வேதாகம பொழிப்பெயர்ப்புகள்

வேதாகம பொழிப்பெயர்ப்புகள்

ஹிந்தி மொழிபெயர்ப்பு


இந்தியாவில் பல்வேறு விதமான மொழிகள் பேசப்பட்டாலும், பெரும்பான் மையான மக்களால் பேசப்படும் மொழி ஹிந்தி மொழியாகும். இந்த மொழியில் வேதா கமம் 1800 ம் ஆண்டிலேயே மொழித்திருப்பம் செய்யப்பட்டிருக்கிறது. கல்கத்தாவில் ல் ஆரம்பிக்கப்பட்ட ஃபோர்ட் வில்லியம் கல்லூரியில் பணி செய்த டாக்டர் ஹென்றி கோல்ப்ரூக் என்பவர் முதன் முதலாக இந்தி மொழியில் நான்கு சுவிசேஷங் களை மாத்திரம் மொழி பெயர்ப்புச் செய்து வெளியிட்டார். இது 1806ம் ஆண்டில் புழக்கத் திற்கு வந்தது. இதே காலகட்டத்தில் செராம்பூரிலிருந்த மிஷினரிகளும் ஹிந்தி மொழி யில் வேதாகமத்தை மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் மொழி பெயர்த்த வேதாகமம் 1811 ம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இவர்கள் வெளியிட்ட வேதாகமம் புதிய ஏற்பாடு முழுமையும் அடங்கியதும். முழுவேதாகமம் வெளியாகும் வரை சிலகாலம் இந்தப் புதிய ஏற்பாடு மாத்திரமே பயன்படுத்தப்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து பழைய ஏற்பாட்டின் நூல்கள் பகுதி பகுதியாக ஹிந்தியில் மொழித்
திருப்பம் செய்யப்பட்டன. இவர்களுடைய இந்த மொழிபெயர்ப்பு ஆக்ராவிலிருந்த மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத மொழியமைப்பு கொண்டிருந்ததால், பாப்டிஸ்ட் சபையைச் சேர்ந்த சேம்பர்லியன் என்பவர் இந்த வேதாகமத்தை மேலும் ஒருமுறை திருத்தி வெளி யிட்டார். ஆனால், அந்த மொழிபெயர்ப்பிலும் குறைகள் காணப்பட, இன்னொரு மொழி பெயர்ப்பை 1848ல் பாப்டிஸ்ட் சங்கத்தைச் சேர்ந்த வில்லியம் யேட்ஸ் என்பவர் மொழி பெயர்க்க ஆரம்பித்தார். இடையில் இவர் மரித்துவிட, இவரது பணியை வெஸ்லி என்பவர் முடித்தார். இந்தப் பதிப்பு ஜோன் பார்சன் என்பவரால் திருத்தம் செய்யப்பட்டு 1868 ல் வெளியிடப்பட்டது. இதன் திருத்திய பதிப்பு 1874 ல் வெளியானது இதுவே ஹிந்தியில் அங்கீகரிக்கப்பட்ட வேதாகமமாக இருந்தது, அதன் பின்னர் வட இந்திய வேதாகமச் சங் கத்தார் 1905 ல் வெளியிட்ட திருத்திய வேதாகமப் பதிப்பே சுமார் 60 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்துவந்தது. இதையும் திருத்தி எளிமையான சொற்களுடன் 1955 ல் வெளியிடப்பட்ட வேதாகமமே ஹிந்தி மொழியில் இன்றளவும் பயன்பாட்டில் இருக்கிறது
இதைத் திருத்தம் செய்தவர் வி.டி.திவாரி என்பவராவார்

தெலுங்கு மொழிபெயர்ப்பு 


தெலுங்கு மொழியில் வேதாகமம் 1727ம் ஆண்டிலேயே மொழித்திருப்பம் செய் யப்பட்டு விட்டது. இதை ஜெர்மனியிலிருந்து வந்திருந்த மிஷினரியான பெஞ்சமின் குண்ட்ஸ் என்பவர் மொழி திருப்பம் செய்திருந்தார். இவர் 1732 ல் பழைய ஏற்பாட்டையும் மொழித் திருப்பம் செய்திருந்தார். என்றாலும் அவர் மொழி திருப்பம் செய்திருந்த பிரதிகள் அச்சிடு வதற்காக ஜெர்மனியிலுள்ள ஹாலேக்கு அனுப்பப்பட்டு அங்கே பிரதிகள் காணாமல் போய் விட்டன. இதன் பின்னர் 1795 ல் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் டோட்ஸ் என்பவர் வேதா கமத்தை தெலுங்கில் மொழிபெயர்த்தார். இவரது மரணத்திற்குப் பிறகு இவர் பணியாற்றிய கம்பெனியில் இவரது இந்த மொழிபெயர்ப்புக் காகிதங்கள் தேவையற்ற குப்பைகள் என்று கருதப்பட்டு எரிக்கப்பட்டுவிட்டன. 1805 ம் ஆண்டில் செராம்பூரிலிருந்த மிஷினரிகள் வேதா கமத்தை தெலுங்கு மொழியில் மொழிபெயர்த்தனர். 1811 ம் ஆண்டு இதன் அச்சுவேலைகள் நடந்தது. என்றாலும் 1812 ல் இந்த அச்சகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் அச்சிடப்பட்ட பக்கங் களும், மொழிபெயர்ப்பு மூலப்பிரதிகளும் கருகிவிட்டன, 1804ல் லண்டன் மிஷினரி சங் கத்தைச் சேர்ந்த ஜார்ஜ் க்ரான் ஒகஸ்டஸ் என்பவர் தெலுங்கு மொழிபெயர்ப்பை பித்து, அவரும் முடிக்க முடியாமல் 1808 ம் ஆண்டில் மரித்தார். அதன் பின்பு டெஸ்கிராஞ் சஸ் என்பவர் இந்த மொழிபெயர்ப்பு வேலைகளை ஆரம்பித்து, 1810 வரை கொரிந்தியரின் புத்தகம் வரை மொழிமாற்றம் செய்தார். இவரும் மரித்துவிட, எட்வர்ட் பிரிட்ஜெட் என்பவர் இதன் மீதிப் பகுதியை மொழிமாற்றம் செய்தார். 1844 ல் ஒரு மொழிபெயர்ப்புக் குழு ஆரம் பிக்கப்பட்டு, 1854 ல்தான் தெலுங்கு மொழியில் வேதாகமம் வெளிவந்தது. 1857 ம் ஆண்டில் புதிய ஏற்பாடும், 1878 ல் பழைய ஏற்பாடும் வெளிவந்தது. இது மறுபடியும் 1911 ல் ஒரு முறையும், 1953 ல் ஒரு முறையுமாக திருத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது

கன்னட மொழிபெயர்ப்பு 


கர்நாடகாவில் பேசப்படும் மொழி யான கன்னட மொழியில் 1809 ம் ஆண்டில் புதிய ஏற்பாடு மாத்திரம் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. செராம்பூரிலிருந்த மிஷினரிகள் இந்த மொழிபெயர்ப்பை செய்தார்கள். தெலுங்கு மொழிபெயர்ப்பு அச்சிட்ட காலத்திலேயே கன் னட மொழி வேதாகமத்தையும் அச்சிட செராம்பூர் சங்கத்தார் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

ஆனால், 1812ம் ஆண்டில் இந்த அச்சகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் தெலுங்கு வேதாகம மூலப் பிரதிகள் எரிந்த சமயத்தில் கன்னட மொழி பிரதிகள் தீயில் அழிந்து விட்டன. இதன் பின்னர் மீண்டுமாக கன்னட மொழிபெயர்ப்பு ஆரம்பித்து, 1823ம் ஆண்டில் அதை அச்சிட்டார்கள்

இவர்கள் வெளியிட்ட இதே சமயத்தில் 1810ம் ஆண்டில் பெல்லாரி என்னும் இடத்தில் மிஷி னரிப் பணிசெய்த லண்டன் மிஷினரி சங்கத்தைச் சேர்ந்த ஜோன் ஹேன்ட்ஸ் என்பவர் முதல் மூன்று சுவிசேஷங்களையும் கன்னடத்தில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டார். அதைத் தொடர்ந்து இவர் மொழிபெயர்த்த புதிய ஏற்பாட்டின் ஏனைய பகுதிகள் 1820ல் சென்னையில் லுள்ள அச்சகத்தில் பதிப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து 1831 ம் ஆண் டில் இவர் பழைய ஏற்பாட்டை கன்னடத்தில் மொழி திருப்பம் செய்தார். இவரைத் தொடர்ந்து ல் பேசல் என்னுமிடத்தில் மிஷினரியாகப் பணிசெய்த ஜி.எஸ்.செய்கல் என்பவர் கன்ன டப் புதிய ஏற்பாட்டை திருத்திய பதிப்பாக வெளியிட்டார். என்றாலும் மொழியாக்கத்தில் சில குறைபாடுகள் கண்டறியப்பட்டு, அதைத் திருத்தும் பணிகள் 1891 ல் ஆரம்பிக்கப்பட்டு, 1907 ம் ஆண்டில் புதிய ஏற்பாடு முழுவதும் திருத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து 1934ம் ஆண்டில் முழு வேதாகமமும் திருத்தப்பட்ட பதிப்பாக வெளிவந்தது. இந்த மொழிபெயர்ப்பு தான் இன்றைக்கு வரைக்கும் பயன்படுத்தப்படுகிறது

மலையாள மொழிபெயர்ப்பு


மலையாள மொழியில் மொழி திருத்தம் செய்யப்பட்ட வேதாகமம் தமிழ் மற்றும் சிரிய மொழி வேதாகமங்களிலிருந்து திருப்பப்பட்டது. 1807 ம் ஆண்டில் நான்கு சுவிசேஷங்கள் மாத்திரமே மலையாள மொழியில் திருப்பம் செய்யப்பட்டன. திம்மப்பாபிள்ளை, மற்றும் பிலிப் போஸ் என்னும் இருவராலும் மொழிபெயர்க்கப்பட்ட இந்த மொழிபெயர்ப்பு, 1811 ம் ஆண் டில் திம்மப்பாபிள்ளையால் அச்சிடப்பட்டது. அதைத் தொடர்ந்து 1813 ம் ஆண்டில் புதிய ஏற் பாட்டின் ஏனைய பகுதிகளையும் தமிழிலிருந்து திருப்பம் செய்தார். கோட்டயத்திலிருந்த பிரிட் டானியா சங்கம் முழு வேதாகமத்தையும் திருப்பம் செய்யும் பணிக்காக பெஞ்சமின் பெய்லி என்பவரை நியமித்தார்கள். இவருக்கு உதவியாக எட்டு சிரிய போதகர்களும் நியமிக்கப்பட் டனர். 1829ம் ஆண்டில் கோட்டயத்திலுள்ள மிஷன் சங்கத்தில் இவர்கள் மொழித்திருப்பம் செய்த மலையாள வேதாகமம் அச்சிடப்பட்டது. பெய்லியின் மொழித்திருப்பத்தில் பல குறை கள் கண்டறியப்பட்டதால், கிழக்கிந்தியக் கம்பெனியின் மண்டல் குருவாக இருந்த ஸ்பிரிங்ஸ் என்பவர் சமஸ்கிருதத்திலிருந்து வேதாகமத்தை மலையாள மொழிக்கு மாற்றம் செய்தார். ஆனா லும் இவரது பணிகள் தொடர முடியாமல் நின்றுபோனது. பின்னர் ஏகமனதாக பெய்லியின் மொழிபெயர்ப்பு எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட மொழிபெயர்ப்பு பயன்படுத்தப் பட்டது. 1829ம் ஆண்டில் சென்னை வேதாகம சங்கத்தாரால் இந்த வேதாகமம் அச்சிட்டு வெளியிடப்பட்டது. அதே ஆண்டில் பெய்லியின் பழைய ஏற்பாட்டு மொழித்திருப்பவேதாகம மும் பணி நிறைவடைந்ததால் அதுவும் அச்சிடப்பட்டது. 1854ல் லூத்தரன் மிஷனைச் சேர்ந்த எச்.குண்டர்ட் என்பவரால் இன்னொரு மொழி திருப்பமும் மலையாளத்தில் வெளியான.

ஒரே மொழியில் இரு வேறு மொழிபெயர்ப்புகள் வேண்டாம் என்று கருதி, இரண்டையும் இணைத்து ஒரு புதிய மொழி பெயர்ப்பை வேதாகம சங்கத்தார் 1880 ல் வெளியிட்டார்கள் இது 1910ம் வருடம் ஒருமுறையும் 1960ம் ஆண்டில் ஒருமுறையுமாக திருத்தப்பட்டு பயன் படுத்தப்படுகிறது

வேதபாரகர்கள் 


இந்தியாவில் பேசப்படும் மொழிகள் 1652 என்று கண்டறியப்பட்டுள்ளது. இவற்றுள் ஐநூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளுக்கு எழுத்து வடிவங்கள் கிடையாது. பக்கத்து மொழிகள் ளில் உள்ள எழுத்துக்களில் எந்த மொழிகள் எழுதப்படுகின்றன. உதாரணமாக சௌராஷ் டிர மக்கள் பேசும் மொழிக்கு எழுத்து வடிவம் கிடையாது. இம்மொழியைத் தமிழ் எழுத்துக் களைக் கொண்டு தான் எழுத முடியும். தோராயமாக இப்படிப்பட்ட எழுத்தற்ற இந்திய மொழிகள் 500 என்று கண்டறியப்பட்டாலும் மீதமிருக்கும் எல்லா மொழிகளிலும் வேதாக ம் வெளிவந்ததாக தெரியவில்லை. ஆனால் ஏராளமான மொழிகளில் வேதாகமம் மொழித் திருப்பம் செய்யப்பட்டுள்ளது. 1970ம் ஆண்டில் கண்டறியப்பட்ட கணக்கெடுப்பின்படி இந்தி யாவின் 25 மொழிகளில் தான் முழு வேதாகமமும் மொழி திருத்தம் செய்யப்பட்டுள்ளது. 49 மொழிகளில் வெறும் புதிய ஏற்பாடு மாத்திரமே மொழித்திருப்பம் செய்யப்பட்டுள்ளது. இதைத் தவிர, 65 மொழிகளில் வேதாகமத்தின் பகுதிகள் மாத்திரமே மொழித்திருப்பம் செய்யப்பட்டுள் ளன. இதையெல்லாம் சேர்த்துப் பார்த்தால் 1652 இந்திய மொழிகளில் 130 மொழிகளில் மாத்தி ரமே வேதாகமம் மொழித்திருப்பம் செய்யப்பட்டுள்ளது. 1970ம் ஆண்டின் இந்தக் கணக்கிற்கு பிறகு வேதாகம சங்கத்தார் இன்னும் சில மொழிகளில் வேதாகமத்தை மொழி திருத்தம் செய்ய ஆரம்பித்தார்கள். அதன்படி 1994ம் ஆண்டின் இறுதிவரைக்குமாக சுமார் 171 இந்திய மொழி களில் மாத்திரமே வேதாகமம் மொழித்திருப்பம் செய்யப்பட்டுள்ளது. மீதமிருக்கும் 1481 மொழிகளில் வேதாகமம் திருப்பம் செய்யப்பட நாம் உதவ வேண்டும்


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.