நிறைவேறிய முன்னறிவிப்புகள்
1. அதிகம் அதிகமாய் விலகிப்போகிறீர்களே (ஏசா 1:5).
2. உங்கள் தேசம் பாழாயிருக்கிறது (ஏசா 1:7)
3. உங்கள் பட்டணங்கள் அக்கினியினால் சுட்டெரிக்கப்பட்டது.
4. உங்கள் நாட்டை அந்நியர் உங்கள் கண்களுக்கு முன்பாக பட்சிக்கிறார்கள்.
5. சீயோன் குமாரத்தி திராட்சத் தோட்டத்திலுள்ள ஒரு குச்சுபோலவும், வெள்ளரித்தோட்டத்திலுள்ள ஒரு குடிசைபோலவும், முற்றிக்கை போடப்பட்ட ஒரு பட்டணம்போலவும் மீந்திருக்கிறாள். (ஏசா 1:8).
9. சேனைகளின் கர்த்தர் நமக்குக் கொஞ்சம் மீதியை வைத்திருக்கிறார். (ஏசா 1:9).
நிறைவேற வேண்டிய முன்னறிவிப்புகள்
1. நான் என் சத்துருக்களில் கோபம் ஆறுவேன். (ஏசா 1:24).
2. என் பகைஞருக்கு நீதியைச் சரிக்கட்டுவேன்.
3. நான் என் கையை உன்னிடமாய்த் (யூதாவும், எருசலேமும்) திருப்புவேன். ஏசா 1:25)
4. உன் களிம்பு நீங்க உன்னைச் சுத்தமாய்ப் புடமிடுவேன்.
5. உன் ஈயத்தையெல்லாம் நீக்குவேன்.
6. உன் நியாயாதிபதிகளை முன்னிருந்தது போல (எகிப்திலிருந்து வெளியேறி வந்தபோது இருந்ததுபோல) திரும்பக் கட்டளையிடுவேன். (ஏசா 1:26).
7. உன் ஆலோசனைக்காரரை ஆதியில் இருந்தது போலவும் (மோசேயைப் போலவும், ஆரோனைப்போலவும்) திரும்பக் கட்டளையிடுவேன்.
8. நீ நீதிபுரம் என்றும், சத்திய நகரம் என்றும் பெயர்பெறுவாய்.
9. சீயோன் நியாயத்தினால் மீட்கப்படும். (ஏசா 1:1,27; ஏசா 2:1)
10. அதிலே திரும்பிவருகிறவர்கள் நீதியினால் மீட்கப்படுவார்கள்.
11. துரோகிகளும் பாவிகளுமோ ஏகமாய் நொறுங்குண்டுபோவார்கள் (ஏசா 1:28).
12. கர்த்தரை விட்டு விலகுகிறவர்கள் நிர்மூலமாவார்கள்.
13. நீங்கள் விரும்பின கர்வா-மரங்களினிமித்தம் (மரங்களினால் செய்யப்பட்ட விக்கிரகங்களின் நிமித்தம்) வெட்கப்படுவீர்கள் (ஏசா 1:29).
14. நீங்கள் தெரிந்துகொண்ட தோப்புகளினிமித்தம் நாணமடைவீர்கள்.
15. இலையுதிர்ந்த கர்வா-மரத்தைப் போலவும், தண்ணீரில்லாத தோப்பைப் போலவும் இருப்பீர்கள். (ஏசா 1:30).
16. பராக்கிரமசா- சணற்கூளமும், அவன் கிரியை அக்கினிப்பொறியுமாகி, இரண்டும் அவிப்பாரில்லாமல் ஏகமாய் வெந்துபோம் (ஏசா 1:31).