நன்மைகள் செய்து நலிந்துபோன Lyrics
நன்மைகள் செய்து நலிந்துபோன
நண்பனே!… (மகனே!.. மகளே!..)
நன்மையின் நாயகர் இயேசு உன்னை மிக நேசிக்கிறார் –
நீ சோர்ந்துவிடாதே – மனம்
தளர்ந்து போகாதே -
1. நேசித்தவர் உனக்கெதிராய் பேசினரோ….
நன்மைபெற்றவர் உந்தன் முதுகில் குத்தினரோ..
பெற்ற பிள்ளைகள் உன்னை வெறுத்துத் தள்ளினரோ - நீ
வளர்த்துவிட்டவர் உந்தன் மார்பில் பாய்ந்தனரோ- நீ
உனைக்காட்டிலும் மிக அதிகப்பாடுகள்
அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே.. – நிந்தைகளை
அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே… – அவமானம்
அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே… – துரோகங்கள்
அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே…
2. ஊழியத்தின் பாதையிலே வேதனையோ…
சுமந்திட முடியாத பாரங்களோ…
கண்ணீரும் இரத்தமாகிப் போனதுவோ…. – உன்
ஏன் மறந்தீர் என்றுக் கதறும் சூழ்நிலையோ – தேவா
உனைக்காட்டிலும் மிக அதிகப்பாடுகள்
அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே… – வேதனை
அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே… – சோதனை
அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே… – கண்ணீரை
அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே