வெளி 15 ஆம் அதிகாரம் விளக்கம்

வெளி 15 ஆம் அதிகாரம் விளக்கம்

அப்போஸ்தலர் யோவான் வானத்திலே வாதைகளையுடைய எழுதூதரைக் காண்கிறார் (15:1-4) நான்கு ஜீவன்களில் ஒன்று தேவனுடைய கோபாக்கினையால் நிறைந்த பொற்கலசங்கள் ஏழையும் அந்த ஏழுதூதர்களுக்குக் கொடுக்கிறது (வெளி 15:5-8).

ஏழுவாதைகளையுடைய ஏழுதூதர் வெளி 15:1-4

பின்பு, வானத்திலே பெரிதும் ஆச்சரியமுமான வேறொரு அடையாளமாகிய கடைசியான ஏழு வாதைகளையுடைய ஏழு தூதரைக் கண்டேன், அவைகளால் தேவனுடைய கோபம் முடிகிறது. வெளிப்படுத்தின விசேஷம் 15:1

அன்றியும், அக்கினி கலந்த கண்ணாடிக் கடல்போன்ற ஒரு கடலையும், மிருகத்திற்கும் அதின் சொரூபத்திற்கும் அதின் முத்திரைக்கும் அதின் நாமத்தின் இலக்கத்திற்கும் உள்ளாகாமல் ஜெயங்கொண்டவர்கள் தேவ சுரமண்டலங்களைப் பிடித்துக்கொண்டு அந்தக் கண்ணாடிக் கடலருகே நிற்கிறதையும் கண்டேன். வெளிப்படுத்தின விசேஷம் 15:2

 அவர்கள் தேவனுடைய ஊழியக்காரனாகிய மோசேயின் பாட்டையும் ஆட்டுக்குட்டியானவருடைய பாட்டையும் பாடி: சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, தேவரீருடைய கிரியைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள், பரிசுத்தவான்களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள். வெளிப்படுத்தின விசேஷம் 15:3

கர்த்தாவே, யார் உமக்குப் பயப்படாமலும், உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும் இருக்கலாம்? தேவரீர் ஒருவரே பரிசுத்தர், எல்லா ஜாதிகளும் வந்து உமக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்கள், உம்முடைய நீதியான செயல்கள் வெளியரங்கமாயின என்றார்கள். வெளிப்படுத்தின விசேஷம் 15:4

யோவான் வானத்திலே எழு வாதைகளையுடைய ஏழு தூதரைக்காண்கிறார். இது பெரிதும் ஆச்சரியமுமான அடையாளமாய் இருக்கிறது ஏழு தூதர்களால் கோபம்முடிகிறது. ஏழு தூதர்களுக்கும்தேவனுடைய கோபகலசங்கள். இவர்களுக்கு இந்த தூபகலசங்களை பூமியின்மேல் ஊற்றக்கூடிய கட்டளையும்கொடுக்கப்படுகிறது.

கர்த்தராகிய தேவன் அந்திக்கிறிஸ்துவை அழிக்கிறார். பூமியின்மேல் எழுகோபகலசங்களும் ஊற்றப்படும்போது அந்திக்கிறிஸ்து முற்றிலுமாக அழிக்கப்படுவான். ஏழு தூதர்களுக்கும்தேவனுடைய கோபாக்கினையால்நிறைந்த பொற்கலசங்கள்கொடுக்கப்படுவதை கர்த்தருடைய பரிசுத்தவான்கள்சாட்சியாகப்பார்க்கிறார்கள்.


அப்போஸ்தலர் யோவான் வானத்திலே தெரிகிற இன்னும் சில காரியங்களையும் காண்கிறார். அங்கு அக்கினி கலந்த கண்ணாடிக் கடல் போன்ற ஒரு கடல் இருக்கிறது. அந்தக் கண்ணாடிக் கடலருகே கர்த்தருடைய பரிசுத்தவான்கள் தேவசுரமண்டலங்களைப் பிடித்துக்கொண்டு நிற்கிறார்கள் இவர்கள் மிருகத்திற்கும் அதன் சொரூபத்திற்கும் அதன் முத்திரைக்கும் அதன் நாமத்தின் இலக்கத்திற்கும் உள்ளாகாமல் ஜெயங்கொண்டவர்கள்.

கண்ணாடிக் கடலருகே நிற்கிற கர்த்தருடைய பரிசுத்தவான்கள் மோசேயின் பாட்டு பாடுகிறார்கள் மோசே -தேவனுடைய ஊழியக்காரன். பரிசுத்தவான்கள் மோசேயின் பாட்டு பாடும்போது ஆட்டுக்குட்டியானவருடைய பாட்டையும் பாடுகிறார்கள் கர்த்தரையும் அவருடைய கிரியைகளையும் துதித்துப் பாடுகிறார்கள். கர்த்தருடைய கிரியைகள் மகத்துவமும்ஆச்சரியமானவைகள் கர்த்த ர் பரிசுத்தவான்களின் ராஜா. கர்த்தருடைய வழிகள் நீதியும் சத்தியமானவைகள்.

பூமியிலுள்ள குடிகளெல்லோரும்கர்த்தருக்குப் பயப்படவேண்டும். அவருடைய நாமத்தை மகிமைப்படுத்த வேண்டும் தேவனாகிய கர்த்தர் மாத்திரம் பரிசுத்தராயிருக்கிறது எல்லா ஜாதிகளும்கர்த்தருக்கு முன்பாக வந்து தொழுதுகொள்ள வேண்டும். கரத்தருடைய நீதியான செயல்கள் வெளியரங்கமாய் இருக்கிறது கண்ணாடிக் கடலருகே நிற்கிற - பரிசுத்தவான்கள் கர்த்தரைத் துதித்துப் பாடுகிறார்கள். பயபக்தியோடு பாடுகிறார்கள்.

சாட்சியின் கூடாரமாகிய ஆலயம் வெளி 15:5-8

இவைகளுக்குப்பின்பு, நான் பார்த்தபோது, இதோ, பரலோகத்திலே சாட்சியின் கூடாரமாகிய ஆலயம் திறக்கப்பட்டது, வெளிப்படுத்தின விசேஷம் 15:5

அந்த ஆலயத்திலிருந்து ஏழு வாதைகளுடைய அவ்வேழு தூதர்களும் சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரந்தரித்து, மார்பருகே பொற்கச்சைகளைக் கட்டிக்கொண்டு புறப்பட்டார்கள். வெளிப்படுத்தின விசேஷம் 15:6

அப்பொழுது அந்த நான்கு ஜீவன்களில் ஒன்று, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிற தேவனுடைய கோபாக்கினையால் நிறைந்த பொற்கலசங்கள் ஏழையும் அந்த ஏழு தூதர்களுக்குங் கொடுத்தது. வெளிப்படுத்தின விசேஷம் 15:7

அப்பொழுது, தேவனுடைய மகிமையினாலும் அவருடைய வல்லமையினாலும் உண்டான புகையினாலே தேவாலயம் நிறைந்தது, ஏழு தூதர்களுடைய ஏழு வாதைகளும் முடியும்வரைக்கும் ஒருவரும் தேவாலயத்திற்குள் பிரவேசிக்கக் கூடாதிருந்தது. வெளிப்படுத்தின விசேஷம் 15:8

அப்போஸ்தலர் யோவான் வானத்திலே எழுவாதைகளையுடைய ஏழு தூதரைக் காண்கிறார் அங்கு அக்கினி கலந்த கண்ணாடிக் கடல் போன்ற ஒரு கடலையும் காண்கிறார். கர்த்தருடைய பரிசுத்தவான்கள் அந்தக் கண்ணாடிக் கடலருகே நின்று கர்த்தரைத்துதித்துப்பாடுவதைகேட்கிறேன் இவைளுக்குப் பின்பு, பரலோகத்திலே சாட்சியின்  கூடாரமுமாகிய ஆலயம் திறக்கப்படுகிறது.

இது தேவனுடைய மகாபரிசுத்த ஸ்தலமாகும். ஆசரிப்புக்கூடாரத்திலும் தேவாலயத்திலும்
மகாபரிகத்தஸ்தலமே கர்த்தருடைய வாசஸ்தலம் இங்கு கிருபாசனமும், உடன்படிக்கைபெட்டியும் இருக்கிறது. தேவனுடைய வார்த்தையும், உடன்படிக்கைகளும்நிச்சயமாகவே நிறைவேறும். அவருடைய வாக்குத்தத்தங்களும், தீர்க்கதரிசனங்களும் ஏற்ற காலங்களில் நிறைவேறும்.

தேவனுடைய நியாயத்தீர்ப்புக்கள் இப்போது கிரியை நடபிக்க ஆயத்தமாயிருக்கிறது தேவன் தம்முடைய நியாயத்தீர்ப்பைக் கொடுப்பதற்கு முன்பாக, தம்முடைய வார்த்தைகளினாலும், தீர்க்க தரிசன வசனங்களினாலும்
மனுஷரை எச்சரித்துச்சொல்லுகிறார் எச்சரிப்புக்கு பின்பே நியாயத்தீர்ப்பு கொடுக்கப்படுகிறது.தேவனுடைய நியாயத்தீர்ப்பு பரலோகத்திலே சாட்சியின் கூடாரமாகிய ஆலயத்திலிருந்து வெளிப்படுகிறது.

சாட்சியின் ஆலயத்திலிருந்து ஏழுதூதர்களும்புறப்படுகிறார்கள்.இவர்களிடத்தில்ஏழுவாதைகள் கொடுக்கப்பட்டிருக்கிறது.
அவர்கள் பழைய ஏற்பாட்டுக்காலத்தில் பிரதான ஆசாரியர்களைப்போல வஸ்திரம் தயாரித்திருக்கிறார்கள், பிரதான ஆசாரியர்கள்தேவனுடைய மகா பரிசுத்தஸ்தலத்திற்குள் பிரவேசித்து, தேவனிடத்தில்வேண்டுதல்களையும் விண்ணப்பங்களையும் ஏறெடுப்பார்கள். அங்கே தேவனிடமிருந்து பதிலைப்பெற்று 
கொண்டுஸ்தலத்திற்கு வெளியே வந்து, தேவனுடைய வார்த்தையை ஜனங்களுக்கு அறிவிப்பார்கள்.

எழுதூதர்களும் பிரதான ஆசாரியர்களைப்போல ஆலயத்திலிருந்து வெளியே புறப்பட்டு வருகிறார்கள். அவர்கள் ஏழு பெரும் சுத்தமும் பிரகாசமுமான மெல்லியவஸ்திரம்தங்கள் தரித்திருக்கிறார்கள். தங்கள் மார்பருகே பொற்கச்சைகளை கொண்டிருக்கிறார்கள் அவர்கள் உள்ளும் புறமுமாக பரிசுத்தமாய் இருக்கிறார்கள் பரிசுத்தவான்களுக்குரிய பரிசுத்தவஸ்திரம் தரித்திருக்கிறார்கள்.

பரலோகத்தில் தேவனுடைய சிங்காசனத்திற்கு அருகில் நான்கு ஜீவன்கள் இருக்கிறது. இந்த நான்கு ஜீவன்களில் ஒன்று ஏழு பொற் கலசங்களை ஏழு தூதருக்கும் கொடுக்கிறது. அந்தப் பொற் கலசங்களில் தேவனுடைய கோபாக்கினை நிறைந்திருக்கிறது. தேவன் சதாகாலங்களிலும் உயிரோடு இருக்கிறார். தேவனுடைய சத்துருக்களுக்கு விரோதமாக இந்த ஏழு தூதர்களும் யுத்தம் பண்ண போகிறார்கள். இவர்களுக்கு பட்டயமும் வேறு எந்த ஆயுதமும் கொடுக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக தேவனுடைய கோபாக்கினை நிறைந்த ஏழுபொற் கலசங்களை கொடுக்கிறார்கள். இந்த பொற் கலசங்களை இவர்கள் தேவனுடைய சத்துருக்களுக்கு விரோதமாக பயன்படுத்தவேண்டும்.

ஏழு தூதர்களும் ஏழு பொற் கலசங்களை பெற்றுக் கொண்டபோது தேவாலயம் புகையினால் நிரம்பியது இந்தப் புகை தேவனுடைய மகிமையினால் வல்லமையினால் உண்டானது ஆகும். தேவனுடைய ஆலயத்தில் அவருடைய பிரசன்னம் வல்லமை மகிமை நிரம்பியிருக்கிறது. இதனால் ஒருவரும் ஆலயத்திற்குள் பிரவேசிக்க முடியவில்லை.

சத்துருக்களை அளிக்க வேண்டும் என்பது தேவனுடைய சித்தம். இதற்காகவே இந்த ஏழு தூதர்கள் கையிலும் தேவனுடைய கோபாக்கினை நிறைந்த கலசங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது இவர்கள் இந்த கலசத்தை பூமியின் மேல் ஊற்ற வேண்டும். இதனால் வாதை உண்டாகும் ஏழு தூதர்களும் ஏழு கலசங்களை ஊற்றும்போது ஏழு விதமான வாதைகள் உண்டாகும். இந்த வாதங்கள் முடிகிற வரைக்கும் ஆலயத்திற்குள் ஒருவராலும் பிரவேசிக்கும் முடியவில்லை.

தேவன் தாமே இப்போது சபைக்கும் முழு உலகத்துக்கும் தம்முடைய சத்தியமான நீதியின் பிரசங்கத்தை செய்கிறார். தம்முடைய பயங்கரமான கிரியைகளை நீதியினால் வெளிப்படுத்துகிறார். தேவனுடைய கோபாக்கினை ஊற்றப்படும் போது தேவனுடைய ஆலயத்திற்குள் பிரவேசிக்க ஒருவருக்கும் அனுமதி கொடுக்கப்படவில்லை. ஏழு பாதைகள் முடிந்த பின்பு பரிசுத்தவான்கள் தேவனுடைய ஆலயத்திற்குள் பிரவேசிக்க லாம். கர்த்தர் தாமே ஒருவரும் திறக்க கூடாத படி பூட்டுகிறவர் ஒருவரும் பூட்ட கூடாத படி திறக்கிறார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.