நிறைவேறிய முன்னறிவிப்புக்கள்
1. யூதாவின்மீதும், எருசலேமின்மீதும் பஞ்சம். (ஏசா 3:1)
2. ராஜாக்களும், அதிபதிகளும் யூதாவிலிருந்து பாபிலோனுக்குச் சிறைப்பிடிக்கப்பட்டுப் போய்விட்டதினால் ஜனங்களை ஆளுகை செய்வதற்குத் தகுதியான ஆட்கள் ஒருவரும் இல்லை. (ஏசா 3:2-4,12; 2இராஜா 24:14) யோசியாவின் மரணத்திலிருந்து பாபிலோனிய சிறையிருப்பு வரையிலும் யூதாவின் தலைவர்கள் பலவீனமானவர்களாகவும், துன்மார்க்கமானவர்களாகவும் இருந்தார்கள். (2இராஜா 23:21-24:18)
3. ஜனங்கள் ஒடுக்கப்படுவார்கள் (ஏசா 3:5,12)
4. வா-பன் முதிர்வயதுள்ளவனுக்கும், கீழ்மகன் மேன்மகனுக்கும் இடும்பு செய்வான். (ஏசா 3:5)
5. யூதா தேசம் அழிந்துபோகும். ஆகையினால் ஒருவனும் தன்னை ஜனங்களுக்கு அதிபதியாக வைக்கவேண்டாம் என்பான். (ஏசா 3:6-7)
6. எருசலேம் பாழாக்கப்பட்டது, யூதா விழுந்துபோயிற்று (ஏசா 3:8-9; 2இராஜா 21:1-24:20; எரே 23:10-11; எசே 16:20-29; எசே 18:1-32)
7. யூதா, எருசலேம் ஆகியவை அழியும்போது நீதிமான்கள் பாதுகாக்கப்படுவார்கள். ஆசீர்வதிக்கப்படுவார்கள். (ஏசா 3:10, ஏசா 1:9; எரே 29:11-18; எசே 9:1-6; தானி 1:1-21)
8. யூதா, எருசலேம் ஆகியவை அழியும்போது துன்மார்க்கர் அழிந்துபோவார்கள். (2இராஜா 25:7; எரே 38:2-3; எரே 39:5-8)
9. கர்த்தர் தமது ஜனத்தின் மூப்பரை நியாயம் விசாரிப்பார். (ஏசா 3:14)
10. கர்த்தர் தமது ஜனத்தின் பிரபுக்களை நியாயம் விசாரிப்பார்.
நிறைவேற வேண்டிய முன்னறிவிப்புக்கள்
1. சீயோன் குமாரத்திகளின் அகந்தையின் நிமித்தம் அவர்கள்மீது நியாயத்தீர்ப்பு. (ஏசா 3:16-17)
2. அவர்களுடைய அலங்கார வஸ்திரங்கள், ஆபரணங்கள் ஆகியவற்றின் நிமித்தம் அவர்கள்மீது நியாயத்தீர்ப்பு (ஏசா 3:18-23)
3. அவர்களுடைய ஆடம்பரங்கள் ஆசீர்வதிக்கப்படாமல் சபிக்கப்படும். (ஏசா 3:23)
4. புருஷர்கள் யுத்தத்தில் விழுவார்கள். (ஏசா 3:25)
5. யுத்தத்தின் அழிவிற்காகப் புலம்பலும், துக்கிப்பும் உண்டாகும். (ஏசா 3:26)
6. வருங்காலத்து உபத்திரவக்காலத்திற்குப் பின்பு, யூதரில் மூன்றில் இரண்டு பங்கு மனுஷர் அழிக்கப்படுவார்கள். (சக 13:8-9) மனுஷர் மத்தியிலே புருஷருக்குப் பஞ்சம் உண்டாகும். அந்நாளில் ஏழு ஸ்திரீகள் ஒரே புருஷனைப் பிடித்துக் கொள்வார்கள். (ஏசா 4:1)
7. இஸ்ரவே-ல் தப்பினவர்களுக்கு அந்நாளிலே கர்த்தரின் கிளை அலங்காரமும் மகிமையுமாயிருக்கும் (ஏசா 4:2; ஏசா 11:1; எரே 23:5; எரே 33:15; சக 3:8; சக 6:12).
8. பூமியின் கனி அவர்களுக்குச் சிறப்பும் அலங்காரமுமாயிருக்கும். (ஏசா 4:2; ஏசா 35:1-7; ஏசா 58:11-12; யோவே 2:21-27).
9. அர்மகெதோன் யுத்தத்திலும் வருங்காலத்து உபத்திரவக்காலத்திலும் இஸ்ரவேலில் ஒருசிலர் அழிந்து போகாமல் மீதியாயிருப்பார்கள். (ஏசா 4:2-3; சக 13:8-9; சக 14:14; மத் 24:31; மத் 25:31-46).
10. ஆண்டவர், சீயோன் குமாரத்திகளின் அழுக்கை நியாயத்தின் ஆவியினாலும், சுட்டெரிப்பின் ஆவியினாலும் கழுவுவார். (ஏசா 4:3; சக 12:10-13:1,8-9).
11. எருசலேமின் இரத்தப்பழிகளை அதின் நடுவி-ருந்து நீக்கிவிடுவார். (ஏசா 4:5; எரே 30:6-7; சக 13:8-9; மல் 3:2-3; ரோமர் 11:25-29).
12. சீயோனில் மீதியாயிருந்து, எருசலேமில் தரித்திருந்து ஜீவனுக்கென்று பேரெழுதப் பட்டவனெவனும் பரிசுத்தனென்று சொல்லப்படுவான். (ஏசா 4:4; ஏசா 59:20-21; சக 12:10-13:1; மத் 23:37-39; ரோமர் 11:25-29).
13. கர்த்தர் சீயோன் மலையிலுள்ள எல்லா வாசஸ்தலங்களிலும், பக-ல் மேகத்தையும் புகையையும் இரவில் கொழுந்துவிட்டு எரியும் அக்கினிப் பிரகாசத்தையும் உண்டாக்குவார்; (ஏசா 4:5; சக 2:5. யாத் 13:21; யாத் 40:38).
14. எருசலேமிலுள்ள இஸ்ரவேலின் சபைகளின்மேலும் பக-ல் மேகத்தையும் புகையையும் இரவில் கொழுந்துவிட்டு எரியும் அக்கினிப்பிரகாசத்தையும் உண்டாக்குவார் (ஏசா 4:5; சக 2:5, யாத் 13:21; யாத் 40:38).
15. பக-லே வெயிலுக்கு நிழலாகவும், பெருங்காற்றுக்கும் மழைக்கும் அடைக்கலமாகவும், மறைவிடமாகவும், ஒரு கூடாரம் உண்டாயிருக்கும். (ஏசா 4:6).
பாபிலோன் யூதாவை அழிக்கும் சம்பவம்
1. அப்பமென்கிற எல்லா ஆதரவும் விலகும். (ஏசா 3:1)
2. தண்ணீரென்கிற எல்லா ஆதரவும் விலகும்.
3. ஏசா 3:2-5 ஆகிய வசனங்களில் கூறப்பட்டிருக்கிறவர்கள் அனைவரும் நியாயந்தீர்க்கப்படுவார்கள்.
4. சிறுபிள்ளைகள் தேசத்தை ஆளுகை செய்வார்கள்.
5. ஒருவருக்கொருவரும், அயலானுக்கு அயலானும் விரோதமாயிருப்பார்கள் (ஏசா 3:5)
6. வா-பன் முதிர்வயதுள்ளவனுக்கு இடும்பு செய்வான். (ஏசா 3:5)
7. கீழ்மகன் மேன்மகனுக்கு இடும்பு செய்வான்.
8. யூதாவின் அழிவுக்கு ஒருவனும் பொறுப்பேற்கமாட்டான். (ஏசா 3:6)
9. தேசம் இரட்சிக்கக்கூடாதபடிக்கு அழிந்துபோயிருக்கும். (ஏசா 3:7)
10. மற்றவர்களுக்கு உதவி புரிய முடியாத அளவிற்கு ஜனங்கள் ஏழைகளாக இருப்பார்கள்.