காயீனின் காணிக்கை பாகம் 2

"மேசேயின் காலத்தில் கொடுக்கப்பட்ட கட்டளைகளை
அடிப்படையாகக் கொண்டு அச்சட்டங்கள்
கொடுக்கப்படுவதற்கு நீண்டகாலத்திற்கு முற்பட்ட சம்பவத்தை வியாக்கியானம்
செய்வது தவறாகும்

அதேபோல் காயீனின் பயிர்செய்கையை தேவன் அங்கீகரிக்காத
மையினாலேயே அவனது காணிக்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை எனக் கூறுவதிலும்
அர்த்தமில்லை.

ஏனென்றால் வீழ்ச்சிக்கு முன்பும் அதற்கு பின்பும் பயிர்செய்கையே
தேவனுக்கு கொடுக்கப்பட்ட தொழிலாயிருந்த்து.
(ஆதி 2:15, 13:17-19).

அதேபோல் காணிக்கையாகச் செலுத்தப்பட்ட பலியின் சுகந்த வாசனையே தேவன்
ஆபேலின் காணிக்கையை ஏற்றுக் கொண்டமைக்கான காரணம் என்பதற்கும் வேதத்தில்
எவ்வித ஆதாரமுமில்லை.

காயீனும் ஆபேலும் பலி செலுத்தியதாக 4ம் அதிகாரத்தில்
குறிப்பிட வில்லை. இருவரும் காணிக்கையையே கொண்டு வந்தனர்.

ஆதி 4:2-5 இல் காணிக்கை என தமிழில்
மொழிபெயர்க்கப்பட்டுள்ள பதம் மூலமொழியில் பரிசு என்றே பொருள்படும். எனவே
தேவனுக்கு பரிசாகக் கொடுக்கப்பட்ட ஆபேலினது காணிக்கையை பலியாகக்
கருதமுடியாது. இத்தோடு பலிபொருள்
தகனிக்கப்படும்போதே அதிலிருந்து மணம் வரும்.

ஆபேல் தன் காணிக்கையைத் தகனித்தாக ஆதியாகமத்தில் குறிப்பிடப்படவில்லை.
காயீனின் காணிக்கை சபிக்கப்பட்ட நிலத்தின் கனிகள் என்பதனாலேயே ஏற்றுக்
கொள்ளப்படவில்லை எனும் கருத்துக்கும் வேத ஆதாரம் இல்லை. பிற்காலத்தில்
நிலத்தின் கனிகள் தேவ அறிவுறுத்தல்களின்படி அவருக்கு காணிக்கையாகச்
செலுத்தப்பட்டன(உபா 26:1-11)
காயீனின் காணிக்கை இரத்தபலியாக இராதமையினாலேயே ஏற்றுக் கொள்ளப்படவில்லை
என்பதே இன்று பெரும்பாலான கிறிஸ்தவர்களது கருத்தாய் உள்ளது.

ஏனைய விளக்கங்களை விட இக்கருத்து மக்கள் மத்தியில்
பிரபல்யமடைந்துள்ளமைக்குக் காரணம் இவ்விளக்கம் ஸ்கோஃபீல்ட்
ஆங்கில வேதாகமத்தின் விளக்கக் குறிப்புகளில் சேர்த்துக்
கொள்ளட்டுள்ளமையாகும்.

"ஆபேலின் பலியில் இரத்தம் சிந்தப்பட்டமையே அவனது பாவ அறிக்கையாகவும்
தனக்குப் பதிலாக செலுத்தப்படும் பலியின் மீதான விசுவாசத்தை
வெளிப்படுத்துவதாவும் உள்ளது. என கூறும் ஸ்கோஃபீல்ட் வேதாகம
விளக்கக்குறிப்பு,

"காயீனின் காணிக்கை இரத்தபலியாக இராதமையால் தவறான பலியாக இருந்தது
எனக் கூறுகின்றது.

உண்மையில்
இவ்விளக்கமானது இரத்தம் சிந்துதலில்லாமல் பாவ மன்னிப்பு இல்லை(எபி. 9.22)
எனும் உபதேசத்தை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது.

எனினும் காயீனும் ஆபேலும் தங்கள் பாவங்களுக்காக பலி செலுத்தியதாக
ஆதியாகமம் 4.2-5 இல் குறிப்பிடப்படவில்லை.

"காயீனும் ஆபேலும் தேவனை வழிபடுவதற்காகவே காணிக்கையுடன் வந்தனர் ஆதி.
4:2-5 இல் காணிக்கை எனத் தமிழில்
மொழிபெயர்க்கப்பட்டுள்ள மின்ஹா எனும் எபிரேய பதம் பரிசு என்றே பொருள்படும்.

இப்பதம் பலியிடப்படும் செயலை அல்ல மாறாக பரிசாகச்
செலுத்தப்படுவதையே குறிக்கும்.

எபி. 11:4 இல் "பலி" என்னும் அர்த்தம் தரும் "தோசியா" என்னும் கிரேக்க
பதம் ஆபேலின் காணிக்கையைக் குறிப்பிட உபயோகிக்கப்பட்டிருப்பினும் எபிரேயே
நிருப ஆசிரியர் அதை இரத்தபலியாக கருதினர் எனக் கூறுவதிற்கில்லை.

ஏனென்றால் எபி. 11:4 இல் காயீனுடைய காணிக்கையும் இதேவிதமாகவே "தோசியா"
எனும் கிரேக்க
பதத்தினாலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே இவ்விடத்தில் "தோசியா" எனும் பதத்தை இரத்தபலியாக கருதமுடியாது".

காணிக்கை பாவ மன்னிப்புக்காகச் செலுத்தப்பட்ட பலி
என்பதற்கு சுட்டிக் கட்டுப்படும் ஆதாரமும் வேதாகம விஷயத்தை முரட்டுத்தனம்
விளக்கமாகப் உள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.