Type Here to Get Search Results !

ஆறாம் வார்த்தை: முடிந்தது 2020

ஆறாம் வார்த்தை: முடிந்தது

இயேசு கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற நாமத்தினால் உங்கள் யாவருக்கும் ஸ்தோத்திரம் இயேசு கிறிஸ்துவின் பாடுகளையும் சிலுவையில் கடைசியாக அவர் பேசின வார்த்தைகளையும் தியானித்துக் கொண்டு இருக்கிற நாம் இப்பொழுது அவர் பேசின ஆறாம் வார்த்தையை தியானிக்க இருக்கிறோம்.

யோவான் 19:30

30 இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார். 

இயேசு கிறிஸ்து கூறிய முடிந்தது எனும் வார்த்தை அவருடைய வெற்றியை பிரகடனம் செய்வதாக இருக்கிறது. யுத்தம் முடிந்தது வெற்றி உண்டாகி விட்டது என்பதே இந்த வார்த்தைக்கான
அர்த்தமாக இருக்கிறது. இயேசு கிறிஸ்துவை பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் வேதனை படுத்தினார்கள். அவர்கள் அவர் மீது விரோதமாக இருந்தார்கள் அவரை சிலுவையில் அறைந்தார்கள். அவர்களது விரோதம் இப்பொழுது முடிந்தது இயேசு கிறிஸ்து பாடுகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது பிதாவின் சித்தம். அதன்படி இயேசுகிறிஸ்து சிலுவையில் தம்முடைய ஜீவனை மரிக்க ஒப்புக் கொடுக்கிறார். இப்பொழுது தேவனுக்கு கீழ்ப்படிந்து பாடுகளை சகிப்பது முடிந்தது. இயேசு தம்முடைய பாடுகளின் ஆரம்பத்தில் பிதாவே உம்முடைய சித்தம் நிறைவேறுவதாக என்று சொல்லி ஜெபித்தார். இப்போது எல்லா பாடுகளும் முடிந்த பிறகு மிகுந்த சந்தோஷத்தோடு முடிந்தது என்று கூறுகிறார்.

இயேசு கிறிஸ்துவின் மரணம் வரைக்கும் என்னென்ன தீர்க்கதரிசனங்கள் வேதத்தில் சொல்லப்பட்டதோ அத்தனை வேத வாக்கியங்களையும் நிறைவேற்றி முடித்துவிட்டார் யூதமத சடங்குகள் யாவும் இப்பொழுது முடிந்தது. இதுவரையிலும் நிழலாய் இருந்த யாவும் முடிந்து போயிற்று. மெய்யான நிஜம் வந்திருக்கிறது பாவம் முடிந்து போயிற்று. மீறுதல் முடிந்து போயிற்று பாவத்திற்காக பலி செலுத்தப்பட்ட தேவாட்டு குட்டியாகிய இயேசுகிறிஸ்துவின் மரணத்தினால் பலிசெலுத்தல் முடிந்து போயிற்று. 

இயேசுக்கிறிஸ்து சிலுவையில் தன்னுடைய ஜீவனை கொடுத்ததினால் முடிவு பெற்ற காரியங்கள்:

1. சிலுவைப் பாடுகள் பற்றி கூறின எல்லா வேத வாக்கியங்களும் நிறைவுபெறுகிறது (சங்கீதம் 22; ஏசாயா 53).

2. சாத்தானின் தோல்வி (யோவான் 12:31-32)

3. யூதருக்கும் புறஜாதியாருக்கும் இடையே இருந்த திரை கிழிந்து போனது (எபேசியர் 2:14-18)

4. தேவனிடம் யாருடைய துணையும் இல்லாமல் நாமே நேரடியாக செல்லும் சிலாக்கியம் கிடைத்தது (எபேசியர் 2:18-19)

5. மரணத்தின் ஆட்சி அகற்றப்பட்டது (ரோமர் 5:12-21)

6. பாவத்தின் வல்லமை அகற்றப்பட்டது (ரோமர் 6:1-23)

7. கிறிஸ்துவின் பரிபூரணம் உண்டானது (எபிரேயம் 2:10)

8. எல்லா பாவங்களுக்கும் ரட்சிப்பு உண்டானது (மத்தேயு 26:28)

9. தேவனுக்கும் மனிதனுக்கும் இடையே சமாதானம் உண்டானது (கொலோசியர் 1:20-22)

10. யாவருக்கும் பாவத்தின் கிரையமாகிய மரணம் செலுத்தப்பட்டது (2கொரிந்தியர் 5:14-21)

11. மனிதர்கள் சாத்தானிடம் இருந்தும் அவன் கட்டிவைத்த கட்டுகளிலிருந்தும் பாவத்திலிருந்தும் விடுவிக்கப்படுகிறார்கள் (1கொரிந்தியர் 6:19-20)

12. தேவனுடைய நீதி திருப்தியாக பூரணமாக விளங்குகிறது (ஆதியாஙமம் 2:17)

13. எல்லோருக்கும் சரீர சுகம் உண்டாகிறது (மத்தேயு 8:14)

14. பரிசுத்த ஆவியானவருடைய அபிஷேகம் பூரண வல்லமை விசுவாசிகளுக்கு கொடுக்கப்படுகிறது (காந்தியார் 3:13-14)

15. பழைய உடன்படிக்கை முடிந்துபோகிறது புதிய உடன்படிக்கை முத்திரை போடப்படுகிறது (கொலோசியம் 2:14-17.

இந்த உலகத்தில் நாம் செய்யவேண்டிய எல்லாவற்றையும் நம்முடைய சார்பாக நின்று இயேசு கிறிஸ்து செய்து முடித்தார். நாம் செய்து முடிக்க வேண்டிய எதுவும் மீதம் வைக்கவில்லை எல்லாவற்றையும் முடித்த படியினால் தான் முடிந்தது என்று கூறினார். நம்முடைய ஆசீர்வாதம் சுகம் பெலன் சகலவற்றையும் சிலுவை மரணத்தினால் ஆயத்தமாக்கி முடித்துவிட்டார் எல்லாவற்றையும் முடித்த இயேசுவை முழுமையாக விசுவாசித்து அவர் சொன்ன பாதையில் நடக்கும் போது எல்லாம் நமதுடையதாகும் அவர் வழி நடப்போம் எல்லாவற்றையும் சுதந்தரிப்போம் ஆமென்.

போதகர் . சார்லஸ் சதீஷ் குமார், WMM இம்மானுவேல் கிறிஸ்தவ சபை, வேப்பங்குப்பம்.

Post a Comment

0 Comments