காயீனின் மனைவி யார்? பாகம் 1

(ஆதியாகமப் புத்தகத்தை வாசிப்பர்களினதும் வேதத்தை எதிர்ப்பவர்களினதும்
கேள்விகளில் ஒன்றுதான் காயீனின் மனைவி பற்றியது. ஆபேலின் மரணத்திற்கு
பின் சேத் பிறந்தாக வேதாகமத்தில் குறிப்பு உண்டு. அப்படியாயின் காயீனின்
மனைவி எங்கிருந்து வந்தாள். இதற்கு பல்வேறு இறையியல் விளக்கங்கள்
கொடுக்கப்படுகின்றன. இவற்றில் எது சரியாக இருக்கும் என்பதை இக்கட்டுரை ஆராய்கிறது)

ஆதியாகமப் புத்தகத்தை வாசிப்பவர்களின் உள்ளத்தில் "காயீனின் மனைவி
எங்கிருந்து வந்தாள்?" எனும் கேள்வி எழுவதை தவிர்க்க இயலாது.

ஏனெனில் ஆதியாகமத்தின் முதல் மூன்று
அதிகாரங்களிலும் ஆதாம் ஏவாள் எனுமிருவர் மட்டுமே இருக்கின்றனர். இவர்கள்
இருவருமே தேவனால் சிருஷ்டிக்கப்பட்ட முதல் மனிதர்கள்.
(ஆதி. 1:26-27, 21-23)

இவர்களுக்கு முன்பு உலகில் மனிதர் எவரும் இருந்ததில்லை. ஆதியாகமம்
நான்காம் அதிகாரத்தில் இவர்களுக்கு காயீன் ஆபேல் எனும் இரு பிள்ளைகள்
பிறக்கின்றனர். (ஆதி 4:1-2)

இதன்படி அச்சமயம்
ஆதாம்,
ஏவாள்,
காயீன்
எனும் மூவர் மட்டுமே இருக்கின்றனர்.

ஆனால் 4ம் அதிகாரம்
17ம் வசனத்தில்
"காயீன் தன் மனைவியை அறிந்தான்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் காயீனின் மனைவி சடுதியாக எங்கிருந்து வந்தாள் என்ற கேள்வி எழுவது இயற்கையே.

எனினும் இவ்வதிகாரத்தின் 14ம் வசனத்தில்
"என்னைக் கண்டுபிடிக்கின்ற எவனும் என்னைக் கொன்று போடுவான்" என காயீன்
கூறுவதிலிருந்து, அச்சமயம் வேறு மனிதர்களும் உலகில் இருந்துள்ளனர் என்பதை
அறிந்து கொண்டால் காயீனின் மனைவி அவர்களில் ஒருத்தி என்பது தெளிவாகும்.

ஆதியாகமம் நான்காம் அதிகாரம் வரை
ஆதாம்.
ஏவாள்,
காயீன்,
ஆபேல்
என்போரைப் பற்றி எழுதியுள்ள மோசே 5ம் அதிகாரத்தில் ஆபேல் என்போரைப் பற்றி
எழுதியுள்ள மோசே 5ம் அதிகாரத்தில் முதல் மனிதனான ஆதாமின் வம்சவரலாற்றைக்
குறிப்பிட்டுள்ளார்.
(ஆதி 5:1-4)

930 வருடங்கள் வாழ்ந்த ஆதாம் பல ஆண் பிள்ளைகளையும் பெண் பிள்ளைகளையும்
பெற்றதாக இவ்வம்சவரலாறு அட்டவணை அறியத் தருகிறது.
(ஆதி. 5:4-5).

ஆதாமுக்கு பல ஆண்பிள்ளைகளும்
பல பெண்பிள்ளைகளும இருந்தபோதிலும் வேதசரிததிரத்திற்கு அவர்களது வாழ்க்கை வரலாறுகள்
அவசியப்படாததினாலேயே அவர்களைப் பற்றிய விடயங்கள் வேதாகமத்தில்
குறி்பபிடப்படவில்லை.

இவர்களே ஆதியாகமம் 4:14 இல் சுட்டிக்
காட்டப்பட்டுள்ளவர்களாவர்.அக்காலத்தில் முதல் மனிதர்களான ஆதாம், ஏவாள்
என்போரும் அவர்களுடைய பிள்ளைகள் மட்டுமே உலகில் இருந்தமையால் அவர்கள்
தங்களுக்குள்ளாக மணம் முடிக்க வேண்டியிருந்தது.

தேவ அறிவுறுத்தலின்படி ஆதாமின் வம்சம் விருத்தியடைவதற்கு
(ஆதி. 1:28) ஆதாமின் மகனும் மகளும் மணமுடிப்பதைவிட அக்காலத்தில் வேறு
வழிகள் எதுவும் இருக்கவில்லை.

உண்மையில் அக்காலத்தில் திருமணங்கள் அனைத்தும் சகோதர சகோதரித்
திருமணமாகவே இருந்தது.

பழைய ஏற்பாட்டுக் காலத்தில் வாழ்ந்த ஆபிரகாமின் மனைவி கூட அவனது
ஒன்றுவிட்ட சகோதரியாகவே இருந்தாள். (ஆதி 20:12)

"மோசேயின் காலத்திலும் எகிப்திய அரசரகள் கூட தங்களது சகோதரிகளையே மணம் முடித்தனர்.

ஆதாமையும் ஏவாளையும் தனிப்பட்ட நபர்களாக கருதாத நவீன இறையியலாளர்கள்,
காயீனின் மனைவி அவனுடைய சொந்த சகோதரி எனும் உண்மையை ஏற்றுக்கொள்வதில்லை.

"ஆதாம்" எனும் எபிரேய வார்த்தையி்ன் அர்த்தம் "மனிதன்" என்பதால்
ஆதியாகமத்தில் குறிப்பிடப்பட்டிருககும் "ஆதாம்" என்பது ஒரு குறிப்பிட்ட
மனிதனின் பெயரை அல்ல. மாறாக அது மனுகுலத்தைப்
பிரதிநிதித்துவப்படுத்தும் பொதுவான பதம் என்பதே அவர்களது விளக்கமாகும்.

இதன்படி ஆரம்பத்தில் ஆதாம் எனும் ஒரு மனிதன் அல்ல. பல மனிதர்கள்
இருந்துள்ளனர். எனவே காயீனின் மனைவி அவனுடைய சொந்தச் சகோதரியாக இருக்க
வேண்டியதில்லை எனக் கூறலாம். ஆனால் புதிய ஏற்பாடு ஆதாமை தனிப்பட்ட
மனிதனாகவே
குறிப்பிட்டுள்ளமையினால் இவ்விடயத்தில் நவீன இறையிலாளர்களின் கருத்து
ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல.

ரோமர் 5ம் அதிகாரத்தில் பல தடவைகள் பவுல் ஆதாமை "ஒருவன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
(ரோமர் 5:12-21) இவ்வதிகாரத்தில் 15ம், 17ம் வசனங்களில் ஒரு
மனிதனாகியஆதாமும் இன்னுமொரு மனிதனாகிய கிறிஸ்துவும்
ஒப்பிடப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளார்கள்.

ஆதாம் தனிப்பட்ட ஒரு மனிதன் அல்ல என்றால் இயேசுகிறிஸ்துவும் தனிப்பட்ட
மனிதன் அல்ல எனறே கூற வேண்டும். ஏனென்றால் ஆதாம் எனும் ஒரு மனிதனுடைய
பாவம் காரணமாக மனுக்குலததுக்கு ஏற்பட்ட கேட்டிலிருந்து இயேசு கிறிஸ்து
எனும் ஒரு மனிதர் மூலம் மனுக்குலத்துக்கு கிட்டும மீட்பைப் பற்றியே ரோமர்
5:12-21 இல் விளக்கப்பட்டுள்ளது. எனவே

இயேசு கிறிஸ்து தனிப்பட்ட நபர் என்பதினால் அவரைப் போலவே ஒரு மனிதன் என
குறிப்பிடப்பட்டிருக்கும் ஆதாமும் ஒரு தனிப்பட்ட
ஒரு மனிதன். உண்மையில் "ஆதாம் ஒரு மனுக்குலம் மட்டுமல்ல. மாறாக தனிப்பட்ட
ஒரு மனிதன் என்பதே பவுலின் நம்பிக்கையாகவும்
ரோமர் 5:12-21 இலுள்ள தர்க்கத்திற்கான ஆதாரமாயுமுள்ளது.

1 கொரிந்தியர் 15:21,22, 45 இலும் இதேவிதமாக ஆதாமும்
இயேசுக்கிறிஸ்துவைப் போல தனிப்பட்ட நபர்களாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

ஆதாமிற்கு முன்பும் மனிதர்கள் உலகில் இருந்துள்ளதாகவும் சிலர்
கருதுகின்றனர் இத்தகைய கருத்துடைய
வேதவியாக்கியானிகள் காயீனின் மனைவி ஆதாமுக்கு முன்பிருந்த மனிதர்களுடைய
வம்சத்தில வந்த ஒரு பெண் என்றே கருதுகின்றனர்.

ஆனால் வேதாகமம் ஆதாமைத் தனிப்பட்ட ஒரு மனிதனாகவும்
(ரோமர் 5:12-21) உலகின் முதல் மனிதனாகவுமே அறிமுக்ப்படுத்துகின்றது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.