உடன்படிக்கை COVENANT
இரண்டு நபர் அல்லது இரண்டு குழுவினருக்கு இடையே ஏற்படும் ஒப்பந்தம். இதில் ஒவ்வொருவரும் தங்களுடைய வாக்குத்தத்தங்களை உறுதி பண்ணிக் கொள்வார்கள். வேதாகமத்தில் தேவனும் அவருடைய ஜனங்களும் ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கை மிகவும் முக்கியமான உபதேசமாகும். தேவன் ஆபிரகாமோடு உடன்படிக்கை பண்ணினார் அவருடைய சந்ததியை ஆசீர்வதிப்பதாகவும் அவர்கள் தேவனுடைய விசேஷித்த ஜனமாக இருப்பார்கள் எனவும் தேவன் வாக்குப்பண்ணினார். ஆபிரகாம் தன்னுடைய சார்பில் தேவனுக்கு உண்மையுள்ளவனாக நடந்து கொள்ள வேண்டும். இந்த உலகத்திற்கு
தேவனுடைய ஆசீர்வாதம் கடந்து செல்வதற்கு ஒரு கருவியாக பயன்பட வேண்டும் (ஆதி 12.1-3)
ஆபிரகாமின் காலத்திற்கு முன்பே தேவன் நோவாவோடு உடன்படிக்கை பண்ணினார். தேவன் இந்த உலகத்தை மறுபடியும் ஜலத்தினால் அழிக்கமாட்டார் என்பது அந்த உடன்படிக்கையாகும் (ஆதி 9) தேவன் தாவீதோடும் ஒரு முக்கியமான உடன்படிக்கை பண்ணினார். தாவீதும் அவனுடைய சந்ததியாரும் இஸ்ரவேல் தேசத்தின் இராஜாக்களாக ஸ்தாபிக்கப்படுவார்கள் என்பது தேவனுடைய உடன்படிக்கையாகும் (2சாமு 7:12; 22:51). இயேசுகிறிஸ்து தாவீதின் சந்ததியில் வந்தவர். பெத்லகேமில் பிறந்தவர். தாவீது இராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்டு ஆயிரம் வருஷங்களுக்குப் பின்பு இயேசுகிறிஸ்து இந்த பூமியில் அவதரித்தார். தேவன் தாவீதோடு செய்து கொண்ட உடன்படிக்கை இயேசுகிறிஸ்துவில் நிறைவேறிற்று
எபிரெய பாஷையில் உடன்படிக்கை என்னும் வார்த்தைக்கு வெட்டுதல்" என்று பொருள். இரண்டு நபர்கள் ஒரு ஒப்பந்தம் செய்து உடன்படிக்கை பண்ணிக்கொண்ட பின்பு பலியிடப்பட்ட மிருகங்களின் வழியாக கடந்து செல்வார்கள் (எரே 34.18), பழைய ஏற்பாட்டில் ஒவ்வொரு முறை உடன்படிக்கை பண்ணப்படும் போதும் இந்த சடங்கு நிறைவேற்றப்பட்டது
சில சமயங்களில் உடன்படிக்கை பண்ணும் போது பரிசுத்த போஜனத்தை பகிர்ந்து கொண்டார்கள் (ஆதி 31:54). தேவனோடு தாங்கள் உடன்படிக்கை செய்து கொண்டதற்கு அடையாளமாக ஆபிரகாமும் அவருடைய பிள்ளைகளும் விருத்தசேதனம் பண்ணிக்கொண்டார்கள் (ஆதி 17.10-11). சீனாய் மலையில் மோசே தேவனோடு உடன்படிக்கை பண்ணிய போது மிருகங்களின் இரத்தத்தை பலிபீடத்தின் மீதும் ஜனங்களின் மீதும் தெளித்தார் (யாத் 24:3-8)
பழைய ஏற்பாட்டில் ஜனங்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்ட பல உடன்படிக்கைகளை பற்றி கூறப்பட்டுள்ளது. தாவீதும், யோனத்தானும் தங்களுடைய நட்பை உறுதிபண்ணிக் கொண்டார்கள். இந்த உடன்படிக்கையின் மூலமாக இவ்விருவரும் சில பொறுப்புக்களை செய்வதற்கு கடமைப்பட்டிருக்கிறார்கள் {1சாமு 18:3). தேவன் தம்முடைய ஜனங்களோடு செய்து கொள்ளும் உடன்படிக்கையில் ஒரு விசேஷித்த தன்மை உள்ளது. தேவன் பரிசுத்தமானவர், சர்வ ஞானமுள்ளவர், சர்வ வல்லமையுள்ளவர். இவர் மனுஷரோடு உடன்படிக்கை பண்ணுகிறார். ஆனால் மனுஷரோ பலவீனமானவர்கள், பாவமுள்ளவர்கள் பரிபூரணமில்லாதவர்கள்.
ஏற்பாட்டுக்காலத்தில் தேவனுடைய தெரிந்தெடுக்கப்பட்ட சந்ததியார் தேவனோடுதம்முடைய உடன்படிக்கையை ஆணைகளினால் உறுதி பண்ணிக்கொண்டார்கள். சீனாய் மலையில் இஸ்ரவேல் தேசத்தார் கர்த்தர் சொல்லுகிறபடி யெல்லாம் செய்வதாக வாக்குப் பண்ணினார்கள் (யாத் 24:3). பிற்காலத்தில் ஜனங்கள் தங்களுடைய உடன்படிக்கையை முறித்துப் போட்டார்கள். அப்போது அவர்களுடைய தலைவர்கள் அவர்களை அழைத்து அவர்கள் கொடுத்த ஆணையை புதுப்பித்துக்கொள்ளுமாறு கூறினார்கள் (2 இராஜா 23:3). தேவன் தம்முடைய வாக்குத்தத்தங்களை மீறமாட்டார். ஆபிரகாமுக்கு விசுவாசமுள்ள சந்ததியை எழுப்பித் தருவதாக கர்த்தர் வாக்குப்பண்ணினார் (ஆதி 2216-17). இந்த உடன்படிக்கை நித்திய உடன்படிக்கையாக இருக்கிறது (ஆதி 17:7).
புதிய ஏற்பாட்டில் நியாயப்பிரமாணத்தின் உடன்படிக்கைகளுக்கும், வாக்குத்தத்தத்தின் உடன்படிக்கைகளுக்கும் வித்தியாசம் காண்பிக்கப்பட்டிருக்கிறது. அப்போஸ்தலர் பவுல் இரண்டு ஏற்பாடுகளைப் பற்றி கலாத்தியருக்கு எழுதின நிருபத்தில் இவ்வாறு எழுதுகிறார் இவைகள் ஞான அர்த்தமுள்ளவைகள்; அந்த ஸ்திரீகள் இரண்டு ஏற்பாடுகளாம்; ஒன்று சீனாய்மலையிலுண்டான ஏற்பாடு, அது அடிமைத்தனத்திற்குள்ளாகப் பிள்ளை பெறுகிறது, அது ஆகார் என்பவள் தானே "மேலான எருசலேமோ சுயாதீனமுள்ளவள், அவளே நம்மெல்லாருக்கும் தாயானவள் கலா 4:24-26).
சீனாய் மலையில் ஸ்தாபிக்கப்பட்ட உடன்படிக்கை மரணத்துக்கேதுவான ஊழியம் அது ஆக்கினைத் தீர்ப்புக் கொடுக்கும் ஊழியம் என்று பவுல் அறிவிக்கிறார் (2 கொரி 3:79). மனுஷனுடைய பலவீனத்தின் நிமித்தமாகவும், பாவத்தின் நிமித்தமாகவும் அவனால் இந்த உடன் படிக்கைக்கு கீழ்ப்படிய முடியாது என்பது பவுலின் விளக்கமாகும் (ரோம 8:3).
வாக்குத்தத்தத்தின் உடன்படிக்கை தேவனுடைய வாக்குத்தத்தத்தை அடிப்படையாக கொண்டிருக்கிறது 212). மனுஷன் தன்னுடைய பாவத்தின் நிமித்தமாக உடன்படிக்கையை கைக்கொள்ளாமல் போனாலும் தேவன் மனுஷனுக்கு இரட்சிப்பைக் கொடுக்கிறார். ஆதாம், தாவீது ஆகியோரோடு தேவன் உடன்படிக்கை செய்து கொண்டதன் நிமித்தமாக மேசியா இந்த உலகத்தில் பிறந்தார் (ஆதி 315; 2சாமு 7.14-15). தேவன் நோவாவுக்கு வாக்குத்தத்தம் பண்ணினார். பூமியை இனிமேல் தண்ணீரால் அழிக்கப் போவதில்லை என்று ஆணையிட்டார் (ஆதி 8:21-22; 2பேது 3:7,15). தேவன் ஆபிரகாமோடு உடன்படிக்கை பண்ணினார். ஆபிரகாமின் விசுவாசத்தின் நிமித்தமாக அவருடைய சந்ததியை ஆசீர்வதிப்பதாக வாக்குபண்ணினார்.
இந்த உடன்படிக்கைகள் அனைத்தும் கிருபையின் உடன்படிக்கைகளாகும். இவை இயேசுகிறிஸ்துவின் ஜீவியத்திலும், ஊழியத்திலும் நிறைவேறிற்று. அவருடைய மரணத்தின் மூலமாக நாம் தேவனுடைய கிருபையினால் நியாயம் தீர்க்கப்படுகிறோம். தேவனுடைய இரக்கத்தைப் பெற்றுக்கொள்கிறோம் தேவனுக்கும் மனுஷனுக்கும் இடையே ஏற்படுத்தப்பட்டுள்ள உடன்படிக்கையில் இயேசுகிறிஸ்து தாமே மனுஷருக்கு மத்தியஸ்தராக இருக்கிறார் (எபி 9.15).
இந்த புதிய உடன்படிகையை இயேசுகிறிஸ்துவின் சிலுவை மரணம் உறுதி பண்ணுகிறது. மனுஷர் பாவிகளாக இருக்கிறபோதிலும் தேவன் மனுஷரோடு ஐக்கியமாக இருக்கவேண்டுமென்றும், மனுஷருக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கவேண்டுமென்றும் தீர்மானம் பண்ணியிருக்கிறார். இது எபிரெயருக்கு எழுதின நிருபத்தில் இவ்வாறு கூறப்பட்டிருக்கிறது. "நியாயப்பிரமாணமானது பெலவீனமுள்ள மனுஷர்களைப் பிரதான ஆசாரியராக ஏற்படுத்துகிறது; நியாயப்பிரமாணத்திற்குப்பின்பு உண்டான ஆணையோடே விளங்கிய வசனமோ என்றென்றைக்கும் பூரணமான குமாரனை ஏற்படுத்துகிறது" (எபி 7:28).
மனந்திரும்பிய இருதயத்தோடும் விசுவாசத்தோடும் இயேசுகிறிஸ்துவிடம் வருகிற அனைவருக்கும் தேவன் தம்முடைய வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுகிறார்
உடன்படிக்கைகயின் அம்சங்கள்
புனிதமானது (Sacred) (யோசு 9:18; கலா 3.15-17)
கட்டுப்படுத்தக்கூடியது (Binding) (யோசு 9:18; கலா 3:15-17)
உடன்படிக்கையை மீறினால் தண்டனை 2.SUBTL (Upheld with penalty for breaking) (லேவி 26; உபா 28. 2சாமு 21:1-6; எரே 34:8-22 எசே 17:13-19).
உடன்படிக்கையை உறுதிபண்ணும் விதங்கள்
ஆணைகள் (0aths) (ஆதி 22.16)
மிருகங்களின் இரத்தம் (Blood of animals) (ஆதி 15.9-17;ஆதி 31:43-53 யாத் 24:8; எபி 9:19-22)
விருந்துகள் (Feasts) (ஆதி 21:26-31; ஆதி 26:30-31; ஆதி 31:46:54)
நினைவுச்சின்ன ங்கள் (Monuments) (ஆதி 28:16-22; ஆதி 31:43-53)
கைகளை உயர்த்துதல் (Raising of the hands) (எஸ்றா 10:19; ஆதி 14:22)
பாதரட்சைகளை அகற்றுதல் (Pulling off shoes) (ரூத் 4.7-8)
கிறிஸ்துவின் இரத்தம் (Blood of Christ) (மத் 26:28; எபி 9:11-22; எபி 13.11-12,20)
பத்துக் கற்பனைகள் (Ten Commandments) பழைய ஏற்பாட்டின் பிரதான உடன்படிக்கையாகும். இவை கற்பலகைகளில் எழுதப்பட்டது. உடன்படிக்கைப் பேழையில் இந்தப் பலகைகள் வைக்கப் பட்டிருக்கும் உடன்படிக்கை பேழையில் கிருபாசனம்
(mercy-seat) இருக்கும். தேவனுடைய பிரசன்னத்திற்கு இது அடையாளம். மனுஷன் தேவனுடைய கற்பனைகளுக்கு கீழ்ப்படிய வேண்டுமென்பதை இது மனுஷருக்குத் தொடர்ந்து உணர்த்திக் கொண்டேயிருக்கும். (எண் 10:33; எண் 14:44; உபா 10:8; யோசு 3:3-17) புதிய உடன்படிக்கை நித்திய பேழையில் இருக்கிறது. (எபி 8.1-6; எபி 9:1-22; வெளி 11.19).
யாக்கோபு ஒரு கல்லை எடுத்து, அதைத் தூணாக நிறுத்தினான். அங்கிருந்தவர்கள் அனைவரும் ஆளுக்கொரு கல்லாக எடுத்து அவற்றைக் குவியலாகச் சேர்த்தார்கள். (ஆதி 31:46-52).
யாக்கோபின் ஜீவியத்தில் இரண்டு முக்கியமான கற்கள் இடம் பெறுகின்றன. அவையாவன:
தேவன் யாக்கோபோடு செய்து கொண்ட உடன்படிக்கைக்கு நினைவுச்சின்னம். (ஆதி 28.18)
லாபான் யாக்கோபோடு செய்து கொண்ட உடன்படிக்கைக்கு நினைவுச்சின்னம் (ஆதி 31:45)
அந்தக் குவியலின்மேல் போஜனம் பண்ணினார்கள். உடன்படிக்கையில் பங்கு பெறுகிறவர்கள் சேர்ந்து போஜனம் பண்ணுவது வழக்கம். போஜனத்தில் உள்ள உப்பு அவர்களை இந்த உடன்படிக்கையில் கட்டுப்படுத்தும். போஜனம் பண்ணாமல் இருப்பது விரோதத்தைக் குறிக்கும்
உடன்படிக்கை” என்பதற்கான எபிரெய வார்த்தைகள் - டி - ber-eeth' - 1285 11 - daw-bawr' - 1697 என்பனவாகும்
உடன்படிக்கை என்பதற்கான கிரேக்க வார்த்தை
eperooteema 1906 என்பதாகும்.