2 ராஜாக்கள் அறிமுகம்

2இராஜாக்கள் அறிமுகம்

 

செப்துவஜிந்த் பதிப்பில், 2இராஜாக்கள் புஸ்தகம் சாமுவேல் புஸ்தகத்தின் தொடர்ச்சியாக கோர்க்கப்பட்டிருக்கிறது. ஆகையினால் இந்தப் புஸ்தகம் செப்துவஜிந்தில் 4#சாமுவேல் என்று அல்லது 4-இராஜாக்கள் என்று பொருள்படுமாறு அழைக்கப்படுகிறது

 

இராஜாக்கள் புஸ்தகத்தின் ஆரம்ப வசனம், 1இராஜா 22:51-ஆவது வசனத்திலிருந்து ஆரம்பமாவது மிகவும் சிறப்பாகயிருக்கும். இந்த வசனத்தில் அகசியா ராஜாவின் ராஜ்யபாரம் ஆரம்பமாகிறது

 

இராஜாக்கள் புஸ்தகத்தில் இஸ்ரவேல் தேசத்தின் மகிமையான ஆரம்பத்தைப்பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் இஸ்ரவேல் ராஜ்யம் சமஸ்த இஸ்ரவேல் தேசமாக இருந்தது. அதன் பின்பு அது வடக்கு இஸ்ரவேல் தேசம் என்றும், தெற்கு யூதாதேசம் என்றும் இரண்டாகப் பிரிந்தது

 

1இராஜாக்கள் புஸ்தகத்தில் தீர்க்கதரிசியாகிய எலியாவின் ஊழியம் விரிவாகச்

சொல்லப்பட்டிருக்கிறது 2இராஜாக்கள்

புஸ்தகத்தில் தீர்க்கதரிசியாகிய எலிசாவின் ஊழியம் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது

 

தீர்க்கதரிசிகளாகிய எலியாவும், எலிசாவும், தங்கள் காலத்தில் ராஜ்யபாரம்பண்ணின ராஜாக்களைவிட மிகவும் முக்கியமானவர்களாயிருந்தார்கள். ஆகையினால் இஸ்ரவேலின் சரித்திரத்தில் இவ்விரண்டு தீர்க்கதரிசிகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது

 

எலியா வானத்திலிருந்து அக்கினியை வரவழைக்கிறார். அவர் அக்கினியிலே வானத்திற்கு ஏறிப்போகிறார் (2 இராஜா 1,2 ஆகிய அதிகாரங்கள்).

 

எலிசா அநேக அற்புதங்களை செய்கிறார் இஸ்ரவேலின் ராஜாவுக்கு முன்பாகவும், இஸ்ரவேல் ஜனங்களுக்கு முன்பாகவும், அந்நிய தேசத்தார் முன்பாகவும் எலிசா அற்புதங்களை செய்கிறார் (2 இராஜா 3-7 ஆகிய அதிகாரங்கள்).

 

ஆசகேலும் யெகூவும்

அபிஷேகம்பண்ணப்படுகிறார்கள். இஸ்ரவேலை சீர்திருத்துவதற்கு ஆசகேலும், ஆகாபின் குடும்பத்தாரையும், பாகால் ஆராதனையையும் அழிப்பதற்கு யெகூவும் அபிஷேகம்பண்ணப்படுகிறார்கள் (2 இராஜா 8-10 ஆகிய அதிகாரங்கள்)

 

யூதாதேசத்தையும், இஸ்ரவேல் தேசத்தையும் ராஜ்யபாரம் பண்ணின பல்வேறு ராஜாக்களின் சரித்திரம் (2 இராஜா 11-16 ஆகிய அதிகாரங்கள்)

 

வடக்கு இஸ்ரவேல் தேசத்தாராகிய பத்துக்கோத்திரத்தாரின் சிறையிருப்பு (2 இராஜா 17 ஆவது அதிகாரம்)

 

எசேக்கியாவின் மகிமையான ஆட்சிக்காலம் இராஜா 18#20 ஆகிய அதிகாரங்கள்). மனாசேயின் துன்மார்க்கமான ராஜ்யபாரமும், யோசியாவின் நல்ல ராஜ்யபாரமும் (2 இராஜா 21-23 ஆகிய அதிகாரங்கள்)

 

பாபிலோன் ராஜா எருசலேமை அழித்துப்போடுகிறான் (2இராஜா 24-25 ஆகிய அதிகாரங்கள்).

 

1இராஜாக்கள், 2 இராஜாக்கள் ஆகிய இரண்டு புஸ்தகங்களும் பாலஸ்தீன தேசத்தில் சுமார் கி.மு. 1046

 

ஆகிய வருஷக் காலத்தில் எழுதப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ராஜாக்களின் ஆட்சிக் காலத்திலும் ஊழியம் செய்து வந்த தீர்க்கதரிசிகள் அல்லது சம்பிரதிகள் அந்தந்தக் காலங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை எழுதினார்கள் இந்த ஆவணங்களையெல்லாம் ஒன்றுசேர்த்து, பிற்காலத்து ஆசிரியர்கள் அதை"ராஜாக்கள்" என்னும் ஒரே புஸ்தகமாகத் தொகுத்தார்கள்

 

கி.மு. 294 - 289 ஆகிய வருஷங்களில் எபிரெய மொழியின் பழைய ஏற்பாடு கிரேக்க மொழியில் மொழிபெயர்க்கப் பட்டு, செப்துவஜிந்த் பதிப்பு வெளிவந்தது. செப்துவஜிந்தில் ராஜாக்கள் புஸ்தகம் இராஜாக்கள், 2 இராஜாக்கள் என இரண்டு புஸ்தகங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. ராஜாக்கள் புஸ்தகங்களைத் தொகுத்து எழுதியவர்கள் ஏசாயா எரேமியா ஆகிய தீர்க்கதரிசிகளாக இருக்க வேண்டும் கி.மு. 743 - 683, கி.மு. 782 - 606 ஆகிய வருஷக்காலத்தில் ராஜாக்கள் புஸ்தகம் தொகுத்து நிறைவு செய்யப்பட்டிருக்க வேண்டும்

 

ஏசாயாவும், எரேமியாவும் இஸ்ரவேலுடைய ராஜாக்களின் நடபடிகளைத் தொகுத்தார்கள். நாத்தான் காத், இத்தோ, அகியா, யெகூ ஆகியோர் ராஜாக்களின் நடபடிகளை அந்தந்த காலத்தில் எழுதி வைத்திருந்தார்கள் (2நாளா 9:29; 2நாளா 12:15; 2நாளா 20:34; நாளா 26:22; 2நாளா 32:22).

 

யூதருடைய பாரம்பரிய வரலாற்றின் பிரகாரம் எரேமியாவே ராஜாக்கள் புஸ்தகத்தின் தொகுப்பாசிரியர் என்பது தெரிய வருகிறது. ஆனால் 2நாளா 32:32 ஆவது வசனத்தில் ஏசாயா இதை எழுதியதாகக் குறிப்பு உள்ளது. எசேக்கியாவின் காலம் வரையிலும் ஏசாயா ராஜாக்களின் புஸ்தகத்தை எழுதியிருக்க வேண்டும் (1 இராஜா 1:1 - 2 இராஜா 20:21) அதற்குப் பிற்பட்ட காலத்திலிருந்து சிறையிருப்புக்காலம் வரையிலுமுள்ள வரலாற்றை எரேமியா எழுதி இந்தப் புஸ்தகத்தை நிறைவு செய்திருக்க வேண்டும். (2 இராஜா 21-25)

 

சாலொமோனின் காலத்திலிருந்து பாபிலோனின் சிறையிருப்புக் காலம் வரையிலுமுள்ள இஸ்ரவேல், யூதா, ஆகிய ராஜாக்களின் வரலாற்றில், 413 வருஷங்களில் நடைபெற்ற வரலாறு இதில் எழுதப்பட்டிருக்கிறது

 

தாவீதின் ராஜ்யம் தொடர்ந்து நிலைத்து நிற்காமல் போனதற்குக் காரணமும், இஸ்ரவேல் தேசம் அந்நியருடைய சிறையிருப்புக்குப் போனதற்குக் காரணமும் இந்தப் புஸ்தகத்தில் விவரிக்கப்பட்டிருக்கிறது

 

பொருளடக்கம்

 

 அகசியாவின் ஆட்சி - இஸ்ரவேலின் ஒன்பதாவது இராஜா - இரண்டு வருஷங்கள்

 

1. மோவாபின் கலகமும் அகசியாவின் நோயும் (1:1-2)

2. அகசியாவின் மரணத்தை எலியா முன்குறித்து கூறுகிறார் (1:3-8)

3. வானத்திலிருந்து அக்கினியிறங்கி 102 பேரை பட்சித்தது (1:9-14)

4. எலியா தன்னுடைய தீர்க்கதரிசனத்தை அகசியாவிடம் கூறுகிறான் (1:15-16)

5. அகசியாவின் மரணம் - யோராம் அரசனானான் - இஸ்ரவேலின் பத்தாவது இராஜா (1:17-18)

6. எலியா எடுத்துக்கொள்ளப்படுவதை வெளிப்படுத்துகிறான் (2:1-6)

7. யோர்தான் இருபாகமாக பிரிந்தது (2:7-8)

8. எலியாவினுடைய ஆவியின் வரம், எலிசாவுக்கு இரட்டிப்பாக கிடைத்தது (2:9-10)

9. எலியா எடுத்துக்கொள்ளப்படுகிறான் (2:11-12) 

 

 எலிசாவின் ஊழியம்

 

1. எலிசாவின் முதலாவது அற்புதம் (2:13-15)

2. தீர்க்க தரிசிகளின் அவிசுவாசம் (2:16-18)

3. தண்ணீரும் வறண்ட நிலமும் ஆரோக்கியமாயிற்று இரண்டாவது அற்புதம் (2:19-22)

4. பிள்ளைகள் நிந்தித்ததற்கு சாபம் # மூன்றாவது அற்புதம் (2:23-25)

5. யோராமின் இராஜ்ஜியபாரமும் அவனுடைய குணமும் # இஸ்ரவேலின் பத்தாவது இராஜா (3:1-3)

6. மோவாபின் கலகம் # யோராமும் யோசபாத்தும் உடன்படிக்கை பண்ணுகிறார்கள் (3:4-9)

7. யோராமும் யோசபாத்தும் உடன்படிக்கை பண்ணுவதை எலிசா ஏற்றுக் கொள்ள வில்லை (3:10-15)

8. மழையில்லாமல் தண்ணீரும் வெற்றியின் வாக்குத்தத்தமும் #4, 5ஆவது அற்புதங்கள் (3:16-20)

9. தண்ணீர் இரத்தம்போல சிவப்பாக காணப்பட்டது # ஆறாவது அற்புதம் (3:21-23)

10. மோவாபியரின் தோல்வி (3:24-27)

11. விதவையின் எண்ணெய் பெருகிற்று (4:1-7)

12. சூனேமில் கனம்பொருந்திய ஸ்திரீ எலிசாவுக்கு விருந்து உபசரிக்கிறாள் (4:8-11)

13. சூனேமிய ஸ்திரீக்கு ஒரு ழந்தை பிறக்கிறது # எட்டாவது அற்புதம் (4:12-17)

14. சூனேமிய ஸ்திரீயின் குழந்தையின் வியாதியும் மரணமும் (4:18-21)

15. கர்மேல் மலையில் சூனேமிய ஸ்திரீ எலிசாவைக் கண்டுபிடிக்கிறாள் (4:22-27)

16. சூனேமிய ஸ்திரீயின் வீட்டிற்கு எலிசா அவளோடு வருகிறான் (4:28-31)

17. சூனேமிய ஸ்திரீயின் குமாரனை எலிசா உயிரோடு எழுப்புகிறான் # ஒன்பதாவது அற்புதம் (4:32-37)

18. பானையிலிருந்த விஷத்தை எலிசா அகற்றுகிறான் # பத்தாவது அற்புதம் (4:38-41)

19. நூறு மனுஷருக்கு உணவு பெருகுகிறது 2- 11வது அற்புதம் (4:42-44)

20. நாகமானின் குஷ்டரோகத்தை குணப்படுத்துகிறான் -12வது அற்புதம் (5:1&14)

21. எலிசாவுக்கு வெகுமதி கொடுக்க நாகமான் திரும்பி வந்து இஸ்ரவேலின் தேவனிடத்தில் தனக்குள்ள பக்தியை வெளிப்படுத்துகிறான் (5:15-19)

22. கேயாசின் பொய்யும், ஏமாற்றும் (5:20-24)

23. கேயாசின் ஏமாற்று வெளிப்படுவதும், அவனுக்கு வாதையும் (5:25-27)

24. எலிசா இரும்பை மிதக்க வைக்கிறான் (6:1-7)

25. எட்டாவது சீரிய யுத்தம் - இரகசியங்களை வெளிப்படுத்துதல் -16, 17, 18ஆகிய அற்புதங்கள் (6:8-12)

26. ஒன்பதாவது சீரிய யுத்தம் - எலிசா தன் ஊழியக்காரரின் கண்களைத் திறக்கிறான் # பத்தொன்பதாவது அற்புதம் (6:13-17)

27. எலிசா சீரியருடைய சேனைகளின் கண்களை குருடாக்கி அவர்களைப் பிடிக்கிறான் # 20, 21ஆகிய அற்புதங்கள் (6:18-19)

28. எலிசா சீரியருடைய சேனையின் குருடை குணமாக்குகிறான் # 22வது அற்புதம் (6:20-23)

29. சீரியர் சமாரியாவை முற்றுகையிடுகிறார்கள் - இஸ்ரவேலில் மனுஷரை தின்கிறார்கள் - பத்தாவது சீரிய யுத்தம் (6:24-29)

30. இந்த பிரச்சனையினால் யோராம் எலிசாவை குற்றப்படுத்துகிறான் (6:30-31)

31. எலிசா அறிவை உணர்த்தும் வசனத்தை பயன்படுத்துகிறான் (6:32-33)

32. அவிசுவாசிகளுக்கு உணவும் மரணமும் (7:1-2)

33. சீரியருடைய இராணுவம் வெறுமையாக இருப்பதை நான்கு குஷ்டரோகிகள் காண்கிறார்கள் (7:3-5)

34. சீரியருடைய குழப்பமும் தப்பித்து ஓடுவதும் (7:6-8)

35. நான்கு குஷ்டரோகிகள் இராஜாவிடம் நடந்ததைக் கூறுகிறார்கள் # விசாரணை ஆரம்பமாகிறது (7:9-15)

36. எலிசாவின் தீர்க்கதரிசனம் நிறைவேறுகிறது (7:16-20)

37. ஏழு வருஷங்களாக வானம் அடைக்கப் படுகிறது (8:1-2)

38. சூனாமிய ஸ்திரீயின் சுதந்தரத்தை யோராம் மீட்டுத் தருகிறான் (8:3-6)

39. வெளிப்படுத்துதலின் மூன்று அற்புதங்கள் (8:7-15)

 

 யூதாவின் இராஜா

 

1. யோராமின் ஆட்சி, யூதாவின் ஐந்தாவது இராஜா, எட்டு வருஷங்கள்

 

(1) அவனுடைய குணாதிசயங்கள் (8:16-19)

(2) ஏதோமியரும் லிப்னா பட்டணத்தாரும் கலகம் பண்ணினார்கள் (8:20-22)

(3) யோராமின் மரணம் # அகசியா இராஜாவானான் (8:23-24)

 

2. அகசியாவின் ஆட்சி - யூதாவின் ஆறாவது இராஜா # ஒரு வருஷம்

 

(1) அவனுடைய குணாதிசயங்கள் (8:25-27)

(2) இஸ்ரவேலின் யுத்தங்களில் யோராமுக்கு அகசியா உதவி செய்கிறான் - பதினொறாவது சீரிய யுத்தம் (8:28-29)

 

யெகூவின் ஆட்சி - இஸ்ரவேலின் பதினொறாவது இராஜா - இருபத்தெட்டு வருஷங்கள்

 

1. அவனுடைய அபிஷேகம் (9:1-3)

2. ஆகாபின் வீட்டார் அனைவரையும் அழிக்கும் யெகூவின் கட்டளை (9:4-10)

3. இஸ்ரவேலின் இராணுவத்தினர் யெகூவை இராஜாவாக அறிவிக்கிறார்கள் (9:11-13)

4. இஸ்ரவேலின் இராஜாவாகிய யோராமை யெகூ கொன்றுபோடுகிறான் # உள்நாட்டு குழப்பம் (9:14-26)

5. யூதாவின் இராஜாவாகிய அகசியாவை யெகூ கொன்று போடுகிறான் (9:27-29)

6. யெகூ யேசபேலை கொன்றுபோடுகிறான் (9:30-37)

7. யெகூ ஆகாபின் குமாரரை கொன்று போடுகிறான் (10:1-11)

8. ஆகாபின் குமாரத்தியின் சந்ததியாரையும் யூதாவின் பிரபுக்களையும் யெகூ கொன்றுபோடுகிறான் (10:12-14)

9. ஆகாபின் வீட்டாரில் மீதமுள்ளோரை யெகூ கொன்று போடுகிறான் (10:15-17)

10. பாகாலை வழிபடுவோர் எல்லோரையும் யெகூ கொன்று போடுகிறான் - அவர்களுடைய தெய்வங்களைச் சுட்டெரிக்கிறான் (10:18-28)

11. யெகூ விக்கிரகராதானையை தொடர்கிறான் (10:29-31)

12. இஸ்ரவேலின்மீது தேவன் தமது நியாயத்தீர்ப்பை துவங்குகிறார் - தேசத்தை விட்டு அவர்களைத் துரத்துகிறார் (10:32-33)

13. யெகூவின் மரணம் # யோவாகாஸ் இராஜாவானான் - இஸ்ரவேலின் பன்னிரெண்டாவது இராஜா (10:34-36)

 

 யூதாவின் இராஜாக்கள்

 

1. அத்தாலியாளின் அரசாட்சி # யூதாவிலும் இஸ்ரவேலிலும் ஒரே பெண் ஆட்சியாளர்

 

(1) ஆட்சிக்கு வருவதும் அவளுடைய சுபாவமும் (11:1-3)

(2) யோய்தாவின் கலகம் (11:4-12)

(2) யோய்தாவின் கலகம் (11:4-12)

(3) அத்தாலியாள் கொலைசெய்யப் படுகிறாள் (11:13-16)

(4) யோய்தாவின் மூலமாக எழுப்புதல் (11:17-21)

 

2. யோவாஸ் அல்லது யோவாகாசின் ஆட்சி - யூதாவின் ஏழாவது இராஜா # நாற்பது வருஷங்கள்

 

(1) யூதாவின் மூன்றாவது நல்ல இராஜா (12:1-3)

(2) விசுவாசமில்லாத ஆசாரியர்கள் (12:4-8)

(3) தேவாலயம் பழுதுபார்க்கப்படுகிறது (12:9)

(4) தேவாலய பராமரிப்புக்கு வசூலித்த காணிக்கைகள் (12:10-16)

(5) யோவாஸ் எருசலேமை மீட்கிறான் - பன்னிரெண்டாவது சீரிய யுத்தம் (12:17-18)

(6) யோவாசின் மரணம் - அமத்சியா இராஜாவானான் # யூதாவின் எட்டாவது இராஜா (12:19-21)

 

இஸ்ரவேல் யூதா ஆகியவற்றின் இராஜாக்கள்

 

1. யோவாகாசின் ஆட்சி # இஸ்ரவேலின் பன்னிரெண்டாவது இராஜா # பதினேழு வருஷங்கள்

 

(1) ஆட்சிக்கு வருவதும் அவனுடைய சுபாவமும் (13:1-2)

(2) சீரியர்கள் இஸ்ரவேலரை ஒடுக்குகிறார்கள் - பதினான்காவது சீரிய யுத்தம் (13:3-7)

(3) யோவாகாசின் மரணம் - யோவாஸ் இராஜாவானான் - இஸ்ரவேலின் பதிமூன்றாவது இராஜா (13:8-9)

 

2. யோவாசின் ஆட்சி - இஸ்ரவேலின் பதிமூன்றாவது இராஜா - பதினாறு வருஷங்கள்

 

(1) ஆட்சிக்கு வருவதும் அவனுடைய சுபாவமும் (13:10-11)

(2) யோவாசின் மரணம் - இரண்டாம் யெரொபெயாம் இராஜாவானான் - இஸ்ரவேலின் பதினான்காவது இராஜா (13:12-13)

(3) எலிசா வியாதியாக இருந்தபோது யோவாஸ் அவனை வந்து சந்திக்கிறான் - வெளிப்படுத்தலும் தீர்க்கதரிசனமும் (13:14-19)

(4) எலிசாவின் மரணம் - பிரேதம் எலிசாவின் எலும்புகளின்மேல் பட்டபோது அவன் உயிரோடு எழுந்தான் (13:20-21)

(5) இஸ்ரவேலின் இராஜாவாகிய யோவாகாசின் வெற்றிகள் (13:22-25)

 

3. அமத்சியாவின் ஆட்சி - யூதாவின் எட்டாவது இராஜா - இருபத்தைந்து வருஷங்கள்

 

(1) யூதாவின் நான்காவது நல்ல இராஜா (14:1-7)

(2) இஸ்ரவேலின் யோவாகாசோடு யுத்தம் # உள்நாட்டு குழப்பம் (14:8-14)

(3) யோவாகாசின் மரணம் (14:15-16)

(4) அமத்சியாவின் மரணம் - அசரியா அல்லது உசியா இராஜாவானான் (14:17-22)

 

4. இரண்டாம் யெரொபெயாமின் ஆட்சி - இஸ்ரவேலின் பதினான்காவது இராஜா - நாற்பத்தொரு வருஷங்கள்

 

(1) ஆட்சிக்கு வருவதும் குணாதிசயங்களும் (14:23-24)

(2) யோனாவின் தீர்க்கதரிசனம் நிறைவேறுகிறது - பதினைந்தாவது சீரிய யுத்தம் (14:25-27)

(3) இரண்டாம் யெரொபெயாமின் மரணம் - சகரியா இராஜாவானான் (14:28-29)

 

5. அசரியா அல்லது உசியாவின் ஆட்சி - யூதாவின் ஒன்பதாவது இராஜா - ஐம்பத்திரண்டு வருஷங்கள்

 

(1) யூதாவின் ஐந்தாவது நல்ல இராஜா (15:1-4)

(2) உசியாவின் குஷ்டரோகம் (15:5)

(3) உசியாவின் மரணம் - யோதாம் இராஜாவானான் (15:6-7)

 

6. சகரியாவின் ஆட்சி - இஸ்ரவேலின் பதினைந்தாவது இராஜா - ஆறு மாதங்கள்

 

(1) ஆட்சிக்கு வருவதும் குணாதிசயங்களும் (15:8-9)

(2) சகரியாவின் மரணம் # தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றம் (15:10-12)

 

7. சல்லூமின் ஆட்சி - இஸ்ரவேலின் பதினாறாவது இராஜா - ஒரு மாதம் # உள்நாட்டு குழப்பம் (15:13-15)

 

8. மெனாகேமின் ஆட்சி - இஸ்ரவேலின் பதினேழாவது இராஜா - பத்து வருஷங்கள்

 

(1) ஆட்சிக்கு வருவது குணாதிசயங்களும் - உள்நாட்டு குழப்பம் (15:16-18)

(2) இஸ்ரவேலின்மீது அசீரியாவின் முதலாவது படையெடுப்பு (15:19-20)

(3) மெனாகேமின் மரணம் - பெக்காகியா இராஜாவானான் (15:21-22)

 

9. பெக்காகியாவின் ஆட்சி - இஸ்ரவேலின் பதினெட்டாவது இராஜா - இரண்டு வருஷங்கள்

 

(1) ஆட்சிக்கு வருவதும் குணாதிசயங்களும்

(15:23-24)

(2) பெக்காகியாவின் மரணம் - உள்நாட்டு குழப்பம் (15:25-26)

 

10. பெக்காவின் ஆட்சி - இஸ்ரவேலின் பத்தொன்பதாவது இராஜா - இருபது வருஷங்கள்

 

(1) ஆட்சிக்கு வருவதும் குணாதிசயங்களும் (15:27-28)

(2) இஸ்ரவேலின்மீது அசிரியாவின் இரண்டாவது படையெடுப்பு (15:29)

(3) பெக்காவின் மரணம் - ஓசெயா இராஜாவானான் உள்நாட்டு குழப்பம் (15:30-31)

 

 யூதாவின் இராஜாக்கள்

 

1. யோதாமின் ஆட்சி - யூதாவின் பதினாறாவது இராஜா - பதினாறு வருஷங்கள்

 

(1) யூதாவின் ஆறாவது நல்ல இராஜா (15:32-35)

(2) பதினாறாவது சீரிய யுத்தம் (15:36-37)

(3) யோதாமின் மரணம் - ஆகாஸ் இராஜாவானான் யூதாவின் பன்னிரெண்டாவது இராஜா (15:38)

 

2. ஆகாசின் ஆட்சி - யூதாவின் பன்னிரெண்டாவது இராஜா - பதினாறு வருஷங்கள்

 

(1) ஆட்சிக்கு வருவதும் குணாதிசயங்களும்

(16:1-4)

(2) உள்நாட்டு குழப்பம் - யூதா அல்லது இஸ்ரவேலோடு சீரியாவின் கடைசி யுத்தம் (16:5-6)

(3) ஆகாஸ் அசீரியாவோடு உடன்படிக்கை பண்ணுகிறான் (16:7-8)

(4) மூன்றாவது அசீரிய படையெடுப்பு (16:9)

(5) ஆகாசின் விக்கிரகாராதானையின் பலிபீடம் (16:10-16)

(6) ஆகாஸ் தேவாலயத்தை அசுசிப்படுத்துகிறான் (16:17-18)

(7) ஆகாசின் மரணம் - எசேக்கியா இராஜாவானான் யூதாவின் பதிமூன்றாவது இராஜா (16:19-20)

 

 அசீரியர் இஸ்ரவேலின் பத்து கோத்திரத்தாரைச் சிறைபிடித்துச் செல்லுகிறார்கள்

 

1. ஓசெயாவின் ஆட்சி # இஸ்ரவேலின் இருபதாவது இராஜா

 

(1) ஆட்சிக்கு வருவதும் குணாதிசயமும் (17:1-2)

(2) இஸ்ரவேலரின்மீது அசீரியரின் நான்காவது படையெடுப்பு (17:3)

(3) இஸ்ரவேலரின்மீது அசீரியரின் ஐந்தாவது படையெடுப்பு - இஸ்ரவேலின் பத்து கோத்திரத்தாரை அசீரியர் சிறைப்பிடித்துச் செல்லுகிறார்கள் (17:4-6)

 

2. இஸ்ரவேலர் சிறைப்பிடித்து செல்லப் பட்டதற்குக் காரணமான பத்து பாவங்கள் (17:7-12)

3. இஸ்ரவேலரோடு தேவன் மன்றாடியது அவர்களுடைய இருதயத்தைக் கடினப்படுத்தியது - இஸ்ரவேலரின் பதினெட்டு பாவங்கள் (17:13-18)

4. யூதாவும் தன்னுடைய பாவங்களுக்காக சிறையாக கொண்டுபோகப்படுவாள் (17:19-20)

5. தேவனுடைய நீதியினால் இஸ்ரவேல் தண்டிக்கப்பட்டது (17:21-23)

6. இஸ்ரவேலின் பட்டணங்களில் அசீரியர்கள் மறுபடியும் ஜனங்களைக் குடியமர்த்தினார்கள் - புதிய ஏற்பாட்டுக்கால சமாரியரின் வரலாறு ஆரம்பம் (17:24)

7. இஸ்ரவேலில் புதிதாக குடி பெயர்ந்துள்ளவர்கள் மத்தியில் தேவன் சிங்கங்களை அனுப்பினார் (17:25-26)

8. இஸ்ரவேலின் தேவனை சமாதானப் படுத்துவதற்கு அசீரியரின் பரிகாரம் (17:27-28)

9. விக்கிரகாராதானை செய்வதற்காக தேவன் இஸ்ரவேலை தண்டித்தார் - அவர்கள் அதே பாவத்தை தொடர்ந்து செய்கிறார்கள் (17:29-41)

 

யூதாவின் இராஜாக்கள் - இஸ்ரவேலர் சிறைப்பட்டுப் போனதற்கும் யூதா சிறையாக போவதற்கும் இடைப்பட்ட காலம்

 

1. எசேக்கியாவின் ஆட்சி - யூதாவின் பதிமூன்றாவது இராஜா - இருபத்தொன்பது வருஷங்கள்

 

(1) யூதாவின் ஏழாவது நல்ல இராஜா (18:1-3)

(2) எசேக்கியாவின்கீழ் எழுப்புதல் (18:4-6)

(3) எசேக்கியா அசீரியாவுக்கு எதிராக கலகம் பண்ணுகிறான் (18:7)

(4) எசேக்கியா பெலிஸ்தரை முறியடிக்கிறான் (18:8)

(5) எசேக்கியா யூதாவில் நான்காம் வருஷம் ஆட்சி செய்தபோது அசீரியர் இஸ்ரவேலின் பத்து கோத்திரத்தாரையும் சிறைப் பிடித்துச் சென்றார்கள் (18:9-12)

(6) பத்து வருஷ சமாதானத்தின் முடிவு யூதாவின் மீது ஆசிரியரின் முதலாவது படையெடுப்பு (18:13)

(7) எசேக்கியா கீழ்ப்படிந்து அசீரியருக்கு பகுதிப்பணம் கட்டுகிறான் - ஆனால் அது போதவில்லை (18:14-16)

(8) யூதா நிந்திக்கப்பட்டது (18:17-25)

(9) யூதாவின் பதில் (18:26)

(10) அசீரியர் தேவனை நிந்தித்தார்கள் (18:27-37)

(11) உதவிக்காக எசேக்கியா தேவனை நோக்கிப் பார்த்தான் (19:1-4)

(12) அசீரியர் தோல்வியடைவார்கள் என்னும் ஏசாயாவின் தீர்க்கதரிசனம் (19:5-7)

(13) சனகெரிப் தேவனைத் தூஷிக்கிறான் (19:8-13)

(14) எசேக்கியா மறுபடியும் ஜெபிக்கிறான் (19:14-19)

(15) ஏசாயாவின் இரண்டாவது தீர்க்கதரிசனம் - அசீரியர் தோல்வியடைவார்கள் (19:20-34)

(16) அசீரியர்கள் அற்புதத்தினால் தோல்வியடைந்தார்கள் (19:35-37)

(17) எசேக்கியாவின் வியாதியும் அவன் குணமாவதுபற்றிய தீர்க்க தரிசனமும் (20:1-7)

(18) எசேக்கியாவின் குணமாதலுக்கு அற்புத அடையாளம் (20:8-11)

19. யூதாவின் சிறையிருப்பைப் பற்றிய ஏசாயாவின் தீர்க்கதரிசனம் (20:12-19)

(20) எசேக்கியாவின் மரணம் # மனாசே இராஜாவானான் (20:20-21)

 

2. மனாசேயின் ஆட்சி - யூதாவின் பதினான்காவது இராஜா - ஐம்பத்தைந்து வருஷங்கள்

 

(1) ஆட்சிக்கு வருவதும் அவனுடைய பதினாறு பாவங்களும் (21:1-9)

(2) மனாசேயின்மீது நியாயத்தீர்ப்பு பற்றிய தீர்க்கதரிசனம் (21:10-15)

(3) மனாசேயின் தொடர்ந்த பாவம் (21:16)

(4) மனாசேயின் மரணம் - ஆமோன்

இராஜாவானான் (21:17-18)

 

3. ஆமோனின் ஆட்சி - யூதாவின் பதினைந்தாவது இராஜா - இரண்டு வருஷங்கள்

 

(1) ஆட்சிக்கு வருவதும் அவனுடைய குணாதிசயமும் (21:19-22)

(2) ஆமோனின் மரணம் - யோசியா இராஜாவானான் # உள்நாட்டு குழப்பம் (21:23-26)

 

4. யோசியாவின் ஆட்சி - யூதாவின் பதினாறாவது இராஜா - முப்பத்தொரு வருஷங்கள்

 

(1) யூதாவின் எட்டாவது இராஜாவும் கடைசி இராஜாவும் (22:1-2)

(2) தேவாலயம் பழுதுபார்க்கப்பட்டது (22:3-7)

(3) நியாயப்பிரமாண புஸ்தகம் கண்டுபிடிக்கப்பட்டது (22:8-10)

(4) பாவம் உணர்த்தப்படுகிறது - உண்மையான மனந்திரும்புதல் (22:11-14)

(5) யூதாவின்மீது நியாயத்தீர்ப்பு பற்றிய உல்தாளின் தீர்க்கதரிசனம் (22:15-20)

(6) ஜனங்களுக்கு நியாயப்பிரமாணம் வாசிக்கப்படுகிறது (23:1-2)

(7) யோசியா தேவனோடு செய்து கொண்ட உடன்படிக்கை (23:3)

(8) மேலும் இருபது சீர்திருத்தங்கள்

 

(அ) பாகால் ஆராதனையும் அதன் ஆசாரியர்களும் அழிக்கப்பட்டார்கள் (23:4-6)

(ஆ) இலச்சையான புணர்ச்சிக்காரரின் வீடுகளை இடித்துப்போட்டான் (23:7)

(இ) விக்கிரகாராதனையின் மேடைகளை இடித்துப்போட்டான் (23:8-9)

(ஈ) மோளேகுக்கு தீக்கடக்கப் பண்ணியதை அழித்தான் (23:10)

(உ) சூரிய ஆராதனையையும் அதன் குதிரைகளையும் இரதங்களையும் அக்கினியில் சுட்டெரித்தான் (23:11)

(ஊ) விக்கிரகராதனையின் பலிபீடங்களை அழித்தான் (23:12)

(எ) மற்ற விக்கிரக தெய்வங்களை அழித்தான் (23:13-14)

(ஏ) யெரொபெயாமின் பலிபீடத்தையும் பெத்தேலிலிருந்த மேடையையும் அழித்தான் (23:15-18)

(ஐ) சமாரியா எங்குமுள்ள மேடைகளை அழித்தான் # விக்கிரகாராதனையின் ஆசாரியர்களைக் கொன்றான் (23:19-20)

(ஓ) பஸ்கா பண்டிகையைப் புதுப்பித்தான் (23:21-23)

(ஓ) அஞ்சனக்காரர்களையும் குறி சொல்லுகிறவர்களையும் அழித்தான் (23:24-25)

 

(9) யோசியாவின் மறுமலர்ச்சிக்கு நடுவிலும் யூதாவிற்கு பிரச்சனை வந்தது (23:26-28)

(10) யோசியாவின் மரணம் # யோவாகாஸ் இராஜாவானான் (23:29-30)

 

5. யோவாகாசின் ஆட்சி - யூதாவின் பதினேழாவது இராஜா - மூன்று மாதங்கள்

 

(1) ஆட்சிக்கு வருவதும் குணாதிசயமும் (23:31-32)

(2) இஸ்ரவேலும் எகிப்தும் நடத்திய நான்காவது யுத்தம் - யோவாகாசின் மரணம் - யோயாக்கீம் இராஜாவானான் (23:33-35)

 

 யூதா பாபிலோனுக்குச் சிறைபிடித்துச் செல்லப்பட்டது

 

1. யோயாக்கீமின் ஆட்சி # யூதாவின் பதினெட்டாவது இராஜா # பதினொறு வருஷங்கள் (23:36-37)

2. யோயாக்கீமின் கீழ்ப்படிதலும் பாபிலோனுக்கு எதிரான கலகமும் (24:1)

3. யூதாவின் இராஜ்ஜியபார முடிவு ஆரம்பமாகிறது - பாபிலோனுக்கு யூதாவின் முதலாவது சிறையிருப்பு (24:2-4)

4. யோயாக்கீமின் மரணம் - யோயாக்கீன் இராஜாவானான் (24:5-6)

5. பாபிலோன் எகிப்தின்மீது வெற்றி பெற்றது (24:7)

6. யோயாக்கீனின் ஆட்சி - யூதாவின் பத்தொன்பதாவது இராஜா - மூன்று மாதங்கள்

 

(1) ஆட்சிக்கு வருவதும் குணாதிசயமும் (24:8-9)

 

7. பாபிலோனுக்கு யூதாவின் இரண்டாவது சிறையிருப்பு (24:10-16)

8. சிதேக்கியாவின் ஆட்சி - யூதாவின் இருபதாவது இராஜாவும் கடைசி இராஜாவும் - பதினொறு வருஷங்கள்

 

(1) ஆட்சிக்கு வருவதும் குணாதிசயமும் (24:17-19)

 

9. சிதேக்கியா பாபிலோனுக்கு எதிராக கலகம் பண்ணுகிறான் (24:20)

10. பாபிலோனுக்கும் இஸ்ரவேலுக்கும் ஏற்பட்ட ஐந்தாவது யுத்தமும், கடைசி யுத்தமும் (25:1-3)

11. இஸ்ரவேலின் தோல்வி # சிதேக்கியா பாபிலோனுக்கு சிறைப்பிடித்துச் செல்லப்படுகிறான் (25:4-7)

12. எருசலேமும் தேவாலயமும் அழிக்கப் படுகிறது (25:8-10)

13. பாபிலோனுக்கு யூதாவின் மூன்றாவதும் கடைசியுமான சிறையிருப்பு (25:11-12)

14. தேவாலயத்தின் தட்டுமுட்டுக்களும் பாத்திரங்களும் பாபிலோனுக்கு எடுத்துச்செல்லப்பட்டன (25:13-17)

15. நேபுகாத்நேச்சார் பிரதான ஆசாரியரையும் மற்றவர்களையும் கொன்றுபோடுகிறான் (25:18-21)

16. மீதமுள்ள யூதர்களுக்கு கெதலியா ஆளுநராக நியமிக்கப்படுகிறான் (25:22-24)

17. இஸ்ரவேலில் குழப்பம் (25:25)

18. மீதமுள்ளோர் எகிப்துக்கு ஓடிப்போகிறார்கள் (25:26)

19. பாபிலோனில் யோயாக்கீன் விடுதலையாகிறான் (25:27-30)




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.