1. நீதிபுரம் (ஏசா 1:26)
2. சத்திய நகரம் (ஏசா 1:26)
3. கர்த்தருடைய நகரம் (ஏசா 60:14)
4. இஸ்ரவேலுடைய பரிசுத்தரின் சீயோன் (ஏசா 60:14)
5. எப்சிபா # நான் அவளில் பிரியமாயிருக்கிறேன். (ஏசா 62:4)
6. தேடிக்கொள்ளப்பட்டது. (ஏசா 62:12)
7. கைவிடப்படாத நகரம் (ஏசா 62:12)
8. கர்த்தருடைய சிங்காசனம் (எரே 3:17)
9. பச்சையான ஒலிவமரம் (எரே 11:16)
10. எங்கள் நீதியாயிருக்கிற கர்த்தர் (எரே 33:16)
11. யேகோவா ஷம்மா # கர்த்தர் அங்கே இருக்கிறார். (எசே 48:35)
12. சத்திய நகரம் (சக 8:3)
13. சேனைகளுடைய கர்த்தரின் பர்வதம் (சக 8:3)
14. பரிசுத்த பர்வதம் (சக 8:3)
இந்தப் பெயர்களில் எதுவும் எருசலேமிற்கு இப்பொழுதோ அல்லது இதற்கு முன்போ கொடுக்கப்படவில்லை. இயேசு கிறிஸ்து எருசலேமில் நித்தியமாக ஆட்சி புரியும்போது இந்தப் பெயர்களெல்லாம் அந்த நகரத்திற்குக் கொடுக்கப்படும்.
ஒரு காலத்தில் எருசலேம் உண்மையுள்ள நகரமாக இருந்தது. அதன் பின்பு அது வேசியாயிற்று. (ஏசா 1:21) எருசலேம் மறுபடியும் மீட்கப்பட்ட பின்பு அது நீதிபுரம் என்றும், சத்திய நகரம் என்றும் பெயர் பெறும்.
கர்த்தர் இந்தப் பூமியில் நித்தியமாக ஆளுகை செய்யும்போது அவர் சீயோனைத் தமது தலைநகரமாக்குவார். (ஏசா 1:27; ஏசா 52:9) இந்தச் சம்பவம் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின்போது நடைபெறும்.