ஆவியில் -எளிமையுள்ளவர்கள்
பாக்கியவான்கள்; - பரலோகராஜ்யம்
அவர்களுடையது (மத் 5:3).
ஆவியில் எளிமையாக இருப்பதை இந்த உலகம்
கோழைத்தனம் என்றும் பயப்படும் சுபாவம் என்றும் கூறுகிறது. பாவத்தின் விளைவால் தரித்திரம் உண்டாவதாக சிலர் கூறுகிறார்கள். எளிமை ஒரு கண்ணி. இது ஜனங்களை சிறைப்பிடித்துவிடும் என்பது ஒரு சிலருடைய கருத்து. இந்த கருத்துக்களின் மத்தியில் தான் இயேசு கிறிஸ்து ஆவியில் எளிமையுள்ளவர்கள்
பாக்கிய வாருங்கள் என்று அறிவிக்கிறார்.
ஆவியில் எளிமையுள்ளவர்கள் தங்களுக்கு உள்ளவற்றில் திருப்தியாக இருக்கிறார்கள். இயேசு கிறிஸ்துவின் நாமமகிமைக்காக தங்களுடைய உலக ஐசுவரியங்களை வெறுமையாக்குவதற்கு
ஆயத்தமாக இருக்கிறார்கள்
. ஒரு சிலர் இந்த
பூமியில் தரித்திரராக இருக்கலாம். ஆயினும்
அவர்கள் ஆவியில் ஐசுவரியவான்களாக
இருப்பார்கள். ஒரு சிலர் தரித்திரராகவும்
இருப்பார்கள், அதே சமயத்தில் தங்கள்
இருதயத்தில் பெருமையுள்ளவர் களாகவும்
இருப்பார்கள். நாம் இந்த உலகத்தில் ஐசுவரிய
வான்களாக இருந்தாலும், தரித்திரராக
இருந்தாலும் நமது இருதயம் எளிமையுள்ளதாக
இருக்க வேண்டும் தாழ்ந்திருக்கவும் எனக்குத்
தெரியும் வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்
எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியா
யிருக்கவும், பட்டினியாயிருக்கவும், பரிபூரண
மடையவும், குறைவு டவும் பவுல் ஆயத்தமாக
இருந்தது போல நாமும் ஆயத்தமாக
இருக்க வேண்டும். எந்த நிலமையிலிருந்தாலும்
மன ரம்மியமாக இருக்கும் போது நாம்
பாக்கியவான்களாக இருப்போம் (பிலி 4:11- 12 ).
இந்த உலகத்தின் ஐசுவரியங்கள் மீது
நமது அஸ்திபாரத்தை போடக்கூடாது. நமது
இருதயம் எப்போதும் ஐசுவரியத்தை மீது
நோக்கமாக இருக்க கூடாது. இந்த
பூமிக்குரிய ஐசுவரியம் ஒருவரிடத்தில்
இல்லையென்றால் அவர் தரித்திரராக
ஆவதில்லை. அதேசமயத்தில் தேவன்
அவருக்குக் கொடுக்கும் காரியங்களை
பெற்றுக் கொள்ளாவிட்டாலோ அல்லது
தேவனிடத்திலிருந்து பெற்றுக் கொண்டதை
இழந்து போனாலோ அவர் தரித்திரராக
கருதப்படுவார். நாம் இந்த உலகத்தில்
ஐசுவரியவான்களாக இருந்தாலும் நமது
ஆவியில் எளிமையுள்ளவர்களாக இருக்க
வேண்டும். ஏழைகளை உதாசினம் செய்யக்
கூடாது. அவர்கள் மீது இரக்கம் காண்பிக்க
வேண்டும். அவர்களுடைய குறைச்சல்களில்
நாம் உதவி புரிய வேண்டும். இந்த உலகத்தில்
தரித்திரராவதற்கும் நாம் ஆயத்தத்தோடு
இருக்க வேண்டும் தரித்திரராகிய விடுவேன்
என்று நாம் பயப்படக் கூடாது. நமது ஐசுவரியம் நமது சந்தோஷத்தை நிர்ணயம் பண்ணக்கூடாது.
அப்போஸ்தலர் பவுல் கட்டபட்டிருக்கையில்,
அக்காலத்து விசுவாசிகள் அவரைக்குறித்து
பரிதபித்தார்கள். பரலோகத்தில் அதிக
மேன்மையும் நிலையுள்ளதுமான சுதந்திரம்
அவர்களுக்கு உண்டென்று அறிந்து
அவர்கள் தங்கள் ஆஸ்திகளையும்
சந்தோஷமாய் கொள்ளையிடக்கொடுத்தார்கள்
(எபி 10:34). அக்காலத்து விசுவாசிகள்
தங்கள் சந்தோஷத்தை தங்களுடைய ஆஸ்திகள்
மீது கட்டியெழுப்ப வில்லை
ஆகையினால் அவர்களுடைய ஆஸ்திகளை
சந்தோஷமாக கொள்ளையிட கொடுத்தார்கள்.
ஆஸ்தி கொள்ளை போனதினால்
அவர்களுடைய சந்தோஷம் கொள்ளை
போகவில்லை யோபு தன் ஆவியில்
எளிமையுள்ளவர்கள் இருந்தார் அவர்
தரித்திரராக ஆனபோது தேவனை அவர்
தூஷிக்கவில்லை.
ஆவியில் எளிமையுள்ளவர்கள் தங்களுடைய
பார்வையில் தங்களை தாழ்மையானவர்களாகவும் எளிமையான வர்களாகவும் காண்பார்கள். தங்களைப் பற்றி சிந்தித்துப் பார்க்கும் போது தங்களை உயர்த்தாமல் தங்களை
தாழ்த்துவார்கள் தங்களுடைய கிரியைகளையும், எண்ணங் களையும் உயர்த்தாமல் தாழ்த்துவார்கள்
தங்களுடைய பார்வையில் தங்களை சிறு
பிள்ளைகளாகவே பாவிப்பார்கள்.
அப்போஸ்தலர் பவுல் ஆவிக்குரிய
காரியங்களில் ஐசுவரியவானாக இருந்தார்.
ஆவியானவருடைய அனைத்து வரங்களையும்
கற்றுக்கொண்டார். தேவனுடைய கிருபை
நிறைந்தவராக அவர் வல்லமையாக ஊழியம்
செய்தார். ஆயினும் அவர் தன்னுடைய
ஆவியில் எளிமையுள்ளவராகவே இருந்தார்.
தன்னைப்பற்றி சிந்தித்துப் பார்க்கும் போது,
தான் எல்லா அப்போஸ்தலர்களிலும்
சிறியவன் கடைசியானவன் என்று
கருதுகிறார் தன்னால் ஒன்றும் செய்ய முடியாது
என்று அறிக்கையிடுகிறார் எல்லோரையும்
இரட்சிப்பதற்காக அவர்
எல்லோருக்கும் எல்லாமானார். தன்னையே
தாழ்த்தினார். தன்னுடைய ஆவியில் தன்னைப்
பற்றி எளிமையாகவே சிந்தனைபண்ணினாள்.
தேவனை பெரியவராகவும் தன்னை
சிறியவனாகவும் நினைத்தார். இயேசு
கிறிஸ்துவை பரிசுத்தமுள்ளவராகவும் தன்னை
பாவிகளில் பிரதான பாவியாகவும்
அறிக்கையிட்டார். இயேசு கிறிஸ்துவே
எல்லாவற்றிற்கும் எல்லாமுமானவர் என்று
கூறி அவரில்லாமல் தான் ஒன்று மில்லை
யென்று தன்னைத் தாழ்த்துகிறவன்.
ஆவியில்- எளிமையுள்ளவர்கள்
தங்களுடைய சுய நீதியையும், சுய பலத்தையும்
பெருமையாக நினைக்க மாட்டார்கள்.
தேவனுடைய நீதியையும் அவருடைய
கிருபையையும் மேன்மைப் படுத்துவார்கள்.
இவர்களிடத்தில் பெருமையான இருதயம்
இராது. இவர்களுடைய இருதயம் நொறுங்
குண்டதாக இருக்கும். ஆயக்காரன் உலகப்
பிரகாரமாக ஐசுவரியவான். ஆனாலும் தன்
இருதயத்தில் நொறுங்குண்டவனாக
இருக்கிறான் இயேசு கிறிஸ்துவிடம்
அவருடைய கிருபைக்காக கெஞ்சுகிறான்.
இதுவே ஆவியில் எளிமையாக இருக்கும்
சுபாவமாகும். நமக்கு எப்போதுமே
தேவனுடைய கிருபை தேவைப்படுகிறது.
ஆகையினால் நம்மைப்பற்றி நினைக்கும்போது
நாம் ஆவியில் எளிமையுள்ளவர்கள்
இருப்பதாக நினைக்கவேண்டும். தேவனுடைய
சமூகத்தில் நின்று நமது உள்ளத்தில் எந்தவித
பெருமையுமில்லாமல், அவருடைய இரக்கத்
திற்காகவும் கிருபைக்காகவும் கெஞ்சி
மன்றாட வேண்டும்.
விசுவாசிகளிடம் காணப்பட வேண்டிய
சுபாவங்களில் ஆவியில் எளிமையாக
இருப்பதே. முதலாவதாக கூறப்பட்டிருக்கிறது.
உலகத்தின் தத்துவ ஞானிகள் ஏழ்மையை
மேன்மைப் படுத்துவதில்லை. ஆனால்
இயேசு கிறிஸ்துவே ஆவியில் எளிமையாக
இருப்பதையே முதலாவது சுபாவமாக இங்கு
குறிப்பிடுகிறார். எல்லா கிருபைகளும் தாழ்மை
என்னும் அஸ்திபாரத்தின் மீதே கட்டப்
பட்டிருக்கிறது.
உயரமாக கட்ட விரும்புகிறவர்கள்
ஆழமாக அஸ்திபாரம் போடவேண்டும்.
தங்களை உயர்த்துகிறவர்கள் தங்களையே
தாழ்த்தவேண்டும். தன்னை உயர்த்துகிறவன்
தாழ்த்தப்படுவான். தன்னை தாழ்த்துகிறவனோ
உயர்த்தப்படுவான்.
வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே
என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு
இளைப்பாறுதல் தருவேன் என்று இயேசு
கிறிஸ்து நம்மை அன்போடு அழைக்கிறார்.
நமது ஆவியில் நாம் எளிமையுள்ளவர்களாக
இருந்தால்தான் இயேசுகிறிஸ்துவின் அழைப்பு
நமது செவிகளில் கேட்கும். இருதயத்தில்
பெருமையிருந்தால் காதுகள் சத்தியத்திற்கு
அடைத்துக் கொள்ளும்.
ஆவியில் எளிமையுள்ளவர்கள்
பாக்கியவான்கள். இந்த பூமியில் அவர்கள்
பாக்கியவான்கள். தேவன் இவர்களை தமது
கிருபையுள்ள பார்வையினால் பார்க்கிறார்.
இவர்களுக்கு விரோதமாக எந்தத் தீங்கும்
நேரிடாதவாறு தேவன் இவர்களை பாது
காக்கிறார். ஆவியில் பெருமைள்ளவர்கள்
நிதானமிழந்து அலைவார்கள். ஆவியில்
எளிமையுள்ளவர்கள் கர்த்தருடைய சமுகத்தில்
அமைதலாக வாசம்பண்ணுவார்கள்.
பரலோக ராஜ்யம் ஆவியில்
எளிமையுள்ளவர்களுடையது. மகிமையின்
ராஜ்யம் இவர்களுக்காக ஆயத்தம் பண்ணப்
பட்டிருக்கிறது. கிருபையின் ராஜ்யத்தில்
எளிமையுள்ள ஆவிகளுக்கே இடம் உள்ளது.
பெருமையுள்ள ஆவிகள் இந்த பூமியின்
மகிமையினால் சிக்கித் தவிக்கும். உலகத்தின்
ஐசுவரியம் பூமியின் ராஜ்ஜியத்திற்குரியது.
ஐசுவரியம் பூமிக்குரிய மகிமையை தேடு.
ஆவியில் எளிமையுள்ளவர்களோ பரலோக
ராஜ்யத்தின் மகிமையைப் பெற்றுக்
கொள்வார்கள். ஐசுவரியவான்கள்
இருந்தாலும், தங்களுடைய இருதயங்களில்
போதுமென்ற திருப்தி யோடிருந்து இருதயங்களில் எளிமையோடிருக்கிறவர்கள்
பரலோக ராஜ்யத்தை சுதந்தரித்துக் கொள்வார்கள்
கர்த்தருடையபிள்ளைகள் ஐசுவரியவான்களாக
இருந்தாலும் தேவனுடைய ஊழியக்
காரியங்களுக்காக மன உற்சாகமாகவும்
தாராளமாகவும் செலவு செய்வார்கள்.
நன்றி
ReplyDelete