அகாஸ்வேரு குறித்த வரலாற்று குறிப்புகள்



 Document Download Link Ready

Password : wmmica1

அகாஸ்வேரு - AHASUERUS

"அகாஸ்வேரு" என்னும் எபிரெய பெயருக்கு  - 'Achashverowsh, 'Achashrash - 325 "நான் அமைதியா இருப்பேன், நான் ஏழையா இருப்பேன்" "I will be silent and poor" என்று பொருள். பழைய ஏற்பாட்டில் "அகாஸ்வேரு என்னும் பெயரில் இரண்டு ராஜாக்கள் உள்ளனர். அவர்களின் விவரம் வருமாறு:


1. பெர்சிய தேசத்து ராஜா.

இவன் எஸ்தர் ராஜாத்தியின் புருஷன், அகாஸ்வேருவும். முதல் சஷ்டாவும் ஒரே நபர் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இவருடைய ஆட்சிக்காலம் கி.மு.485-464. அகாஸ்வேரு ராஜா பற்றி எஸ்தரின் புஸ்தகத்தில் விவரிக்கப்பட்டிருக்கிறது. 143-221 இவருடைய ராஜ்யத்தின் விஸ்தீரணம் (எஸ் 1:1) இவருடைய ஐகவரியங்கள் (எஸ் 1:4) இவனுடைய ஆடம்பரமும், விருந்து முறைகளும் (எஸ் 1:13-22), இவருடைய கொரேமான கபாவமும் எஸ்தர் புஸ்தகத்தில் விவரிக்கப்பட்டிருக்கிறது. கிரேக்க வரலாற்று ஆசிரியரான எரோதத்தஸ் (Herodotus) முதலாம் சஷ்டாவைப் பற்றி விவரித்திருக்கிறார். அவருடைய குணமும் அகாஸ்வேருவின் குணமும் ஒன்றுபோலுள்ளது. அகாஸ்வேருவின் தந்தையின் பெயர் தரியு ஹிஸ்டாப்சிஸ் (Darius Slaps) அகாஸ்வேரு கிமு. 485 ஆம் வருஷத்தில் தன் தந்தைக்கு பின்பு ராஜாவானான்.

அகாஸ்வேருவின் ராணியின் பெயர் வஸ்தி இவன் தன் அரண்மனையில் ஒரு பெரிய விருந்து பண்ணினான் இந்த விருந்திற்கு வஸ்தியை ராஜவஸ்திரம் தரித்து வருமாறு அழைத்தான். அவள் வர மறுத்துவிட்டாள். இதனால் கோபமடைந்த அகாஸ்வேரு ராஜா வஸ்தியை விலக்கி வைத்துவிட்டு, அவளுக்குப் பதிலாக வேறொரு ராஜாத்தியை தேடினான். இரண்டு வரும் சென்ற பின்பு அகாஸ்வேரு ராஜ வஸ்திக்குப் பதியாக எஸ்தரை தன் பட்டத்து ராணி ஆக்கினான். எஸ்தரும் அவளுடைய ஜங்களும் யூத மார்க்கத்தைச் சேர்ந்தவர்களை. கி மு 586 ஆம் வருடத்தில் நடைபெற்ற யுத்தத்தில் எருசலேம் விழுந்தது. அங்கிருந்த யூதர்கள் அந்நிய தேசத்தின் சிறையிருப்புக்கு உட்பட்டார்கள். அந்த சமயத்தில் பெர்சிய தேசத்திற்கு எஸ்தரும் அவளோடு ஏராளமான  யூதரும் சிறையிருப்பிற்கு வந்தார்கள்,
அகாஸ்வேரு ராஜாவிற்கு ஆமான் என்றொரு ஆயோசனைக்காரன் இருந்தான் இவன் யூதர்களை வெறுத்தான். பெர்சிய தேசத்தில் யூதர்கள் முற்றிலும் அழித்து போடவேண்டுமென்று சதித்திட்டம் பண்ணினான். ராஜாவும் அமானின் திட்டத்திற்கு அங்கிகாரம் கொடுத்தான். ஒரு நாள் அகாஸ்வேரு ராஜா இரவு வேளையில் தன் படுக்கையில் படுத்திருந்தபோது, அவனுக்குத் தூக்கம் வரவில்லை. நாளாகமப் புஸ்தகத்தை வாசிக்கக் கேட்டான் அப்போது மொர்தெகாய் என்னும் யூதன் ராஜாவின் ஜியான் சதிகாரரிடமிருந்து காப்பாற்றிய சம்பவம் வாசிக்கப்பட்டது. மொர்தெகாயின் பாதுகாப்பில் எஸ்தர் வளர்ந்து வந்தான். தனக்கு உதவி புரிந்த மொர்தெகாயுக்கு அகாஸ்வேரு ராஜா தன்னுடைய ராஜ்யத்தில் உயர்ந்த ஸ்தானத்தில் வைத்து களப்படுத்திளான்

ஆமானின் சதித்திட்டத்தினால் அவனுக்கே தீங்கு உண்டாயிற்று மொர்தெகாயைத் தூக்கிப்போட்டு கொல்வதற்காக ஆமான் ஒரு தூக்குமரம் செய்திருந்தான். அந்த மாதத்தில் அவனும் அவனுடைய பத்துக் குமாரரும் தூக்கிப்போடப்பட்டு கொல்லப்பட்டார்கள்.

கிமு 464 ஆம் வருடத்தில், ராஜாவின் அரண்மனையை சேர்ந்த ஒருவன் அகாஸ்வேரு யை கொன்று போட்டான். அகாஸ்வேருவிற்குப் பின்பு அவனுடைய குமாரன் அர்தசஷ்டா லாங்கிமனஸ்  (Artaxerxes Longimanus)   ராஜாவானான். அகாஸ்வேருவின் ராஜ்யாரத்து நடபடிகள் கோரேசின் ராஜ்யத்திற்கும் அர்தசஷ்டாவின் ராஜ்யத்திற்கும்  நடுவில் உள்ள காலமாக கூறப்பட்டிருக்கிறது.
 அகாஸ்வேரு என்பவன் தரியு ஹிஸ்டாஸ்பிஸின் குமாரனாகிய சஷ்டா என்று கூறுகிறார்கள், (அதாவது  எற்றாவில் கூறப்படும் அர்த்தசஷ்டாவும் எஸ்தரில் கூறப்படும் அகாஸ்வேரும் ஒரேவரே) என்று சிலர் கருதுகின்றனர். ஆனால் இந்த அகாஸ்வேரு இவர்கள் கூறுவதுபோல சஷ்டாவாக இருக்க முடியாது. எஸ்தர் புஸ்தகத்தில் கூறப்பட்டிருக்கும் சம்பவம் சஷ்டாவின் காலத்திற்குப் பல வருஷங்களுக்கு முன்பு நடைபெற்றவையாகும்.
எஸ் 25-7 ஆகிய வசனங்களில் மொர்தெகாயைப் பற்றிக் கூறப்பட்டிருக்கிறது. இவன் எஸ்தரின் உறவினன், மொர்தெகாயின் சிறிய தகப்பனுடைய குமாரத்தி எஸ்தர், இவர்கள் இருவரும் உறவினர்கள், எஸ்தருடைய தாயும், தகப்பனும் மரித்துவிட்டார்கள், எஸ்தர் மொர்தெகாயின் பராமரிப்பில் வளர்ந்து வருகிறாள். யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீம் இருந்த காலத்தில் நேபுகாத்நேச்சார் யூதர்களை சிறை பிடித்துச் சென்றான். அந்தக் கூட்டத்தில் பொர்தெகாயும், அவளோடுகூட எஸ்தரும் பாபிலோன் நேசத்திற்கு சிறைபிடித்துச் செல்லப்பட்டார்கள்.
இந்தச் சிறையிருப்பு எருசலேம் பட்டணம் அழிக்கப்படுவதற்கு முன்பாகவும், யூதாவின் இறுதி சிறையிருப்புக்கு 11 வருஷங்களுக்கு முன்பாகவும் நடைபெற்றது.
(2 இரா 24:1-25:30 ; எரே 25:1) யூதர்கள் பாபியோனில் 70 வரும் சிறைமிப்பில் இருக்கிறார்கள். யோயாக்கின் 4 ஆம் வருஷ ஆட்சிக்காலத்தில் இந்த 70 வருஷத்து சிறையிருப்பு ஆரம்பமாயிற்று. (எரே 25:1,9-11)
மொர்தெகாய் யோயாக்கினோடு பாபிலோனுக்குச் சிறைப்பிடிக்கப்பட்டுச் சென்றபோது அவன் ஒரு வாலிபனாக இருந்திருக்க வேண்டும். மொர்தெகாய் சிறையிருப்புக்காலம் முழுவதும் உயிரோடு இருக்கிறான். எஸ்றா 2:2; நெகே 7:7 ஆகிய வசனங்களில் கூறப்பட்டிருக்கும் நபரும்  இவனும் ஒரே நபராக இருக்கலாம். ஏனெனில் சிறையிருப்புக்குப் போன யூதர்களில் சிலர் 70 வருஷங்களுக்கும் உயிரோடிருந்து, அதன்பின்பு, எருசவேமிற்குத் திரும்பி வந்து, தேவாலயத்திற்கு அஸ்திபாரம் போடுவதைத் தங்கள் கண்களால் பார்த்திருக்கிறார்கள், (எஸ்றா 3:12)
அகாஸ்வேருவின் ராஜ்யாரத்தில் 127 நாடுகள் இருந்ததாகக் கூறப்பட்டிருக்கிறது. தாளி 6:1 ஆவது வசனத்தில் 120 நாடுகள் என்று கூறப்பட்டிருக்கிறது. நாடுகளின் எண்ணிக்கை மாற்றமடைந்து கொண்டே இருக்கும் புதிய மாகாணங்கள் ஆரம்பிக்கப்படும். சில மாகாணங்களோடு மற்ற மாகாணங்கள் சேர்க்கப்படும். ஆகையினால் அகாஸ்வேருவின் ஆட்சிக் காலத்தில் 127 நாடுகள் அல்லது அதற்கு அதிகமாகவோ குறைவாகவோ இருப்பதற்கு  வாய்ப்புள்ளது. தாளி 6:1ஆவது வசனத்தில் மட்டுமே 120 நாடு என்று கூறப்பட்டிருக்கிறது -
அகாஸ்வேரு தன்னுடைய தேசத்தை ஏழு மாகாணங்களாகப் பிரித்தான். ஒவ்வொரு மாகாணத்திற்கும் அதிபதிகளை நியமித்திருந்தான், எஸ்றா 6:13-14 ஆகிய வசனங்களில் பெர்சிய தேசத்தின் எழு அதிபதிகளின் பெயர்களும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஒரு காலத்தில் வலிமை பெற்றிருந்த பாபிலோன் பேரரசு பிற்காலத்தில் மோதியருடைய ஆட்சிக்கு உட்பட்டது பேதியாவின் ராஜாவாகிய தரியு அல்லது அகாஸ்வேரு பாபிலோனை கைப்பற்றினான். தான் புதிதாகச் சேர்த்துக் கொண்ட பாபிலோன் ராஜ்யத்தை 120 பகுதிகளாகப் பிரித்தால், தானி 9:1; தானி 6:1) எஸ்தர் 1:1 ஆவது வசனத்தில் 127 நாடுகள் என்று கூறப்பட்டிருப்பது பெர்சியாவின் எழு மாகாணங்களையும், பாபிலோனின் 120 மாகாணங்களையும் சேர்த்துக் குறிப்பதாக இருக்கலாம்.

சுருக்கமாக கூற வேண்டுமானால்....

பெர்சிய தேசத்தை அர்தசஷ்டா ராஜாவிற்கு முன்பு கோரேசு என்பவர் ஆட்சி புரிந்தார். எருசலேமில் அழிந்து போயிருந்த தேவாலயத்தைத் திரும்பக் கட்டுவதற்கு கோரேசு உத்தரவிட்டார். ஆனால் அந்தக் கட்டுமான வேலைகளைத் தற்காலிகமாக நிறுத்திப் போடுமாறு அர்தசஷ்டா ஆணையிட்டார் எஸ்றா (4:7-23). ஆயினும் தேவாலயத்தை மறுபடியும் கட்டும் வேலைக்கு அவர் பிற்காலத்தில் அனுமதி கொடுத்தார் (எஸ்றா 6:14)

கி.மு. 458 ஆம் வருஷத்தில் அர்தசஷ்டா ராஜா தனது ஏழாவது வருஷ ஆட்சிக் காலத்தில்  தேசத்தில் சிறையிருப்பிலிருந்த இஸ்ரவேல் புத்திரரை எஸ்றாவின் தலைமையின் கீழ் எருசலேம் நகரத்திற்குத் திரும்ப அனுப்பினார் (எஸ்றா 7).

கி.மு. 445 ஆம் வருஷத்தில் அர்தசஷ்டா ராஜா தனது 20ஆவது வருஷ ஆட்சிக்காலத்தில் நெகேமியாவை எருசலேமிற்குத் திரும்ப அனுப்பி, அந்த நகரத்தின் அலங்கங்களை மறுபடியும் கட்டுவதற்கு உதவி புரிந்தார் நெகே 2:3-10; 13:6

செப்துவஜிந்த் பதிப்பிலுள்ள எஸ்தர் புஸ்தகத்தில் அகாஸ்வேரு என்னும் பெயருக்குப் பதிலாக அர்தசஷ்டா என்னும் பெயரே பயன்படுத்தப்பட்டுள்ளது. எஸ்தர் புஸ்தகத்தில் கூறப்பட்டிருப்பவர் முதலாம் சஷ்டா எனவும், இவர் முதலாம் அர்தசஷ்டா லாங்கிமேனசின் (எஸ்றா புத்தகத்தில் கூறப்பட்டுள்ள அர்த்தசஷ்டாவின்) தகப்பனார் எனவும் வேதபண்டிதர்கள் கூறுகிறார்கள். வேறு வார்த்தைகளில் கூற வேண்டுமானால் எஸ்தர் புத்தகத்தில் உள்ள அகாஸ்வேருவின் குமாரன் தான் எஸ்ரா புத்தகத்தில் வரும் அர்தசஷ்ட்டா ஆகும்.

2 மேதிய தேசத்து ராஜா, தரியுவின் தகப்பன். (தானி 9:11)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.