அகில உலக மிஷினரி இயக்கம் இம்மானுவேல் கிறிஸ்தவ சபை, வேப்பங்குப்பம், வேலூர். 2019 21 நாள் உபவாச ஜெப தியானங்கள்.
நாள் : 2. தியான தலைப்பு:- மகிமையின் ஐக்கியம்.
போதகர். M.சார்லஸ் சதீஷ் குமார்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிதான நாமத்தினாலே உங்கள் யாவரையும் அன்போடு கூட வாழ்த்துகிறேன். மகிமை என்கிற தலைப்பில் 21 நாள் உபவாச ஜெப வேளையில் ஒவ்வொரு நாளும் நாம் தொடர்ச்சியாக தியானித்து வருகிறோம். இரண்டாம் நாள் ஆகிய இந்த நாளில் நாம் தெரிந்து கொண்ட தலைப்பு மகிமையின் ஐக்கியம் ஆகும்.
ஆதார வசனம்:-
நாம் ஒன்றாயிருக்கிறதுபோல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி, நீர் எனக்குத்தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன். யோவான் 17:22
நாம் ஒன்றாயிருக்கிறதுபோல என்று இயேசு கிறிஸ்து கூறுகிறார். இதன் பொருள் பிதாவாகிய தேவன் குமாரனாகிய கிறிஸ்துவோடும் குமாரனாகிய கிறிஸ்து பிதாவாகிய தேவனோடும் ஐக்கியம் உள்ளவர்களாகவும் பிரிக்க முடியாதவர்களாகவும் இருப்பதைப்போல தேவனுடைய பிள்ளைகள் ஐக்கியத்தோடும் பிரிக்க முடியாத உறவு உள்ளவர்களைப் போலவும் இருக்க வேண்டும் என்ற தேவனுடைய திட்டத்தையு
ம் சித்தத்தையும் விருப்பத்தையும் வெளிப்படுத்துவதாகவே இருக்கிறது.
நாம் மாயம் மற்ற சகோதர சிநேகம் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதே தேவனுடைய விருப்பமாக இருக்கிறது. அவர்களும் ஒன்றாயிருக்கும்படி, நீர் எனக்குத்தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன் என்று இயேசுக்கிறிஸ்து கூறுவதை உற்றுநோக்கினால் நாம் சகோதரர்களாய் ஐக்கியப்பட்டு தேவனுடைய மகிமை அவசியப்படுகிறது. அவர்களும் ஒன்றாயிருக்கும்படி, என்று இயேசு கூறுவதை கவனியுங்கள். நாம் ஐக்கியமாக இருப்பதற்காக தேவனுடைய மகிமை தேவைப்படுவதை அடுத்த வரிகளில் குறிப்பிடுகிறார். நீர் எனக்குத்தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன் இயேசுவின் வார்த்தை பிதாவும் குமாரனும் ஐக்கியப்பட்டு பிரிக்கமுடியாத உறவு உள்ளவர்களாக இருப்பதற்கு பிதா குமாரனுக்கு மகிமையை கொடுத்திருக்கிறார் இயேசு கிறிஸ்து அந்த மகிமையை நமக்கு கொடுக்கிறார். தேவனுடைய மகிமையினால் வரக்கூடிய ஐக்கியமே அசைக்க முடியாதது. அதைத்தான் மகிமையின் ஐக்கியம் என்கிறோம்.
பிதாவின் மகிமை:-
நான் கர்த்தர், இது என் நாமம், என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன். ஏசாயா 42:8
இந்த வசனம் இயேசு கிறிஸ்து நம்மைக் குறித்தும் நாம் ஐக்கியமாய் இருக்கவேண்டும் என்பது குறித்தும் அவர் எவ்வளவு கரிசனை உள்ளவராக இருக்கிறார் என்பதை வெளிப்படுத்துகிறது. பிதாவாகிய தேவன் தம்முடைய மகிமையை குமாரன் தவிர வேறு எவருக்கும் தருவதாக இல்லை அப்படிப்பட்ட மகிமையை குமாரன் நமக்கு கொடுத்திருக்கிறார் என்றால் நாம் ஒருவரிலொருவர் அன்பாகவும் ஐக்கியமாகவும் இருக்கவேண்டும் என்பதில் அவர் எவ்வளவு பிரியமாக இருக்கிறார் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.
நமக்கு ஏன் மகிமையின் ஐக்கியம் தேவைப்படுகிறது..?
இந்தக் கேள்விக்கான பதிலை நாம் தேட வேண்டும் என்றால் பிதா எதற்காக குமாரனுக்கு தம்முடைய மகிமையை கொடுத்தார் என்பதை அறிந்து கொண்டால் இயேசு கிறிஸ்து நமக்கு ஏன் இந்த மகிமையின் ஐக்கியத்தை கொடுத்தார் என்பதை புரிந்துகொள்ள முடியும்.
- பிதாவாகிய தேவன் குமாரனாகிய கிறிஸ்துவோடு ஐக்கியமாய் இருக்க தம்முடைய மகிமையை அவருக்கு கொடுத்தார் அதைப்போலவே குமாரனாகிய கிறிஸ்து நம்மோடு ஐக்கியமாய் இருக்க அவருடைய மகிமையை நமக்கு கொடுத்திருக்கிறார்.
- பிதாவாகிய தேவன் தம்முடைய திட்டங்களையும் சித்தத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக குமாரனுக்கு தம்முடைய மகிமையை கொடுத்தார் குமாரனாகிய கிறிஸ்து பிதா தனக்கு கொடுத்த திட்டங்களையும் சித்தத்தையும் நாம் நிறைவேற்றி முடிக்க வேண்டும் என்பதற்காக அவருடைய மகிமையை கொடுத்திருக்கிறார்.
- பாவத்தில் இருக்கிற ஜனங்களை தேவனிடத்தில் திருப்பும் பணியை குமாரன் நிறைவேற்ற தம்முடைய மகிமையை அவருக்கு கொடுத்தார் இன்றைக்கும் பாவத்தில் இருக்கிற ஜனங்களை கிறிஸ்துவின் இடத்தில் திருப்பும் பணியை செய்வதற்கு குமாரன் தம்முடைய மகிமையை நமக்கு கொடுத்திருக்கிறார்.
- பிதாவாகிய தேவன் தனக்குரிய எல்லாவற்றையும் குமாரனுடைய கரத்தில் கொடுப்பதற்கு தம்முடைய மகிமையை அவருக்கு கொடுத்தார் அதைப்போலவே குமாரனும் தனக்குரிய எல்லாவற்றையும் நமக்கு கொடுக்கும்படி அவருடைய மகிமையை நமக்கு கொடுத்திருக்கிறார்.
இப்படி பல நோக்கங்களுக்காக திட்டங்களுக்காக பிதாவாகிய தேவன் இயேசுகிறிஸ்துவிற்கு கொடுத்திருக்கிறார் அதைப்போலவே இயேசுகிறிஸ்துவும் அதை நமக்கு கொடுத்திருக்கிறார். இவைகளை சிந்திக்கும் பொழுது நாம் நம்முடைய சகோதரர் இடத்தில் அன்பாகவும் ஐக்கியமாகவும் இருக்கவேண்டும் என்பது எத்தகைய கணத்துக்கு உரியது என்பதை அறிந்து கொள்ளலாம். என்னை நேசி உன்னைப்போல் பிறரை நேசி இந்த இரண்டு வரிகளில் ஐக்கியத்தின் முக்கியத்துவம் என்ன என்பதை தேவன் விளக்கியுள்ளார். தேவன் இடத்திலும் பிறர் இடத்திலும் அன்பாகவும் ஐக்கியமாகவும் இருக்க வேண்டும் என்பது தேவனுடைய கற்பனை இந்த கற்பனையை நாம் நிறைவேற்ற வேண்டுமானால் நமக்கு தேவனுடைய மகிமை தேவைப்படுகிறது இந்த தேவ மகிமை மட்டுமே நமக்கு மகிமையான ஐக்கியத்தை பிரிக்கமுடியாத ஐக்கியத்தை உருவாக்கித் தர முடியும்.
பழைய ஏற்பாடு காலத்தில் தேவனுடைய மகிமையை காண வாஞ்சித்தார்கள் சிலர் கண்டும் கறி கூறினார்கள் ஆனால் எவருக்கும் கொடுக்கப்படவில்லை. கிருபையின் காலத்தில் வாழும் நமக்கு அந்த மகிமை கொடுக்கப்பட்டிருக்கிறது.
மகிமையைக் காண வாஞ்சித்த கண்ட தாவீதை குறித்து தேவன் கூறியது:
ஈசாயின் குமாரனாகிய தாவீதை என் இருதயத்துக்கு ஏற்றவனாகக் கண்டேன்; எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் அவன் செய்வான் என்று அவனைக்குறித்துச் சாட்சியுங் கொடுத்தார். அப்போஸ்தலர் 13:22
(இப்படியே பரிசுத்த ஸ்தலத்தில் உம்மைப்பார்க்க ஆசையாயிருந்து, உமது வல்லமையையும் உமது மகிமையையும் கண்டேன். சங்கீதம் 63:2;
கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன், நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சிசெய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன். சங்கீதம் 274)
- தாவீது தன்னை கொல்ல நினைத்த சவுலை நேசித்தான்.
- அவனுக்காக பரிந்து பேசினான்.
- தேவனுக்காக அரிய பெரிய காரியங்களைச் செய்தான்.
- சாட்சியுள்ள வாழ்க்கை வாழ்ந்தான்.
- அவனுடைய பாவத்தை ஊழியக்காரன் வழியாக தேவன் உணர்த்தின போது தன்னை தரை மட்டும் தாழ்த்தி அறிக்கையிட்டு மன்னிப்பு கேட்டான்.
- தான் ஒரு ராஜாவாக இருந்த போதிலும் பெருமை இல்லாதவனாய் இருந்து தேவன் செய்த நன்மைகளை மறவாமல் எப்பொழுதும் அவரை துடித்துக் கொண்டு இருந்தாள்.
தேவனுடைய மகிமையை வாஞ்சித்து கண்ட மோசேயை குறித்து தேவன் கூறியது:
என் தாசனாகிய மோசேயோ அப்படிப்பட்டவன் அல்ல, என் வீட்டில் எங்கும் உண்மையுள்ளவன். எண்ணாகமம் 12:7
(அப்பொழுது அவன்: உம்முடைய மகிமையை எனக்குக் காண்பித்தருளும் என்றான். யாத்திராகமம் 33:18
என் மகிமை கடந்துபோகும்போது, நான் உன்னை அந்தக் கன்மலையின் வெடிப்பிலே வைத்து, நான் கடந்துபோகுமட்டும் என் கரத்தினால் உன்னை மூடுவேன். யாத்திராகமம் 33:22
பின்பு, என் கரத்தை எடுப்பேன். அப்பொழுது என் பின்பக்கத்தைக் காண்பாய். என் முகமோ காணப்படாது என்றார். யாத்திராகமம் 33:23)
- அடிமைத்தனத்தில் இருந்த தன்னுடைய சகோதரர் அனைவரையும் நேசித்தான்
- அவர்களை விடுவிக்க வேண்டும் என்கிற வைராக்கியம் உடையவனாக இருந்தான்
- தன்னுடைய சகோதரரை அளித்துவிட்டு அவனை பெரிய இனமாக மாற்றுவேன் என்று தேவன் கூறியபோது என் வாழ்க்கையை விட எனக்கு பரலோகத்தில் இடம் கிடைப்பதை விட என் சகோதரர்கள் உயிரோடு இருப்பதுதான் நலம் என்று எண்ணினான்.
தேவனுடைய மகிமையை குறித்து கேள்விப்படாத ரூத்தின் அறிக்கையை கவனியுங்கள்:
அதற்கு ரூத்: நான் உம்மைப் பின்பற்றாமல் உம்மைவிட்டுத் திரும்பிப்போவதைக்குறித்து, என்னோடே பேசவேண்டாம். நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன். நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன். உம்முடைய தேவன் என்னுடைய தேவன். ரூத் 1:16
நீர் மரணமடையும் இடத்தில் நானும் மரணமடைந்து, அங்கே அடக்கம்பண்ணப்படுவேன். மரணமேயல்லாமல் வேறொன்றும் உம்மை விட்டு என்னைப் பிரித்தால், கர்த்தர் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர் என்றாள். ரூத் 1:17
தேவனுடைய மகிமையை கண்டவர்களும் கேள்விப்பட்ட அவர்களும் தன்னுடைய ஜனங்களை எவ்வளவாய் நேசித்து இருக்கிறார்கள் ஐக்கியமாய் இருந்திருக்கிறார்கள் நாமும் தேவனுடைய மகிமையை கண்டவர்கள் அல்ல தேவனுடைய மகிமையை பெற்றுக்கொண்டவர்கள் நாம் எவ்வளவாய் சகோதர சினேக தோடும் ஐக்கிய தோடும் இருக்க வேண்டும்.
ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள். கலாத்தியர் 6:2