மத்தேயு 28:9 இன் விளக்கம் என்ன? வாழ்க என்பதின் பொருள் என்ன?
அவர்கள் அவருடைய சீஷர்களுக்கு
அறிவிக்கப்போகிறபோது, இயேசு தாமே
அவர்களுக்கு எதிர்பாட்டு வாழ்க என்றார்.
அவர்கள் கிட்டவந்து, அவர் பாதங்களைத்
தழுவி, அவரைப் பணிந்துகொண்டார்கள்
(மத் 28:9)
இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த
நற்செய்தியை சீஷர்களுக்கு அறிவிக்க
ஸ்திரீகள் வேகமாக ஓடுகிறார்கள். அப்போது
இயேசு கிறிஸ்து தாமே அவர்களுக்கு
எதிர்ப்படுகிறார். கர்த்தருடைய தூதனால்
அறிவிக்கப்பட்ட வார்த்தையை இயேசு கிறிஸ்து
உறுதி பண்ணுகிறார். இயேசுகிறிஸ்துவின்
உயிர்த்தெழுந்த நற்செய்தியை இந்த ஸ்திரீகள்
முதலாவதாக தங்கள் காதுகளால் கேட்கிறார்கள். இந்த ஸ்திரீகளே இயே
சு கிறிஸ்து உயிர்த்தெழுந்த பின்பு அவரை முதலாவதாக தங்கள் கண்களால்
காண்கிறார்கள்.
இயேசு கிறிஸ்து பல சமயங்களில் தாம்
வாக்குத்தத்தம் பண்ணியதற்கும் அதிகமாக
நன்மை செய்கிறவர். அவர் ஒருவருக்கும்
தீங்கு செய்கிறவர்கள். கர்த்தருடைய
பிள்ளைகள் அவருக்காக காத்திருக்கும்போது
சோர்ந்து போக கூடாது. ஏற்ற வேளையில்
கர்த்தருடைய கரங்களிலிருந்து நன்மையை
பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசத்தோடு
காத்திருக்க வேண்டும்.
ஸ்திரிகள் இயேசுகிறிஸ்துவின் சீஷர்களுக்கு
அவர் உயிர்த்தெழுந்த நற்செய்தியை அறிவிக்கப்போகிறபோது இயேசுதாமே அவர்களுக்கு எதிர்ப்படுகிறார்.
நாம் தேவனுக்காக கிரியை செய்யும்போது
தேவன் தமது கிருபையினால் நம்மை
சந்திப்பார். நாம் மற்றவர்களுக்கு நன்மை
செய்யும் போது தேவன் நம்மோடு பேசுவார்.
இந்த ஸ்திரீகள் கர்த்தருடைய நற்செய்தியை
அறிவிப்பதற்காக வேகமாக போகிறார்கள்.
அவர்களை இயேசுகிறிஸ்து சந்திக்கிறார்.
இந்த சந்திப்பை ஸ்திரீகள் எதிர்பார்க்கவில்லை. நாம் எதிர்பார்ப்பதற்கும் அதிகமாக
நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து
நமக்கு அருகாமையில் இருக்கிறார். இயேசுகிறிஸ்துவைப் போலவே
அவருடைய வார்த்தையும் நமக்கு
அருகாமையில் இருக்கிறது.
இயேசு கிறிஸ்து இந்து ஸ்திரீகளை
பார்த்து "வாழ்க" என்று கூறுகிறார். வாழ்க
என்னும் வார்த்தைக்கு "எல்லா நலமும்
பெற்று சகல ஆரோக்கியத்தோடும்
இருப்பீர்களாக என்பது பொருளாகும்
இயேசு கிறிஸ்து நம்மை வாழ்த்தும் போது
நமக்கும் நமது சந்தோஷத்திற்கும் அவர் தமது
நன்மையை தருகிறார். இயேசு தமது
சீஷர்களை சிநேகிதர்களே என்று
அழைக்கிறார் அவருடைய பரிசுத்தமான
சமூகத்தில் அவரோடு ஐக்கியமாக இருக்கும்,
அவரை கிட்டிச் சேரவும் நமக்கு சிலாக்கியம்
கொடுக்கிறார். இயேசு கிறிஸ்து நம்மை வாழ்க
என்று வாழ்த்தும்போது அவர் நமக்கு
அருகாமையில் வருகிறார்.
இந்த வசனத்தில் இயேசு கிறிஸ்து ஸ்திரீகளை
"வாழ்க" என்று வாழ்த்தும் கிரேக்க வார்த்தைக்கு "நீங்கள் சந்தோஷமாக இருங்கள், நீங்கள் மகிழ்ந்து களிகூருங்கள்” என்று பொருள். இந்த ஸ்திரீகள் பயத்தோடும் சந்தோஷத்தோடும்
இருக்கிறார்கள். ஆனால் இயேசு கிறிஸ்துவே
இந்த ஸ்திரீகளிடம் பயத்தை அகற்றிப்போட்டு
சந்தோஷத்தினால் நிறைந்திருங்கள் என்று
கூறுகிறார். கர்த்தருக்குள் சந்தோஷப்படும்
போது நம்முடைய பயம் நம்மை விட்டு
அகன்று போகும்.
இயேசு கிறிஸ்து ஸ்திரீகளிடம் பயப்படாதிருங்கள்
என்று கூறுகிறார் கர்த்தருடைய பிள்ளைகள் சந்தோஷத்தோடு மகிழ்ந்து களிகூரு வேண்டுமென்பது கர்த்தருடைய சித்தமாகும். இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் மூலமாக
அவருடைய பிள்ளைகளுக்கு அளவற்ற
ஆனந்த சந்தோஷம் உண்டாகிறது.
இயேசு கிறிஸ்து தங்களை ”வாழ்க"
என்று வாழ்த்தியவுடன் ஸ்திரீகள் அவருக்கு
கிட்ட வருகிறார்கள். அவர் பாதங்களை தழுவி
அவரை பணிந்து கொள் கிறார்கள்.
தங்களுடைய பக்தியையும் மரியாதையையும்
கிறிஸ்துவுக்கு காண்பிக்கிறார்கள்.
கிறிஸ்துவின் மீது தாங்கள் வைத்திருக்கும்
அன்பையும் நேசத்தையும்
வெளிப்படுத்துகிறார்கள். இயேசுகிறிஸ்துவின்
பாதங்களை ஸ்திரீகள் தழுவிக் கொண்டு,
அவரை அதற்குமேல் எங்கும்
போகவிடாதவாறு அவருடைய பாதங்களை
பிடித்துக்கொள்கிறார்கள். ஸ்திரீகளின்
சந்தோஷம் பொங்கி வழிகிறது. இயேசு கிறிஸ்து
உயிர்த்தெழுந்து விட்டார் என்று கர்த்தருடைய
தூதன் அறிவித்தான். அந்த சத்தியம்
இப்போது இயேசுகிறிஸ்து தாமே தமது
பிரத்தியட்சமான தரிசனத்தின் மூலம்
நிரூபித்திருக்கிறார்.