கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருங்கள்


கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருங்கள்

நீதியின் பலிகளைச் செலுத்தி, கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருங்கள் (சங் 4:5).

 

கர்த்தரிடத்தில் விசுவாசம் வைத்திருக்கிறவர்கள், தங்களுடைய கடமைகளைக் குறித்தும் கவனத்தோடிருக்கவேண்டும். கர்த்தருக்கு நாம் நீதியின் பலிகளைச் செலுத்தவேண்டும். நாம் தீமை செய்யாமலும், பாவம் செய்யாமலும், அவற்றை விட்டு விலகியிருந்தால் மாத்திரம் போதாது. நாம் நன்மை செய்யவும் கற்றுக்கொள்ளவேண்டும். நாம் முதலாவதாக கர்த்தருக்கு நம்மையே பலியாகச் செலுத்தவேண்டும். இதன் பின்பு நம்மால் செலுத்தக்கூடிய நேர்த்தியான பலிகளை கர்த்தருக்குச் செலுத்தவேண்டும்

 

நம்முடைய இருதயம் சுத்தமானதாகவும் நேர்மையானதாகவும் இருக்கவேண்டும். நம்முடைய ஆராதனையும், ஸ்தோத்திரங்களும், துதிகளும் பலிகளும், நம்முடைய பரிசுத்தமான இருதயத்திலிருந்து புறப்பட்டு வரவேண்டும். கர்த்தரைப்பற்றி நாம் நம்முடைய பரிசுத்தமான இருதயத்தில் தியானம்பண்ணவேண்டும். நாம் மற்றவர்களுக்கு உதவிபுரிவதன் மூலமாக, கர்த்தருக்கு நீதியின் பலிகளைச் செலுத்தலாம்





Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.