8. ஆவிக்கும் ஆத்துமாவுக்கும் உள்ள வேறுபாடு
ஆவியின் உணர்வையும் ஆவியை அறிதலையும்பற்றி நாம் பார்த்திருக்கிறோம்; இப்போது, நாம் ஆவிக்கும் ஆத்துமாவுக்கும் உள்ள வேறுபாட்டைப் பார்ப்போம்.
I. ஆவியையும் ஆத்துமாவையும் வேறுபிரித்தல்
உளவியலாளர்கள் என்று அழைக்கப்படுகிறவர்கள் மனிதனை பகுத்தாய்ந்து, அவனை பௌதீகம் சாராத பகுதி மற்றும் பௌதீகம் சார்ந்த பகுதி இரண்டாகப் பிரிக் கின்றனர். பௌதீகப் என பகுதி உடலைக் குறிக்கிறது, பௌதீகம் சாராத பகுதி உளத்தைக் குறிக்கிறது, அது வேதாகமத்தில் பேசப்பட்டுள்ள ஆத்துமாவாகும். மனிதனுடைய உடலுக்குள், உளம் அதாவது ஆத்துமா மட்டுமே இருக்கிறது என்று அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் வேதாகமம் மனிதனுக்குள் ஆத்துமாவைத்தவிர ஆவியும் இருக்கிறது என்று நமக்குக் கூறுகிறது. 1 தெசலோனிக்கேயர் 5:23 "ஆத்துமா' என்று மட்டும் கூறவில்லை. மாறாக "ஆவியும் ஆத்துமாவும் என்று கூறுகிறது. ஆவியும் ஆத்துமாவும் இரண்டு காரியங்கள் மற்றும் வேறுபாடானவைகள். இவ்வாறு எபிரேயர் 4:12 ஆத்துமாவையும் ஆவியையும் பிரிப்பதைப்பற்றிப் பேசுகிறது.
நாம் ஜீவனில் உண்மையான ஆவிக்குரிய வளர்ச்சியைப் பெற விரும்பினால், ஆவியும் ஆத்துமாவும் வேறுபாடான இரண்டு காரியங்கள் என்பதை அறியவேண்டும், மேலும் ஆவி என்றால் என்ன, ஆத்துமா என்றால் என்ன என்பதையும், ஆவிக்குரியது எது, ஆத்துமாவுக்குரியது எது என்பதையும் பகுத்துணரக் கூடியவர்களாக நாம் இருக்கவேண்டும். ஆவிக்கும் ஆத்துமாவுக்கும் உள்ள வேறுபாட்டை நம்மால் பகுத்துணர முடிந்தால், அப்போது நாம் நம் ஆத்துமாவை மறுதலித்து, ஆத்துமாவிலிருந்து விடுவிக்கப்பட்டு தேவனுக்கு முன்பாக ஆவியில் வாழமுடியும்.
A. ஆத்துமா எதிர் ஆவி
1 கொரிந்தியர் 2:14-15 இரண்டு வகையான மனிதனைப் பற்றிப் பேசுகிறது: ஒன்று ஆத்துமாவுக்குரிய மனிதன் (" ஜென்ம சுபாவமான மனிதன்" என்பதற்கான மூலப்படிவம் 'ஆத்துமாவுக்குரிய மனிதன்"), மற்றொன்று ஆவிக்குரிய மனிதன், ஆத்துமா அல்லது ஆவி ஆகிய இந்த வேறுபாடான இரண்டு காரியங்களுள் ஏதாவது ஒன்றினால் மனிதன் வாழவும், அதற்கு உரியவனாக இருக்கவும்முடியும் என்று இது நமக்குக் காட்டுகிறது. மனிதன் ஆத்துமாவால் வாழ்ந்து ஆத்துமாவுக்குரியவனாக இருக்கமுடியும், இதனால் ஆத்துமாவுக்குரிய மனிதனாக மாறுகிறான்; அல்லது ஆவியினால் வாழ்ந்து ஆவிக்குரியவனாக இருக்கமுடியும், இதனால் ஆவிக்குரிய மனிதனாக மாறுகிறான். ஒரு மனிதன் ஆவிக்குரியவனாக இருந்தால், தேவனுடைய ஆவிக்குரிய காரியங்களைப் பகுத்துணர்ந்து அவைகளைப் பெற்றுக் கொள்ளமுடியும்; இருப்பினும் அவன் ஆத்துமாவுக்குரிய வனாக இருந்தால் இப்படிப்பட்ட காரியங்களை பெற்றுக்கொள்ளமுடியாது, மேலும் அவைகளை அவன் அறியவும் முடியாது. ஆத்துமா ஆவியிலிருந்து மாறுபட்டது என்பதை இது அவன் தெளிவாக்குகிறது. ஆவி தேவனோடு தொடர்புகொண்டு தேவனு டைய ஆவிக்குரிய காரியங்களைப் பகுத்துணரமுடியும். தேவனுடைய ஆவிக்குரிய காரியங்கள் ஆத்துமாவுக்கு முரணாகவும், பொருத்தமற்றும் இருக்கின்றன. ஆவி தேவனுடைய காரியங்களைப் பாராட்டுவதிலும் பெற்றுக்கொள்வதிலும் களிகூறு கிறது. ஆனால் ஆத்துமா அப்படி இல்லை; அது, இப்படிப்பட்ட காரியங்களைப் பெற்றுக்கொள்ளாதது மட்டுமல்ல அவைகளை முட்டாள்தனம் என்றும் கருதுகிறது. அது
வேதாகமத்தில் மாம்சம் ஆவிக்கு எதிரானது என்று காட்டுகிற ரோமர் 8 மட்டுமல்ல, ஆத்துமாவும் ஆவிக்கு எதிரானது என்று காட்டுகிற 1 கொரிந்தியர் 2-ம் இருக்கிறது. மனிதன் மாம்சத்தால் வாழும்போது, அவன் ஆவிக்குரியவ னாக இல்லாமல் மாம்சத்துக் குரியவனாக இருக்கிறான்; அதுபோல மனிதன் ஆத்துமாவினால் வாழும்போது, அவன் ஆவிக்குரியவனாக இல்லாமல் ஆத்துமாவுக் குரியவனாக இருக்கிறான். ரோமர் 8 மாம்சத்தைப்பற்றிப் பேசும்போது, அது பாவத்தோடு அதற்குள்ள உறவை வலியுறுத்து கிறது. ஆகையால் பாவம்செய்யும் எல்லாரும் மாம்சத்திற் குரியவர்களாக இருக்கிறார்கள். ஆனால் ஆத்துமா நேரடியாக பாவத்தோடு தொடர்புடையதாக இருக்கவேண்டும் என்பது அவசியமில்லை. நேரங்களில் மனிதன் (மனிதனுடைய பல பார்வையில்), பாவம் செய்யாமலும், மாம்சத்துக்குரியவனாக இல்லாமலும் இருக்கக்கூடும், இருப்பினும், இன்னும் அவன் ஆவிக்குரியவனாக இல்லாமல் ஆத்து மாவுக்குரியவனாக இருக்கிறான். (கண்டிப்பாக பேசினால் மனிதன் ஆத்துமாவுக் குரியவனாக இருக்கும்போது, அவன் மாம்சத்துக்குரியவனாகவும் இருக்கிறான், ஏனென்றால் மனிதனுடைய ஆத்துமா மாம்சத்தின்கீழ் வீழ்ந்துபோனது. ஆனால், ஆத்துமாவைப்பற்றி நாம் பேசும்போது, ஆத்துமாவுக்குரியவனாக இருப்பதற்கும் மாம்சத்துக்குரியவனாக இருப்பதற்கும் இடையே ஒரு வித்தியாசம் இருக்கிறது.)இவ்வாறு நாம் பாவம் செய்யாமல் பாவத்திலிருந்து விடுவிக்கப்பட்டு மனிதனுடைய பார்வையில் மாம்சத்துக்குரியவனாக இல்லாமலி ருந்தாலும், நாம் ஆத்துமாவுக்குரியவர்களாக இல்லாமல் அவசியம் ஆவிக்குரிய வர்களாக இருக்கிறோம் என்பது இதன் அர்த்தமல்ல; தேவனுடைய ஆவிக்குரிய காரியங்களை நிச்சயமாக நாம் புரிந்துகொள்ள முடியும் என்பதோ, தேவனுடைய காரியங்களைப் புரிந்துகொண்டு, பாராட்டி, பெற்றுக்கொள்ள முடியும் என்பதோகூட இதற்கு அர்த்தமல்ல. நாம் பாவத்திலிருந்து விடுவிக்கப்பட்டு, மாம்சத்தில் கட்டுப்பாடில்லாமல் ஓடுவதை நிறுத்திவிட்டாலே, நாம் ஆவிக்குரியவர்களாக மாறி தேவனோடு தொடர்புகொண்டு, தேவனுடைய ஆவிக்குரிய காரியங்களைப் புரிந்துகொண்டு விடலாம் என்று நாம் பலமுறை நினைக்கிறோம். இல்லை, அது அவ்வளவு நிச்சயமல்ல. நாம் பாவத்திலிருந்து விடுவிக்கப்பட்டு மாம்சத்தில் கட்டுப்பாடில்லாமல் ஓடவில்லை என்பதுபோல் தோன்றினாலும், இன்னும் நாம் நம் ஆவியினால் வாழாமல் ஆத்துமாவினால் வாழ்வதற்கு முற்றிலும் சாத்தியமிருக்கிறது.
கர்த்தருடைய இரட்சிப்பு நம்மை பாவத்திலிருந்தும் மாம்சத்தி லிருந்தும் மட்டுமல்ல ஆத்துமாவிலிருந்தும் விடுவிக்கிறது. கர்த்தருடைய இரட்சிப்பின் குறிக்கோள் நாம் பாவத்திலும் மாம்சத் திலும் இருக்கக்கூடாது என்பது மட்டுமல்ல; மாறாக, ஆத்துமாவில் இல்லாமல் ஆவியில் இருக்கவேண்டும் என்பதுமாகும். அவருடைய இரட்சிப்பு, நாம் ஒரு ஒழுக்கமான மனிதனாக மாற, ஒழுக்கத்தின் தரத்திற்கு மட்டுமல்ல; இன்னும் அதிகமாக, நாம் ஒரு ஆவிக்குரிய மனிதனாகும்படி ஆவிக்குரிய தரத்திற்கும் நம்மை இரட்சிக்கிறது. நல்லொழுக்கங்களுடைய ஒரு மனிதன் அவசியம் ஒரு ஆவிக்குரிய மனிதனாகத்தான் இருப்பான் என்பதில்லை; மாறாக, அவன் ஆத்துமாவுக்குரிய ஒரு மனிதனாக அதாவது, ஆத்துமாவினால் வாழ்கிற ஒரு மனிதனாக இருப்பது முற்றிலும் சாத்தியமே. இவ்வாறு ஒரு சகோதரனோ ஒரு சகோதரியோ, மிக நல்லொழுக்கம் உடையவராகவும் மிகவும் நல்லவராகவும் இருக்கலாம்; ஆனாலும், தேவனுடைய ஆவிக்குரிய காரியங்களைப் பொறுத்தவரை அவனோ, அவளோ பிரகாசிக்கப் படாமலும், அவைகளை விருப்பப்படாமலும், பாராட்டாமலும், அவைகளைப் பெற்றுக்கொள்ளா மலும்கூட இருக்கமுடியும். ஏனென்றால், அவனோ, அவளோ ஆத்துமாவில் வாழ்கிறவ ராகவும், ஆத்துமாவுக்குரியவராகவும் இருக்கிறார்.
B. ஆவிக்குரிய காரியங்களில் ஆத்துமாவின் ஆற்றலின்மை
"ஜென்மசுபாவமான (ஆத்துமாவுக்குரிய) மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளமாட்டான்; அவைகளை அறியவும்மாட்டான்” என்று 1 கொரிந்தியர் 2:14 கூறுகிறது. தேவனுடைய ஆவிக்குரிய காரியங்களைப் பொறுத்த வரை ஆத்துமாவின் நிலைமையைப்பற்றி இந்த வார்த்தைகள் தெளிவாகவும் ஆழமாகவும் பேசுகின்றன. ஆத்துமா தேவனுடைய ஆவிக்குரிய காரியங்களை 'பெற்றுக்கொள்ளவும் முடியாது", 'அவைகளை அறிந்துகொள்ளவும் முடியாது". ஆத்துமா தேவனுடைய ஆவிக்குரிய காரியங்களை விரும்புவதுமில்லை, அது அவைகளைப் பெற்றுக்கொள்ளவும் முடியாது; அது அவைகளைப் பெற்றுக்கொள்ள விரும்பினாலும்கூட அதனால் முடியாது, ஏனெனில் அது அவைகளை அறியவோ, புரிந்துகொள்ள வோ முடியாது. ஆத்துமாவின் சுபாவம் தேவனுடைய ஆவிக்குரிய காரியங்களுடன் ஒத்திருக்கவில்லை: ஆகையால் அது தேவனுடைய காரியங்களை விரும்புவதோ பெற்றுக் கொள்வதோ இல்லை. மேலும் தேவனுடைய காரியங்களை அறிந்துகொள்வதற் கான ஆற்றல் அதற்கு இல்லை. ஆகையால் தேவனுடைய ஆவிக்குரிய காரியங்களைப் பொறுத்தவரை, ஆத்துமாவினால் வாழ்கிற ஒரு மனிதனுக்கு எந்த உணர்வோ, எந்த ஈடுபாடோ, எந்த விருப்பமோ இருப்பதில்லை; அவன் அவைகளைத் தேடுவதும் இல்லை, அவைகளைப் பெறுவதும் இல்லை, அவைகளைப் புரிந்துகொள்ளவதும்கூட இல்லை. இதன் காரணமாகத்தான் நாம் ஆத்துமாவினால் வாழாதபடிக்கு தேவன் நம்மை ஆத்துமாவிலிருந்து விடுவிக்கவேண்டும்; அப்போது நாம் அவருடைய ஆவிக்குரிய காரியங்களை நேசித்து புரிந்துகொண்டு பெற்றுக்கொள்ளும்படி அவர் செய்கிறார்.
ஆவிக்குரிய காரியங்களில் ஆத்துமாவின் ஆற்ற லின்மையைப்பற்றி நாம் தெளிவாக இருக்கவேண்டும். மேலும் இதை ஒரு முக்கியமான காரியமாகக் கருதவேண்டும். ஆத்துமா தேவனுடைய ஆவிக்குரிய காரியங்களைப் பெற்றுக்கொள்ளவோ, அவைகளை அறியவோ முடியாது. ஆத்துமாவினால் வாழ்கிற ஒரு சகோதரனோ சகோதரியோ, மிகவும் நல்லவராக, நன்னடத்தையுள்ளவராக, நற்குணசாலியாக இருக்கமுடியும்; ஆனால் அவனோ அவளோ நிச்சயமாக ஆவிக்குரிய காரியங்களை அறிய முடியாது, மேலும் ஆவிக்குரிய காரியங்களுக்காக தாகமாக இருக்கவும் மாட்டார்கள். நான் இப்படிப்பட்ட அநேக சகோதர சகோதரிகளைச் சந்தித்திருக்கிறேன். அவர்கள் தங்கள் நடத்தையில் மிகவும் கவனமாக இருக்கிறார்கள். மேலும் அவர்கள் நடத்தை பிழையற்றதாக இருக்கிறது என்றும்கூட சொல்லலாம். எனினும் ஆவிக்குரிய காரியங்களைப் பொறுத்தவரை அவர்களுடைய மனதில் அடைப்பு இருக்கிறது, மேலும் அவர்கள் அவைகளைத் தேடமாட்டார்கள். நல்லது கெட்டது, சரி தவறு என்ற மனித ஒழுக்கத்தின் தரத்தினால் அவர்கள் தங்களையும் மற்றவர்களையும் மதிப்பிடுகிறார்கள். மேலும் எல்லாக்காரியங்களிலும் அவர்கள் தேவனுடைய ஆவியின் உணர்விலும் உள்ளான பார்வையிலும் குறை வுள்ளவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் மனதில் தெளிவாகவும் தங்கள் அறிவாற்றலில் பலமாகவும் இருக்கலாம், ஆனால் அவர்கள் தங்கள் ஆவியில் பிரகாசிக்கப் படுவதில்லை; மேலும் அவர்களுடைய ஆவியின் உணர்வும் கூர்மையாய் இருப்பதில்லை. நீங்கள் அவர்களை நல்ல கிறிஸ்தவர்கள் என்று அழைக்கலாம், ஆனால் நீங்கள் அவர்களை ஆவிக்குரிய கிறிஸ்தவர்கள் என்று அழைக்க முடியாது. அவர்களுடைய நடத்தையைப் பொறுத்தவரை அவர்கள் நிஜமாகவே நல்லவர்கள். எவ்வாறு நடப்பது, எவ்வாறு காரியங்களைக் கையாளுவது என்று அவர்கள் அறிந்திருக்கிறார்கள்; அவர்கள் அறிவாற்றலும் விழிப்பும், கவனமும் திறமையும் உள்ளவர்கள். ஆனால் அவர்கள் தேவனுடைய ஆவிக்குரிய காரியங்களைத் தொட்டவுடனே குழப்பமடைந்துவிடுகிறார்கள். அவர்கள் எந்த உணர்வோ, புரிந்துகொள்ளும்திறனோ அற்ற மரம் அல்லது கல்லைப்போல இருக்கிறார்கள். மேலும் ஆவிக்குரிய காரியங்களைப் பொறுத்த வரையில், அவர்கள் இருதயத்தில் அடிக்கடி குளிர்ந்துவிடுகிறார்கள்; அவர்கள் புரிந்துகொள்வதில் மந்தமானவர்களாக மட்டுமல்ல. தேடுவதிலும் சோம்பலானவர்களாக இருக்கிறார்கள்.
எனவே நல்ல கிறிஸ்தவர்கள் ஆவிக்குரிய கிறிஸ்தவர்களாக இருக்க வேண்டும் என்பதில்லை. ஆவிக்குரிய கிறிஸ்தவர்கள் வெறுமனே தங்கள் நடத்தையில் நல்லவர்கள் மட்டுமல்ல; அவர்கள் தங்கள் ஆவியில் வாழ்ந்து ஆவியின் உணர்வைக் கொண்டிருந்து, ஆவிக்குரிய காரியங்களைப் புரிந்துகொண்டு, உள்ளிருந்து தேவனுக்குரிய வழியை அறிந்து ஆவிக்குரிய காரியங்களில் தேர்ச்சிபெற்றவர்களாக இருக் கிறார்கள். நன்மைத் தன்மையும், ஆவிக்குரியதன்மையும் மிகவும் வித்தியாசமான வைகள். அநேக சகோதர சகோதரிகள் நல்லவர்களாக இருக்கிறார் கள், ஆனால் ஆவிக்குரியவர்களாக இல்லை; அவர்கள் நல்ல வர்கள், ஆனால் அவர்கள் ஆவியில் வாழவில்லை. நீங்கள் அவர்களில் நன்மையைக் காணலாம், ஆனால் நீங்கள் ஆவியைக் காணமுடியாது. நீங்கள் அவர்களில் மனித நற்பண்புகளைப் பார்க்கலாம், ஆனால் நீங்கள் தேவ னுடைய வாசனையை நுகர முடியாது. ஒரு குறிப்பிட்ட கண்ணோட்டத்தில், அவர்கள் மாம்சத்தில் இல்லாதவர்களைப்போல் தோன்றுகிறார்கள், இருப்பினும் அவர்கள் நிச்சயமாக ஆத்துமாவில் இருக்கிறார்கள். அவர்கள் மாம்சத்திற்கு ஆளுகையைக் கொடுக்காவிட்டாலும், அவர்கள் ஆவியில் வாழ்வதில்லை; அவர்கள் பாவக்காரியங்களை அங்கீகரிக்காவிட்டாலும்கூட அவர்கள் ஆவிக்குரிய காரியங்கள் மேல் தாகமாயிருப்பதில்லை; அவர்கள் மாம்சத்தின்படி பாவம்செய்யாவிட்டாலும் ஆத்துமாவாகிய சுயத்தினால் வாழ்கிறார்கள். ஆத்துமாவே அவர்களுடைய வாழ்க்கையின் ஊற்றாக இருக்கிறது, மேலும் அது, அவர்களுடைய வாழ்க்கையின் வழிவகைகளாகவும் இருக்கிறது. அவர்கள் ஆத்துமாவுக்குரிய மக்கள், அதாவது ஆத்துமாவிலும், ஆத்துமாவினாலும் வாழ்கிற வர்கள்; ஆகையால் அவர்கள் ஆவிக்குரிய காரியங்களை விரும்பு வதுமில்லை, அவர்களால் அவைகளைப் புரிந்துகொள்ளவும் முடியவில்லை.
C. ஆத்துமாவின் உள்ளடக்கம்
ஆத்துமா என்பது நம் தனிப்பட்ட ஆளுமை அதாவது நம் நான் என்ற முனைப்பு: ஆகையால் ஆத்துமா நம் சுயமாக இருக்கிறது. பகுப்பாய்வு முறையில் பேசினால், மனம், உணர்ச்சி, சித்தம், ஆகிய இந்த மூன்று பகுதிகளையும் ஆத்துமா உள்ளடக்கி யிருக்கிறது. மனம் என்பது மனிதனுடைய சிந்திக்கும் உறுப்பாகும். இதைத்தான் நாம் வழக்கமாக மூளை என்று பேசுகிறோம் (உயிரியல்ரீதியாக இது மூளையாக இருக்கிறது, மனோரீதியாக இது மனமாக இருக்கிறது). இது நம் ஆத்துமாவின் பிரதானமான பகுதியாகும். மனிதனின் சிந்தித்தல், தியானித்தல், பரீசிலித்தல், நினைவில் வைத்தல் போன்ற இவையெல்லாம் ஆத்துமாவிலுள்ள மனதின் செயல்பாடுகளாக இருக்கின்றன. மனிதனின் வீழ்ச்சிக்குப்பின்பு, விசேஷமாக இன்றைய மனிதன் பெரும்பாலும் மனதில் வாழ்கிறான், மேலும் மனதின் எண்ணங்க ளால் இயக்கப்படுகிறான். மனிதன் எப்படி சிந்திக்கிறானோ அப்படியே நடக்கிறான். மனிதனின் செயல் எப்போதும் மனிதனின் எண்ணத்தோடு பிணைக்கப்பட்டிருக்கிறது. தன் எண்ணத்தில் வாழாத ஒருவனைப் பார்ப்பது மிகவும் அரிது. ஆகவே, இன்று யாரைப்பற்றி அல்லது எதைப்பற்றி பரீசிலிப் பதாக இருந்தாலும், மனிதனின் மனதை வெற்றி கொள்வதற்கு நாம் மனித எண்ணத்தைக்கொண்டு தொடங்கவேண்டும். இன்றைய நாட்களில் அநேக தத்துவங்கள், கல்விக் கொள்கைகள், கல்விமுறைகள் இருக்கின்றன. மேலும் மனிதனின் மனதை வெற்றி கொள்ள மனித எண்ணத்தோடு இடைபடவேண்டும் என்ற ஒரு குறிக்கோள் மட்டுமே அவைகளுக்கு இருக்கின்றன. நீங்கள் மனித எண்ணத்தால் அவனுடைய மனதை வென்றுவிட்டால் அப்போது நீங்கள் அவனை வென்றுவிடமுடியும், ஏனென்றால் மனிதன், மனதில் அதாவது மூளையில் வாழ்கிறான். மேலும் அவன் மனதின் எண்ணத்தால் இயக்கப்படுகிறான்.
ஆத்துமாவிலுள்ள உணர்ச்சி என்பது மனிதனுடைய அன்பு, கோபம், துக்கம், மகிழ்ச்சி, ஆகியவற்றின் உறுப்பாகும். மனிதன் நேசிக்கிறான், வெறுக்கிறான், மகிழ்ச்சியடைகிறான், துக்க மடைகிறான், பரவசப்படுகிறான், அழுத்தப்படுகிறான். இவைக ளெல்லாம் மனிதனுடைய ஆத்துமாவிலுள்ள உணர்ச்சியின் செயல்பாடுகளாக இருக்கின்றன. உணர்ச்சிவசப்படுபவர்கள் அநேகர் இருக்கிறார்கள். அவர்கள் உணர்ச்சியில் வளமாக இருக்கிறார்கள். மேலும் மிகவும் எளிதில் தூண்டப்படுகிறார்கள். அவர்கள் அடிக்கடி தங்கள் உணர்ச்சியினால் காரியங்களோடு இடைபடுகிறார்கள். இப்படிப்பட்ட மக்களோடு எண்ணத்தில் அவர்களிடம் விளக்கிக்கூறும்போது அவர்களை மேற்கொள்வது கடினம்; ஆனால் நீங்கள் மிகஎளிதாக அவர்களுடைய உணர்ச்சியை அசைக்கமுடியும். மனதில் அவர்களை எளிதாக இணங்க வைக்க உங்களால் முடியாது, ஆனால் உணர்ச்சியில் எளிதாக அவர்களை அசைக்கமுடியும்.
ஆத்துமாவிலுள்ள சித்தம் என்பது மனிதனின் தீர்மானிக்கிற உறுப்பாயிருக்கிறது. மனிதன் முடிவெடுக்கிறான், தீர்மானிக்கி றான், தீர்ப்பு செய்கிறான், தெரிந்தெடுக்கிறான், பெற்றுக்கொள் கிறான், மறுதலிக்கிறான். இவைகளெல்லாம் மனிதனின் ஆத்துமா விலுள்ள சித்தத்தின் செயல்பாடுகளாக இருக்கின்றன. சில மக்கள் மனதில் இருக்கிறார்கள், சிலர் உணர்ச்சியில் இருக்கிறார்கள், இன்னும் சிலர் சித்தத்தில் இருக்கிறார்கள். மனம் அல்லது உணர்ச்சியில் இருக்கிறவர்கள், தங்கள் மனம் அல்லது உணர்ச்சியில் வாழ்கிறதைப்போல, சித்தத்தில் இருக்கிறவர்களும் தங்கள் சித்தத்தில் வாழ்கிறார்கள். மனம் அல்லது உணர்ச்சியில் இருப்பவர்களுக்கு முறையே அவைகள் அவர்களுடைய பலமான பகுதியாக இருப்பதுபோல, சித்தமும் இருக்கிறது. சித்தத்தில் இருக்கிற ஒருவன் நிச்சயமாக தன் தீர்மானத்தில் மிகவும் உறுதியாக இருக்கிறான். ஒரு காரியத்தை செய்யவேண்டுமென்று அவன் தீர்மானித்துவிட்டால், அ னை மாற்றுவதற்கு உங்களுக்கு எந்த வழியுமில்லை. நீங்கள் அவனிடம் விளக்கிக்கூறலாம், ஆனால் அவன் அந்த விளக்கத்தைக்குறித்து அக்கறைப்பட மாட்டான்; நீங்கள் உணர்ச்சியைக்கொண்டு அவனிடம் முறையிட லாம், ஆனால் அவன் உணர்ச்சியைப் பொருட்படுத்துவதில்லை. அவன் தன் சித்தத்தினால் செயல்படுகிறவனாகவும், தன் சித்தத்தில் இருக்கிறவனாகவும் இருக்கிறான்.
ஆத்துமாவில் மனம், உணர்ச்சி, சித்தம், ஆகிய மூன்று பகுதிகள் இருக்கின்றன. இந்த மூன்று பகுதிகளும் ஒவ்வொரு மனிதனிலும் ஒரே நேரத்தில் இருக்கின்றன. ஒவ்வொரு மனிதனுக்கும் எண்ணம், உணர்ச்சி, சித்தம், இருக்கிறது. இருப்பி னும் சிலர் மனதில் அதிகமாக இருக்கிறார்கள், சிலர் உணர்ச்சியில் வளமாக இருக்கிறார்கள், மற்றவர்கள் சித்தத்தில் பலமாக இருக் கிறார்கள்.
சிலர் தங்கள் சிந்தனையில் மிகத் தெளிவாக இருக்கிறார்கள். உணர்ச்சியினால் நீங்கள் அவர்களை அசைப்பதற்கு எவ்வளவுதான் முயற்சித்தாலும் அது முடியாத காரியம். நீங்கள் அவர்களை வெற்றிக்கொள்ள விரும்பினால், நீங்கள் விளக்கத்தைப் பயன்படுத்த வேண்டும். அவர்கள் மனதில் அல்லது மூளையில் வாழ்கிறார்கள்; அவர்கள் அறிவாற்றலுடையவர்கள்.
சிலர் விசேஷமாக உணர்ச்சி மிகுந்தவர்கள். அவர்கள் மூளையில்லாமல், சிந்திக்காமல், உணர்ச்சியை மட்டுமே கொண்டிருப்பதைப்போல தோன்றுகிறது. இப்படிப்பட்ட மக்கள் தங்கள் உணர்ச்சியினால் அடிக்கடி காரியங்களைக் குழப்புகிறார்கள். நீங்கள் அவர்களுக்கு விளக்கிக்கூறினாலும் அவர்கள் எப்போதும் அக்கறைப்படுவதோ புரிந்துகொள்வதோ இல்லை. மேலும் தங்கள் இருதயத்தில் அசைக்கப்படுவதுமில்லை. உணர்ச்சியைக்கொண்டு நீங்கள் அவர்களோடு இடைபட்டால், அவர்களுடைய உள்ளார்ந்த பகுதியைத் தொடுவது மிகவும் எளிதாக இருக்கும். அவர்களைப் பொறுத்தவரை ஆயிரமாயிரம் விளக்கங்களைவிட ஒருசில கண்ணீர்த்துளிகள் சக்திவாய்ந்ததாக இருக்கிறது. சில நேரங்களில் நீங்கள் அவர்களுக்கு எப்படி விளக்கிக் கூறினாலும்சரி, நீங்கள் அவர்களை சமரசப்படுத்த முடியாது. எனினும் நீங்கள் ஒருசில துளிகள் கண்ணீர் சிந்தினால் போதும் அவர்களை வென்றுவிடமுடியும். அவர்கள் உணர்ச்சிக்கு மட்டுமே அக்கறைசெலுத்துகிறார்கள் விளக்கத்திற்கல்ல. இது ஏனென்றால், அவர்கள் அறிவாற்றலில் இல்லை. ஆனால் உணர்ச்சியில் இருக்கிறார்கள்.
சில மக்களுடைய சித்தம் விசேஷமாக பலமாக இருக்கிறது. அவர்கள் ஒவ்வொரு காரியத்திலும் சில கருத்து அல்லது யோசனை யைக் கொண்டிருக்கிறார்கள். மேலும் அவர்கள் ஒரு முடிவெடுத்து விட்டால், அவர்கள் மிக உறுதியாக இருக்கிறார்கள், மேலும் அவர்களை எளிதாக மாற்றமுடியாது. வழக்கமாக இப்படிப்பட்ட மக்கள் மிகவும் திடமாகவும் பிடிவாதமாகவும் இருக்கிறார்கள், இவர்கள் உணர்ச்சிக்கோ, விளக்கத்திற்கோ அக்கறைசெலுத்து வதில்லை. ஒவ்வொரு காரியத்திலும் தங்களுடைய வளைந்து கொடுக்காத சித்தத்தினால் யோசனைகளை முன்வைத்து, கொள்கைகளை வகுக்கிறார்கள். நீங்கள் அவர்களுக்கு விளக்கிக்கூறுகிறீர்கள், ஆனால் அவர்கள் புரிந்துகொள்வதில்லை. நீங்கள் அவர்களோடு உங்கள் உணர்ச்சியைப் பயன்படுத்துகிறீர்கள், ஆனால் அவர்கள் அசைவதில்லை. அவர்கள்
அறிவாற்றலி உணர்ச்சியிலோ, இல்லை. மாறாக சித்தத்தில் இருக்கிறார் கள்.
II. ஆத்துமாவுக்குரிய மனிதனும் ஆவிக்குரிய மனிதனும்
A. ஆத்துமாவுக்குரிய மனிதன்
ஒரு மனிதன் மனதில் இருந்தாலும், உணர்ச்சியில் இருந்தாலும், சித்தத்தில் இருந்தாலும் அவன் ஆத்துமாவுக்குரியவன். ஒரு மனிதன் மனதில் வாழ்ந்தாலும், உணர்ச்சியில் வாழ்ந்தாலும், சித்தத்தில் வாழ்ந்தாலும், அவன் ஆத்துமாவில் வாழ்கிறான். ஒரு மனிதன் மனதினால் வாழ்ந்தாலும், உணர்ச்சியினால் வாழ்ந்தாலும், சித்தத்தினால் வாழ்ந்தாலும், அவன் ஆத்துமாவினால் வாழ்கிறான். ஆகையால் ஒரு மனிதன் ஆத்துமாவுக்குரியவன் என்று தீர்ப்பு கூறுவது நமக்கு மிகவும் எளிது. அவன் மனம், உணர்ச்சி, சித்தத்தினால் செயல்படுகிறானா இல்லையா, மற்றும் அவன் மனம், உணர்ச்சி, சித்தத்தில் வாழ்கிறானா இல்லையா என்பதை மட்டுமே நாம் பார்க்கவேண்டும். அவன் இந்த மூன்றில் ஏதாவது ஒன்றினால் செயல்பட்டு, நடக்கிறவரை அல்லது இந்த மூன்றில் ஏதாவது ஒன்றில் அவன் வாழ்கிறவரை, அவன் ஒரு ஆத்துமாவுக்குரிய மனிதனாக இருக்கிறான்.
ஒரு ஆத்துமாவுக்குரிய மனிதனை ஒரு நல்ல மனிதன்" என்று மனிதன் அழைக்கிறான். அவன் அடிக்கடி மனிதனின் பார்வையில் குற்றமற்றவனாக இருக்கிறான். தெளிவான சிந்தனை, அதனால் செயல்படுகிறவர்களுக்கு எப்போதும் மனிதனின் புகழ்ச்சியைக்கொண்டு வருகிறது. மிதமான உணர்ச்சி, அதில் வாழ்கிறவர்களுக்கு எப்போதும் மனிதனின் அங்கீகாரத்தைக் கொண்டுவருகிறது. ஒரு உறுதியான சித்தம்கூட, அதைச் சார்ந்து கொள்ளுகிறவர்களுக்கு அடிக்கடி மனிதனின் பாராட்டுதலைக் கொண்டுவருகிறது. ஆனால் மனிதன் இவைகளில் வாழும்போது அவன் பாவத்தில் வாழாவிட்டாலும்கூட, அவன் ஆவியிலும் வாழாமல் இருக்கிறான். மனிதனுக்கு முன்பாக அவன் பாவமற்றவ னாகவும், குற்றமற்றவனாகவும் காணப்பட்டாலும், தேவனுக்கு முன்பாக அவனுடைய ஆவி அடைக்கப்பட்டிருக்கிறது, மேலும் அவனுடைய ஆவிக்குரிய புரிந்துகொள்ளுதல் மந்தமாக இருக்கிறது.
ஒருமுறை ஒரு குறிப்பிட்ட இடத்தில், நான் ஒரு உடன் வேலையாளைச் சந்தித்தேன். அவருடைய நடத்தை உண்மையாகவே நல்லதாக இருந்தது. ஆனால் அவர் மிக அதிகமாக மனதில் அல்லது மூளையில் வாழ்ந்துகொண்டிருந்தார்; ஆகையால் ஆவிக்குரிய காரியங்களைப் புரிந்துகொள்வதற்கு அல்லது உணர்ந்துகொள்வதற்கு அவருக்கு கடினமாக இருந்தது.
தேவனைச் சேவிப்பதைப்பற்றிய காரியங்களை நான் அவரோடு பேசும்போதெல்லாம், அவருடைய கண் விழிகள் திரும்பிவிடுமோ என்று நான் பயந்தேன். நான் பேசும்போது, ஏறக்குறைய குறிப்பைப் பிடித்துக்கொள்ளும்வரை அவர் கவனித்துக் கொண்டிருப்பார், பின்பு அவருடைய கண் விழிகள் திரும்பிவிடும். மீண்டும் அவர் குழப்பமடைந்துவிடுவார். அவருடைய கண் விழிகள் சுற்றிக்கொண்டிருக்கும்போது, அவருடைய பரிசீலித்துக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம். மனம் பரிசீலனை செய்வ தற்கு தன் மனதை மட்டுமே பயன்படுத்தினார்; அவர் ஆவிக்குரிய காரியங்களை உணர்ந்துகொள்வதற்கு தன் ஆவியைப் பயன்படுத்தவில்லை; ஆகையால், ஆவிக்குரிய காரியங்களைப் புரிந்துகொள்வதும், உணர்ந்துகொள்வதும் அவருக்கு மிகவும் கடினமாகவே இருந்தது.
சிந்தனை செய்வது, ஆவிக்குரிய காரியங்களில் சகோதரர் களுக்கு அடிக்கடி கடினமாகவும் தடையாகவும் இருக்கிறது. அநேக சகோதரர்கள் ஆவிக்குரிய காரியங்களுடன் இடைபடுவதற்கு சிந்தனை செய்வதை அடிக்கடிப் பயன்படுத்துகிறார்கள். தங்கள் மனதைப் பயிற்சிசெய்வதின்மூலம், ஆவிக்குரிய காரியங்களைப் புரிந்துகொள்ளமுடியும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆத்துமாவின் ஒரு பகுதியாக இருக்கிற மனம் ஆவியைப் புரிந்து கொள்ளமுடியாது என்பதை அவர்கள் அறியாமல் இருக்கிறார்கள். மனதில் வாழ்கிற ஒரு மனிதன் ஆத்துமாவில் வாழ்கிறான்; மேலும் ஆவிக்குரிய காரியங்களைப் புரிந்துகொள்ளும் ஆற்றலில்லாத ஆத்துமா வுக்குரிய மனிதனாக நிச்சயமாக மாறிவிடுகிறான்.
ஆவிக்குரிய காரியங்களில் சகோதரர்களுக்கு மனம் கடினமாக இருப்பதுபோல, சகோதரிகளுக்கு உணர்ச்சி அடிக்கடி தடையாக இருக்கிறது. அநேக சகோதரிகள் உணர்ச்சியில் மிக அதிகமாக இருப்பதுதான் அவர்கள் ஆவிக்குரிய காரியங்களைப் புரிந்து கொள்ளவோ, உணர்ந்து கொள்ளவோ முடியாமல் இருப்பதற்குக் காரணமாகும். பல்வேறு இடங்களில் உள்ள சபைகளில் உற்சாகமும், அன்புமுடைய தங்கள் நடத்தையில் கவனமுடைய அநேக சகோதரிகளை நான் பார்த்திருக்கிறேன். மேலும் அவர்களுடைய நடத்தை தன்னடக்கமுள்ளதாக இருக்கிறது; ஆனால் ஆவிக்குரிய காரியங்களுக்கு வரும்போது அவர்கள் உணர்வில் குறைவுள்ளவர்களாகவும், அதைப் புரிந்துகொள்ள முடியாதவர் களாகவும் இருக்கிறார்கள். இது ஏனென்றால், அவர்கள் அதிகமாக தங்கள் உணர்ச்சியில் வாழ்ந்து, அதிகமாக தங்கள் உணர்ச்சி யினால் செயல்படுகிறார்கள். மேலோட்டமாக உணர்ச்சி என்பது பாவமல்ல, ஆனால் உணர்ச்சி ஆவியில் வாழ்வதிலிருந்து, தங்கள் ஆவியினால் தேவனுடைய காரியங்களைத் தொடுவதிலிருந்து, எந்த ஆவிக்குரிய உணர்வுகளையும் கொண்டிருப்பதிலிருந்து, ஆவிக்குரிய காரியங்களைப் புரிந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடைசெய்கிறது. உணர்ச்சி என்பது அவர்களுடைய படுகுழி; இது ஆத்துமாவுக்குரிய மண்டலத்தில், ஆத்துமாவினால் வாழ்வதில், ஆத்துமாவுக்குரிய நபராக இருப்பதில், அவர்களைத் தக்கவைத்துக்கொள்கிறது.
அநேக சகோதரர்களுக்கு, சித்தம்கூட ஆவிக்குரிய காரியங்களைப் புரிந்துகொள்வதற்கு கடினமாகவும், தடை யாகவும் இருக்கிறது. சில சகோதரிகளுக்கும் இந்தப் பிரச்சினை இருக்கிறது. அவர்கள் அதிகமாக தங்கள் சித்தத்தினால் காரியங்களைத் தீர்ப்புச் செய்கிறார்கள் முடிவெடுக்கிறார்கள்; எனவே அறியாமலேயே ஆவிக்குரிய காரியங்களில் எந்த ஆவிக்குரிய உணர்வோ புரிந்து கொள்ளுதலோ இல்லாமல் அவர்கள் ஆத்துமாவில் வாழ்கிறார்கள்.
ஒரு நபர் ஆத்துமாவின் எந்தப் பகுதியில் இருக்கிறானோ, அவன் மிகச்சுலபமாக அந்தப் பகுதியினால் செயல்படு கிறான், மேலும் அந்தப் பகுதியில் வாழ்கிறான். மனதிலிருக்கும் ஒருவன் எந்தவொரு காரியத்தையும் எதிர்கொள்ளும்போதெல்லாம், அவன் இயல்பாகவே அந்தக் காரியத்தை மீண்டும் மீண்டும் சிந்திப்பான், அதாவது அதை பல கோணங்களிலிருந்து பரிசீலித்துப்பார்ப்பான். உணர்ச்சியில் இருக்கிற ஒருவன் மற்றவர்களோடு இடைபடு வதிலும் காரியங்களைக் கையாளுவதிலும் உணர்ச்சிகளுக்கு தன்னை அறியாமலேயே அதிக அக்கறைசெலுத்துவான். ஒரு பலமான சித்தத்தையுடையவன் மனிதனோடும் காரியங்களோடும் இடைபடுவதில், அதாவது உறுதியான தீர்மானங்களையும் மாற்றமுடியாத முடிவுகளையும் எடுப்பதில் மிகச்சுலபமாக தன் சித்தத்தைச் சாய்ந்துகொள்ளுகிறான். ஆத்துமாவின் எந்தப் பகுதியில் ஒரு நபர் சுலபமாகவும் இயல்பாகவும் வாழ்கிறானோ நிச்சயமாக அவன் அந்தப் பகுதிக்கு உரியவனாக இருக்கிறான். ஒவ்வொரு காரியத்தையும் மிக இயல்பாக சிந்திக்கிற, பரிசீலனை செய்கிற, மதிப்பிடுகிற, அளவிடுகிற ஒரு நபரை நீங்கள் பார்த்தால், அவன் அறிவாற்றலால் செயல்படுகிறவ னாகத்தான் இருக்கமுடியும் என்று நீங்கள் உறுதியாகக் கூறமுடியும்; ஆகையால் அவன் மனதில் இருக்கிற ஒருவன். ஒரு நபர் காரியங்களை எதிர்கொள்ளும்போது சுலபமாக தூண்டப்படு கிறவனாக, அதாவது சீக்கிரமாக சிரித்து அழுகிறவனாக, ஒரு கணம் சந்தோஷமாகவும் மறுகணம் துக்கப்படுகிறவனாகவும் இருந்தால், அவன் உணர்ச்சியில் அதிகமானவனாகவும் உணர்ச்சிவசப்படுகிறவனாகவும் இருக்கவேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்கள். எப்போதெல்லாம் நீங்கள் காரியங்களை எதிர்கொள்கிறீர்களோ, அப்போ தெல்லாம் நீங்கள் எந்த முயற்சியும் இல்லாமல் திட்டமிடுகிறீர்கள் முடிவெடுக்கிறீர்கள், மேலும் நீங்கள் எந்தவித விசேஷமான பயிற்சியும் செய்யாமலேயே உங்கள் சித்தம் இடைபடுவதற்கும் செயல்படுவதற்கும் முன்வருகிறது, அப்போது சந்தேகமேயில்லாமல் நீங்கள் சித்தத்தில் பலமுள்ள வராகவும் சித்தத்தில் இருப்பவர்களாகவும் இருக் கிறீர்கள். ஒரு நபரில் ஆத்துமாவின் எந்தப் பகுதி பலமாகவோ, நிறைவாகவோ இருக்கிறதோ, அந்தப் பகுதிதான் அவன் எந்தக் காரியத்தை எதிர்கொள்ளும்போதும், அதோடு இடைபடுகிறபோதும் எப்போதும் முன்னுக்கு நிற்கிறது. ஒரு நபருடைய ஆத்துமாவின் எந்தப் பகுதி காரியங்களோடு இடைபடுவதில் முன்னின்று நடத்துகிறதோ, அவன் அந்தப் பகுதியில்தான் இருக்கிறான் என்பதற்கு அது நிரூபணமாகும். மேலும் அவன் ஆத்துமாவுக்குரிய மனிதனாக இருக்கிறான் என்பதற்கும் அது நிரூபணமாக இருக்கிறது.
B. ஆவிக்குரிய மனிதன்
எந்த வகையான நபர் ஆத்துமாவுக்குரியவன் என்பதை நாம் கண்டுணரமுடியுமானால், எந்த வகையான நபர் ஆவிக்குரியவன் என்பதை நாம் உணர்ந்தறிவது கடினமல்ல. ஒரு ஆத்துமாவுக்குரிய நபர் மனம், உணர்ச்சி, சித்தத்தினால் வாழ்வதால், ஒரு ஆவிக்குரிய நபர் இவைகளினால் வாழாத ஒருவனாக இருக்கவேண்டும். ஒரு ஆத்துமாவுக்குரிய நபர் ஆத்துமாவினால் வாழ்ந்து ஆவியினால் வாழாமல் இருக்கிறான். அப்படியென்றால் ஒரு ஆவிக்குரிய நபர் ஆவியில் வாழ்ந்து ஆத்துமாவில் வாழாதவனாக இருக்க வேண்டும். ஆவிக்குரிய நபர்கள் ஆத்துமாக்களைக் கொண்டிருந்தாலும், சாதாரண ஆத்துமாவுக் குரிய நபர்களைக்காட்டிலும் அவர்கள் ஆத்துமாவிலுள்ள மனம், உணர்ச்சி, சித்தம் மிகப்பலமாகவும் நிறைவாகவும் இருந்தாலும், அவர்கள் இந்த ஆத்துமாவுக்குரிய உறுப்புகளினால் வாழ்வது மில்லை, அவர்கள் அவைகளில் வாழ்வதுமில்லை. அவர்கள் ஆவியினாலும் ஆவியிலும் வாழ்கிறார்கள், மேலும் தங்களுடைய எல்லா செயலுக்கும் நடத்தைக்கும் எஜமானாகவும் ஊற்றாகவும் இருக்க ஆவியை அவர்கள் அனுமதிக்கிறார்கள். அவர்களிடத்தில் இருக்கிற ஆவி முதன்மையான இடத்தை ஆக்கிரமித்துக் கொள்கிறது; அவர்களுடைய நடத்தையின் ஊற்றாகவும், அவர்களுடைய செயலின் ஆரம்பமாகவும் ஆவி இருக்கிறது. அவர்களில் இருக்கிற ஆத்துமா பணிந்தடங்குதலின் நிலையில் இருக்கிறது. அவர்களுடைய ஆத்துமாக்களில் இருக்கிற மனம், உணர்ச்சி, சித்தம் ஆகியவைகள் செயல்பட்டாலும்கூட அவைகளெல்லாம் ஆவியின் ஆளுகைக்குக் கீழ்ப்படுத்தப்பட்டிருக் கின்றன மற்றும் ஆவியினால் வழிநடத்தப்படுகின்றன. அவர்கள் தங்கள் மனம், உணர்ச்சி, சித்தத்தைப் பயன்படுத்தினாலும், ஆத்துமாவிலுள்ள இந்த உறுப்புகளைப் பயன்படுத்தும்போது அவர்கள் எப்போதும் ஆவியின் உணர்வைப் பின்தொடர்கிறார்கள். அவர்கள் எல்லாக் காரியங்களிலும் ஆத்துமாவை எஜமானாக இருக்க அனுமதிக்கிற, ஆத்துமாவிலுள்ள மனம், உணர்ச்சி, சித்தத்தை முன்னின்று நடத்தவும் செயல்படவும் அனுமதிக்கிற, ஆத்துமாவுக்குரிய நபர்களைப் போன்றவர்க ளல்ல. அவர்கள் ஆத்துமாவின் முதன்மையைப் புறக்கணித்து மனம், உணர்ச்சி, சித்தத்தின் நடத்துதலை மறுதலிக்கிறார்கள். ஆகவே அவர்கள் ஆவியை தங்களில் எஜமானாக இருக்கும்படி அனுமதிக்கிறார்கள்; அவர்கள் ஆவியின் உணர்வைப் பின்தொடர்ந்து செல்லும்படி தங்கள் முழு ஆள்தத்துவத்தையும் வழிநடத்த ஆவியை அனுமதிக் கிறார்கள். எப்போதெல்லாம் அவர்கள் ஏதோவொன்றை எதிர்கொள்கிறார்களோ, அப்போதெல்லாம் அதோடு தொடர்பு கொள்வதற்கும் இடைபடுவதற்கும் ஆத்துமாவிலுள்ள மனம், உணர்ச்சி, சித்தத்தை அவர்கள் முதலில் பயன்படுத்தமாட்டார்கள்; மாறாக அதைத் தொடவும் உணரவும் அவர்கள் தங்கள் ஆவியை முதலில் பயன்படுத்துகிறார்கள், அதாவது இந்த விஷயத்தைப் பொறுத்தவரை கர்த்தருடைய உணர்வுக்காக முதலில் ஆவியில் தேடுகிறார்கள். அவர்கள் தங்கள் ஆவியில் கர்த்தருடைய உணர்வைத் தொட்டுவிட்ட பின்பு, ஆத்துமாவிலுள்ள மனதை ஆவியின் உணர்வைப் புரிந்துகொள்வதற்கும், ஆத்துமாவிலுள்ள உணர்ச்சியை அதை வெளிப்படுத்துவதற்கும், ஆத்துமாவிலுள்ள சித்தத்தை அதை நிறைவேற்றுவதற்கும் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் ஆத்துமாவின் உறுப்புகளை பயன்படுத்தினாலும்கூட அவர்கள் ஆத்துமாவுக்குரியவர்கள் அல்ல, மேலும் அவர்கள் ஆத்தும ஜீவனால் வாழவில்லை. அவர்கள் ஆவிக்குரியவர்கள், அதாவது ஆவியின் ஜீவனால் வாழ்கிறவர்கள், மேலும் ஆத்துமா அவர்களுக்கு ஒரு வேலைசெய்யும் உறுப்பாக மட்டும் இருக்கிறது.
III.ஓர் இயல்பற்ற நிலைமை
ஒரு வீழ்ந்துபோன மனிதன் தன் ஆவியில் மரித்தவனாக இருப்பதால், ஆத்துமாவினால் மட்டுமே வாழமுடியும் என்பதை நாம் பார்த் திருக்கிறோம். ஆனால் இரட்சிக்கப்பட்டு உயிர்ப்பிக்கப்பட்ட ஆவியையுடைய நாம் ஆவியினால் வாழமுடியும். மேலும் நாம் ஆவிக்குத் திரும்பி ஆவியினால் வாழும்படி தேவன் நம்மை இரட்சிக்கிறார். மனிதனுடைய வீழ்ச்சி ஆவியிலிருந்து ஆத்துமாவுக்குள் மனிதனை விழச்செய்தது, எனவே மனிதன் ஒருபோதும் ஆவியினால் வாழாமல் ஆத்துமாவினால் வாழ்கிறான். மனிதன் ஆத்துமாவினால் வாழாமல் ஆவியினால் வாழும்படி, தேவனுடைய இரட்சிப்பு மனிதனை ஆத்துமா விலிருந்து ஆவிக்கு இரட்சிக்கிறது. ஆயினும் இரட்சிக்கப்பட்ட அநேகர் இன்னும் இந்த வழியில் வாழவில்லை. சிலர் ஆத்துமாவில் இருந்து ஆத்துமாவினால் வாழ்கிறார்கள், ஏனென்றால் ஆவிக்கும் ஆத்துமாவுக்குமுள்ள வேறுபாட்டையும், அதற்குள் உள்ளடங்கி யுள்ள காரியங்களையும் அவர்கள் அறியவில்லை. மேலும் அவர்கள் ஆத்துமாவிலிருந்து விடுவிக்கப்பட்டு ஆவியில் வாழ வேண்டும் என்பதே தேவனுடைய விருப்பம் என்று அவர்கள் அறியவில்லை. சிலர் தங்களுடைய ஆவி உயிர்ப்பிக்கப் பட்டிருக்கிறது, தங்கள் ஆத்துமா அதிலிருந்து வேறுபட்டது, தங்கள் ஆவியில் அவர்கள் வாழவேண்டு மென்று தேவன் விரும்புகிறார் என்று அறிந்திருந்தாலும், அவர்கள் தொடர்ந்து ஆத்துமாவில் இருந்து ஆத்துமாவினால் வாழ்கிறார்கள். இது ஏனென்றால், அவர்கள் ஆவியில் வாழாமல் ஆத்துமாவில் வாழ்வதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள், மேலும் ஆவியில் வாழ்வது முக்கியம் என்று அவர்கள் கருதவில்லை. ஆவிக்கும் ஆத்துமாவுக்குமுள்ள வேறுபாட்டை அறியாமலும், நாம் ஆத்துமாவிலிருந்து விடுவிக்கப்பட்டு ஆவியில் வாழ்வதையே தேவன் விரும்புகிறார் என்று அறியாமலும் இருப்பவர்கள், ஆத்துமாவிலுள்ள மனம், உணர்ச்சி, சித்தத்தினால் வாழ்வது பொருத்தமானது மற்றும் அவசியமானது, மேலும் கவனமாகவும் குற்றமற்றவர்களாகவும் மட்டும் இருந்தாலே தாங்கள் சரியாக இருக்கிறோம் என்று நினைக்கிறார்கள். கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரை இது மிகவும் ஏழ்மையானது என்பதை அவர்கள் அறியவில்லை!
தேவன் நம்மை குற்றங்களில் இருந்து குற்றமற்ற நிலைமைக்கு விடுவிப்பதை மட்டும் விரும்பவில்லை; அவர் நம்மை ஆத்துமாவிலிருந்து ஆவிக்கும்கூட விடுவிக்க விரும்புகிறார். நாம் ஒரு குற்றமற்ற வாழ்க்கை வாழ்வதை மட்டுமல்ல,
இன்னும் அதிகமாக ஒரு ஆவிக்குரிய வாழ்க்கையை, அதாவது ஆவிக்குரியரீதியில் குற்றமற்ற வாழ்க்கை வாழவேண்டும் என்றும் அவர் விரும்புகிறார். நாம் ஆத்துமாவினாலல்ல ஆவியினால் ஒரு குற்றமற்ற வாழ்க்கை வாழவேண்டுமென்று அவர் விரும்புகிறார். இருப்பினும் தங்கள் அறியாமையினால் அநேக கிறிஸ்தவர்கள் இன்னும் தங்கள் ஆத்துமாவினால் வாழ்கிறார்கள், மேலும் தங்கள் ஆத்தும ஜீவனால் குற்றமற்றவர்களாக இருப்பதற்கு அவர்கள் முயற்சிசெய்கிறார்கள், போராடுகிறார்கள். தங்களுடைய ஆவி ஏற்கெனவே உயிர்ப்பிக்கப்பட்டிருந்தாலும், தங்கள் ஆவியை பயன்படுத்த வேண்டுமென்றும், தங்கள் ஆவியில் வாழவேண்டு மென்றும் அவர்கள் அறியாமல் இருக்கிறார்கள்.
அவர்கள் தங்களையே பூரண மனிதர்களாக்க, அதாவது ஆத்துமாவின் சக்தியினால் மட்டுமே ஒரு திருப்திகரமான வாழ்க்கை வாழ விரும்புகிறார்கள். காரியங்களைப்பற்றிய அவர்களுடைய கண்ணோட்டமும் தீர்ப்பும், மேலும் அவர்களுடைய அன்பு மற்றும் பற்று எல்லாம் ஆவியில் இல்லாமல் ஆத்துமாவில் இருக்கின்றன. அவர்கள் நன்னடத்தையுள்ள கிறிஸ்தவர்களாகவும், அவர்களுடைய ஒழுக்கமும் நடத்தையும் குற்றமில்லாமல் இருந்தபோதிலும் இன்னும் அவர்கள் ஆவியில் வாழாமல் ஆத்துமாவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய எண்ணங்கள் தூய்மையாக, அவர்களுடைய உணர்ச்சிகள் சமநிலையாக, அவர்களுடைய தீர்மானங்கள் துல்லியமாக இருப்பதாக வைத்துக்கொண்டாலும், இன்னும் அவர்கள் ஆத்துமாவுக்குரியவர்களாக இருக்கிறார்கள், ஆவிக்குரியவர்கள் இல்லை. கிறிஸ்தவர்கள் என்றமுறையில் அவர்களுடைய நிலைமை இயல்பற்றதாகவே இருக்கிறது. அவர்கள் இயல்பற்ற கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்கிறார்கள். அவர்கள் வெற்றிபெறக்கூடியவர்களாக இருந்தாலும் அவர்கள் தங்களை மட்டுமே திருப்திப்படுத்தமுடியும். சில நேரங்களில் சிலர் உண்மையாகவே தங்கள் வெற்றியினால் (அந்த வெற்றி உண்மை யாகவே சந்தேகத்துக்குரியது) திருப்தி அடைகிறார்கள்; ஆனால் அவர்கள் தேவனைப் பிரியப்படுத்த முடியாது, ஏனென்றால் மனிதன் ஆத்துமாவிலிருந்து விடுவிக்கப்பட்டு ஆவியினால் வாழ வேண்டுமென்று தேவன் விரும்புகிறார்.
ஆத்துமாவுக்கும் ஆவிக்குமுள்ள வேறுபாட்டைப்பற்றியும், நாம் ஆத்துமாவிலிருந்து விடுவிக்கப்பட்டு ஆவியில் வாழவேண்டு மென்ற தேவனுடைய விருப்பத்தைப்பற்றியும் கொஞ்சம் அறிவுடையவர்களாக இருந்தும், இன்னும் ஆத்துமாவில் வாழ்கிறவர்கள் ஓர் இயல்பற்ற கிறிஸ்தவ வாழ்க்கையையே வாழ்கிறார்கள். தங்கள் ஆவி ஏற்கெனவே உயிர்ப்பிக்கப்பட் டிருக்கிறது என்பதை அவர்கள் அறிந் திருந்தும், அவர்கள் அதனால் வாழவில்லை. ஆத்துமாவிலிருந்து விடுவிக்கப்பட்டு ஆவியில் வாழ தேவன் விரும்புகிறார் என்று அவர்கள் அறிந்திருந்தும் இன்னும் அவர்கள் ஆத்துமாவில் இருந்து ஆத்துமாவினால் வாழ் கிறார்கள். மனிதன் தேவனை ஆவியில் தொடர்புகொள்ள வேண்டுமென்று அவர்கள் அறிந்திருந்தும், இன்னும் அவர்கள் தேவனுடைய காரியங்களைத் தொடுவதற்கு ஆத்துமாவைப் பயன்படுத்து கிறார்கள். தங்களுக்கு ஓர் ஆவி இருக்கிறது என்று அவர்களுக்குத் தெரியும். எனினும் அவர்கள் தங்களுடைய ஆவியைப் பயன்படுத்துவதில்லை; தங்கள் ஆவியினால் வாழவேண்டுமென்று அவர்களுக்குத் தெரியும், எனினும் அவர்கள் ஆவியில் வாழ்வதில்லை. ஆத்துமாவிலுள்ள மனம், உணர்ச்சி, சித்தத்தைப் பயன்படுத்துவது அவர்களுக்கு வசதியாக இருக்கிறது, மேலும் ஆவியைப் பயன்படுத்துவதை அவர்கள் வழக்கமாகக் கொள்ளவில்லை; எனவே அவர்கள் ஆவியினால் வாழ்வதைப் புறக்கணிக் கிறார்கள். ஏதோவொன்று சம்பவிக்கும்போதெல்லாம் அதோடு இடைபட தங்கள் மனம், உணர்ச்சி, சித்தத்தையே அவர்கள் எப்போதும் முதலில் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் அதைத் தொடர்புகொள்வதற்கு தங்கள் ஆவியை முதலில் பயன்படுத்து வதில்லை. அதிகபட்சம் அவர்கள் நல்ல, குற்றமற்ற கிறிஸ்தவர்களாக மட்டும் இருக்கமுடியும் (மேலும் இது உண்மையில் சந்தேகத்துக்குரியது); அவர்கள் ஆவிக்குரிய கிறிஸ்தவர்களாக இருக்கமுடியாது. அவர்கள் தங்களை மட்டுமே திருப்திப்படுத்தமுடியும்; அவர்கள் தேவனைப் பிரியப் படுத்தமுடியாது. அவர்கள் மனிதனால் மட்டுமே பாராட்டப் படமுடியும்; அவர்கள் தேவனுடைய புகழ்ச்சியைப் பெற முடியாது. அவர்களுக்கு இன்னும் தேவனுடைய விடுதலை தேவை, அதாவது பாவத்திலிருந்து விடுதலை மட்டுமல்ல, ஆத்துமாவிலிருந்தும் விடுதலை தேவை; மனிதனால் ஆக்கினைக்குள்ளாக்கப்படும் அசுத்தமான மாம்சத்திலிருந்து விடுதலை மட்டுமல்ல, மனிதனால் பாராட்டப்படும் சுத்த ஆத்துமாவிலிருந்தும் விடுதலை தேவை. இல்லையெனில் அவர்கள் தேவனுடைய ஆவியின் காரியங்களுக்கு அந்நியர்களாகவும் புறம்பானவர்களாகவும் இன்னும் இருக்கிறார்கள்.
IV. ஆத்துமாவிலிருந்து விடுதலை பெற வழி
நாம் எவ்வாறு ஆத்துமாவிலிருந்து விடுவிக்கப்பட முடியும்? இதற்கு இரண்டு கண்ணோட்டத்திலிருந்து வெளிப்பாடு தேவைப்படுகிறது: ஒன்று ஆத்துமாவைப் பற்றியது, மற்றொன்று சிலுவையைப்பற்றியது. தேவனுடைய காரியங்களில் ஆத்துமா ஆற்றலற்றது, மேலும் ஆவிக் குரிய காரியங்களில் மதிப்பற்றது என்பதையும் நாம் பார்க்க வேண்டும். நம் ஆத்துமாவிலுள்ள எந்தப் பகுதியும், எவ்வள சிறந்ததாகவும் பலமாகவும் இருந்தாலும் அது இன்னும் தேவனுடைய காரியங்களை உணர்ந்து கொள்ளவோ, ஆவிக்குரிய காரியங்களைப் புரிந்துகொள்ளவோ முடியாது. எவ்வளவுதான் நம் மனம் தூய்மையாக இருந்தாலும், எவ்வளவுதான் நம் உணர்ச்சி சமநிலையாக இருந்தாலும், எவ்வளவுதான் நம் சித்தம் நேர்த்தியாக இருந்தாலும், அவைகள் ஒருபோதும் நம்மை ஆவிக்குரியவர்களாக்காது. நம் ஆத்துமாவும் அதற்குரிய எல்லாக்காரியங்களும் ஏற்கெனவே கிறிஸ்துவின் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது என்பதை நாம் பார்க்கவேண்டும். கலாத்தியர் 2:20-ல் '(நான்) கிறிஸ்துவுடனே கூடச் சிலுவையில் அறையப்பட்டேன்" என்று அப்போஸ்தலன் கூறும்போது, "நான்' என்று அவன் குறிப்பிடுவது ஆத்துமா வையே. தேவனுடைய மதிப்பீட்டில் ஆத்துமா, மரணத்திற்கு மட்டுமே தகுதியுடையது. நம் ஆத்துமா கிறிஸ்துவின் சிலுவையின் மூலமாக தேவனால் ஏற்கெனவே பொறுப்பெடுக்கப்பட்டுவிட்டது. எனவே நம் ஆத்துமாவின் காரியங்களுக்கு நாம் மதிப்பளிக்கக் கூடாது; மாறாக ஆத்துமா மரிக்கவேண்டும், அது மரிப்பதற்கு மட்டுமே தகுதியுடையது, அது ஏற்கெனவே மரித்துவிட்டது என்று நாம் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும். ஆத்துமாவை ஆக்கினைக்குள்ளாக்க, ஆத்துமாவை மறுதலிக்க, ஆத்துமாவைப் புறக்கணிக்க, எல்லாக்காரியங்களிலும் ஆத்துமா முன்னின்று நடத்துவதைத் தடுக்க, ஒவ்வொரு காரியத்திலும் ஆத்துமாவிற்கு எந்தத் தளமும் கொடுக்காமலிருக்க, இப்படிப்பட்ட வெளிப்பாடும். தரிசனமும் நமக்குத் திறனளிக்கிறது. பரிசுத்த ஆவியானவரால் நாம் ஆத்துமாவை மரணத்திற்குள்ளாக்குகிறோம்; நம் ஆத்தும ஜீவனை மரணத்திற்குள்ளாக்கவும் சிலுவையினால் ஆத்துமாவின் நடவடிக்கையோடு இடைபடவும் நாம் பரிசுத்த ஆவியானவரை அனுமதிக்கிறோம்.
தேவனுக்கு முன்பாக ஆத்துமா எவ்வளவாய் சக்தியற்றது, அதாவது எவ்வளவாய் தேவனுடைய காரியங்களை உணர்ந்து கொள்ளமுடியாமல், தேவனைப் பிரியப்படுத்த முடியாமல் இருக்கிறது என்பதை நாம் பார்க்கவேண்டும். ஆத்துமாவைப் பற்றிய தேவனுடைய மதிப்பிடுதலையும், எவ்வாறு அவர் ஆத்துமாவோடு இடைபடுகிறார் என்பதையும் பார்க்கவேண்டும். அப்போது மட்டுமே நாம் ஆத்துமாவை மறுதலித்து, ஆத்துமாவைப் புறக்கணித்து, ஆத்துமாவிலிருந்து நாம் விடுவிக்கப்பட முடியும். ஆகையால் நம் ஆத்துமாவின் ஆற்றலின்மையை மட்டுமல்ல, ஆத்துமாவுடன் சிலுவையின் இடைபடுதலையும் நாம் பார்க்கும்படி கர்த்தரிடம் கேட்க வேண்டும்; இவ்வாறு ஒவ்வொரு காரியத்திலும் ஆத்துமாவைப் புறக்கணிக்கவும், ஆத்துமாவி னால் வாழாமல் இருக்கவும் நாம் கற்றுக்கொள்வோம். மனதில் இருக்கும் ஆவிக்குரிய காரியங்களிலும் தன் ஒருவன் எல்லா அறிவாற்றலை மறுதலிக்கவேண்டும்; அவன் சிந்திப்பது, பரிசீலிப்பது ஆகிய இப்படிப்பட்ட செயல்பாடுகளை முழுமையாக ஒதுக்கிவைத்துவிட்டு ஆவிக்குத் திரும்ப வேண்டும், அதாவது தேவனுடைய உணர்வை உணர்வதற்கு ஆவியைப் பயன்படுத்தவேண்டும். அவன் வேதத்தை வாசிக்கும்போது, ஆவிக்குரிய காரியங்களைப்பற்றி ஜெபிக்கும்போது அல்லது பேசும்போது, அவன் தன் சிந்தனை, கற்பனை, தத்துவம், புலனாய்வு ஆகியவைகளை மறுதலித்து, மாறாக தன் ஆவியிலுள்ள உணர்வை நெருக்கமாகப் பின்தொடர்ந்து, தேவனுடைய ஐக்கியத்தில் அசைய வேண்டும். அதிகமான உணர்ச்சியுள்ள ஒருவன் ஒவ்வொரு காரியத்திலும் தன் உணர்ச்சியை மறுதலிக்கவேண்டும்; தன் உணர்ச்சி நடத்தவோ, இயக்கவோ அவன் அனுமதிக்கக் கூடாது, ஆனால் தன் உணர்ச்சியோடு இடைபட பரிசுத்த ஆவியானவரை அனுமதிக்கவேண்டும்; இவ்வாறு அவன் ஆவியில் தேவனுடைய சித்தத்தை உணரமுடியும். பாவத்திற்கு பயப்படுவதைப்போல தன் உணர்ச்சிக்கும் அவன் பயப்பட வேண்டும். மேலும் தன் உணர்ச்சியினால் இயக்கப்படாமல் அல்லது ஆதிக்கம் செலுத்தப்படாமல் ஆவியில் பயத்துடனும் நடுக்கத்துடனும் வாழவேண்டும். சித்தத்தில் இருக்கிற ஒருவன், தேவனுடைய காரியங்களில் தன் சித்தம் தேவனுக்கு எதிராக இருக்கிறது, அதாவது ஆவிக்கு எதிராக இருக்கிறது என்பதைப் பார்க்கவேண்டும். அப்போது அவன் தன் சித்தத்தை ஆக்கினைக்குள்ளாக்கி, மறுதலித்து, வெறுப்பான். தன் உறுதியான, பலமான சித்தத்தினால் தேவனுக்கு முன்பாக வாழாமல், தன் ஆவியின் உணர்வினால் வாழும்படி, சிலுவையினால் தன் சித்தத்தை உடைப்பதற்கு பரிசுத்த ஆவியானவரை அவன் அனுமதிக்கவேண்டும்.
ஆத்துமாவின் எந்தப் பகுதியில் நாம் இருந்தாலும், அந்தப்பகுதியை நாம் ஆக்கினைக்குள்ளாகவும் மறுதலிக்கவும் வேண்டும். அது நம் மனம், உணர்ச்சி, சித்தம் ஆகிய எதுவாக இருந்தாலும், அவையெல்லாம் உடைக்கப்படவும் இடைபடுத்தப்படவும் வேண்டும். தேவனுடைய காரியங்கள் எல்லாவற்றிலும் மனம், உணர்ச்சி, சித்தம், ஆகியவைகளின் வழிநடத்துதலை நாம் மறுதலிக்கவேண்டும். மாறாக, நம் மனம், உணர்ச்சி, சித்தம், ஆகியவற்றை ஆளுகைசெய்யவும், நடத்தவும், வேலைவாங்கவும், ஆவிக்கு நாம் முதலிடம் கொடுக்கவேண்டும். இந்த வழியில் நாம் ஆத்துமாவிலிருந்து விடுவிக்கப்படமுடியும். அப்போது ஒருபக்கம், நம் ஆவியினால் ஆத்துமாவிலுள்ள எல்லா உறுப்புக்களிடமும் வேலைவாங்க நம்மால் முடியும், மறுபக்கத்தில் நாம் ஆத்துமாவினால் வாழமாட்டோம்; எனவே நாம் ஆத்துமாவுக் குரியவர்களாக இல்லாமல் ஆவிக்குரியவர்களாக இருப்போம்.