சங்கீதம் 90 தியானம்

சங்கீதம் 90:12 தியானம்

எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும். (சங் 90:12)


இந்த வேண்டுதலை (ஜெபத்தை) செய்தவர் இஸ்ரவேல் ஜனங்களை எகிப்திலிருந்து அழைத்து வழிநடத்தி வந்த மோசேதான்.

இந்த மோசேயை கர்த்தர் அழைத்தபோது கர்த்தருடைய நாமம் என்ன? அவர் எவ்வளவு பெரியவர்? என்பதை அறிந்து கொண்டார். எகிப்திலே அவளைக் கொண்டு சித்தர் பல அற்புதங்களைச் செய்தபோது கர்த்தர் மகா பெரியவர் என்பதை யும் அறிந்து கொண்டார், செங்கடலை இரண்டாக பிளந்த போது கர்த்தர் சகலத்தையும் செய்ய வல்லமையுடை யவர் என்பதை அறிந்து கொண்டார்.


இப்படி கர்த்தரைப்பற்றி அறிந்து கொண்ட மோசே, தன்னைப்பற்றி தான் அறிந்துகொள்ளவும், தான் எதற்காக மனுஷனாக படைக்கப்பட்டு. தான் யார்

என்பதை அறிந்து கொள்ளும் அறிவை தனக்குத் தர வேண்டும் என்று இங்கு வேண்டுதல் செய்கிறார். இந்த அறிவை தனக்குப் தேவன் போதித்தருள வேண்டும் என்றும் கேட்கிறார்

ஒரு ஆவிக்குரிய மனிதனுக்கு கர்த்தரைப் பற்றிய அறிவு அதிகமாக இருக்க வேண்டும். அதே போல் அவனுக்கு தன்னை பற்றிய அறிவும் தெளிவாக இருக்க வேண்டும்.

இந்த அறிவு ஆதாம், ஏவாளுக்குள் இல்லாத படியால் தான் பாவத்தில் விழுந்தார்கள். நான் யார்? நான் ஏன் தேவ சாயலாக படைக்கப்பட வேண்டும்? என் னுடைய வேலை என்ன? என்னைக்குறித்து தேவன் என்ன நோக்கம் வைத்தி ருக்கிறார்? என்ற தெளிவான காரியங்கள் நமக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

இஸ்ரவேல் ஜனங்கள் தாங்கள் யார் என்பதை அறிந்து கொள்வதற்காகவே அவர்களை எதிர்க்கும் சில எதிரிகளை கர்த்தரே விட்டு வைத்திருந்தார்.

வாசித்துப் பாருங்கள் (நீயா 3:12).. கானான் தேசத்தில் நடந்த சகல யுத்தங்களையும் அறியாதிருந்த இஸ்ரவேலராகிய அனைவரையும் சோதிப்பதற்காக... அவைகளை அறியும்படி பழக்குவிப்பதற்காக கர்த்தர் விட்டு வைத்த ஜாதிகள்... என்று எழுதப்பட்டுள்ளது. எனவே, ஒவ்வொரு மனிதனும் தன்னைப்பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.