1 நாளாகமம் அறிமுகம்
பரிசுத்த வேதாகமத்தில் ஏற்கெனவே
எழுதப்பட்டிருக்கிற சரித்திர சம்பவங்கள், நாளாகமம் புஸ்தகத்தில் மறுபடியுமாய் எழுதப்பட்டிருக்கிறது ஏற்கெனவே எழுதப்பட்டிருப்பது, மறுபடியும் எழுதப்பட்டிருப்பதினால், நாளாகமம் புஸ்தகத்திலுள்ள வார்த்தைகளை தேவையற்ற வார்த்தைகள் என்று ஒதுக்கி தள்ளிவிட முடியாது
பரிசுத்த வேதாகமத்தில், மற்ற புஸ்தகங்களில் எழுதப்பட்டிராத விசேஷித்த சம்பவங்கள், நாளாகமம் புஸ்தகத்தில் பிரத்தியேகமாக எழுதப்பட்டிருக்கிறது தேவனுடைய தெய்வீக மகத்துவங்களையும், அவருடைய சத்தியங்களையும், அவருடைய பிரமாணங்களையும் புரிந்துகொள்வதற்கு, நாளாகமம் புஸ்தகம் மிகவும் பிரயோஜனமாயிருக்கிறது.
"இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே காரியம் நிலைவரப்பட வேண்டும்" (உபா 19:15) நாளாகமம் புஸ்தகத்தில் மறுபடியுமாக எழுதப்பட்டிருக்கிற வார்த்தைகள், சத்தியத்தை உறுதிபண்ணுவதற்கு உதவியாயிருக்கிறது.
நாளாகமம் புத்தகத்தின் ஆசிரியர் எஸ்றா"இந்த எஸ்றா இஸ்ரவே-ன் தேவனாகிய கர்த்தர் அருளிய மோசேயின் நியாயப்பிரமாணத்திலே தேறின தேவபாரகனாயிருந்தான்" (எஸ்றா 7:6)
நாளாகமம் புஸ்தகம் எபிரெய பாஷையிலே "அன்றாட நடபடிகள்" என்று அழைக்கப்படுகிறது இந்தப் புஸ்தகத்தில், தேவனுடைய தெய்வீக வழிநடத்துதலின் பிரகாரமாக, சரித்திர சம்பவங்கள், அதிகாரப்பூர்வமாக தொகுத்து எழுதப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் சிறையிருப்புக்கு பின்பு தொகுத்து எழுதப்பட்டவையாகும்.
செப்துவஜிந்த் பதிப்பில், நாளாகமம் புஸ்தகம் "கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படாத புஸ்தகம்" என்று பொருள்படுமாறு அழைக்கப்படுகிறது. வரலாற்று ஆசிரியர்கள் நாளாகமம் புஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கிற சரித்திர சம்பவங்களை, கவனத்தில் எடுத்துக்கொள்ளாமல், அதை ஒதுக்கி தள்ளிவைத்துவிட்டார்கள்.
நாளாகத்தின் முதலாம் புஸ்தகத்தில் ஆதாம் முதல் தாவீது வரையிலுமுள்ளவர்களின் வம்சவரலாறுகள் வரிசையாக எழுதப்பட்டிருக்கிறது. இந்த வம்சவரலாறு கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவில் முடிவு பெறுகிறது (1நாளா 1-9 ஆகிய அதிகாரங்கள்). பரிசுத்த வேதாகமத்தின் மற்ற புஸ்தகங்களில் எழுதப்பட்டிராத சரித்திர சம்பவங்கள் சில, நாளாகமத்தின் முதலாம் புஸ்தகத்தில் அங்கங்கே கோர்க்கப்பட்டிருக்கிறது.
சவுலின் ராஜ்யபாரம் தாவீதின் கையில் மாறும் சரித்திர சம்பவம் இந்தப் புஸ்தகத்தில் மறுபடியுமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இத்துடன் தவீதினுடைய ராஜ்யபாரத்தின் மேன்மைகளும், ஜெயங்களும் இந்தப் புஸ்தகத்தில் விரிவாக எழுதப்பட்டிருக்கிறது (1நாளா 10-21 ஆகிய அதிகாரங்கள்).
தாவீது கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுவதற்கு தேவையான ஆயத்த வேலைகளைச் செய்கிறார் தாவீது கர்த்தருடைய ஆராதனையை செய்வதற்கு ஆசாரிய வகுப்புகளையும், லேவியரின் வகுப்புகளையும் முறைப்படுத்துகிறார். (1 நாளா 22-29 ஆகிய அதிகாரங்கள்)
1நாளாகமம், 2நாளாகமம் ஆகிய இரண்டு புஸ்தகங்களும் பாலஸ்தீன தேசத்தில் சுமார் கி.மு. 1279 - 461 ஆகிய வருஷக் காலத்தில்
எழுதப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ராஜாக்களின் ஆட்சிக் காலத்திலும் ஊழியம் செய்து வந்த தீர்க்கதரிசிகள் அல்லது சம்பிரதிகள் அந்தந்தக் காலங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை எழுதினார்கள் இந்த ஆவணங்களையெல்லாம் ஒன்றுசேர்த்து, பிற்காலத்து ஆசிரியர்கள் அதை"நாளாகமம்" என்னும் ஒரே புஸ்தகமாகத் தொகுத்தார்கள். கி.மு. 294 - 289 ஆகிய வருஷங்களில் எபிரெய மொழியின் பழைய ஏற்பாடு கிரேக்க மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு செப்துவஜிந்த் பதிப்பு வெளிவந்தது. செப்துவஜிந்தில் நாளாகமம் புஸ்தகம் 1 நாளாகமம், 2நாளாகமம் என இரண்டு புஸ்தகங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது நாளாகமம் புஸ்தகங்களைத் தொகுத்து எழுதியவர்கள் ஏசாயா, எஸ்றா ஆகியோர் ஆவர். கி.மு. 743 - 683 கி.மு. 546 # 461 ஆகிய வருஷக்காலத்தில் நாளாகமம் புஸ்தகம் தொகுத்து நிறைவு செய்யப்பட்டிருக்க வேண்டும்
ஏசாயாவும், எஸ்றாவும் இஸ்ரவேலுடைய ராஜாக்களின் நடபடிகளைத் தொகுத்தார்கள். நாத்தான், காத், இத்தோ அகியா, யெகூ ஆகியோர் ராஜாக்களின் நடபடிகளை அந்தந்தக் காலத்தில் எழுதி வைத்திருந்தார்கள்
இஸ்ரேல், யூதா ஆகிய தேசங்களுடைய ராஜாக்களின் வரலாற்றை ஏசாயா எழுதினார். (2நாளா 32:32) எஸ்றா 2நாளா 33-36 ஆகிய அதிகாரங்களை எழுதி இஸ்ரவேல் ராஜாக்களின் வரலாற்றை நிறைவு செய்தார் ஜெபாலயத்தின் தலைவராக எஸ்றா ஊழியம் செய்து வந்தார். இந்த ஜெபாலயத்தில் கல்வி அறிவுமிக்க யூதர்கள் இருந்தார்கள். இவர்கள் பழைய ஏற்பாட்டு நூல்களைத் தொகுத்தார்கள். இவர்கள் தொகுத்து வெளியிட்ட நூல்களே பிற்காலத்தில் பழைய ஏற்பாடாக வெளிவந்திருக்கிறது. செப்துவஜிந்த் பதிப்பிலும் இந்த நூல்களின் தொகுப்புக்களே கிரேக்க மொழியில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.
நாளாகமம் என்னும் நூலின் எபிரெயப் பெயர் "திப்ரே-ஹயாமிம்" என்பதாகும். இதன் கிரேக்கப் பெயர் ""பேரலேபோமினா". லத்தீன் மொழியில் நாளாகமம் புஸ்தகத்திற்கு ""க்ரோனிகான்" என்று பெயர்
திப்ரே-ஹயாமிம் என்னும் பெயருக்கு ""அன்றாட நடபடிகள்" என்று பொருள். இஸ்ரவேல், யூதா ஆகிய தேசங்களுடைய ராஜாக்களின் அன்றாட நடபடிகள் நாளாகமம் புஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது
இஸ்ரவேல் தேசத்தில் தலைவர்களின் வரலாற்றுப் பின்னணி, வரப்போகிற மேசியாவின் வம்சவரலாறு யூதா ராஜ்யத்தின் வரலாறு, மாம்சத்தின் பிரகாரம் இயேசு கிறிஸ்துவின் முன்னோர் ஆகிய காரியங்களெல்லாம் நாளாகமம் புஸ்தகத்தில் தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது
தாவீதின் ராஜ்யம் தொடர்ந்து நிலைத்து நிற்காமல் போனதற்குக் காரணமும், இஸ்ரவேல் தேசம் அந்நியருடைய சிறையிருப்புக்குப் போனதற்குக் காரணமும் இந்தப் புஸ்தகத்தில் விவரிக்கப்பட்டிருக்கிறது.
பொருளடக்கம்
வம்ச வரலாறுகள் - ஆதாமிலிருந்து பாபிலோனிய சிறையிருப்பு வரையிலும்
1. பத்து சந்ததியார்கள் - ஆதாமிலிருந்து நோவா வரையிலும் (1:1-4)
2. ஏழு குமாரர்கள் - யாப்பேத்தின் ஏழு சந்ததியார்கள் (1:5-7)
3. நான்கு குமாரர்கள் - காமின் இருபத்தியாறு சந்ததியார்கள் (1:8-16)
4. ஒன்பது குமாரர்கள் - சேமின் பதினாறு சந்ததியார்கள் (1:17-23)
5. பத்து சந்ததிகள் - சேம் முதல் ஆபிரகாம் வரையிலும் (1:24-27)
6. ஆபிரகாமின் முதலாவது குமாரர்கள் (1:28)
7. இஸ்மவேலின் பன்னிரெண்டு குமாரர்கள் (1:29-31)
8. ஆறு குமாரர்கள் - ஆபிரகாம் கேத்தூராள் ஆகியோரின் ஏழு சந்ததியார்கள் (1:32-33)
9. ஆபிரகாம் ஈசாக்கு ஆகியோரின் மூன்று குமாரர்கள் (1:34)
10. ஐந்து குமாரர்கள் - ஏசாவின் முப்பத்தெட்டு சந்ததியார்கள் (1:35-42)
11. இஸ்ரவேலின் இராஜாக்களுக்கு முன்பு ஏதோமின் எட்டு இராஜாக்கள் (1:43-50)
12. ஏதோமின் பதினொறு பிரபுக்கள் (1:51-54)
13. யாக்கோபின் பன்னிரெண்டு குமாரர்கள் (2:1-2)
யூதாவின் சந்ததியார்கள்
(1) ஐந்து குமாரர்கள் - யூதாவின் பதினெட்டு சந்ததியார்கள் (2:3-12)
(2) ஏழு குமாரர்கள் - ஈசாயின் இரண்டு குமாரத்திகளும் நான்கு பேரப்பிள்ளைகளும் (2:13-17)
(3) நான்கு குமாரர்கள் - காலேபின் இரண்டு சந்ததியார்கள் # காலேபின் முன்னோர்கள் (2:18-20)
(4) எஸ்ரோனின் மூன்று குமாரர்கள் (2:21-24)
(5) ஆறு குமாரர்கள் - யெர்மெயேலின் பதினெட்டு சந்ததியார்கள் (2:25-33)
(6) சேசானின் பன்னிரெண்டு சந்ததியார்கள்
(2:34-41)
(7) காலேபுக்கு மற்ற மறுமனையாட்டிகள் மூலமாக பிறந்த இருபத்தெட்டு சந்ததியார்கள் (2:42-49)
(8) காலேபின் சந்ததியார்கள் (2:40-55)
(9) எப்ரோனில் தாவீதின் ஆறு குமாரர்கள் (3:1-4)
(10) எருசலேமில் தாவீதின் பதினான்கு குமாரர்களும், குமாரத்திகளும் (3:5-9)
(11) சாலொமோனின் இருபத்தியொரு ராஜரீக சந்ததியார் (3:10-16)
(12) எகோனியா இராஜாவின் முப்பத்திரரெண்டு சந்ததியார்கள் (3:17-24)(13) ஊர், சோபால் ஆகியோர் மூலமாக யூதாவின் பதினெட்டு சந்ததியார்கள் (4:1-4)
(14) ஆசூர் மூலமாக யூதாவின் பத்து சந்ததியார்கள் (4:5-8)
(15) யூதாவின் யாபேஸ் - அவனுடைய பதில் கிடைத்த ஜெபங்கள் (4:9-10)
(16) கேலூப் அல்லது காலேபின் மூலமாக யூதாவின் அடையாளம் தெரியாத ஐந்து சந்ததியார்கள் (4:11-12)
(17) கேனாசின் மூலமாக யூதாவின் ஆறு சந்ததியார்கள் (4:13-14)
(18) காலேபின் மூலமாக யூதாவின் முப்பத்தியேழு சந்ததியார்கள் (4:15-20)
(19) சேலாகின் மூலமாக யூதாவின் பத்து சந்ததியார்கள் (4:21-23)
15. யாக்கோபின் குமாரனாகிய சிமியோனின் சந்ததிகள்
(1) இருபத்தியேழு சந்ததியார்களும் அவர்களுடைய சுதந்தரமும் (4:24-33)
(2) சிமியோனின் மற்ற இருபத்திரெண்டு பிரபுக்களும் அவர்களுடைய வெற்றிகளும் (4:34-43)
யாக்கோபின் குமாரனாகிய ரூபனின் சந்ததியார்கள்
(1) ரூபன் சேஷ்டபுத்திர சுதந்தரத்தை இழந்ததற்கு காரணம் (5:1-2)
(2) அசீரிய சிறையிருப்பு வரையிலும் ரூபனின் பதினேழு கோத்திரத்தார்கள் (5:3-8)
(3) இஸ்ரவேலின் வெற்றிகளும் எல்லைகளின் விரிவும் - ஆகாரியரோடு யுத்தம் (5:9-10)
17. காத்தின் சந்ததியார் - யாக்கோபின் குமாரனிலிருந்து யூதாவின் இராஜாவாகிய யோதாம் வரையிலும் (5:11-17)
18. ரூபன், காத், மனாசே ஆகியோரின் சேனை - சவுல் இராஜாவின் நாட்களில் இவர்கள் ஆகாரியரை வெற்றி பெற்றார்கள் (5:18-22)
19. யோர்தானுக்குக் கிழக்கில் மனாசேயின் பராக்கிரமசாலிகள் (5:23-24)
20. விக்கிரகாராதனையும் அசீரியரிடம் இஸ்ரவேலின் முதலாவது சிறையிருப்பும் (5:25-26)
21. யாக்கோபின் குமாரனாகிய லேவியின் சந்ததியார் - அவர்களுடைய வாசஸ்தலங்களும் வேலைகளும்
(1) பதினான்கு சந்ததியார்கள் (6:1-3)
(7) இசக்கார் கோத்திரத்திலிருந்து - 200 தலைவர்களும் அவர்களுடைய படைகளும் (12:32)
(8) செபுலோன் கோத்திரத்திலிருந்து - 50,000 புருஷர்கள் (12:33)
(9) நப்தலி கோத்திரத்திலிருந்து - 38,000 புருஷர்கள் (12:34)
(10) தாண் கோத்திரத்திலிருந்து - 28,600 புருஷர்கள் (12:35)
(11) ஆசேர் கோத்திரத்திலிருந்து - 40,000 புருஷர்கள் (12:36)
(12) கிழக்கு மனாசே, காத், ரூபன் கோத்திரங்களிலிருந்து -120,000 புருஷர்கள் (12:37)
(13) மூன்று நாள் விருந்து (12:38-40)
தாவீதின் மார்க்கக் கொள்கைகள்
(1) பெட்டியை எருசலேமிற்கு கொண்டு வருவதற்கு தாவீது எடுத்த முயற்சிகள் (13:1-8)
(2) தற்காலிக தடை - ஊசா மடிந்தான் - இதனால் பயந்த தாவீது பெட்டியை ஓபேத் ஏதோமின் வீட்டிலேயே விட்டுவிட்டான் (13:9-14)
தாவீதின் ஆசீர்வாதம்
(1) ஈராம் தாவீதிற்கு ஒரு வீடு கட்டினான் (14:1)
(2) தாவீதின் உயர்வு (14:2)
(3) எருசலேமில் தாவீதின் குடும்பத்தார் (14:3-7)
(4) பெலிஸ்தர்மீது தாவீதின் வெற்றிகள் (14:8-16)
(5) தாவீதின் புகழ் (14:17)
தாவீதின் மார்க்கக் கொள்கைகள் புதுப்பிக்கப்படுகிறது
(1) பெட்டிக்கு ஒரு ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணுகிறான் (15:1)
(2) நியாயத்தீர்ப்பைத் தவிர்ப்பதற்கு தேவனுடைய பெட்டியை லேவியர் மட்டுமே சுமக்க வேண்டும் என்ற கட்டளை (15:2)
(3) தேவனுடைய பெட்டியை அதன் ஸ்தலத்திற்கு கொண்டுவருவதற்கு இஸ்ரவேலர் அனைவரையும் கூடிவரச்செய்கிறான் (15:3)
(4) தேவனுடைய பெட்டியை சுமப்பதற்கும் பலிகளைச் செலுத்துவதற்கும் ஆசாரியர்களும் லேவியர்களும் பரிசுத்தப்படுத்தப் படுகிறார்கள் (15:4-15)
(5) தேவனைத் துதித்து சங்கீதங்களைப் பாடுவதற்கும் இசைக்கருவிகளை இசைப்பதற்கும் தாவீது அதற்குரியவர்களை நியமிக்கிறான் (15:16-24)
(6) தாவீது தேவனுடைய பெட்டியை எருசலேமிற்கு கொண்டு வருகிறான் (15:25-28)
(7) மீகாளின் பாவம் (15:29)
(8) மிகப்பெரிய மார்க்கப் பண்டிகை (16:1-3)
(9) கர்த்த ரை சேவிக்கும் குழுவினர் (16:4-6)
(10) தாவீதின் ஸ்தோத்திரம் ஏறெடுக்கும் சங்கீதம்
(அ) பன்னிரெண்டு அறிவுரைகள் (16:7-13)
(ஆ) அறிவுரைக்குக் காரணம் - ஆபிரகாமின் உடன்படிக்கை (16:14-19)
(இ) அறிவுரைக்குக் காரணம் - தேசங்கள் வழியாக பிரயாணம் பண்ணுகையில் தெய்வீக பராமரிப்பு (16:20-22)
(ஈ) மேலும் பதினாறு அறிவுரைகள் - பதினாறு காரணங்கள் - தேவனுடைய சுபாவமும், கிரியைகளும் (16:23-36)
(11) பாடகர்கள், இசைக்கருவி வாசிப்பவர்கள், லேவியர்கள், ஆசாரியர்கள் ஆகியோரின் ஆராதனைகள் (16:37-43)
(12) தேவனுக்கு ஓர் ஆலயம் கட்ட வேண்டுமென்று தாவீது விரும்புகிறான் (17:1)
(13) தீர்க்கதரிசியாகிய நாத்தான் தேவாலயம் கட்ட தாவீதை உற்சாகப்படுத்துகிறான் (17:2)
(14) தாவீதின் விருப்பத்திற்கு தேவனுடைய பதில் - தாவீதின் உடன்படிக்கை
(அ) தேவாலயம் கட்ட தாவீதிற்கு தேவன் அனுமதி தரவில்லை . ஆனால் கர்த்தர் அவனுக்கு ஒரு நித்திய வீட்டை வாக்குப்பண்ணுகிறார் (17:3-10)
(ஆ) தாவீதின் சிங்காசனம் என்றென்றும் நிலைத்திருக்கு மென்றும் தாவீதின் குமாரன் தேவாலயம் கட்டுவான் என்றும் தேவன் வாக்குப்பண்ணுகிறார் (17:11-15)
(15) உடன்படிக்கையைக் குறித்து தாவீதின் ஜெபம் (17:16-27)
தாவீதின் இராஜ்ஜியம் முழுமையாக நிறுவப்படுகிறது
(1) பெலிஸ்தரை வெற்றி கொள்கிறான் (18:1)
(2) மோவாபியரை வெற்றி கொள்கிறான் (18:2)
(3) சீரியாவையும் சோபாவையும் வெற்றி கொள்கிறான் (18:3-8)
(4) ஆமாத்தோடு சமாதானம் (18:9-10)
(5) அம்மோன், அமலேக்கியர், ஏதோமியர் ஆகியோரை வெற்றி கொள்கிறான் (18:11-13)
(6) தாவீதின் ஆட்சியின் சுபாவம் (18:14)
(7) தாவீதின் பிரதானிகள் (18:15-17)
(8) அம்மோனியருக்கும் சீரியருக்கும் யுத்தம்
(அ) தாவீதின் அன்பு தவறாக புரிந்துகொள்ளப் படுகிறது (19:1-3)
(ஆ) தாவீதின் வேலையாட்களுக்கு அவமதிப்பு (19:4-5)
(இ) முதலாவது யுத்தம் - சீரியாவின்மீது வெற்றி (19:6-16)
(ஈ) இரண்டாவது யுத்தம் - சீரியா ஒடுக்கப்படுகிறது (19:17-19)
(9) அம்மோனிய யுத்தம் - ரப்பாவின் சங்காரம் (20:1-3)
(10) பெலிஸ்தரோடு மூன்று யுத்தங்கள் - மூன்று அரக்கர்கள் கொல்லப்படுகிறார்கள் (20:4-8)
தாவீதின் கடைசி பாவம்
(1) இஸ்ரவேலை தொகையிடுமாறு கட்டளை (21:1-2)
(2) யோவாபின் எதிர்ப்பு (21:3)
(3) இஸ்ரவேலை தொகையிடுதல் (21:4)
(4) பட்டயம் உருவத்தக்கவர்களின் மொத்த எண்ணிக்கை (21:5-6)
(5) தாவீதின் மனந்திரும்புதல் (21:7-8)
(6) மூன்று தண்டனைகளில் ஏதாவதொன்றை தெரிந்தெடுக்குமாறு தேவன் தாவீதிடம் கூறுகிறார் (21:9-12)
(7) தேவனுடைய கரத்தில் விழுவதை தாவீது தெரிந்தெடுக்கிறான் (21:13)
(8) கொள்ளை நோயினால் 70,000 பேர் மடிந்து போகிறார்கள் (21:14)
(9) தேவன் எருசலேமின்மீது இரக்கம் காண்பிக்கிறார் (21:15)
(10) தாவீது கர்த்தருடைய தூதனைக் கண்டு இரக்கத்திற்காக ஜெபிக்கிறான் (21:16-17)
(11) தேவாலயம் கட்டுவதற்கு தாவீது நிலம் வாங்கி பாவ நிவர்த்தி செய்கிறான் - வாதை நிறுத்தப்படுகிறது (21:18-27)(12) தாவீதின் ஆட்சியில் மோசேயின் கூடாரம் அமைந்துள்ள இடம் (21:28-29)
(13) தாவீது மறுபடியும் தேவனுக்குப் பயப்படுகிறான் (21:30)
தேவாலயம் கட்டுவதற்கு ஆயத்தம்
(1) தேவாலய நிலத்தை தாவீது பிரதிஷ்டை பண்ணுகிறான் (22:1)
(2) தேவாலயம் கட்டுவதற்கு பொருட்களை தாவீது தாராளமாகச் சேர்க்கிறான் (22:2-5)
(3) ஆலயம் கட்டுமாறு தாவீது சாலொமோனுக்கு கட்டளையிடுகிறான் (22:6-16)
(4) சாலொமோனுக்கு உதவிபுரியுமாறு பிரபுக்களுக்கு தாவீது கட்டளையிடுகிறான் (22:17-19)
(5) சாலொமோன் இராஜாவாகிறான் (23:1)
தேவாலயப் பணிவிடைகளுக்கு ஆட்கள் நியமிக்கப் படுகிறார்கள்
(1) இஸ்ரவேலின் மூப்பர்கள் கூடுகிறார்கள் (23:2)
(2) லேவியரின் எண்ணிக்கை - 30 வயதும் அதற்கு மேற்பட்டவர்களும் - 38,000 பேர்கள் (23:3)
(3) லேவியரின் பணிவிடைகள் - 24,000 வேலை விசாரிக்கிறவர்கள் - 6,000 தலைவரும் மணியக்காரரும் -4,000 வாசற்காக்கிறவர்கள் - 4,000
கீதவாத்தியக்காரர்கள் (23:4-6)
(4) கெர்சோனின் குமாரர்கள் (23:7-11)
(5) கோகாத்தின் குமாரர்கள் (23:12-21)
(6) மெராரியின் குமாரர்கள் (23:22-23)
(7) வேலைபார்க்கும் வயதை தாவீது முப்பதிலிருந்து இருபது வயதாக மாற்றுகிறான் (23:24-27)
(8) லேவியரின் பணிவிடை (23:28-32)
(9) ஆசாரியரின் 24 வகுப்புகள் - இவர்களில் இருவர் மட்டுமே ஆரோனின் குமாரர் 23 எலெயாசாரின் குமாரர் 16 - இத்தாமாரின் குமாரர் 8 (24:1-6)
(10) இருபத்தி நான்கு ஆசாரிய வகுப்புகளின் தலைவர்களைச் சீட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கிறார்கள் இவர்களில் லேவியர்கள் இல்லை (24:7-19)
(11) லேவியரும் 24 வகுப்புகளாக சீட்டுப்போட்டு தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள் (24:20-31)
(12) 4,000 கீதவாத்தியக்காரரும் 24 வகுப்புக்களாக சீட்டுப்போட்டு பிரிக்கப்படுகிறார்கள் (25:1-31)
(13) 4,000 வாசற்காக்கிறவர்களும் 24 வகுப்புக்களாக சீட்டுப்போட்டு பிரிக்கப்படுகிறார்கள் இவர்களை 93 தலைவர்கள் ஆளுகைச் செய்தார்கள்
(அ) தேவாலய பணிவிடைக்கு வாசற் காக்கிறவர்கள் (26:1-12)
(ஆ) வாசலுக்கு வாசற்காக்கிறவர்கள் (26:13-19)
(இ) பொக்கிஷங்களுக்கு வாசற் காக்கிறவர்கள் (26:20-28)
சமுதாய சேவைகளுக்கு நியமிக்கப்பட்டோர்
(1) அரசாங்க அலுவல்களைக் கவனிப்பதற்கு தலைவர்களும் மணியக்காரர்களும் (26:29-32)
(2) 288,000 சேர்வைக்காரர்கள் - 12 மாத வகுப்புக்களாக பிரிக்கப்பட்டார்கள் - ஒவ்வொரு பிரிவிலும் 24,000 சேர்வைக்காரர்கள் (27:1-15)
(3) பன்னிரெண்டு கோத்திரத்திரங்களுக்கு தலைவர்களின் நாமங்கள் (27:16-22)
(4) இஸ்ரவேலில் இருபது வயதிற்கு குறைவானவர்கள் தொகையேற்றப் படவில்லை (27:23-24)
(5) தாவீதின் பொருட்களுக்கு விசாரிப்புக்காரர்கள் (27:25-34)
தாவீதின் கடைசி வர்த்தமானங்கள்
(1) தாவீது இஸ்ரவேலரை கூடிவரச்செய்கிறான் (28:1)
(2) இஸ்ரவேலருக்கு தாவீதின் முதலாவது விரிவுரை (28:2-8)
(3) சாலொமோனுக்கு தாவீதின் முதலாவது கட்டளை (28:9-10)
(4) ஆவியினால் தாவீதுக்கு கட்டளையிட்டப்பட்ட தேவாலயத்தின் மாதிரியை சாலொமோனுக்குக் கொடுத்தான் (28:11-12)
(5) ஆவியினால் தாவீதுக்கு கட்டளையிட்டப்பட்ட ஆலயப் பணிவிடை வேலைகளனைத்தையும் சாலொமோனுக்குக் கொடுத்தான் (28:13)
(6) ஆவியினால் தாவீதுக்கு கட்டளையிட்டப்பட்ட தேவாலயத்து பணிமுட்டுகள் அனைத்திற்கும் தேவைப்படும் பொன், வெள்ளி ஆகியவற்றை சாலொமோனுக்குக் கொடுத்தான் (28:14#19)
(7) தாவீது சாலொமோனுக்குக் கொடுத்த இரண்டாவது கட்டளை (28:20-21)
(8) தாவீது இஸ்ரவேலருக்கு ஆற்றிய இரண்டாவது விரிவுரை - தேவாலயத்திற்கு தாவீதின் காணிக்கை - தங்கம், வெள்ளி ஆகியவற்றின் நிறை (29:1-5)
(9) தேவாலயத்திற்கு தலைவர்கள் கொடுத்த வெகுமதிகள் (29:6-9)
(10) தாவீதின் துதியும் ஜெபமும் (29:10-19)
(11) தேவனுக்கு பலியிட ஜனங்கள் கொடுத்தது (29:20-21)
(12) சாலொமோன் இராஜாவானான் # சமஸ்த இஸ்ரவேலரும் ஏற்றுக் கொண்டார்கள் (29:22-25)
(13) தாவீதின் ஆட்சியும் மரணமும் (29:26-28)
(14) தாவீது இராஜாவின் நடபடிகள் (29:29-30)