தியோடர் ஹெர்பெஸ்
தியோடர் ஹெர்பெஸ் இஸ்ரவேல் தனிநாடாக உருவாகுவதற்கு பின்னணியில் காரணமான
சிலருள் தியோடர் ஹெர்ஸெஸ் என்பவரும் ஒருவர், யூதர்கள் தனிநாடு இல்லாமல் பல நாடுகளிலும் சிதறியிருந்த நாட்களில் அவர்களுக்கு தனிநாடு சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துவித்த எழுத்தாளர் இந்த ஹெர்ஸெஸ். இவர் கி.பி 1860 ம் ஆண்டு ஹங்கேரியில் பிறந்தார்.
இவரும் யூத இனத்தைச் சேர்ந்தவர்தான். வியன்னா தேசத்திலிருந்து வெளி வந்த ஒரு பிரபலமான பத்திரிகையில் இவர் நிருபராகப் பணியாற்றினார். இவர் ஒருமுறை டிரேபஸ் என்பவரைப் பற்றி செய்தி சேகரிக்க அனுப்பப்பட்டார் இந்த டிரேபஸ் என்பவர் பிரான்ஸ் நாட்டின் இராணுவத்தில் பணியாற்றி, அதில் குற்றம் சாட்டப்பட்டு கடுமையான தண்டனை அடைந்திருந்தார்..
இவரும் யூதர்தான். இவரைப்பற்றிய செய்தி சேகரிப்பதற்காக 1894ம் ஆண்டு பிரான்ஸ் தலைநகரான பாரீசில் அனுப்பப்பட்ட தியோடர் ஹெர்பெஸ். பிரான்சில் மாத்திரமல்ல, உலகெங்கிலும் சிதறியிருந்த யூதர்கள் அந்தந்த நாட்டவரால் அநியாயமாகக் குற்றம் சாட்டப்படுவதையும், தண்டிக்கப்படு வதையும், சிறிய குற்றங்களுக்குக்கூட அகதிகளாக நாடு கடத்தப்படுவதையும் கண்டார், ஒவ்வொரு தேசத்திலும் யூதர்கள் அடிமைகளாகவே பார்க்கப் பட்டனர். இதற்கு ஒரே தீர்வு யூதர்களுக்கு தனிநாடு இருக்க வேண்டும் என்பதே என்று உணர்ந்த அவர், 1896ம் ஆண்டு டே - ஜ்யூடன்ஸ்டாட் (Der Jduenstaat) என்ற புத்தகத்தை வெளியிட்டு, அதை எல்லா யூதர்களுக்கும்
இலவசமாக விநியோகித்தார், அந்தப் புத்தகத்தில் உலக நாடுகள் எங்கிலும் யூதர்கள் படும் துன்பங்களைச் சுட்டிக்காட்டி யூதர்கள் ஒன்றுபட்டு தனிநாடு பெறுவது மாத்திரமே இதற்கு தீர்வு என்றும் வலியுறுத்தியிருந்தார். இவர் எழுதிய இந்தப் புத்தகம் தான், யூதர்களின் தனிநாடு உணர்வுகளுக்கு வித்திட்ட முதல் புத்தகம்.
இதன் தாக்கம் யூதர்களிடையே வெகுவாக தெரிந்தது. அவர் - மரித்தது 1904ம் ஆண்டில் இவர் மரித்து 43 வருடங்கள் கழித்து தான் யூதா தனி நாடாக உருப்பெற்றது என்றாலும், யூதர் மனதில் அன்று இவர் விதைத்த விதைதான் தனி நாடாகப் பலன் கொடுத்திருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.
