அங்கலாய்க்கும் தேவன்
சகோ.அகஸ்டின் ஜெபக்குமார்
மனிதன் தன்னை உண்டாக்கிய தேவனைச் இன்னும் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. தேவனை அறிந்திருக்கும் மக்களும்கூட இன்னும் தேவனை சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. வேதத்தின் வசனங்களே நம்மை சிநேகிக்கும் தேவனின் மனநிலையையும், அவரது உள்ளான அங்கலாய்ப்பையும் நமக்கு வெளிப்படுத்துகின்றன. தன்னை உண்டாக்கியவரையும், ஏன் உண்டாக்கினார் என்பதையும் ஒரு மனிதன் புரிந்துகொள்வானாகில், அவனது வாழ்க்கை இப்புவியில் துடிப்புள்ளதாகவும், தேவனுக்கென்றும் தேவ ராஜ்யத்திற்கென்றும் வைராக்கியமுள்ளதாகவும் காணப்படும்.
நற்குல திராட்சையாய் இஸ்ரவேல்
இஸ்ரவேலே, நீ உனக்குக் கேடுண்டாக்கிக் கொண்டாய்,
ஆனாலும் என்னிடத்தில் உனக்குச் சகாயம் உண்டு. ஓசியா 13:9
எப்பிராயீமே, நான் உன்னை எப்படிக் கைவிடுவேன்? இஸ்ரவேலே, நான் உன்னை எப்படி ஒப்புக்கொடுப்பேன்? நான் உன்னை எப்படி அத்மாவைப் போலாக்குவேன்? உன்னை எப்படி செபோயீமைப்போல வைப்பேன்? என் இருதயம் எனக்குள் குழம்புகிறது, என் பரிதாபங்கள் ஏகமாய்ப் பொங்குகிறது. ஓசியா 11:8
தேவன் தனது இதயத்தின் துடிப்பை தீர்க்கதரிசியின் மூலமாக இவ்வசனங்களில் வெளிப்படுத்துகின்றார். இஸ்ரவேல் தனக்குத்தானே கேடுண்டாக்கிக்கொண்டபோதும். தன்னிடத்தில் அதற்கு சகாயம் உண்டு என்றும், எப்ராயீமே நான் உன்னை எப்படிக் கைவிடுவேன்? என்றும் அங்கலாய்க்கின்ற தேவனையே இந்த வசனங்களில் நாம் காண்கின்கின்றோம்.
இஸ்ரவேல் யார்? இஸ்ரவேலைக் குறித்து தேவன் வைத்திருந்த தீர்மாணம் என்ன? தேவன் அவர்களை எப்படியாய்ச் சிநேகித்தார் என்பதை நாம் அறிந்துகொண்டால், அவர்களின் மேல் தேவன் அங்கலாய்ப்பதைக் குறித்து நாம் புரிந்துகொள்ளமுடியும். ''நான் உங்களைச் சிநேகித்தேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். அதற்கு நீங்கள்: எங்களை எப்படிச் சிநேகித்தீர் என்கிறீர்கள். கர்த்தர் சொல்லுகிறார்: ஏசா யாக்கோபுக்குச் சகோதரன் அல்லவோ? ஆகிலும் யாக்கோபை நான் சிநேகித்தேன் (மல்கியா 1:2) என்று இஸ்ரவேலின் மேல் தான் வைத்திருந்த சிநேகத்தை மல்கியா தீர்க்கதரிசியின் மூலமாக வெளிப்படுத்துகின்றார். பழைய ஏற்பாட்டின் காலத்தின்படியும். வழக்கத்தின்படியும் ஆசீர்வாதம் முதல் பிள்ளைக்குத்தான் சேரவேண்டும். எனினும், பிள்ளைகள் ரெபேக்காளின் கர்ப்பத்தில் இருக்கும்போதே. இளையவன் மூத்தவனைச் சிநேகிப்பான் என்று யாக்கோபின்மேல் உள்ள நேசத்தை வெளிப்படுத்தினார் (ஆதி 25:23). இஸ்ரவேல் ஜனங்களை நேசிக்கிறேன் என்று தேவன் சொன்னால், அவர்களிடையே அவர் வைத்திருக்கிற உடன்படிக்கையினாலேயே அவர் அவர்களை நேசித்தார் என்று நாம் அறிந்துகொள்ளலாம். ஆபிரகாமுடன் தேவன் உடன்படிக்கை பண்ணினார். தேவன் சொன்ன வார்த்தைகளை ஆபிரகாம் அப்படியே விசுவாசித்தான். அதுமாத்திரமல்ல, ஆபிரகாம் நூறு வயதாயும். சாராள் தொன்னூறு வயதாயுமிருந்தபோதிலும், அவர்கள் மாம்சம் செத்துப்போயிருந்தபோதிலும், 'நான் குமாரனைத் தருவேன்' என்று தேவன் சொன்னபோது. ஆபிரகாம் அதை விசுவாசித்தான். தேவனை நாம் நம்பினால் அவரது வார்த்தைகள் நம்முடைய வாழ்க்கையிலும் நிறைவேறுவது நிச்சயம். தேவனால் தனக்குக் கொடுக்கப்பட்ட ஒரே பேரான குமாரனாகிய ஈசாக்கை தகனபலியாக தேவன ஆபிரகாமினிடத்தில் கேட்டபோதும், அவன் எதைக்குறித்தும் சிந்திக்காமல் தேவனில் முழு விசுவாசமுடையவனாய் தேவனுக்குக் கீழ்ப்படிந்து மனப்பூர்வமாக அவனைக் கூட்டிச்சென்றதோடு மாத்திரமல்ல, சாம்பலிலிருந்தும் தேவன் தனக்கு குமாரனைக் கொடுக்க வல்லமையுடையவர் என்பதையும் அவன் விசுவாசித்தான். நம்மையும் தேவன் ஆபிரகாமின் சந்ததிகளாகவும், ஆவிக்குரிய இஸ்ரவேலராகவும் மாற்றிவைத்திருக்கிறார்.
இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியம் என்று பிலேயாம் கண்டபோது. அவன் முந்திச் செய்துவந்ததுபோல நிமித்தம்பார்க்கப் போகாமல், வனாந்தரத்திற்கு நேராகத் தன் முகத்தைத் திருப்பி. (எண்ணாகமம் 24:1)
இஸ்ரவேல் மக்களுடன் தேவன் உடன்படிக்கை பண்ணியது மாத்திரமல்ல, அவர்களை ஆசீர்வதிக்கவும் தேவன் சித்தம் கொண்டிருந்தார். பொருளாசையுடைய பிலேயாம் தீர்க்கதரிசியின் மூலமாகவும் தனது இதயத்தின் வாஞ்சையையும் விருப்பத்தையும் தேவன் வெளிப்படுத்தினார். தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டு, பிரித்தெடுக்கப்பட்டு, அன்பு கூறப்பட்டு, தேவனுடைய பங்கும் சுதந்திரமுமாகவும் இஸ்ரவேல் இருந்தாலும், தேவன் இஸ்ரவேல் ஜனங்களை நோக்கி 'நீ உனக்குக் கேடுண்டாக்கிக்கொண்டாய்' என அங்கலாய்க்கின்றார்.
இந்த பெரிய தேசத்திலே நம்மை தெரிந்தெடுத்து, வேறுபிரித்து, நம்மை அந்தகாரத்தின் சக்தியினின்று விடுதலையாக்கி, ஒளியிலுள்ள பரிசுத்தவான்களோடு கூட கொடுத்தவர், நம்மேல் வைத்திருக்கிற அன்பின் நிமித்தம் நாம் நம்மைக் கெடுத்துக்கொள்ளும்போது அங்கலாய்க்கின்றார். சுதந்தரம்
கசப்பான கனியாகிய இஸ்ரவேல்
நான் அவர்களைத் தண்டித்தேன், அவர்களுடைய புயங்கள் திரும்பப் பலப்படவும்பண்ணினேன், ஆகிலும் எனக்கு விரோதமாகப் பொல்லாப்பு நினைக்கிறார்கள். திரும்புகிறார்கள், ஆனாலும் உன்னதமானவரிடத்திற்கு அல்ல. மோசம் போக்குகிற வில்லைப்போலிருக்கிறார்கள், அவர்களுடைய அதிபதிகள் தங்கள் நாவினுடைய உக்கிரத்தினிமித்தம் பட்டயத்தால் விழுவார்கள், இதுவே எகிப்துதேசத்தினிமித்தம் அவர்களுக்கு வரும் நிந்தை. ஓசியா 7:15,16
எங்கள் தேவனே, உம்மை அறிந்திருக்கிறோம் என்று சொல்லி இஸ்ரவேலர் கூப்பிடுவார்கள். ஆனாலும் இஸ்ரவேலர் நன்மையை வெறுத்தார்கள். சத்துரு அவர்களைத் தொடருவான். ஓசியா 8:1,2
அவர்கள் ராஜாக்களை ஏற்படுத்திக்கொண்டார்கள், ஆனாலும் என்னாலே அல்ல, அதிபதிகளை வைத்துக் கொண்டார்கள், ஆனாலும் நான் அறியேன், அவர்கள் வேரறுப்புண்டு போகும்படித் வெள்ளியினாலும் தங்கள் பொன்னினாலும் தங்களுக்கு விக்கிரகங்களைச் செய்வித்தார்கள். ஓசியா 8:4
தேவன் தன்னைத் தெரிந்துகொண்ட நோக்கத்தை மறந்துவிட்டு, தங்களுக்கு உண்டான கொஞ்ச பெலத்தைக் கொண்டு தேவனது நாமத்திற்கு இழுக்கு உண்டாக்குவோர் அதிகம் பேர். இன்றும் அநேக கூட்டங்களில் ஜனங்கள் ஒப்புக்கொடுக்கிறார்கள்; என்றாலும் தேவனிடத்திற்கு அல்ல யாரோ ஒரு மனிதன் தனக்காக ஜெபிக்கவேண்டும் என்ற
நோக்கத்துடன் வருவோர் அதிகம். தேவன் விரும்புவது போலவே இஸ்ரவேலர் நடப்பதைப் போலக் காணப்பட்டாலும், அவர்களுடைய செயல்கள் தேவனைச் சார்ந்ததாயிருக்கவில்லை. இஸ்ரவேலர் ராஜாக்களை ஏற்படுத்திக்கொண்டதும், அதிபதிகளை ஏற்படுத்திக்கொண்டதும் தேவனது விருப்பத்தின்படி அல்ல என்பதை தேவனின் அங்கலாய்ப்பின் மூலம் நாம் உணர்ந்துகொள்ளமுடியும். மிகப்பெரிய திட்டத்துடனும், சிநேகத்துடனும் தேவன் இஸ்ரவேலரைக் கண்ணோக்கினாலும், அவர்களோ தேவனை அல்ல விக்கிரகங்களையே சேவித்து அவருக்கு வேதனையளித்தார்கள்.
"வனாந்தரத்தில் திராட்சைக் குலைகளைக் கண்டுபிடிப்பதுபோல இஸ்ரவேலைக் கண்டுபிடித்தேன்; அத்திமரத்தில் முதல்தரம் பழுத்த கனிகளைப்போல பிதாக்களைக் கண்டுபிடித்தேன்; ஆனாலும், அவர்கள் பாகால்பேயோர் அண்டைக்குப்போய். உங்கள் இலட்சையானதற்குத் தங்களை ஒப்புவித்து, தாங்கள் நேசித்தவைகளைப் போல தாங்களும் அருவருப்புள்ளவர்களானார்கள் (ஓசியா 9:10) என்றும் ஓசியா தீர்க்கதரிசியின் மூலமாக தனது சிநேகத்தையும், அங்கலாய்ப்பையும் வெளிப்படுத்துகின்றார். "அவர் அதை வேலியடைத்து, அதிலுள்ள கற்களைப் பொறுக்கி, அதிலே நற்குல திராட்சச்செடிகளை நட்டு, அதின் நடுவில் ஒரு கோபுரத்தைக்கட்டி, அதில் ஆலையையும் உண்டுபண்ணி, அது நல்ல திராட்சப்பழங்களைத் தருமென்று காத்திருந்தார், அதுவோ கசப்பான பழங்களைத் தந்தது" (ஏசாயா 5:2) என ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகத்தில் வாசிக்கிறோமே. இப்பூமியில் வாழும் நம் ஒவ்வொருவர் மேலும் தேவனுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உண்டு, முதல் தரமான கண்டுபிடித்திருக்கின்றார். கனியாகவே தேவன் நம்மை இவ்வுலகில்
இஸ்ரவேல் மக்களை தேவன் நல்ல திராட்சைக் கொடியாக நாட்டியிருந்தபோதிலும், அந்த தேவனது நோக்கத்தை இஸ்ரவேல் மக்கள் புரிந்துகொள்ளவில்லை. முாறாக தங்கள் நடக்கைகளினாலும், செயல்களினாலும் தங்களுக்குத் தாங்களே அவர்கள் கேடுண்டாக்கிக்கொண்டிருந்தார்கள்.
என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சங்காரமாகிறார்கள், நீ அறிவை வெறுத்தாய், ஆகையால் நீ என் ஆசாரியனாயிராதபடிக்கு நானும் உன்னை வெறுத்து விடுவேன், நீ உன் தேவனுடைய வேதத்தை மறந்தாய், ஆகையால் நானும் உன் பிள்ளைகளை மறந்து விடுவேன் (ஓசியா 4:6).
இப்பொழுது நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு, என் உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால், சகல சம்பத்தாயிருப்பீர்கள். பூமியெல்லாம் ராஜ்யமும் பரிசுத்த ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்த என்னுடையது. நீங்கள் எனக்கு ஆசாரிய ஜாதியாயும் இருப்பீர்கள் என்றே தேவன் அவர்களைத் தெரிந்துகொண்டபோது வாக்குக் கொடுத்திரு்தார் (யாத் 19:5,6).
தேவனைப் பற்றி அறிகிற அறிவிற்கும், தியானத்திற்கும் நமது வாழ்வில் முக்கியத்துவம் அளிக்கவேண்டும். தனிவாழ்வின் வேத வாசிப்பையும், தியானத்தையும் மறந்துவிட்டு தொலைக்காட்சிப் பெட்டியின் முன்னால் பிரசங்கங்களையும், தியானங்களையும் கேட்பதையே இந்நாட்களில் ஜனங்கள் அதிகம் தெரிந்தெடுக்கின்றார்கள்.
மேலும் இஸ்ரவேலரைக் குறித்து, 'அவர்கள் தங்கள் தேவனிடத்துக்குத் திரும்புவதற்குத் தங்கள் கிரியைகளைச் சீர்திருத்தமாட்டார்கள், வேசித்தன ஆவி அவர்கள் உள்ளத்தில் இருக்கிறது, கர்த்தரை அறியார்கள்' (ஓசியா 5:4) என்றே தேவன் எழுதிவைத்திருக்கின்றார். அவர்கள் செய்த வேசித்தனம் என்ன? தேவனுடைய மக்கள், தேவனால் தெரிந்தெடுக்கப்பட்ட ஜனங்கள் உலகத்தோடு இசைந்து இருப்பதையே விபச்சாரம் என்று வேதத்தில் நாம் காணமுடியும். நம்முடைய ஆலயங்களில், குடும்பங்களில், தொழில்களில் எத்தனையாய் இந்நாட்களில் உலகம் உட்பிரவேசித்து நம்மை ஆட்கொண்டுவிட்டது என்பதை நாம் ஆராய்ந்துபார்க்கவேண்டும். தேவனது திட்டத்தை மறந்துவிட்டு உலகத்தோடு ஒத்துப்போய்விட்ட இஸ்ரவேல் மக்களைப் பார்த்தே தேவன் 'நான் உன்னை சிநேகித்து, ஆசாரிய ஜாதியாக ஏற்படுத்தினேன் அல்லவோ ஆனால் அங்கலாய்கின்றார். நீயோ, உனக்குக் கேடுண்டாக்கிக்கொண்டாயே என்று
சகாயம் பெறும் இஸ்ரவேல்
ஆகையால் நான் அவர்களுக்குச் சிங்கத்தைப்போல் இருப்பேன், சிவிங்கியைப்போல் வழியருகே பதிவிருப்பேன். குட்டிகளைப் பறிகொடுத்த கரடியைப் போல நான் அவர்களை எதிர்த்து, அவர்கள் ஈரற்குலையைக் கிழித்து, அவர்களை அங்கே சிங்கம் பட்சிக்கிறதுபோல் பட்சித்துப்போடுவேன், காட்டுமிருகங்கள் அவர்களைப் பீறிப்போடும். இஸ்ரவேலே, நீ உனக்குக் கேடுண்டாக்கிக் கொண்டாய், ஆனாலும் என்னிடத்தில் உனக்குச் சகாயம் உண்டு. ஓசியா 13:7,8,9
நான் அவர்கள் சீர்கேட்டைக் குணமாக்குவேன், அவர்களை மனப்பூர்வமாய் சிநேகிப்பேன், என் கோபம் அவர்களைவிட்டு நீங்கிற்று. நான் இஸ்ரவேலுக்குப் பனியைப்போலிருப்பேன், அவன் லீலிப் புஸ்பத்தைப்போல் மலருவான், லீபனோனைப் போல் வேரூன்றி நிற்பான். அவன் கிளைகள் ஓங்கிப் படரும், அவன் அலங்காரம் ஒலிவ மரத்தினுடைய அலங்காரத்தைப் போலவும், அவனுடைய வாசனை லீபனோனுடைய வாசனையைப் போலவும் இருக்கும். ஓசியா 14:4-6
இஸ்ரவேலரின் செயல்களைக் கண்டு தேவனது மனம் அங்கலாய்த்தாலும். தேவன் தன்னிடத்தில அதற்கு சகாயம் உண்டு என்றே கூறுகின்றார். சிங்கத்தைப்போல் இருப்பேன், சிவிங்கியைப்போல் பதிவிருப்பேன், கரடியைப்போலிருப்பேன், என்று தேவன் சொன்னாலும், என்னிடத்தில் உனக்கு சகாயம் உண்டு என்றும், அவர்கள் சீர்கேட்டை நான் குணமாக்குவேன் என்றும் சொல்வதோடு மாத்திரமல்ல அவர்கள் மேலுள்ள சிநேகத்தினால் அவர்கள் லீலி புஸ்பத்தைப்போல மலருவான் என்றும் அவர்களை ஆசீர்வதிக்கின்றார்.
தேவனைவிட்டு நாம் தூரமாய்ப் போயிருந்தபோதிலும், தேவன் நம்மை மீண்டும் அணைத்துக்கொள்ள போதுமானவர். அவருடைய கிருபை என்றைக்கு முள்ளது. தேவகோபம் நம்மேல் விழும் முன்னதாக நாம் அவருடைய கரத்தின் கிருபைக்குள் வந்து அடைக்கலம் புகுந்துவிடுவோம். கிருபையின் சத்தத்திற்கு நமது செவியை நாம் அடைத்துக்கொள்ளாமல், கீழ்ப்படிந்து, தேவனே எங்களுக்கு சிங்கத்தைப்போல அல்ல எங்களுக்கு பனியைப்போல நீர் மாறிவிடும் என்று வேண்டுவோம். குடும்பத்தில் பிரச்சனைக்கு மேல் பிரச்சனை வரும்போது நாம் நம்மையே ஆராய்ந்துபார்க்கவேண்டிய அவசியமுண்டு. நாம் நமக்கு கேடுண்டாக்கிக்கொண்டாலும், அவரிடத்தில் நமக்கு சகாயம் உண்டு.