கர்த்தர் வெறுக்கும் காயீனின் வழி பாகம் 1

வேதப் பகுதி:
ஆதியாகமம் 4:1

உலகின் 'முதல்
கொலைகாரனான' காயீனின் வாழ்வு, கிறிஸ்தவர்களாகிய நாம்பின்பற்றக் கூடாத
ஒரு வழியாகப் புதிய ஏற்பாட்டில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

'பொல்லாங்கனால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலை செய்த காயீனைப்
போலிருக்க வேண்டாம்'
(1யோவா.3:12), என்று அறிவுறுத்தும் புதிய ஏற்பாடு, தேவனை மறுதலிக்கும்
வேதப்புரட்டர்கள் செல்லும் வழியாகக் காயீனின் வழி உள்ளதாகக்
கூறுகிறது (யூதா.11).

(1). அது அவிசுவாசத்தின்
வழி (ஆதி.4:1)

கிறிஸ்தவம் விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்ட மார்க்கமாகும்.
காயீனின் வழி
விசுவாசமுள்ளதாக இருக்கவில்லை. அவன் அவிசுவாசத்துடன் தேவனிடம் வந்தமையால்
தேவன் அவனை ஏற்றுக் கொள்ளவில்லை.

விசுவாசம் என்பது நம்பப்படுகிறவைகளின் உறுதி அல்லது
'காணப்படாத வைகளின் நிச்சயம்' ஆகும்
(எபி.11:1).

விசுவாசத்தைக் குறிப்பிடும்'பிஸ்டிஸ்' (pistis)என்னும் கிரேக்கப்பதம்,
'அசைக்க முடியாத உறுதியான நம்பிக்கை'
என்னும் அர்த்தமுடையது.

கண்களினால் காணாததையும், வேதாகமம் சொல்வதை அடிப்படையாகக் கொண்டு உறுதியாக
நம்புவதே விசுவாசமாகும்(எபி.11:6).

காயீனின் வழி இத்தகைய விசுவாசமுடையதாக இருக்கவில்லை.
தேவனுக்கு காணிக்கை செலுத்தும்போது ஆபேல் தன்னுடைய மந்தையில்
'முதற் பிறந்தவைகளில் கொழுமையானவைகளைத்
' தெரிவுசெய்ததை (ஆதி.4:4) வேதாகமம் அவனுடைய 'விசுவாசச் செயல்'என்று
கூறுகிறது (எபி.11:4).

ஆதாமும் ஏவாளும் ஏதேன் தோட்டத்தில் இருந்த காலத்திலும், அதன் பின்பும்,
தேவனை வழிபடுகிறவர்களாக இருந்திருக்க வேண்டும். இல்லையென்றால், காயீன்
பிறந்தபொழுது, 'கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன்" (ஆதி.4:1) என்னும்
ஏவாளுடைய கூற்று அர்த்தமற்றதாகவே இருக்கும்.

எனவே, காயீனும் ஆபேலும், தங்களுடைய
பெற்றோரிடமிருந்தே தேவனுக்கு காணிக்கை செலுத்தி அவரை வழிபடும் முறையை அறிந்திருக்க
வேண்டும்.

ஆதாம் கூறியவற்றை ஆபேல் விசுவாசித்துள்ளான். ஆனால் காயீனோ, கடமைக்காகத்
தேவனுக்கு காணிக்கை செலுத்தியுள்ளான்.

ஆபேல் விசுவாசத்துடன் காணிக்கை
செலுத்தியமையால், அவன் நீதிமான் என்று தேவனால் நற்சாட்சி பெற்றான்
(எபி.11:4).

ஆதாமின் மூலமாகத்
தேவ னைப் பற்றி அறிந்துகொண்ட காரியங்களை ஆபேல் விசுவாசித்து அதன்படி
செயற்பட்டமையால், அவன் தேவனுடைய பார்வையில் நீதிமானாக இருந்தான்.

வேதாகமப் போதனையின்படி,தேவனைப் பற்றி அறிந்து கொள்வதை, அல்லது தேவனுடைய
வார்த்தையை விசுவாசிப்பதே அவருடைய பார்வையில் நீதிமானாக இருப்பதற்கான
வழியாக உள்ளது
(ஆதி.12:5-6,
ரோ.4:1-25).

கிறிஸ்தவர்களாகிய நாம் காயீனின் அவிசுவாச வழியில் செல்கிறவர்களாக
இருக்கக் கூடாது. தேவனைப் பற்றி வேதாகமம் கூறும் காரியங்கள் உண்மை என்பதை
நாம் விசுவாசிக்க வேண்டும் அப்பொழுது நாமும் ஆபேலைப் போல தேவனுடைய
பார்வையில் நீதிமான்களாகக் கருதப்படுவோம்.

காயீனுடைய காணிக்கை "இரத்தம் சிந்தும் பலியா" இராதமையினாலேயே தேவனால்
ஏற்றுக்கொள்ளப்படவில்லை
என்று சிலர் கருதுகின்றனர். ஆனால், காயீனும் ஆபேலும் தங்களுடைய
பாவங்களுக்குப் பலி செலுத்தியதாக ஆதியாகமம் 4ம் அதிகாரத்தில்
குறிப்பிடப்படவில்லை.

அவர்கள் தேவனுக்கு காணிக்கை செலுத்தினார்கள் என்றே இவ்வதிகாரம் கூறுகிறது
(ஆதி.4:3-4). ஷகாணிக்கை| என்பதற்கு மூலமொழியில் உபயோகிக்கப்பட்டுள்ள
"மின்ஹா"(minha) என்னும் எபிரேயப் பதம்தேவனைக் கனப்படுத்துவதற்காக
அவருக்கு ஒரு பரிசைக் கொடுப்பதையே குறிக்கின்றது.

இரத்தப் பலியைக் குறிப்பிடும்
"ஸீபாஃ"(zebah) என்னும் எபிரேயப் பதம் இவ்வதிகாரத்தில் உபயோகிக்கப்படவில்லை.

எபிரேயர் 11:4ல்,
ஆபேலினுடைய காணிக்கையைப் "பலி" என்று குறிப்பிட்டுள்ளது தவறாகும்.
இங்கு"தைசியா"(thysia) என்னும்கிரேக்கப் பதம் இரத்தப் பலியைக்
குறிப்பிடும் சொல் அல்ல.

இரத்தமற்ற காணிக்கைகளைத் தேவன்
ஏற்றுக்கொள்ளமாட்டார் என்று கூறுவது வேதாகமப் போதனையை முரண்படுத்தும்
கருத்தாகவே உள்ளது
(யாத்.23:16,
உபா.26:2-4).

காயீன் இரத்தப் பலியையே செலுத்தியிருந்தாலும் தேவன் அதை
ஏற்றுக்கொண்டிருக்க மாட்டார். ஏனென்றால், தேவன் தமக்கு
கொடுக்கப்படும் காணிக்கைப் பொருளையோ, அல்லது அதுகொடுக்கப்படும் சடங்காசார
செயல்முறைகளையோ அல்ல, மாறாக அதைக் கொடுப்பவனுடைய உள்ளத்தின் நிலைமை
எப்படி இருக்கின்றது என்பதையே பார்க்கிறவராக இருக்கின்றார் (ஆமோ.5:21-24,
ஓசி.6:6,
ஏசா.1:11-17,
மீகா.6:6-8,
எரே.7:19-20,
லூக்.21:1-4).

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.