சத்துருக்கள்
கர்த்தாவே, என் சத்துருக்கள் எவ்வளவாய்ப் பெருகியிருக்கிறார்கள்! எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள் அநேகர் (சங் 3:1).
இந்த சங்கீதத்திற்கு, "தாவீது தன் குமாரன் அப்சலோமுக்கு தப்பி ஓடிப்போகையில் பாடின சங்கீதம்" என்று தலைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது
இந்த தலைப்பே இந்த சங்கீதத்திற்கு நுழைவாசலைப்போல இருக்கிறது. இந்த தலைப்பை வாசிக்கும்போது, தாவீது எப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த சங்கீதத்தைப் பாடினார் என்பது நமக்குத் தெரியவருகிறது. சங்கீதத்தை இயற்றியவர்கள், எந்த சூழ்நிலையில் சங்கீதத்தை இயற்றினார்கள் என்பதைத் தெரிந்துகொண்டால், அந்த சங்கீதத்தை வியாக்கியானம் பண்ணுவதற்கு எளிதாகயிருக்கும். சங்கீதத்தில் சொல்லப்பட்டிருக்கிற கருத்துக்களைப் புரிந்துகொள்வதற்கும் உதவியாயிருக்கும்
தாவீது மிகப்பெரிய நெருக்கத்திலிருக்கிறார் அவருடைய இருதயத்தில் அதிக பாரமும், அதிக துக்கமும் உண்டாயிற்று. தன்னுடைய குமாரன் அப்சலோமுக்குத் தப்பி ஒலிவமலைக்கு ஓடிப்போகிறார். மனங்கசந்து அழுகிறார் தன்னுடைய தலையை மூடிக்கொண்டு சத்தமிட்டு அழுகிறார். ஒலிவமலையின்மீது பாதரட்சைகளில்லாமல், வெறுங்காலால் நடந்துபோகிறார். இப்படிப்பட்ட துக்கமான சூழ்நிலையில், தாவீது இந்த ஆறுதலான சங்கீதத்தை இயற்றியிருக்கிறார்
தாவீது அழுதுகொண்டே கர்த்தருடைய சமுகத்தில் ஜெபிக்கிறார். அழுதுகொண்டே இந்த சங்கீதத்தைப் பாடுக்கிறார். அழுதுகொண்டே கர்த்தரை விசுவாசிக்கிறார். கீழ்ப்படியாத பிள்ளைகளினால் பெற்றோருக்குத் துக்கமுண்டாகும். தாவீதிற்கு இப்படிப்பட்ட துக்கமே உண்டாயிற்று. தாவீதின் இருதயத்தில் துக்கமும் வருத்தமும் நிரம்பியிருந்தாலும், அவர் கர்த்தருக்குள் சந்தோஷமாயிருக்கிறார். எப்படிப்பட்ட துக்கமும், அவர் கர்த்தருக்குள் சந்தோஷமாயிருப்பதை தடைபண்ணவில்லை. கர்த்தரைத் துதித்து பரிசுத்தமான பாடல்களைப் பாடுவதற்கு, அவருடைய கண்ணீர்களும், கவலைகளும் அவருக்குத் தடையாயில்லை.தாவீது இப்போது மிகப்பெரிய ஆபத்தில் சிக்கியிருக்கிறார். அவருக்கு விரோதமாக சத்துருக்கள்
சதி ஆலோசனை செய்கிறார்கள். தாவீதின் பகைஞர்கள் அவரை அழித்துப்போட வகை தேடுகிறார்கள் தன்னுடைய பகைஞரின் கூட்டத்திற்கு, தாவீதின் குமாரன் அப்சலோமே தலைவனாகயிருக்கிறான். இதனால் தாவீதின் துக்கம் இன்னும் அதிகரிக்கிறது குடும்பத்தில் பிரச்சனைகளும், ஜீவனுக்கு ஆபத்தும் ஏற்பட்டிருந்தாலும், தாவீது கர்த்தருடைய கிருபையை நம்புகிறார். அவருடைய பாதுகாப்பையும் பராமரிப்பையும் நம்புகிறார். தன்னைச் சுற்றியிருக்கிற ஆபத்தான சூழ்நிலைகளை நோக்கிப் பார்க்காமல் தனக்கு ஆதரவாயிருக்கிற கர்த்தரையே நோக்கிப் பார்க்கிறார்
நம்முடைய ஜீவியத்தில் துன்பங்களும், துயரங்களும் பாடுகளும், வேதனைகளும், கண்ணீர்களும் வரலாம் இவையெல்லாம் நம்மை கர்த்தரிடத்தில் கிட்டிச் சேருவதற்கு உதவிபுரியவேண்டும். எந்தச் சூழ்நிலையில் இவை, கர்த்தரை விட்டு நம்மை துரத்திவிடக்கூடாது.தாவீது ஒரு சிலரிடமிருந்து நன்மையையும் ஆதரவையும் எதிர்பார்க்கிறார். ஆனால் அவர்களோ தாவீதுக்கு நன்மை செய்வதற்குப் பதிலாக தீமை செய்கிறார்கள். தன்னுடைய குமாரன் அப்சலோம் தனக்கு ஆதரவாயிருப்பான் என்று தாவீது எதிர்பார்த்தார். ஆனால் அப்சலோம் தாவீதின் பிராணனை வாங்க வகை தேடுகிறான். தாவீது தன்னுடைய தேசத்தாருக்கு அதிக நன்மைகளைச் செய்திருக்கிறார். அவர்கள் தாவீதுக்கு உதவியாயிருக்கவேண்டும். ஆனால் அவர்களோ அப்சலோமோடு சேர்ந்துகொண்டு தாவீதை அழிப்பதற்கு பின்தொடர்ந்து வருகிறார்கள்
தாவீது உரியாவை வஞ்சகமாகக் கொன்று, அவனுடைய மனைவியைச் சேர்த்துக்கொண்டார். இது கர்த்தருடைய சமுகத்தில் மிகப்பெரிய பாவம். தான் செய்த பாவத்திற்கு தாவீது இப்போது தண்டனை அனுபவிக்கிறார். தாவீது செய்த பாவத்தினிமித்தம் கர்த்தர் அவருடைய வீட்டிலே, பொல்லாப்பை தாவீதின்மேல் எழும்பப்பண்ணியிருக்கிறார் (2சாமு 12:11).
தாவீது கர்த்தருடைய சமுகத்திற்கு முன்பாக பாவம் செய்திருந்தாலும், அவர் இன்னும் தேவனுடைய வல்லமையையும், நன்மையையும் கிருபையையும் நம்புகிறார். கர்த்தர் தன்னை கைவிடாமல், தனக்கு உதவிபுரிவார் என்னும் நம்பிக்கை தாவீதின் இருதயத்தில் நிரம்பியிருக்கிறதுகர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம், நம்முடைய பாவங்களினிமித்தம் மனம் வருந்தவேண்டும். மனந்திருந்தவேண்டும். நம்முடைய வருத்தம் நம்மை கர்த்தருடைய சமுகத்திலிருந்து பிரித்துவிடக்கூடாது. பாவத்திற்கேற்ற துக்கம் நம்மிடமிருந்தாலும், நாம் கர்த்தரிடத்தில் நம்பிக்கையாயிருக்கவேண்டும். நம்முடைய ஆத்துமாவில் பாவத்தினிமித்தம் துக்கம் காணப்பட வேண்டும். ஆயினும் அந்த துக்கம் கர்த்தருடைய சமுகத்தில் நாம் சந்தோஷமாயிருப்பதற்கோ, தேவனிடத்தில் நம்முடைய நம்பிக்கையை வைப்பதற்கோ தடையாகயிருக்கக்கூடாது.
தாவீது இப்போது ஒரு கோழையைப்போல தன் குமாரன் அப்சலோமுக்கு தப்பி ஓடிப்போகிறார். தன்னுடைய ராஜரீக பட்டணத்தைவிட்டு தப்பித்து ஓடிப்போகிறார். தன்னுடைய ராஜ்யத்திற்காக தாவீது தன் குமாரன் அப்சலோமோடு யுத்தம்பண்ணாமலேயே ஓடிப்போகிறார். யுத்தமும் பண்ணாமல், ஜீவனுக்குப் பயந்து ஒரு கோழையைப்போல தப்பித்து ஓடிப்போனாலும், தாவீதின் இருதயத்தில் தேவன்மீது வைத்திருக்கும் விசுவாசம் நிரம்பியிருக்கிறது. இந்த விசுவாசத்தினிமித்தமாய் அவருக்குள் உண்மையான தைரியமும் நிரம்பியிருக்கிறதுதாவீது தன்னுடைய சூழ்நிலையை நோக்கிப்பார்க்கிறார். எங்கு பார்த்தாலும் அவருக்கு சத்துருக்கள் இருக்கிறார்கள். தாவீதின் சத்துருக்கள்
எண்ணிக்கையில் பெருகியிருக்கிறார்கள். தாவீதைச் சுற்றிலும் சத்துருக்கள் பாளயமிறங்கியிருக்கிறார்கள். தாவீது சிங்காசனத்தில் வீற்றிருந்து இஸ்ரவேல் தேசத்தை ஆளுகை செய்தவர். அவருடைய தேசத்து ஜனங்கள் ராஜாமீது பிரியமாயிருந்தார்கள். தாவீது அவர்களுக்கு நன்மையான காரியங்களைச் செய்தார் ஆனால் இப்போது சூழ்நிலை மாறிப்போயிற்று.
தாவீது இப்போது சிங்காசனத்தில் வீற்றிருக்கவில்லை. அவருடைய ஜனங்களும் அவரோடு கூடயில்லை . தாவீது தன் ராஜ்யத்தை இழந்துவிட்டார். தேசத்து ஜனங்கள் அவருக்கு விரோதமாக
எழும்பியிருக்கிறார்கள். தாவீதைப் பிடித்து அவரைக் கொன்றுபோடுவதற்காக, அவரைப் பின்தொடர்ந்து வருகிறார்கள். இதுவரையிலும் தாவீதுக்கு ஆதரவாயிருந்த ஜனங்கள், இப்போது அவருக்கு சத்துருக்களாகயிருக்கிறார்கள். தனக்கு விரோதமாய் அநேகர் எழும்பியிருப்பதை தாவீது காண்கிறார்
தேவனிடத்தில் தாவீதுக்கு இரட்சிப்பு இல்லை என்று சொல்லுகிறார்கள்
தேவனிடத்தில் அவனுக்கு இரட்சிப்பு இல்லையென்று என் ஆத்துமாவைக் குறித்துச் சொல்லுகிறவர்கள் அநேகராயிருக்கிறார்கள். (சேலா) (சங் 3:2).
தாவீதைப் பிடிப்பதற்கு பின்தொடர்ந்து வருகிறவர்கள் அவருக்கு விரோதமாக அவதூறான வார்த்தைகளைப் பேசுகிறார்கள். "தேவனிடத்தில் தாவீதுக்கு இரட்சிப்பு இல்லை, தேவன் தாவீதுக்கு உதவி செய்யமாட்டார் என்று தாவீதைப்பற்றி தூஷணமாய்ப் பேசுகிறார்கள் தாவீதுக்கு இப்போது துன்பமும், வேதனைகளும், பாடுகளும் வந்திருக்கிறது. ஆகையினால் தேவன் தாவீதை கைவிட்டுவிட்டார் என்றும், தேவன் தாவீதுக்கு உதவி செய்யமாட்டார் என்றும் ஏளனமாய்ச் சொல்லுகிறார்கள்.யோபுவுக்கு அநேக உபத்திரவங்கள் உண்டாயிற்று அவருடைய சிநேகிதர்கள் யோபுவை தூஷித்தார்கள் கர்த்தர் யோபுவை நீதியாய்த் தண்டித்திருக்கிறார் என்று அவர்மீது குற்றம் சொன்னார்கள். ஒருவருக்குத் துன்பம் வரும்போது, தேவன் அவர்மீது கோபமாயிருக்கிறார் என்றும், தேவனுடைய தண்டனையே அவருடைய துன்பத்திற்கான காரணம் என்றும் ஜனங்கள் சாதாரணமாகச் சொல்லிவிடுவார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலைதான் இப்போது தாவீதுக்கும் வந்திருக்கிறது தாவீதின் வேலைக்காரரும், அவருடைய தேசத்து ஜனங்களும் தாவீதை தூஷிக்கிறார்கள். தேவனிடத்தில் தாவீதுக்கு இரட்சிப்பு இல்லையென்று சொல்லுகிறார்கள். தாவீதுக்கு உதவி செய்வதற்குப் பதிலாக அவரை கைவிட்டுவிடுகிறார்கள்.
தேவன் தாவீதை கைவிட்டுவிட்டார் என்றும் இனிமேல் தேவன் தாவீதுக்கு உதவி செய்யமாட்டார் என்றும் சொல்லி, அவர்கள் தாவீதை ஒரு குற்றவாளியைப்போல பார்க்கிறார்கள். ஒரு துன்மார்க்கனைப்போலவும், ஒரு மாயக்காரனைப்போலவும் அவர்கள் தாவீதைப் பார்க்கிறார்கள் அவரைத் தூஷிக்கிறார்கள். தாவீது தேவனிடத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறார் ஜனங்களுடைய பேச்சு தாவீதின் நம்பிக்கையை அசைப்பதுபோலிருக்கிறது. தேவனிடத்தில் உதவி பெற்றுக்கொள்ள வேண்டுமென்று தாவீது எதிர்பார்க்கிறார். ஆனால் ஜனங்களோ, தாவீதுக்கு தேவனிடத்திலிருந்து உதவி கிடைக்காது என்று தீர்மானமாய்ச் சொல்லுகிறார்கள்.தாவீதுக்கு தேவனிடத்திலிருந்து உதவி கிடைக்கவில்லையென்றால், அவரால் ஒன்றும் செய்யமுடியாது. தாவீதின் சத்துருக்கள், அவருக்கு தேவனிடத்தில் இரட்சிப்பு இல்லையென்று, அவருடைய ஆத்துமாவைக் குறித்து
சொல்லுகிறார்கள். தன்னுடைய சத்துருக்கள் தனக்கு விரோதமாய்ப் பேசினாலும், தாவீது கர்த்தரிடத்தில் தன் இரட்சிப்பைக் குறித்து விசுவாசமாயிருக்கிறார். தாவீது கர்த்தரை நம்பியிருக்கிறார்.
சத்துருக்கள் தாவீதின் ஆத்துமாவை நோக்கி, பட்சியைப்போல உன் மலைக்குப் பறந்துபோ" (சங் 1:1) என்று சொல்லுகிறார்கள். "உன் தேவன் எங்கே என்று தாவீதின் சத்துருக்கள் நாள்தோறும் அவரோடே சொல்லி, அவரை நிந்திக்கிறார்கள். அவர்களுடைய வார்த்தை தாவீதின் எலும்புகளை
உருவக்குத்துகிறது போல இருக்கிறது (சங் 42:10)
தன்னுடைய சத்துருக்கள் தனக்கு விரோதமாகப் பேசுகிற வார்த்தைகளை, தாவீது கர்த்தருடைய சமுகத்தில் ஒப்புவிக்கிறார். தேவனிடத்திலிருந்து தாவீதுக்கு உதவி வராது என்று சொல்லுகிறார்கள். தாவீதுக்கு தேவனிடத்திலிருந்து உதவி வரவில்லையென்றால், அவரால் ஒன்றும் செய்ய முடியாது. அவர் செயலிழந்தவராகயிருப்பார்.
சத்துருக்கள் தாவீதின் ஆத்துமாவைக் குறித்து தேவனிடத்தில் தாவீதுக்கு இரட்சிப்பு இல்லை" என்று
சொல்லுகிறார்கள். ஆனால் கர்த்தரோ தாவீதிடம் நானே உன்னுடைய இரட்சிப்பு" என்று சொல்லுகிறார் (சங் 35:3). தாவீது தன்னுடைய சூழ்நிலையை கர்த்தரிடத்தில் தெரியப்படுத்துகிறார்."நானே உன்னுடைய இரட்சிப்பு" என்று கர்த்தர் சொன்ன வார்த்தை தாவீதுக்கு ஆறுதலாகயிருக்கிறது. ஏற்றவேளையிலே கர்த்தர் தன்னுடைய சத்துருக்களை பேசவிடாமல் அமைதிப்படுத்துவார் என்று தாவீது கர்த்தரையே நம்பியிருக்கிறார்.
தனக்கு விரோதமாக தீங்கு சொல்லுகிறவர்கள் அநேகராயிருக்கிறார்கள் என்று தாவீது கர்த்தரிடத்தில் முறையிடுகிறார். தேவனிடத்தில் தாவீது இந்த விண்ணப்பங்களை ஏறெடுத்த பின்பு, "'சேலா" என்னும் வார்த்தையைச் சொல்லுகிறார். சேலா என்னும் வார்த்தை ஒரு சங்கீத குறியீடு என்று வேதபண்டிதர்கள் சொல்லுகிறார்கள். தாவீதின் காலத்தில் சங்கீதங்களை உரைநடைகளைப்போல வாசிக்கமாட்டார்கள்.
சங்கீதங்களை அதற்குரிய ராகத்தோடு பாடுவார்கள் ""சேலா" என்று சொல்லப்பட்டிருக்கிற இடத்தில் சங்கீதப்பாடலை பாடுவதை சற்று நிறுத்தி, சிறிதுநேரம் அமைதியாகயிருப்பார்கள். சங்கீதம் பாடும்போது, அங்கு ஒரு பரிசுத்தமான அமைதி நிரம்பியிருக்கும் தாவீதின் சங்கீதத்தைப் பாடுகிறவர்கள், தாவீதின் வார்த்தைகளை தங்களுக்கு
சொந்தமாக்கிக்கொள்கிறார்கள்.