சிலுவைக்கு அப்பால்!!
Ps.Sam Sundaram
அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின் பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார். ஆகையால் நீங்கள் இளைப்புள்ளவர்களாய் உங்கள் ஆத்துமாக் களில் சோர்ந்துபோகாதபடிக்கு, தமக்கு விரோதமாய்ப் பாவிகளால் செய்யப்பட்ட இவ்விதமான விபரீதங்களைச் சகித்த அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்" (எபி. 12:2,3).
சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் உலக சரித்திரத்தில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியே நமது அருமை ஆண்டவரின் சிலுவைப்பாடுகளும் மரணமும் ஆகும். சிலுவை என்று சொன்னாலேயே சரீரமுழுவதும் சிதைந்து, இரத்த ஊற்றினால் சிவந்து, சீர்குலைந்துத் தொங்கும் உருவம்தான் சிந்தனையில் தோன்றும். சபிக்கப்பட்ட இச்சிலுவையில் பாவப் பரிகாரமாக மரிக்கத் தம்மைத்தாமே இயேசு கிறிஸ்து ஒப்புவித்தாரே! இதன் இரகசியம்தான் என்ன?
மேலே குறிக்கப்பட்டுள்ள வசனத்தில், "அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணா மல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார்'' என்று அப்போஸ்தலன் கூறுகிறார்.
ஆம் பிரியமானவர்களே! சிலுவைக்கு அப்பால் அவர் கண்ட சந்தோஷம் இத்துணைச் சொல்லொண்ணா துயரங் களையும் தாங்கிக்கொள்ளச் செய்தது. இயேசுகிறிஸ்துவின் சிலுவை வெற்றியைக் குறிப்பிட்டு அப்போஸ்தலன் இங்ஙனம் கூறுகிறார்.
'ஆதலால் நீங்கள் இளைப்புள்ளவர்களாய் உங்கள் ஆத்து மாக்களில் சோர்ந்துபோகாதபடிக்கு, இவ்விதமான விபரீதங்களைச் சகித்த அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்'' என்கிறார்.
இன்றைக்கும் நமக்கிருக்கும் பாடுகள், நிந்தைகள், அவ மானங்களாகிய சிலுவையை நோக்காமல், அதற்கு அப்பால் உள்ள சந்தோஷத்தை நோக்கிப்பார்ப்போமேயாகில் பாடுகள் நமக்குத் துக் கத்தையல்ல, சந்தோஷத்தையே அளிக்கும். உதாரணமாக,பிள் ளைப் பேற்றிற்காகக் காத்திருக்கும் கர்ப்பஸ்திரீ, தான் குழந்தை யைப் பெற்றெடுக்கும் சந்தோஷத்தில் கர்ப்பவேதனையை அதிகம் பொருட்படுத்தமாட்டாள் அல்லவா? கர்ப்பவேதனை கொடூர மானதுதான். ஆனால் அதற்குப்பின்வரும் சந்தோஷத்தை மனதில் கொள்ளுகிறாளல்லவா? அவ்வண்ணமே சிலுவைக்கு அப்பால் நமக்காக வைக்கப்பட்டிருக்கும் ஆசீர்வாதங்களை நினைத்துப் பார்ப்போமானால் சந்தோஷத்தோடே பாடுகளைச் சகிப்போம். நிர்ப் பாக்கியமான சூழ்நிலைகளை இயேசு தம் வெற்றியின் படிகளாக ஆக்கினார். இன்றும் நீங்கள் நிர்ப்பாக்கியம் என்று எண்ணும் அதே உபத்திரவங்களை வாழ்க்கையின் வெற்றிப்படிகளாக மாற்ற லாம். நமது வாழ்க்கையினூடே கடந்துவரும் பாடுகள் முக்கிய மல்ல. அவைகளை நாம் எப்படி ஏற்றுக்கொள்ளுகிறோம் என்பது தான் முக்கியம். ஒரே சூரியனிலிருந்து வெளிப்படும் வெப்பத் தினாலே ஒரு தாவரம் உலர்ந்துபோகிறது. மற்றொரு தாவரம் செழித்தோங்கி வளருகிறது. ஒரே சிலுவைதான் ஒருவருக்குத் தடைக்கல்லாகவும், மற்றவருக்கு வெற்றியின் கல்லாகவும் இருக் கிறது.
"சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவ பெலனாயிருக்கிறது" என்று அப்போஸ்தலன் கூறுகிறார் (1 கொரி. 1:18).
சிலுவைக்கு அப்பால் மகிமை:
"அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: தீர்க்கதரிசிகள் சொன்ன யாவையும் விசுவாசிக்கிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே, கிறிஸ்து இவ்விதமாகப் பாடுபடவும். தமது மகிமையில் பிரவேசிக்கவும் வேண்டியதில்லையா என்று சொல்லி, --தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார்" (லூக்கா 24:25-27).
இயேசு கிறிஸ்து தம் சிலுவைப் பாடுகளை, 'மகிமைக்குச் செல்லும் வழி' என்று அறிந்திருந்தார். இயேசுகிறிஸ்துவின் சிலுவைப் பாடு மரணத்தைக் குறித்து மிகுந்த துக்கத்தோடு பேசி நடந்து சென்ற எம்மாவூர் சீஷர்களைக் கண்டு இயேசு கூறின வார்த்தைகளை மேலே காண்கிறோம். 'பாடுகளின் மூலம் மகிமையடையவேண்டும் என்பதனை அறியாத புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே" என அவர் அவர்களைக் கடிந்து கொண்டார்.
பரிசுத்த ஆவியானவர் கிறிஸ்து இவ்வுலகில் மனித ரூபமெடுத்துப் பிறப்பதற்கு முன்னரே கிறிஸ்துவிற்கு உண்டாக விருக்கும் பாடுகளையும், அவைகளுக்குப் பின்வரும் மகிமை களையும் முன்னறிவித்தார். (I பேதுரு 1:11) இது ஆங்கிலத்தில் "The sufferings of Christ and the glory that should follow" என்றிருக்கிறது. அதாவது பாடுகளுக்குப் பின்தொடர்ந்து வரும் மகிமை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை அறிந்திருந்த அப்போஸ்தலனாகிய பவுல், 66 'ஆனபடியினாலே நாங்கள் சோர்ந்து போகிறதில்லை; எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும். உள்ளான மனுஷனானது நாளுக்கு நாள் புதிதாக்கப்படுகிறது. மேலும் காணப்படுகிறவை களையல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு, அதிசீக்கிரத்தில் நீங்கும் லேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கன மகிமையை உண்டாக்குகிறது" என்கிறார்.
மகிமையை நமக்கு உற்பத்திசெய்துதரும் மூலப்பொருள் பாடுகள். பிரியமானவர்களே! நமது அத்தியாவசிய தேவைகள் மறுதலிக்கப்படும்போது. நமக்குப் பதிலாகப் பரபாஸ் விரும்பப் படும்போது. நாம் குற்றவாளிகளில் ஒருவராகக் கணக்கிடப் படும்போது, உபத்திரவங்களினூடே கடந்துசெல்லும்போது. தாங் கொண்ணா ஏமாற்றங்களும் வாழ்க்கையின் நிர்ப்பாக்கியங்களும் சூழும் வேளையில், நியாயம் நம்மைவிட்டு எடுபட்டுப்போகும் தருணம். பாடுகளே நமக்கு மகிமையை உண்டுபண்ணுகிறது என்று உணரவேண்டும். மகிமையைக் காணும் பிரகாசமான மனக்கண்கள் நமக்கு இருக்குமானால் பாடுகளை நாம் பொருட்படுத்தமாட்டோம். “அதிசீக்கிரத்தில் நீங்கும் இந்த லேசான உபத்திரவம்” என்று கூறுவோம். சிலுவை நமக்கு மகிமையை மட்டுமல்ல. மிகுந்த சுனத்தையும் உண்டாக்குகின்றது. சிலுவைக்கு அப்பால் கனம்
“அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின் பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து. தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்" (எபி. 12:2),
'கர்த்தர் என் ஆண்டவரை நோக்கி: நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும் வரைக்கும், நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்றார் '' (சங். 110:1).
இயேசு கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருப் பதை Living Bibleஇல் “Now He sits in the place of honour at the right hand of God" என்று எழுதப்பட்டுள்ளது. அதாவது இயேசு கிறிஸ்து இப்பொழுது பிதாவின் வலதுபாரிசத்தில் கனத்திற்குரிய இடத்தில் உட்கார்ந்திருக்கிறார் என்பது பொருள். இயேசுகிறிஸ்து வின் சிலுவைப் பாடுகள் அவரைக் கனத்திற்குரிய இடத்திற்குப் பாத்திரமாக்கியது. சுருங்கச்சொல்லின் இயேசு கிறிஸ்துவிற்குக் கனத்திற்குரிய இடத்தைச் சுதந்தரித்துக் கொடுத்தது அவரது சிலுவைப் பாடுகளே. பொதுவான உலக வழக்கு, *கடின உழைப்புக்கு இணையில்லை' என்பது. முயற்சி செய்து பிரயாசப் பட்டால் மட்டுமே வாழ்க்கையில் முன்னேறமுடியும். உதாரண மாக, மாகாணத்தில் முதல் இடம்பெறவேண்டும் என்கிற நோக்கத் தோடு படிக்கும் மாணவனின் நிலையை நோக்குவோம். அவன் இரவு பகலாகப் பிரயாசப்படுவான்; தூக்கத்தைச் சற்று ஒதுக்கி வைப்பான். சிற்றின்பம், சினிமா இவைகளைத் தள்ளிவைப்பான். நண்பரோடு, உறவினரோடு உட்கார்ந்து நேரம் வீணாக்குவதை வெறுப்பான். கடினமாக முயலுவான். ஏனெனில் அவன் கனத்திற் குரிய இடத்தை விரும்புகிறான். அதேவண்ணமாகவே பரலோகில் நாம் கனத்திற்குரிய இடத்தைச் சுதந்தரிக்க, பாடுகளை எதிர் நோக்கியிருக்கவேண்டும்.
மேலும், இயேசுகிறிஸ்து தம்மைத் தாமே வெறுமையாக்கி, சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகித் தம்மைத் தாமே தாழ்த்தினார். ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி... எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார். (பிலி. 2:7-19) இயேசு கிறிஸ்து தம்மைத் தாமே தாழ்த்தினபடியினாலே கனத்திற்குரிய இடத்திற்கு உயர்த்தப்பட்டார். "மேன்மைக்கு முன்னானது தாழ்மை" என்பது ஞானி கூறும் கூற்று (நீதி.18:12). கனத்திற்குரிய இடத்தை நீங்கள் சுதந்தரிக்கவேண்டுமா? உங்களையே தாழ்த்துங்கள். தேவ சித்தத்திற்கு ஒப்புக்கொடுங்கள். மேலான கனத்தை அடைவீர்கள். சிலுவைக்கு அப்பால்கிட்டும் கனத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள். சிலுவைக்கு அப்பால் - முடிசூடுதல்
"தேவனுடைய கிருபையினால் ஒவ்வொருவருக்காகவும், மரணத்தை ருசிபார்க்கும்படிக்கு தேவதூதரிலும் சற்றுச் சிறிய வராக்கப்பட்டிருந்த இயேசு மரணத்தை உத்தரித்ததினிமித்தம் மகி மையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டதைக் காண்கிறோம்" (GTLD. 2:9).
இயேசு கிறிஸ்து சிலுவை மரணத்தைச் சகித்ததினாலே சிலுவைக்கு அப்பால் முடிசூட்டப்பட்டார். சிலுவையில்லையேல் கிரீடமும் இல்லை. ஓட்டப்பந்தயத்தில் ஓடுகிறவன், பரிசைப் பெற்றுக்கொள்ளவேண்டுமானால் அதற்கேற்ற வேதனைகளையும் சரீரத்தில் சகித்தாகவேண்டும், வேதனைகளுக்குப் பயப்படுகிறவன் ஓட்டப்பந்தயத்தில் ஓடமுடியாது. இதைக் குறித்து அப்போஸ்தல னாகிய பவுல்,
நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள். பந்தயத் திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலும் இச்சையடக்க மாயிருப்பார்கள். அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள், நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும் படிக்கு அப்படிச்செய்கிறோம்" (I கொரி. 9:24) என்கிறார்.
மேலும், "எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோ டெழுந்திருப்பதற்குத் தகுதியாகும்படிக்கும், அவருக்காக எல்லா வற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணு கிறேன்'' என்கிறார். (பிலி. 3:10-11)
14ஆம் வசனத்தில், "கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்'' என்கிறார்.
அப்போஸ்தலன் பரிசாக எண்ணியது கிறிஸ்து. கிறிஸ்துவே அவரது கிரீடமாக மதிக்கப்பட்டார். நாம் பாடுபட ஆயத்தமாயிருப்போமானால் கிரீடத்தைப் பெறுவோம். எப்படியா யினும் கிறிஸ்துவை ஆதாயப்படுத்த பாடுபட்ட அப்போஸ்தலனின் முடிவு
"நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன் ...இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது'' என்கிறார்.(II தீமோ. 4:7-8)
சிலுவைக்கு அப்பால் - இரட்சிப்பு
"தமக்காகவும், தம்மாலேயும் சகலத்தையும் உண்டாக்கினவர், அநேகம் பிள்ளைகளை மகிமையில் கொண்டுவந்து சேர்க்கையில் அவர்களுடைய இரட்சிப்பின் அதிபதியை உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துகிறது அவருக்கேற்றதாமிருந்தது" (எபி. 2:10).
கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து உருக் குலைந்து, தன் இயற்கை ரூபத்தை இழக்கும்போது அநேக கோதுமை மணிகளை உருவாக்குகிறது. இந்தத் தத்துவத்தை இயேசு அறிந்திருந்தபடியால் முழுவதுமாக உடைக்கப்பட தம்மைத்தாமே சிலுவையில் ஒப்புவித்தார். பரிமௗதைலக்குப்பி உடைக்கப்பட்டபோது வாசனை வெளிப்பட்டது. இயேசுவின் சரீரம் பிட்கப்பட்டபோது ஆசீர்வாதம் உண்டாயிற்று. பிரியமானவர் களே! நீங்களும் உடைக்கப்படுவீர்களானால் ஆசீர்வாதமாகமாறு வீர்கள். கர்த்தருடைய கரத்தில் உடைக்கப்பட ஒப்புக்கொடுங்கள். சுயசித்தம் உடைக்கப்படட்டும். அருமையானவர்களே! உங்களு டைய எதிர்பார்ப்புகள் உடைக்கப்படுகின்றனவா? அடுத்து காணப்படும் ஆசீர்வாதத்தையே நோக்குவீர்களாக!
இதோ சிலுவைக்கு அப்பால்... மகிமை, கனம், கிரீடம் சூடு தல், ஆத்தும இரட்சிப்பு, ஆசீர்வாதங்கள் ஆகியவை கிட்டு கின்றன.
சிலுவையைக் குறித்த உபதேசம் இரட்சிக்கப்படுகிற தேவ பெலனாயிருக்கிறது. சிலுவைக்கு அப்பால் நமக்குத் தேவ காணும் ஆசீர்வாதங்களை ... நோக்கினவர்களாக நமக்கு நியமித் திருக்கிற ஓட்டத்திலே பொறுமையாக ஓடுவோமாக!