மசூசா பெட்டி ஐ பற்றி உங்களுக்கு தெரியுமா…?

மசூசா பெட்டி ஐ பற்றி உங்களுக்கு தெரியுமா…?


யூதர்களின் வீடுகளின் வாசலின் நிலைப்படியில் சிறியதாக ஒரு மரப்பெட்டி கட்டித் தொங்க விடப்பட்டிருக்கும். யூதர்கள் ஒவ்வொரு முறை வீட்டிற்குள் நுழையும் போதும் இந்த மரப்பெட்டியைத் தொட்டு முத்தமிட்ட பிறகே வீட்டிற்குள் நுழைய வேண்டும். இந்த மரப்பெட்டிக்கு மசூசாப் பெட்டி என்று பெயர், உள்ளங்கையளவேயான இந்தப் பெட்டிக்குள் ஒரு சிறிய பாப்பைரஸ் காகிதத்தில் 'ஷேமா' என்று எழுதிய எழுத்துக்களை வைத்திருப்பார்கள், அவ்வளவுதான். 


இந்த ஷேமா என்கிற வார்த்தைக்கு 'செவிகொடு' என்பது பொருள், கர்த்தர் எபிரேயர்களோடு செய்த உடன்படிக்கைக்கும், அவர் அவர்களுக்கு வழங்கிய பிரமாணங்களுக்கும் செவி கொடுக்க வேண்டும் என்பதை நினைவுபடுத்துவதற்காகவே இந்தப் பெட்டியை அவர்கள் வீட்டின் முகப்பில் கட்டி வைத்திருப்பார்கள்.

இதைத் தவிர, எபிரேய ஆண்கள் கையிலும் ஒரு சிறிய பெட்டியைக் கட்டிக்கொண்டு ஜெபிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள், ஜெப நேரங்களில் மாத்திரமே கட்டிக் கொள்ளும் இந்தச் சிறிய பெட்டியில் வேத வசனங்கள் அடங்கிய சிறு சிறு பாப்பைரஸ் துண்டுகள் இருக்கும். மெல்லிய தோல்நாடாவால் பொடிடப்பா அளவேயான இந்தச் சிறு பெட்டியை தங்கள் கையில் இணைத்துக் கட்டிக்கொள்வார்கள். இதேபோன்ற மற்றொரு சிறு பெட்டியை தங்கள் நெற்றியில் இருக்குமாறு வைத்து, மெல்லிய தோல் நாடாவால் அதை தங்கள் தலையைச் சுற்றிக் கட்டிக் கொள்வார்கள். இந்த முறையில் ஜெபிப்பவர்கள் மிக பக்தியான யூதர்கள் என்று கருதப்படுவார்கள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.