ஆதியாகமம் 1:1 இலுள்ள ஆதியிலே எனும் வார்த்தை மூலமொழியில் "வானங்களும்
பூமியும் சிருஷ்டிக்கப்பட்ட காலத்தையே குறிக்கிறது அதற்கு முன்பு தேவனைத்
தவிர வேறெதும் இருக்கவில்லை.
ஆதியாகமம் முதலாம் அதிகாரத்தில் தேவன் ஆறு நாட்களும் சிருஷ்டித்தவைகள்
நிரற்படுத்தப்பட்டள்ளன. ஆறாவது நாளே மனிதன் சிருஷ்்டிக்கப்பட்டுள்ளான்.
ஆதி. 1:26-31) அதற்கு முன் மனிதர் எவரும் இருக்கவில்லை.
ஆறாம் நாளில் சிருஷ்டிக்கப்படட மனிதனுடைய பெயரே ஆதாம் உலக மாந்தர்
அனைவரும் அந்த ஆதாமின் வம்சத்தினர் ஆதாமே உலகின் முதலாவது மனிதன் என்பதை
1 கொரிந்தியர் 15:45, 47 அறியத் தருகிறது.
உலக மாந்தர் அனைவரும் ஆதாம் எனும் ஒரு மனிதனில் இருந்து வந்தவர்கள் எனும்
உண்மையை அப். 17:26 அறியத் தருகிறது.
மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஓரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி,
பூமியின் மீதெங்கும்
குடியிருக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள்
குடியிருப்பின்
எல்லைகளையும் குறித்திருக்கிறார்; எனும் உண்மையை இவ்வசனத்தின் மூலம்
அறிந்து கொள்ளலாம்.
மூலமொழியின் படி இவ்வசனம் ஆங்கில வேதாகமத்தில் சரியான முறையில் "ஒரு
மனிதனில் இருந்து மானிட ஜாதிகள் அனைத்தும் உருவாகி என மொழி
பெயர்க்கப்பட்டுள்ளது.
அதாவது சகல மனிதர்களும் ஒரு மனிதனாகிய ஆதாமிலிருந்து வந்தவர்கள்.
என்பதே இவ்வசனத்தின் அர்த்தமாகும்.
அந்த ஒரு ஆதாமிலிருந்து வந்தவர்கள் நோவாவின் குடும்பத்தினரை தவிர மற்ற
அனைவரும் உலகலாளவிய ஜலப்பிரளயத்தில் மரித்தனர். (ஆதி. 6:13, 7:21)
அதன் பின்னர் நோவாவின் பிள்ளைகள் மூலமே மனிதர்கள் பூமியெங்கும்
பரவினார்கள். (ஆதி. 9:18-19) எனவே, ஆரம்பத்தில் ஆதாமை் தவிர வேறு
மனிதர்கள் இருந்தார்கள் என்பதற்கு வேறு எவ்வித ஆதாரமும் இல்லை.
எல்லோரும் ஆதாமிலிருந்து வந்துள்ளமையால் ஆதாமின் ஆண்பிள்ளைகள்,
மணமுடிப்பதற்கு நம் சகோதரிகளைத் தவிர வேறு பெண்கள் உலகில் இருக்கவில்லை.
மோசேயின் காலம் வரை சகோதரிகளைத் திருமணமுடிப்பது சமுதாயத்தால்
அங்கீகரிககப்பட்ட முறையாகவே இருந்தது.
ஆனால் சீனாய் மலையில் தேவன் மோசேயின் மூலமாகவே கொடுத்த நியாயப்பிரமாணம்
சகோதர சகோதரி திருமணத்தை முற்றாகத் தடை செய்துள்ளது.
ஒருவன் தன் சொந்த சகோதரியை மட்டுமல்ல ஒன்றுவிட்ட சகோதரியை மணம்
முடிப்பதும் தடுக்கப்பட்டுள்ளது.
லேவியராகமம் 18:9இல்
"உன் தகப்பனுக்காவது உன் தாய்க்காவது வீட்டிலாகிலும் புறத்திலாகிலும்
பிறந்த குமாரத்தியாகிய உன் சகோதரியை
நிர்வாணமாக்கலாகாது
"எனக் கட்டளை
யிடப்பட்டுள்ளது.
லேவியராகமம் 18 அம் அதிகாரத்தில்
"நிர்வாணமாக்குதல்" எனும் பதமானது தாம்பத்திய உறவுக்கான சொல்லாகவே உள்ளது.
லேவியராகமம் 18 :8-9 இன் கட்டளைகள்
உபாகமம் 27:20,22 இல் மறுபடியுமாகக் கொடுக்கப்பட்ட போதுநிர்வாணமாக்குதல்
என்பதற்குப் பதிலாக
"சயனித்தல்"எனும் வாரத்தை உபயோகிக்கப்பட்டிருப்பதும் இதை உறுதிப்படுத்துகின்றது.
ஆங்கில வேதாகமத்தில் இப்பதம்"பாலுறவு" என்றே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மேலும்
லேவியராகமம் 18:9 இல்
"வீட்டில் பிறந்தவள் ஒருவனது சொந்த தகப்பனுக்கும் தாய்க்கும்
பிறந்தவவளாவாள். புறத்தில் பிறந்தவள் தகப்பன் அல்லது தாய் தனது திருமண
உறவுக்கு வெளியில் பெற்ற பிள்ளையாகும் இத்தகைய சகோதரர்களுக்கிடையிலான
திருமணத்தை தடைசெய்துள்ள நியாணப்பிரமாணம் "உன் தகப்பனுடைய
மனைவியினிடத்தில் உன் தகப்பனுக்குப் பிறந்த குமாரத்தியை
நிர்வாணமாக்கலாகாது; அவள் உனக்குச் சகோதரி.
உன் தகப்பனுடைய மனைவியினிடத்தில் உன் தகப்பனுக்குப் பிறந்த குமாரத்தியை
நிர்வாணமாக்கலாகாது; அவள் உனக்குச் சகோதரி"(லேவி. 18:11)
தன் தகப்பனுக்காவது தாய்க்காவது குமாரத்தியாகிய தன் சகோதரியோடே
சயனிக்கிறவன் சபிக்கப்பட்டவன்
(உபா 27:22)
எனக் கூறுகிறது.
ஒருவன் தன் சகோதரியை மணமுடிப்பபதைத் தேவன் தடை செய்திருப்பதனால் அவர்
சிருஷ்டித்த முதல் மனிதனாகிய ஆதாமின் பிள்ளைகள் தம் சகோதரிகளை
மணமுடிக்கத் தேவன் எவ்வாறு அனுமதிக்கலாம் என கேட்கலாம்.
உண்மையில் "மனித இனம் விருததியடைவதற்கு சகோதரர்களுகு்கிடையிலான திருமணம்
அவசியமாயிருந்த காலம் வரை மட்டுமே தேவன் அத்தகைய திருமணங்களை
அனுமதித்திருந்தார்.
அதே சமயம் ஆரம்பகால மனிதர்களின் "ஜீன்கள்" (அதாவது மானிட பரம்பரை அலகு)
எவ்விதப் பாதிப்புக்கும் உட்படாதவையாக இருந்தமையால் இரத்த உறவு முறைகளில்
உ்ளளவர்களுக்கு பிறக்கும் பிள்ளைகள் பாதிக்கப்படவில்லை. ஆனால் காலம்
செல்லச் செல்ல மானிட "ஜீன்கள்" பாதிக்கப்படத்
தொடங்கியமையால் உறவினர்களுக்கிடையிலான பிறக்கும் பிள்ளைகளும்
பாதிப்படையத் தொடங்கின.
இன்றைய மருத்துவ ஆராய்ச்சிகள்
"உறவினர்களுக்கிடையிலான திருமணங்களில் பிறக்கும் பிள்ளைகள் ஒன்றில்
அங்கவீனர்களாக இல்லையென்றால் வியாதியுடையவர்களாக இல்லையென்றால் புத்தி
பேதலித்தவர்களாக இருப்பார்கள் என்பதை கண்டுபிடித்துள்ளர்.
"இன்று இரத்த உறவு முறையில் திருமண முடிப்பவர்களுக்கு பிறக்கும்
பிள்ளைகளின் "ஜீன்கள் (மானிடப் பரம்பரை அலகு) பாதிக்க்பபட்டவர்களாகவும்,
தீங்கு விளைவிப்பவையாகவும் உள்ளன.
எனவே உறவினர்களுக்கிடையிலான திருமணங்களில் பிறக்கும் பிள்ளைகள் பாதிக்கத்
தொடங்கும்வரை இத்தகைய திருமணங்களை அனுமதித்திருந்த தேவன் அதன்பின்னர்
மனித இனத்தின் நன்மை கருதி, உறவினர்களை் திருமணம் முடிப்பதைத் தடை
செய்துள்ளார்.