ஏசாயா புஸ்தகத்தில் கூறப்பட்டிருக்கும் ""ஐயோ''க்கள்
1. ஆண்புணர்ச்சிக்காரருக்கு (ஏசா 3:9)
2. துன்மார்க்கனுக்கு (ஏசா 3:11)
3. பேராசைக்காரனுக்கு (ஏசா 5:8)
4. மதுபானப்பிரியனுக்கு (ஏசா 5:11)
5. பாவத்தைச் சேமித்து வைக்கிறவருக்கு (ஏசா 5:19)
6. தீமையை நன்மை என்று சொல்லுகிறவருக்கு (ஏசா 5:20)
7. தங்கள் பார்வைக்கு ஞானிகளாக இருப்பவர்களுக்கு (ஏசா 5:21)
8. பரிதானத்திற்காகக் குற்றவாளியை நீதிமானாகத் தீர்க்கிறவனுக்கு (ஏசா 5:22-23)
9. நீதிமானின் நியாயத்தை அவனுக்கு விரோதமாகப் புரட்டுகிறவனுக்கு
10. கர்த்தருக்கும், அவருடைய ஜனங்களுக்கும் விரோதமாக யுத்தம் பண்ணுகிறவர்களுக்கு (ஏசா 17:12-14)
11. கடல்வழியாய் தண்ணீர்களின்மேல் நாணல் படவுகளிலே ஸ்தானாபதிகளை அனுப்புகிற தேசத்திற்கு. (ஏசா 18:1-7)
12. எப்பிராயீமுடைய வெறியரின் பெருமையான கிரீடத்திற்கு. (ஏசா 28:1)
13. பாவத்தின் நிமித்தம் எருசலேமிற்கு. (ஏசா 29:1)
14. வஞ்சிக்கிறவர்களுக்கு (ஏசா 29:15)
15. கலகம்பண்ணுகிற பிள்ளைகளுக்கு (ஏசா 30:1)
16. எகிப்தை நம்புகிறவர்களுக்கு (ஏசா 31:1)
17. அசீரியாவிற்கு. (ஏசா 33:1)
18. கர்த்தருக்கு எதிராக வழக்காடுகிறவர்களுக்கு (ஏசா 45:9)
19. பெற்றோரை மதிக்காதவர்களுக்கு (ஏசா 45:10)