தவராக காட்டுவதே மத்தேயுவின் நோக்கமாயிருந்தது. (1:1) லூக்காவோ தாவீதுக்கும் அப்பால் சென்று, இயேசு தேவனுடைய குமாரன் என்பதை அறியத் தருகிறார். (3:38) எனினும்அவ்வம்சவரலாற்று அட்டவணைகள் மத்தேயுவினாலும், லூக்காவினாலும் உருவாக்கப்ட்டவை அல்ல. அக்காலத்தில் அங்கீகரிக்கப்பட்டிருந்த வரலாற்று அட்டவணைகளே இருவராலும் உபயோகிக்கப்பட்டுள்ளன என்பது தேவ ஆராய்ச்சியாளர்களின் முடிவாகும். இவை பொய்த் தகவல்களைத் தருகின்றன என்பதற்கான சரித்திரபூர்வமான ஆதாரங்கள் எதுவுமில்லை.
மத்தேயுவினதும் லூக்காவினதும் வம்சவரலாற்று அட்டவணைகள் நம்பகமானவை. ஆதாரபூர்வமான என்பது உண்மையோயினும் இரண்டையும் கருத்தாய் ஆராய்ந்து பார்க்கும்போது ஒருசில வித்தியாசங்களை நாம் அவதானிக்கலாம். குறிப்பாக,தாவீத்துக்குபின் வம்சவரலாற்றில் பாரியதோர் வித்தியாசம் காணப்படுகின்றது.தாவீதுக்குப் பின் வேறுபட்ட இரண்டு வம்சவரலாறுகளை நாம் அவதானி்க்கலாம். மத்தேயுவின் வம்சவரலாறு தாவீதின் குமாரனான சாலமோனுடைய பரம்பரையை பற்றி குறிப்பிடுகையில் (1:6) லூக்காவினுடையது, தாவீதின் மற்றுமொரு குமாரனான நாத்தானுடைய பரம்பரையை பற்றி அறியத் தருகிறது. (3:31) தாவீதுக்குப் பின் ஒருசில இடங்களில் மட்டுமே வம்சவரலாறுகள் ஒன்றையொன்று சந்திப்பதாயிலுள்ளன.மற்ற இடங்களில் எவ்வித தொடர்பும் இல்லாமலிருப்பது, இவை எந்த அளவுக்கு நமபகமானது என்பதில் சந்தேகத்தை ஏற்படுத்துவதாயிலுள்ளதுஎன அநேகர் வாதிடுகின்றனர். எனினும் ஜேம்ஸ்ஓர் இதைப் பற்றி எழுதும்போது, இதில் முரண்பாட்டையல்ல, எவ்வாறு இதை விளக்குவது என்பதே நாம் எதிர்நோக்கும் பிரச்சினையாகும். எனினும் மத்தேயு குறிப்பிடுவது யோசேப்பின் வம்சவரலாறு, லூக்கா குறிப்பிடுவது மரியாளின் வம்சவரலாறு எனும் முடிவுககு வருவதில் எவ்வித தவறுமில்லை. காரணம் மரியாளும் தாவீதின் பரம்பரையில் வந்தவள் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் உளளன“ என்று குறிப்பிட்டுள்ளார். மத்தேயு யோசேப்பைப் பற்றியும் லூக்கா மரியாளைப் பற்றியும் எழுதியுள்ளனர் என்பதும் இதை உறுதிப்படுத்துவதாயுள்ளது.
மத்தேயு சாலமோனின் பரம்பரையில் வந்த யேசேப்பின் வம்ச வரலாற்றையும், லூக்கா நாத்தானின் பரம்பரையில் வந்த மரியாளின் வம்ச வரலாற்றையும் குறிப்பிபட்டாலும்இது இரணடு வித்தியாசமான பரம்பரை எனும் முடிவுக்கு வந்துவிடக் கூடாது.காரணம் சாலமோனும் நாத்தானும் பத்தேசபாளிடத்தில் தாவீதுக்குப் பிறந்த பிள்ளைகள் எனவே யோசேப்பும் மரியாளும் தாவீதின் பரம்பரையில் வந்தவர்கள் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. மேலும், மத்தேயும் லூக்காவும் குறிப்பிட்டடுள்ள வம்சவரலாறுகளில் உள்ள முக்கியமான ஒரு வித்தியாசமும் இதை ஆதாரபூர்வமாக நிரூபிப்பதாயுள்ளது. எனினும் மேலோட்டமாக வாசிக்கையில் நமக்கு குழப்பதையே இது ஏற்படுத்துகின்றது என்பதை மறுப்பதற்கில்லை.யோ
