நோவாவின் இரண்டாவது குமாரன் காமுடைய மக்களில் ஒருவன் கானான். (ஆதியாகமம் 10:6). கானானுடைய சந்ததியார் சீதோன் முதல் காசா பட்டணம் மட்டும் பரவி வாழ்ந்தார்கள் (ஆதியாகமம் 10:19). அவர்கள் வாழ்ந்த நாட்டிற்குக் கானான் நாடு என்று பெயர் வந்தது.
கி.மு. 1195 க்கும் கி.மு. 1164 க்கும் இடைப்பட்ட காலத்தில், கப்த்தோரிலிருந்து (தற்கால சீப்புரு தீவு) பெலிஸ்தியர் என்ற ஜாதியர் கானான் நாட்டின் கடலோரப் பகுதிகளில் குடியேறின படியால் இப்பகுதிக்கு பெலிஸ்தியா என்று பெயர் வந்தது.
கி.மு. 334ம் வருடமளவில் கிரேக்கர் இப்பகுதியை ஜெயித்து அரசு செலுத்திய போது மத்திய தரைக் கடலுக்கும் சவக்கடலுக்கும் இடைப்பட்ட பூமி முழுவதும் பலஸ்தீனா என்று அழைக்கப்பட்டது.