மனிதனும் சாத்தானும்!
A.மனிதன் தேவ சாயலில் படைக்கப்பட்டவன் ஆளுகை செய்யும்படி
பிறந்தவன் தேவன் ஆணும் பெண்ணுமாக மனிதனைப் படைப்பதற்கு ஒரு முக்கியமான காரணம் இருந்தது. அவர்களுக்காக அவர் அற்புதமான திட்டத்தையும், நோக்கத்தையும் வைத்திருந்தார். ஆண்டவர் அன் பாகவே இருக்கிறபடியால், அவர் தமது வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ளும்படி அவரைப் போன்ற மனதையும், இருதயத்தையும் உடைய வர்கள் தம்மோடு இருக்க வேண்டு மென்று விரும்பினார்... அவரது முழுமையையும், அவரோடு தொடர் புடைய அனைத்தையும் பகிர்ந்து கொள்ளும்படி விரும்பினார்... அவரோடுகூட குமாரர்களைப் போல வானத்தையும், பூமியையும் அவர்கள் ஆளுகை செய்ய வேண்டு மென்று விரும்பினார். எனவே அவர். தமது சாயலில் மனிதனைப் படைத் தார்.
"பின்பு தேவன்; நமது சாயலாக வும் நமது ரூபத்தின்படியோம் மனு ஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருக ஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணி களையும் ஆளக் கடவர்கள் என்றார். தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார்; அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்” (ஆதி. 1:26,27).
B.லூசிபர்
தேவன் வானங்களையும், பூமி யையும் உருவாக்குவதற்கு முன்னர் அநேக அற்புதமானவற்றையும் படைத்தார். அவர்களில் தேவதூதர் களும் ஒரு சாரார் ஆண்டவ ருடைய சித்தத்தை நிறைவேற்று வதே இந்த ஆவி வடிவ தேவ தூதர்களின் நோக்கமாக இருந்தது. தேவதூதர்கள் தொடர்ந்து ஆண்ட வரைத் தொழுது கொண்டு, அவ ருக்கு ஊழியம் செய்கிறார்கள் (வெளி. 5:11-14).
ஆனால் தேவதூதர்களில் முக்கியமான ஒருவனாக விளங்கிய லூசிபர், மனிதனைப் படைக்க வேண்டுமென்ற தேவனுடைய திட் டத்தை அறிந்தபோது, அவருக்கு விரோதமாக எழும்பினான். வருடைய சிங்காசனத்துக்கு மேலாக இருக்க அவன் விரும்பினான். ஆண்டவர் மனுக்குலத்திற்காகத் திட்டமிட்டிருந்த தகுதியையும், அதிகாரத்தையும் அவன் தானே பெற விரும்பினான். பரலோகத்தில் ஆண்டவருடைய சிங்காசனத்திற்கு
மேலாக இருந்து அனைத்துப் அத்தியாயம் 3 மனிதனும் சாத்தானும் படைப்புகளையும் அரசாள அவன் விரும்பினாள்.
லூசிபர் அவருக்கு விரோதமாக எழும்பிய போது. தேவன் அவனைப் பரலோசுத்தைவிட்டு விரட்டியடித்தார். அதே வேளையில் அவனோடுகூட தேவதூதர்களில் மூன்றிலொரு பங்கினரும் தேவனை எதிர்த்தார்கள்; அவர்களும் அவ னோடு கூட விரட்டியடிக்கப் பட்டார்கள் (வெளி, 12:4),
"அதிகாலையின் மகளாகிய விடிவெள்ளியே (லூசிபர்), நீ வானத் திலிருந்து விழுந்தாயே! ஜாதிகளை ஈனப்படுத்தினவனே, நீ தரையிலே விழ வெட்டப்பட்டாயே!
நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வட புறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும், நான் மேகங்களுக்கு மேலாக உள்னதங்களில் ஏறுவேன்; உன்னத மானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே (ஏசாயா 14:12-14).
லூசிபர் பூமிக்கு விரட்டி யடிக்கப்பட்டான்; தற்போது அவன்
''சாத்தான்' அல்லது 'பிசாசு' என்று அழைக்கப்படுகிறான். படைத்த தேவனின் மகிமையான பிரசன்னத்தி லிருந்து பிரிக்கப்பட்ட அவன், முன்னர் தான் பெற்றிருந்த அழகை யும் பிரகாசத்தையும் இழந்து போனான் (எசே. 28:11-17); தீயவ னாகவும், இருளடைந்தவனாகவும்
மாறினான்.
அவனோடுகூட விழுந்துபோன தேவதூதர்களும் தங்கள் மகிமையை இழந்துபோனார்கள்; ஆண்டவரால் புதிதாகப் படைக்கப்பட்ட பூமியில் அவர்கள் தீய ஆவிகளாக அலைந் தார்கள். ஆனால் சாத்தான் தனது தீய விருப்பத்தை மாற்றிக் கொள்ள வில்லை; ஆண்டவருடைய சிங்காபுது விசுவாசிகளுக்கான பயிற்சிக் கையேடு சனத்தைத் தவறான வழியில் கைப் பற்றிக்கொள்ள அவன் மற்றொரு திட்டம் தீட்டினான். தேவன் படைத்த மனிதனைப் பிடிக்கும்படி சென்றான்.
C.சோதனை
தேவன் முதல் பெண்ணுமான ஆதாமுக்கும், ஏவா ஆணும், ளுக்கும் உலகம் முழுவதின் மேலும் அதிகாரத்தைக் கொடுத்து, அதைத் தமது ஆளுகையின்கீழ் திருக்கும்படி கூறினார். அவர்களைச் வைத்
சாத்தானிட மிருந்தும், அவனது தீய ஆவிகளிட மிருந்தும், பாதுகாப்பாக வைத்திருச் கும்படி ஆதாமும், ஏவாளும் வாழ்ந்த தோட்டத்தில் தேவன் இரண்டு சிறப்பான மரங்களைப் படைத்தார் தேவன் அவற்றை 'ஜீவ விருட்சம்' என்றும் 'நன்மை தீமை அறியத்தக்க விருட்சம்' என்றும் அழைத்தார் (பார்க்சு, ஆதியாகமம் 2:9,17).
ஜீவ விருட்சம் ஆண்டவருடைய ஜீவனையும், அதிகாரத்தையும் குறிப்பதாக இருந்தது. எனவே அந்த மரத்தின் கனியைப் புசிப்பதின்மூலம் ஆதாமும் ஏவாளும் இன்னுமதிகமாக ஆண்ட வருடைய வல்லமையையும், அன்பையும், மகிமையையும் பெற முடிந்தது. நன்மை தீமை அறியத்தக்க விருட்சம் சாத்தானின் ஜீவனையும், அதிகாரத்தையும் குறித்தது. ஆதா மும், ஏவாளும் அதன் கனியைப் புசியாத வரையில், இந்த உலகத்தை நிறைத்த தீய ஆவிகளிடமிருந்து பாதுகாப்பாக இருக்க முடியும். அவர்கள் தங்களைப் படைத்த, அன்பான தேவனுக்குக் கீழ்ப்படிந்த வர்களாக இருந்தால், எப்போதுமே படைப்பனைத்தும் அவர்களுக்குக் கீழ்ப்பட்டிருக்கும் (எபி. 2:8).
"தேவனாகிய கர்த்தர் மனுஷனை ஏதேன் தோட்டத்தில் அழைத்துக் கொண்டு வந்து, அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார்.
"தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்க வேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்” (ஆதி. 2: 15-17).
ஆனாலும், சாத்தான் ஏவாளை ஏமாற்றிவிட்டான். நன்மை தீமை அறியத்தக்க விருட்சம் உண்மையில் தீமையானதல்ல என்றும், அதன் கனியைப் புசித்தால் அவர்கள் தேவர்களைப் போலாவார்கள் என்றும் அவன் ஏவாளிடம் கூறி னான். அவன் கூறிய பொய்யை நம்பிய அவள் அந்த மரத்தின் கனியைப் புசித்தாள். அது பொய் யென்று அறிந்தபிறகும் ஆதாம் தானும் அந்தக் கனியைப் புசித்தான் (1 தீமோ. 2:14).
“அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான்” (ஆதி. 3:6).
D. இதன் விளைவு
இந்தப் பாவத்தின் ஒரு கிரியை யின் மூலம் மனிதன் ஆண்டவ ருடைய மகிமையையும் சாயலையும் இழந்துபோனான்; படைப்பின் மேல் ஆளுகை செய்யும் சிலாக்கியத் தையும் இழந்துவிட்டான். அவர்கள் விட்டுச் சென்ற சிங்காசனத்தை சாத்தான் கைப்பற்றிக் கொண்டு, பூமியின்மேல் தனது ஆளுகையை உறுதிப்படுத்தினான்; உலகெங்கும் மரணம் பரவியது (எபி. 2:14,15).
...ஒரே மனுஷனாலே (ஆதாம்) பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ் செய்தபடி யால், மரணம் எல்லாருக்கும் வந்தது போலவும் இதுவுமாயிற்று" (ரோமர் 5:12).
ஆதாமுக்கும், ஏவாளுக்கும் பின் வந்த அனைத்துச் சந்ததியாரும் அவர் களது விழுந்துபோன இயல்பைச் சுதந்தரித்துக் கொண்டார்கள். அனை வரும் சாத்தானின் சக்திக்கும்,
ஆளுகைக்கும் உள்ளானார்கள்.
“அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த நீங்கள் முற்காலத்திலே இவ்வுலக வழக்கத்திற்கேற்றபடியாகவும், கீழ்ப்படி யாமையின் பிள்ளைகளிடத்தில் இப் பொழுது கிரியை செய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய ஆவிக்கேற்றபடி யாகவும் நடந்து கொண்டீர்கள்.
“அவர்களுக்குள்ளே நாமெல்லாரும் முற்காலத்தில் நமது மாம்ச இச்சையின் படியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப் போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந் தோம்” (எபே. 2:1-3).
தற்போது எங்குமுள்ள மக்க ளின் இருதயங்கள் கீழ்க்கண்டவற்றால் நிறைந்துள்ளன:
1.விக்கிரகாராதனை
"அவர்கள் தேவனை அறிந்தும்,
அவரைத் தேவனென்று மகிமைப்படுத் தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார் கள்; உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது.
“அவர்கள் ஞானிக் ளென்று சொல்லியும் பயித்தியக்காரராகி, அழிவில்லாத தேவனுடைய மகிமையை அழிவுள்ள மனுஷர்கள் பறவைகள் மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகிய இவைகளுடைய ரூபங்களுக்கு ஒப்பாக மாற்றினார்கள்" (ரோமர் 1:21-23),
2. அசுத்தமான நடத்தை
"இதினிமித்தம் அவர்கள் தங்கள் இருதயத்திலுள்ள இச்சைகளினாலே ஒருவரோடொருவர் தங்கள் சரீரங்களை அவமானப்படுத்தத் தக்கதாக, தேவன் அவர்களை அசுத்தத்திற்கு ஒப்புக் கொடுத்தார்.
"தேவனுடைய சத்தியத்தை அவர் கள் பொய்யாக மாற்றி, சிருஷ்டிகரைத் தொழுது சேவியாமல் சிருஷ்டியைத் தொழுது சேவித்தார்கள், அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப் பட்டவர், ஆமென்.
“இதினிமித்தம் தேவன் அவர்களை இழிவான இச்சைரோகங்களுக்கு ஒப்புக் கொடுத்தார்; அந்தப்படியே அவர் களுடைய பெண்கள் சுபாவ அநு போகத்தைச் சுபாவத்துக்கு விரோதமான அநுபோகமாக மாற்றினார்கள்.
"அப்படியே ஆண்களும் பெண் களைச் சுபாவப்படி அநுபவியாமல், ஒருவர் மேலொருவர் விரகதாபத்தினாலே பொங்கி, ஆணோடே ஆண் அவலட் சணமானதை நடப்பித்து, தங்கள் தப்பிதங்களுக்குத் தகுதியான பலனைத் தங்களுக்குள் அடைந்தார்கள்” (ரோமர் 1:24-27).
3. அனைத்து வகைத் தீய செயல்கள்
"தேவனை அறியும் அறிவைப் பற்றிக் கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவை களைச் செய்யும்படி, தேவன் அவர் களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக் கொடுத்தார்.
"அவர்கள் சகலவித அநியாயத் தினாலும், வேசித்தனத்தினாலும், துரோ கத்தினாலும், பொருளாசையினாலும், குரோதத்தினாலும், நிறையப்பட்டு; பொறாமையினாலும், கொலையினாலும், வாக்குவாதத்தினாலும், வஞ்சத்தினாலும், வன்மத்தினாலும் நிறைந்தவர்களுமாய், புறங்கூறுகிறவர்களுமாய், அவதூறு பண்ணுகிறவர்களுமாய், தேவ பகைஞருமாய், துராகிருதம் பண்ணுகிறவர்களு மாய், அகந்தையுள்ளவர்களுமாய், வீம்புக்காரருமாய், பொல்லாதவைகளை யோசித்துப் பிணைக்கிறவர்களுமாய், பெற்றோருக்குக் கீழ்ப்படியாதவர்களுமாய் உணர்வில்லாதவர்களுமாய், உடன் படிக்கைகளை மீறுகிறவர்களுமாய், சுபாவ அன்பில்லாதவர்களுமாய், இணங் காதவர்களுமாய், இரக்கமில்லாதவர் களுமாய் இருக்கிறார்கள்.
“இப்படிப்பட்டவைகளைச் செய் கிறவர்கள் மரணத்திற்குப் பாத்திரராயிருக் கிறார்களென்று தேவன் தீர்மானித்த நீதியான தீர்ப்பை அவர்கள் அறிந் திருந்தும், அவைகளைத் தாங்களே செய் கிறதுமல்லாமல், அவைகளைச் செய்கிற மற்றவர்களிடத்தில் பிரியப்படுகிறவர்களு மாயிருக்கிறார்கள்” (ரோமர் 1:28-32).
E.புதுப்பிப்பதற்கான ஆண்ட வரின் மாபெரும் திட்டம்
மனிதனுடைய பாவத்தின் காரணமாக தேவன் அவனை அப்படியே விட்டுவிடவில்லை. மாறாக, அவர் மற்றொரு மாபெரும் திட்டத்தைச் செயல்படுத்தத் துவங்கி னார். மனுக்குலத்தை சாத்தானின் சக்தியிலிருந்து விடுவித்து, மனிதரைத் தமது குமாரர்களாகவும், தமது சிங்காசனத்தில் பங்குகொள்பவர் களாகவும் வைத்திருக்கும் ஆதித் திட்டத்துக்குள் அவர்களைப் புதுப் பிக்கும் புதிய திட்டம் இது! இயேசு எனும் மீட்பரின் வருகைக்காக அவர் உலகத்தை ஆயத்தப்படுத்தத் துவங்கினார்.
“ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறது போல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்” (1கொரி. 15:22). நம்மை நமது பாவங்களி லிருந்து மீட்பதற்காகவே வரும் கிறிஸ்துவின் வாழ்க்கையைப் புதிய ஏற்பாடு பதிவு செய்கிறது.