எஸ்றா புத்தகம் அறிமுகம்
பாபிலோன் தேசத்து சிறையிருப்புக்குப்போன யூதர்கள் எழுபது வருஷங்களுக்கு பின்பு, தங்கள் சொந்த தேசத்திற்கு திரும்பி வருவார்கள் என்று எரேமியா தீர்க்கதரிசனமாகச் சொன்னார். எரேமியா சொன்ன தீர்க்கதரிசனம் நிறைவேறுகிற சம்பவம் இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது
சுவிசேஷ சபையானது புதிய ஏற்பாட்டு பாபிலோனிலிருந்து விடுதலை பெறும் என்பதற்கு யூதாதேசத்தார் பாபிலோன் தேசத்து சிறையிருப்பிலிருந்து விடுதலை பெற்றது. அடையாளமாயிருக்கிறது.
பாலஸ்தீன தேசத்தில் கி.மு. 546 - 461 ஆகிய வருஷக்காலத்தில் இந்தப் புஸ்தகம் எழுதப்பட்டிருக்கிறது. மறுஜாதி ஸ்திரீகளை விவாகம் பண்ணியவர்கள் தங்களுடைய ஸ்திரீகளைத் தள்ளிவிட்ட பின்பு, இந்தப் புஸ்தகம் எழுதப்பட்டிருக்கிறது.
யூதமார்க்கத்தின் பாரம்பரியம் எஸ்றாவே இந்தப் புஸ்தகத்தின் ஆசிரியர் என்று கூறுகிறது. இந்தப் புஸ்தகத்தின் முதலாவது பகுதி (எஸ்றா 1-6) பொது ஆவணங்களிலிருந்து தொகுக்கப்பட்டதாகும். இந்தப் புஸ்தகத்தின் மீதமுள்ள பகுதி (எஸ்றா 7-10) தன்னிலை மறுபெயரில் (ச்ண்ழ்ள்ற் ல்ங்ழ்ள்ர்ய் ) எழுதப்பட்டிருக்கிறது
எஸ்றா எருசலேமுக்கு வந்த பின்பு, நடைபெற்ற நிகழ்ச்சிகள் இந்தப் புஸ்தகத்தில்
சேர்க்கப்பட்டிருக்கிறது. எஸ்றாவின் புஸ்தகமும், தானியேலின் புஸ்தகமும் பல விஷயங்களில் ஒத்திருக்கிறது. இவர்கள் இருவருமே பாபிலோனிய
தேசத்து சிறையிருப்பிலிருந்த யூதர்கள்.
எஸ்றா பிரதான ஜெபாலயத்தின் தலைவராக இருந்தார் இவர் இந்தப் புஸ்தகத்தை எழுதியதோடு யூதமார்க்கத்தின் வேதநூலையும் தொகுத்தார் யூதமார்க்கத்தார் இந்தப் புஸ்தகத்தை எஸ்றாவே எழுதியதாகக் கூறுகிறார்கள்
பாபிலோன் தேசத்து சிறையிருப்பிலிருந்து இஸ்ரவேலின் எல்லாக் கோத்திரத்தாரும் எருசலேமுக்குத் திரும்பி வருகிறார்கள். தேவாலயம் மறுபடியும் திரும்பக் கட்டப்படுகிறது. பாலஸ்தீன தேசத்தைச் சுற்றிலுமுள்ள புறஜாதியாரிடமிருந்து வேறுபிரிந்து ஜீவிப்பதில் இஸ்ரவேல் புத்திரருக்குப் பல இடையூறுகள் உண்டாயிற்று
இஸ்ரவேல் புத்திரர் புறஜாதியார் மத்தியில் சிதறடிக்கப்பட்ட பின்பு, மறுபடியும் எருசலேமுக்குத் திரும்பி வந்து, மகா சபையாகக் கூடுகிறார்கள் மோசேயின் பிரமாணத்தின்படி ஜீவிப்பதற்கு இவர்கள் பல ஆவிக்குரிய மறுமலர்ச்சியின் வழியாகச் செல்ல வேண்டியிருக்கிறது. கர்த்தருடைய பிரமாணத்திற்குச் சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்த யூதர்கள் உடன்பட்டு, கர்த்தரோடு உடன்படிக்கை செய்து கொள்கிறார்கள்
எஸ்றா புஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கிற சரித்திர சம்பவங்களெல்லாவற்றையும் எஸ்றா ஆவணங்களாக பாதுகாத்து வைத்திருக்கிறார். இந்த சரித்திரம் பின்வரும் சந்ததியாருக்கு தெரியவேண்டும் என்பதற்காக, எஸ்றா இதைத் தொகுத்து இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறார் எஸ்றாவைப்பற்றிய விவரங்கள் இந்தப் புஸ்தகத்தின் ஏழாவது அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது இதில் எஸ்றாவே தன்னைப்பற்றி விரிவாகச் சொல்லுகிறார்
எஸ்றாவின் புஸ்தகத்தில் நான்கு பாகங்கள் உள்ளன அவையாவன
1. யூதர்கள் தங்கள் சிறையிருப்பிலிருந்து திரும்பி வருகிறார்கள் (எஸ்றா 1,2 ஆகிய அதிகாரங்கள்)
2. சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்த யூதர்கள் எருசலேமிலே கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுகிறார்கள். அவர்கள் எதிர்ப்புக்களை சந்திக்கிறார்கள். கர்த்தருடைய உதவியினால் சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தவர்கள் கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டி முடிக்கிறார்கள் (எஸ்றா 3-6 ஆகிய அதிகாரங்கள்).
3. எஸ்றா எருசலேமுக்கு வருகிறார் (எஸ்றா 7,8 ஆகிய அதிகாரங்கள்)
4. எஸ்றாவின் ஊழியம். மறுஜாதி ஸ்திரீகளை தள்ளிவிடுகிறார்கள் (எஸ்றா 9,10 ஆகிய அதிகாரங்கள்)
பாலஸ்தீன தேசத்தில் கி.மு. 546 - 461 ஆகிய வருஷக்காலத்தில் இந்தப் புஸ்தகம் எழுதப்பட்டிருக்கிறது. மறுஜாதி ஸ்திரீகளை விவாகம் பண்ணியவர்கள் தங்களுடைய ஸ்திரீகளைத் தள்ளிவிட்ட பின்பு, இந்தப் புஸ்தகம் எழுதப்பட்டிருக்க வேண்டும்
யூதமார்க்கத்தின் பாரம்பரியம் எஸ்றாவை இந்தப் புஸ்தகத்தின் ஆசிரியர் என்று கூறுகிறது. இந்தப் புஸ்தகத்தின் முதலாவது பகுதி (எஸ்றா 1-6) பொது ஆவணங்களிலிருந்து தொகுக்கப்பட்டதாகும். இந்தப் புஸ்தகத்தின் மீதமுள்ள பகுதி (எஸ்றா 7-10) தன்னிலை மறுபெயரில் எழுதப் பட்டிருக்கிறது. எஸ்றா எருசலேமுக்கு வந்த பின்பு, நடைபெற்ற நிகழ்ச்சிகள் இந்தப் புஸ்தகத்தில் சேர்க்கப் பட்டிருக்க வேண்டும் எஸ்றாவின் புஸ்தகமும், தானியேலின் புஸ்தகமும் பல விஷயங்களில் ஒத்திருக்கிறது. இவர்கள் இருவருமே பாபிலோனிய தேசத்து சிறையிருப்பிலிருந்த யூதர்கள்.
எஸ்றா பிரதான ஜெபாலயத்தின் தலைவராக இருந்தார் இவர் இந்தப் புஸ்தகத்தை எழுதியதோடு யூதமார்க்கத்தின் வேதநூலையும் தொகுத்தார் யூதமார்க்கத்தார் இந்தப் புஸ்தகத்தை எஸ்றாவே எழுதியதாகக் கூறுகிறார்கள்
பாபிலோன் தேசத்து சிறையிருப்பிலிருந்து இஸ்ரவேலின் எல்லாக் கோத்திரத்தாரும் எருசலேமுக்குத் திரும்பி வருகிறார்கள் தேவாலயம் மறுபடியும் திரும்பக் கட்டப்படுகிறது. பாலஸ்தீன தேசத்தைச் சுற்றிலுமுள்ள புறஜாதியாரிடமிருந்து வேறுபிரிந்து ஜீவிப்பதில் இஸ்ரவேல் புத்திரருக்குப் பல இடையூறுகள் உண்டாயிற்று. இஸ்ரவேல் புத்திரர் புறஜாதியார் மத்தியில் சிதறடிக்கப்பட்ட பின்பு மறுபடியும் எருசலேமுக்குத் திரும்பி வந்து, மகா சபையாகக் கூடுகிறார்கள். மோசேயின் பிரமாணத்தின்படி ஜீவிப்பதற்கு இவர்கள் பல ஆவிக்குரிய மறுமலர்ச்சியின் வழியாகச் செல்ல வேண்டியிருக்கிறது. கர்த்தருடைய பிரமாணத்திற்குச் சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்த யூதர்கள் உடன்பட்டு, கர்த்தரோடு உடன்படிக்கை செய்து கொள்கிறார்கள்
பொருளடக்கம்
மீதியாய் இருக்கிறவர்கள் திரும்பி வருகிறார்கள்
1. கோரேசின் ஆணை (1:1-4)
2. பாபிலோனிலிருந்து திரும்பி வருவதற்கு ஆயத்தம் (1:5-11)
3. மீதியாய் இருக்கிறவர்கள் திரும்பி வருகிறார்கள் - செருபாபேலோடு முதலாவது வந்தவர்கள்
(1) ஜனங்கள் - 24,193 பேருக்கும் அதிகமானோர் (2:1-35)
(2) பாபிலோனிலிருந்து திரும்பி வந்த ஆசாரியர்கள் - 4,289 ஆசாரியர்களுக்கும் அதிகமானோர் (2:36-39)
(3) பாபிலோனிலிருந்து திரும்பி வந்த லேவியர்கள் - 341 லேவியர்களுக்கும் அதிகமானோர் (2:40-42)
(4) நிதறீமியர்களும் சாலொமோனின் வேலையாட்களும் - 392 பேருக்கும் அதிகமானோர் (2:43-58)
(5) பூர்வோத்திரத்தை சொல்லமாட்டாமல் இருந்தவர்கள் (2:59-60)
(6) பூர்வோத்திரத்தை சொல்லமாட்டாமல் இருந்த ஆசாரியர்கள் (2:61-63)
(7) சபையாரின் மொத்த எண்ணிக்கை -7,337 வேலைக்காரர்கள், 200 பாடகர்கள் தவிர 42,360 பேர் (2:64-65)
(8) அவர்களுடைய சொத்துக்களும் வெகுமதிகளும் (2:66-70)
ஆராதனை மறுபடியும் ஆரம்பமாகிறது
1. பலிபீடம் கட்டப்படுகிறது (3:1-3)
2. பண்டிகைகளையும் மாதப்பிறப்புகளையும் மறுபடியும் ஆசரிக்கிறார்கள் (3:4-5)
3. தேவாலயத்தை மறுபடியும் கட்டுவதற்கு ஆயத்தங்கள் (3:6-7)
4. தேவாலயத்திற்கு அஸ்திபாரம் போடுகிறார்கள் - மகா சத்தமிட்டு அழுது கெம்பீர சந்தோஷமாய் ஆர்ப்பரித்தார்கள் (3:8-13)
புதுப்பிக்கும் வேலை தடைப்படுகிறது
1. நட்பு ஒப்பந்தத்தின்மூலமாக யூதாவை பலவீனப்படுத்தும் முயற்சி (4:1-3)
2. தேவாலயத்தைக் கட்டுவதில் பல்வேறு தடைகள் (4:4-5)
3. குற்றச்சாட்டுகளினால் தேவாலயம்
புதுப்பிக்கப்படுவது தடைபடுகிறது - அகாஸ்வேரு இராஜாவுக்கு பிரியாது எழுதினார்கள் (4:6)
4. தேவாலய வேலையைத் தடுக்குமாறு அர்தசஷ்டா இராஜாவுக்கு எழுதப்பட்ட மனு (4:7-10)
5. அர்தசஷ்டா இராஜாவுக்கு அனுப்பின மனுவின் நகல் (4:11-16)
6. அர்தசஷ்டா இராஜாவின் ஆணை - தேவாலய கட்டுமான வேலையை இராஜா நிறுத்தச் சொல்லுகிறான் (4:17-22)
7. தேவாலய கட்டுமான வேலை நிறுத்தப்படுகிறது (4:23-24)
தேவாலய புதுப்பிக்கும் வேலை துவங்குகிறது
1. தீர்க்கதரிசனத்தின் மூலமாக தேவாலய வேலை மறுபடியும் துவங்குகிறது (5:1-2)
2. கட்டுமான வேலைகளை மறுபடியும் தடுப்பதற்கு யூதர்களின் விரோதிகள் முயற்சி பண்ணுகிறார்கள் (5:3-5)
3. தேவாலய வேலையை நிறுத்துவதற்கு ஆணையிடுமாறு தரியு இராஜாவுக்கு கடிதம் எழுதுகிறார்கள் (5:6-17)
4. கோரேசு இராஜாவின் ஆணையை தரியு இராஜா உறுதிபண்ணுகிறான் (6:1-12)
5. தீர்க்கதரிசனத்தின் மூலமாக தேவாலயம் புதுப்பிக்கும் பணி வேகமாக நடைபெறுகிறது (6:13-14)
6. தேவாலயம் புதுப்பிக்கும் பணி நிறைவு பெறுகிறது - பலிகளாலும், சந்தோஷத்தினாலும் தேவாலயத்தைப் பிரதிஷ்டை பண்ணுகிறார்கள் (6:15#18)
7. பஸ்காவை மறுபடியும் ஆசரிக்கிறார்கள் (6:19-21)
8. புளிப்பில்லா அப்பப்பண்டிகையை சந்தோஷத்தோடு ஆசரிக்கிறார்கள் (6:22)
எஸ்றாவோடு பாபிலோனிலிருந்து பிரிந்து வந்தவர்கள்
1. எஸ்றாவின் வம்ச வரலாறு (7:1-5)
2. ஆசாரியனும் வேதபாரகனுமாகிய எஸ்றா - இராஜாவுக்கு பிரியமானவன் (7:6)
3. இரண்டாவது பிரயாணத்தின் காலம் (7:7-10)
4. எஸ்றாவுக்கும் அவனோடு கூட வருவோருக்கும் உதவியாக அர்தசஷ்டா இராஜாவின் ஆணை (7:11-26)
5. இராஜாவின் ஷேமத்திற்காக எஸ்றா தேவனை ஆராதிக்கிறான் (7:27-28)
6. எஸ்றாவோடு கூடவந்தவர்கள் -1,754 புருஷர்களுக்கும் மேலானோர் (8:1-14)
7. புதிதாக பணி அமர்த்தப்பட்டோர் - லேவியரும் நிதறீமியரும் (8:15-20)
8. விரோதிகளிடமிருந்து தேவன் தங்களைப் பாதுகாக்க வேண்டுமென்று ஜெபமும், உபவாசமும் (8:21#23)
9. தேவாலய பொக்கிஷங்களுக்காக தெரிந்தெடுக்கப்பட்ட பன்னிரெண்டு காணிக்கைகள் (8:24-30)
10. நான்கு மாதங்களுக்குப் பிறகு எருசலேமிற்கு வந்து சேருகிறார்கள் (8:31-32)
11. தேவனுடைய ஆலயத்திற்குப் பொக்கிஷங்களைக் கொடுக்கிறார்கள் (8:33-35)
12. பல்வேறு தேசாதிபதிகளுக்கு இராஜாவின் ஆணையைக் கொடுக்கிறார்கள் (8:36)
எஸ்றாவின் காலத்தில் ஆவிக்குரிய எழுப்புதல்
1. பாவம் கண்டுபிடிக்கப்படுகிறது (9:1-2)
2. பாவத்திற்காக உண்மையான மனம் வருந்துதல் (9:3-4)
3. பாவத்திற்காக உண்மையான ஜெபமும் பாவ அறிக்கையும் (9:5-15)
4. பாவத்தை விட்டு விலகி வேறுபிரிதல் - பாவ அறிக்கையின் உண்மையான விளைவு (10:1-5)
5. இஸ்ரவேலர் அனைவருக்காகவும் எஸ்றா தொடர்ந்து உபவாசித்து ஜெபிக்கிறான் (10:6)
6. சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் எல்லாரும் எருசலேமிலே கூட வேண்டுமென்று விளம்பரம் பண்ணினார்கள் (10:7-8)
7. தேவனுக்கும் எஸ்றாவுக்கும் முன்பாக இஸ்ரவேலர் எல்லாரும் கூடிவந்தார்கள் (10:9)
8. மறுஜாதியான ஸ்திரீகளை விவாகம் பண்ணியவர்கள் அவர்களை விட்டுப் பிரிய வேண்டுமென்று எஸ்றா பிரசங்கம் பண்ணினான் (10:10-11)
9. எஸ்றாவின் பிரசங்கத்தினால் ஜனங்களிடத்தில் ஏற்பட்ட விளைவு உடன்படிக்கை (10:12-14)
10. மறுஜாதியான ஸ்திரீகளை விவாகம் பண்ணியவர்களை இரண்டு மாதங்களளவும் விசாரித்தார்கள் (10:15-17)
11. மறுஜாதியான ஸ்திரீகளை விவாகம் பண்ணியவர்கள் (10:18-44)