டார்வினின் பரிணாமக் கொள்கை சரியா? ஒரு அலசல் பாகம் 2

சூரியன் ஒரு நிமிடத்தில் 25 கோடி டன் நிறையை இழக்கிறது. இவ்வாறு ஒவ்வொரு
விண்மீணும் தொடர்ந்து தங்கள் ஆற்றலை, எரிபொருளை, நிறையை இழந்துக்
கொண்டிருக்கின்றன. எனவே பேரண்டம் பரினாம கொள்கை கூறுகிறபடி முன்னேற்றை
அல்ல அதற்க்கு எதிர்மாறாக அழிவின் பாதயில் செல்கிறது என்பதே உண்மை ஆகும்.

வெப்ப விசையியலின் (Thermodynamics) முதல் விதியின்படி ஆற்றலானது
(Energy) வெப்பமாக, இயக்க ஆற்றலாக, நிலை ஆற்றலாக, மின்சாரமாக
மாறக்கூடியது என்றாலும் பேரண்டத்தின் மொத்த ஆற்றலின் அளவு மாறாது
(Constant). பரினாம வளர்ச்சி கொள்கையின்படி நீரக அணுக்கள் தானாக
உருவாகிறது எனில் அவற்றிற்கு நிறை (Mass) உண்டு. E=mcஅடுக்கு2 என்ற
விதியின்படி புதிய அணுக்கள் உருவாகும் போது பேரண்டத்தின் ஆற்றலான E
அதிகரிக்கிறது என்று பொருள். பரினாம கொள்கை விசையியலின் முதலாம் விதிக்கு
எதிரானதாக உள்ளது.

விசையின் இரண்டாம் விதியின்படி, மொத்த ஆற்றல் மாறாததாயிருந்த போதிலும்,
பயனுள்ள வேலை செய்வதற்க்கு கிடைக்கும் ஆற்றால் குறைந்து வருகிறது. அதாவது
காலம் செல்ல செல்ல பேரண்டம் தனது செயல் திறனில் குறைந்து வருகிறது.
ஆனால், பரினாம கொள்கை பேரண்டம் மேம்படடைகிறது என்று கூறுகிறது. எனவே
விசையின் இரண்டு விதிகளும் பரினாம கொள்கை தவறு என்று நிரூபிக்கிறது.

உயிரினங்கள் குறித்த பரினாம கொள்கை:-

தானாக உருவான (எப்படி உருவாகும்?) ஒரு செல் உயிரி (Single cell living
organism) படிப்படியாக வளர்ச்சி அடைந்து பல இனங்களாக பிரிந்து புது
இனங்கள் தோன்றுவதின் மூலமாக இன்றைய தாவரங்களும் விலங்கினங்களும்
மனிதர்களும் உண்டாயினர். இது தான் உயிரினங்கள் குறித்த பரினாம கொள்கை
ஆகும்.

விலங்கியலில் முதன் முதலில் அமீபா பொன்ற ஒரு செல் விலங்கு (One cell
animal) தானாக தோன்றியது என கூறுகின்றனர். ஓருயிரணு (செல்) என்பது
மிகவும் எளியது என்பது பொதுவான நம்பிக்கை. ஆனால், உண்மை அது அல்ல. அதன்
வெளிப்புற சவ்வு (Cell membrance) அமைப்பு, அதனுள்ளிருக்கும் அமைப்புகள்
(Organelles) யாவும் எளியது அல்ல. அந்த உயிரணு தானாக சுவாசிக்கிறது, உணவு
அருந்துகிறது, சிக்கலான முறையில் நகருகின்றது, தன்னை போன்ற இரு
உயிரணுக்களாக பிரிகின்றது. இவ்வளவு செயல்களையும் பல தனித்தன்மைகளையும்
உடைய ஒரு செல் உயிரி எளியது அல்ல. எளியதல்லாத இது தானாக தோன்றின என்பது
எத்தனை பைத்தியகாரதனம்?

இயற்கையில் புதிதாக ஒர் ஒரு செல் உயிரி கூட மனிதனின் வரலாற்று காலத்தில்
உருவாகவில்லை என்பதோடு மனிதனின் முயற்சியால் இதுவரை ஒரு செல்லை கூட
உருவாக்க முடியவில்லை.

வைரஸா செல்லா?

மேலும் விலங்கியலில் மிகவும் எளியது ஒரு செல் உயிரி அல்ல. வைரஸ் என்று
அழைக்கப்படும் நுண்ணுயிர்கள் உயிர்வரிசையில் ஒரு செல் விலங்குகளைவிட
தாழ்ந்தவை.

முதலில் தோன்றியது எது?

1.வைரஸ் என்றால் பரினாம கொள்கை தவறு ஆகும். காரணம் அது ஒரு செல் உயிரி
தான் முதலில் தோன்றியது என கூறுகிறது. வைரஸ் என்பது ஏற்க்கனவே இருக்கும்
உயிரினங்களில் ஒட்டுண்ணியாக மட்டுமே வாழமுடியும் (Obligate intracellular
parastite) என்பதால் வைரஸ் தான் பிந்தி தோன்றியது என்பதை ஒருவரும்
மறுக்கமுடியாது.

2.ஒரு செல் உயிரி தான் முதலில் தோன்றியது என்றாலும் பரிணாம கொள்கை
தவறாகும். ஏனெனில் படிப்படியாக வளர்ச்சி அடைவதற்க்கு பதிலாக ஒரு செல்
உயிரி தாழ்ச்சியடைந்து வைரஸ் உண்டாயிற்று என்று இது நிறுவுகிறது.

எப்படி பார்த்தாலும் பரிணாம கொள்கை தவறு என்று வைரஸ் நிரூபிக்கிறது.

ஓருயிரணு விலங்குகள, உயர் உயிரினங்கள்

பாக்டீரியா (Bacteria), நீலப்பச்சைபாசி (Bluegreen algae) போன்ற ஒரு செல்
உயிரிகள் தான் (Prokary-otes) முதலாவது தோன்றின என்றும் இவற்றிலிருந்து
வளர்ச்சியடைந்து பல உயிரணுக்களான உயர் உயிரினங்கள் (Eukaryotes) உண்டாயின
என்றும் பரிணாம கொள்கை கூறுகிறது.

அவ்வாறு இருக்க வாய்பே இல்லை........

காரணம்,

1.ஒரு செல் மட்டும் கொண்ட உயிரினங்களில் ஆண், பெண் என்பது இல்லை.
உயிரணுக்கள் இரண்டாக பிரிவதின் மூலம் பாலிலா இனப்பெருக்கம் செய்கின்றன.
இரண்டாக பிரிந்தபின் அவற்றில் பழையது, புதியது என்ற வேறுபாடு இல்லை.
வயதானதால் மரணமடைவது என்பது இல்லை. தாய், குழந்தை என்று எதுவும் இல்லை.
உயர் உயிரினங்களிலிருந்து இவை முற்றிலும் வேறுப்படுகின்றன.

2.உயர் உயிரினங்களில் ஆண் பெண் உண்டு. இனச்சேர்க்கையால் இனப்பெருக்கம்
(பாலினப் பெருக்கம்) ஏற்படுகிறது. இனசேர்க்கையில் மரபணு சேர்வதால்
பிறக்கும் (தோன்றும்) உயிர், தாயின் அல்லது தந்தையின் முழுப்பண்புகளோடு
இல்லாது இருவரின் பண்புகளும் கலந்த புதிய அமைப்பாக இருக்கும். இதற்க்கு
மாறாக, ஒரு செல் உயிரிகள் பிரிந்து இனப்பெருக்கம் செய்யும் போது யாவும்
ஒரே தன்மையுடன் இருக்கும்.

இரண்டாக பிரியும் ஒரு செல் உயிரியின் இரு அணுக்களும் எல்லா பண்புகளிலும்
ஒன்று போல இருக்கும். ஒரு செல் உயிரியில் இல்லாத ஆண் உறுப்புகள் கொண்ட
உயிரினமும், அதில் இல்லாத பெண் உறுப்புகள் கொண்ட உயிரினமும் ஒரு செல்
உயிரியிலிருந்து தோன்றவே முடியாது.

ஒரு செல் உயிரி விலங்குகளின் அமைப்பும் ஏனைய உயர் உயிரினங்களின்
அமைப்பும் முற்றிலும் மாறுப்பட்டவை. எனவே ஒரு செல் உயிரி
விலங்குகளிலிருந்து மற்ற உயர் உயிரினங்கள் தோன்றியிருக்க வாய்ப்பே இல்லை
என்பதோ சரியான அறிவியல்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.