காயீனின் அடையாளம் பாகம் 1

ஆதியாகமப் புத்தகத்தில் நாம் ஆய்வு செய்ய வேண்டிய அடுத்த சர்ச்சைக்குரிய
பகுதியும் காயீனுடைய வாழ்வோடேயே தொடர்புள்ளது.

தான் செலுத்திய காணிக்கையை நிராகரித்த தேவன் தன் சகோதரனுடைய காணிக்கையை
ஏற்றுக் கொண்டமையினால் ஆத்திரமடைந்த காயீன்
(ஆதி 4:2-5) தன் சகோதரனை தனியான இடத்திற்கு அழைத்துச் சென்று கொன்று விடுகிறான்.

(ஆதி 4:மனிதக் கொலை பாரதூரமான குற்றம் என்பதனால் தேவன் காயீனைச் சபிக்கின்றார்
(ஆதி 4:11-12).

அதேசமயம் தேவன் தனக்குக் கொடுத்த தண்டனையைத் தன்னால் தாங்கிக் கொள்ள
முடியாதென்று தேவனிடம் முறையிட்டதோடு (ஆதி 4:13) தன்னைக்
கண்டுபிடிக்கின்ற எவனும் தன்னைக் கொன்று போடுவான் என்று புலம்புகின்றான்.
(ஆதி 4.14)

இதனால் தேவன் யாரும் கொன்றுவிடாதபடி அவனுக்கு ஒரு அடையாளத்தைக்
கொடுத்தார். இதுபற்றி ஆதியாகமம் 4:15 Gen 4:15 அப்பொழுது கர்த்தர் அவனை
நோக்கி: காயீனைக் கொல்லுகிற எவன் மேலும் ஏழு பழி சுமரும் என்று சொல்லி,
காயீனைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் அவனைக்
கொன்றுபோடாதபடிக்குக் கர்த்தர் அவன்மேல் ஒரு அடையாளத்தைப் போட்டார். எனக்
குறிப்பிடப்பட்டுள்ளது.

காயீனின் அடையாளம் பற்றிய இவ்வசனம் மூன்று விதமான சர்ச்சைகளை உருவாக்கி
விட்டுள்ளது.

முதலாவது இவ்வசனத்தின் கடைசி வாக்கியத்தின் மொழிபெயர்ப்பு பற்றியதாகும்.

நமது தமிழ் வேதாகமம் உட்பட பழைய ஆங்கில வேதாகமங்களில் இவ்வாக்கியம்
தேவன் காயீனின் ஒரு
அடையாளத்தைப்
போட்டார் எனும் அர்த்தம் தரும் வண்ணமாகவே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இதனால் தேவன் காயீன் சரீரத்தின் மேல் ஒரு அடையாளத்தைப் போட்டார்.

சிலர் கருதுவதோடு அது எத்தகைய அடையாளமாய் இருக்கும் என ஊகிக்க முற்படுகின்றனர்.

"புராதன யூதர்கள் காயீன் குஷ்டரோகியதாக கருதினர். அவன் சரீரத்தில்
ஏற்பட்ட குஷ்டரோகமே தேவன் அவன் மீது போட்ட அடையாளம் என்பதே புராதன
யூதர்களின் கருத்தாக இருந்தது.

வேறு சிலர் "மற்றவர்கள் கண்டால் பயந்துவிடும் விதமாக காயீனின் சரீரத்
தோற்றம் விகாரடைந்ததாக எண்ணினர்.

பெரும்பாலான கிறிஸ்தவர்கள் காயீன் கொலைக்காரன் என்பதை அறியத் தரும் ஒரு
அடையாளக்குறி அவனது முகத்தில் போடப்பட்டதாகவே கருதுகின்றனர். .

"காயீனின் நெற்றியில் ஒரு அடையாளக்குறி பச்சைக் குத்தப்பட்டிருந்தது"
எனினும் காயீனின் சரீரத்தின் ஒரு அடையாளக் குறி போடப்பட்டிருப்பின் அது
அவனைப் பாதுகாக்கும் ஒரு அடையாளமாய் இராமல், அவன் யாரென்பதை மற்றவர்கள்
அறிந்து கொள்ளவைக்கும் அடையாளமாகவே இருந்திருக்கும்.

அதாவது அடையாளத்தின் மூலம் அவன் கொலைக்காரன் என்பதை மற்றவர்கள் அறிந்து
கொண்டிருப்பார்கள். எனவே காயீனின் அடையாளத்தை அவனது சரீரத்தின் மீது
போடப்பட்ட அடையாளக்குறியாக கருத முடியாதுள்ளது.

அதேசமயம் இவ்வாக்கியம் மூல மொழியில் காயீனின் மீது அடையாளம் போடப்பட்டது
எனும் அர்த்தம் உடையதல்ல. "காயீனுக்கு ஒரு அடையாளம்
கொடுக்கப்பட்டது என்பதையே மூலமொழியில் இவ்வாக்கியத்தின் இலக்கண அமைப்பு
முறை அறியத்தருகிறது.

எனவே தேவன் காயீனின் மீது ஒரு அடையாளத்தைப் போட்டார் என்பதல்ல. மாறாக
தேவன் காயீனுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுத்தார் என்பதே இவ்வாக்கியத்தின்
சரியான அர்த்தமாய் உள்ளது.

காயீனை கொலை செய்யாதபடிக்கு தேவன் அவனுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுத்துள்ள
போதிலும் , அவ்வடையாளம் யாதென்பதை பற்றி ஆதியாகம ஆசிரியர் எதுவும்
குறிப்பிடாதமையால் தேவ வியாக்கியானிகள் மத்தியில் அதை பற்றிய ஊகங்கள்
உள்ளன.

காயீனுடைய
அடையாளத்தைப் பற்றிய இரண்டாவது சர்ச்சை இதுவாகும். "தேவன் அவனுடைய
பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அடையாளமாக அவனுக்கு ஒரு நாயைக்
கொடுத்துள்ளதாக பலர் கருதுகின்றனர்.

எனினும் காயீன் சென்ற இடங்களிளெல்லாம் அவனோடு சென்ற நாய் அவனை கொன்று
விடாதபடி பாதுகாக்கும் அடையாளமாக இருந்ததாக கூறும் இவ்விளக்கத்திற்கு
எவ்வித ஆதாரமும் இல்லை.

இதேவிதமாக "காயீனுக்குக் கொடுக்கப்பட்ட அடையாளம் ஒரு வண்ண ஆடை என்ற சிலர்
கருதுகின்றனர்.

வேறுசிலர் நெற்றியில் ஒரு கொம்பு கொடுக்கப்பட்டது என விளக்குகின்றனர்.

எனினும் இவ்விளக்கங்கள் அனைத்தும் தேவ வியாக்கியானிகளின் ஊகங்களே தவிர
இவற்றுக்கு எவ்வித ஆதரமும் இல்லை.

காயீனுக்குக் கொடுக்கப்பட்ட அடையாளம் என்ன என்பதை பற்றி வேதாகமத்தில்
எதுவும் குறிப்பிடப்படாதமையால் அதைப் பற்றி ஊகித்து ஒரு கற்பனை
விளக்கத்தை கொடுப்பதில் எவ்வித அர்த்தமும் இல்லை.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.