சிமிர்னா

சிமிர்னா

வெளிப்படுத்தின விசேஷத்தில் ஆவியானவர் மூலம் வெளிப்படுத்தப்படும்,
யோவான் செய்தி எழுதியனுப்பிய ஏழு திருச்சபைகள் இரண்டாவது பெரிய
திருச்சபை சிமிர்னா சபை இந்தச் சபையிருந்த சிமிர்னா பட்டணத்தின் பெயராலேயே இந்தச் சபை சிமிர்னா சபை என்றழைக்கப்பட்டது. சிமிர்னா என்பது கிரேக்கர்களுக்குச் சொந்தமான ஒரு பூர்வீகமான பட்டணம் கி.மு 1000-த்தில் கிரேக்கர்களின் மிக முக்கியமான பட்டணமாக இது விளங்கியது. 


கி.மு 600ல் ரோமர்களால் இது முற்றிக்கையி டப்பட்டு முற்றிலுமாக அழிக்கப்பட்டது. பின்னர் 200 ஆண்டுகள் கழித்து, இந்த நகரம் ரோமர்களால் திரும்பவும் எடுத்துக் கட்டப்பட்டது. அக்காலத்திய சிமிர்னா பட்டணம், துருக்கியின் ஏஜியன் கடல் ஒட்டிய மேற்குக் கரைப்பகுதியில் அமைந்திருந்தது.

வளைகுடா பகுதியாகக் காணப்பட்ட சிமிர்னாவில் ஹெர்மஸ் ஆற்றின் முகத்துவாரம் அமைந் திருந்தது ஹெர்மஸ் மற்றும் மெயாண்டர் சமவெளிகளின் வழியாக ஆசியா எமனருக்குச் செல்லும் பிரதான பாதை சிமிர்னா வில்டே கடந்து செல்வதால், சிமிர்னா மிகப் பெரியதும், பொருளாதாரத்தில் அதிக வளமுள்ளதும், பரபரப்பான பட்டணமு மாக திகழ்ந்தது.

 கிரேக்கர்கள் காலத்தில் கட்டப்பட்ட நகரங்களில் முதலாவதாக கட்டப்பட்ட நகரம் இந்த சிமிர்னாதான் என்று கிரேக்க சரித்திரக் குறிப்புகள் சொல்லுகின்றன. இங்கே கிரேக்கர்களின் பிரபலமான தெய்வமான சிபிலிக்கு மிகப் பிரம்மாண்டமான கோவில்களும், பலிபீடங்கள் இருந்தன. ரோமர்களின் காலத்தில் இந்த நகரம் இன்னும் சிறப்படைந்திருந்தது.

 இங்கு அயோனியன் மதப் பாரம்பரியம் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. இயோனியன் பாரம்பரியம் என்பது அத்தினாள் தெய்வத்தை மையமாகக் கொண்டு, விஞ்ஞானம் மற்றும் மருத்துவத்தை மையமாக வைத்து கடைப்பிடிக்கப்படும் ஒருவகை மதப் பாரம்பரியம், கிபி 23ல் திபேரியுராயன் இங்கு அத்தீலாளுக்கு ஒரு பிரம்மாண்டமான கோயிலைக் கட்டியிருந்தார். கிறிஸ்தவர் களுக்கான சபையும் இங்கே உருவாகியிருந்தது. இந்தச் சபை வளர்ந்து பெருகியதால் பொறாமை கொண்ட யூதர்கள், கிறிஸ்தவர்களுக்கு விரோதமாக எழும்பி போலிகார்ப் என்னும் அத்தியட்சக் குருவானவரை சி.பி 169 ல் இந்த நகரத்தில் சுட்டெரித்தார்கள், ரோமர்களுக்குப் பிறகு துருக்கியர்கள் பிடிக்கப்பட்ட இந்த நகரம் துருக்கியில் இணைக்கப்பட்டது. இன்றைக்கு இந்த நகரம் இஸ்மீர் (Izmir) என்றழைக் பகிறப்படுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.