லேவியராகமம் 1:1-2 விளக்கம்

லேவியராகமம் 1:1-2 விளக்கம்


கர்த்தருக்கு பலி செலுத்துவது சம்பந்தமான
பிரமாணங்கள் இந்த அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. பூர்வகாலம் முதலே மனுபுத்திரர் மத்தியில் கர்த்தருக்கு பலிசெலுத்தும் வழக்கம் இருந்து வருகிறது. கர்த்தர் மோசேக்கு
பலிசெலுத்துவது சம்பந்தமான பிரமாணத்தை
சொல்லுகிறார்.

காளை (லேவி 1:3-9). செம்மறியாடு அல்லது வெள்ளாடு (லேவி 1:10-13) காட்டுப்புறா அல்லது புறாக்குஞ்சு (லேவி 1:14-17). நாம் கர்த்தருக்கு எவ்வளவு பெரிய பலியை செலுத்துகிறோம் என்பது முக்கியமல்ல கர்த்தருக்கு பலிசெலுத்துகிறவர்கள் சுத்த இருதயத்தோடு பலி செலுத்த வேண்டும். நாம்
கர்த்தருடைய பிரமாணத்துக்கு கீழ்ப்படிந்து
பலி செலுத்தவேண்டும். கர்த்தர் நம்முடைய
பலிகளை அங்கீகரிக்கும் வண்ணமாக நாம்
அவருக்கு
பலி செலுத்த வேண்டும்

சர்வாங்க தகனபலி லேவி 1:1,2


லேவி 1:1 கர்த்தர் ஆசரிப்புக் கூடாரத்திலிருந்து மோசேயைக் கூப்பிட்டு, அவனை நோக்கி:

லேவி 1:2. நீ இஸ்ரவேல் புத்திரரிடத்தில் சொல்லவேண்டியது என்னவென்றால், உங்களில் ஒருவன் கர்த்தருக்குப் பலி செலுத்த வத்தால் மாட்டு மந்தையிலாவது ஆட்டுமத்தையிலாவது
ஒரு மிருகத்தைத் தெரிந்தெடுத்து, பலி செலுத்த வேண்டும்.

லேவியராகமம் முதல் அதிகாரம் முதல் வசனம் "வாயிக்ரா" என்னும் எபிரெய வார்த்தையோடு ஆரம்பமாகிறது. லேவியராகமத்தையும், யாத்திராகமத்தையும் இந்த வார்த்தை நெருக்கமாக இணைக்கிறது.

பஞ்சாகமத்திலுள்ள ஐந்து புத்தகங்களும்
சேர்ந்து தோரா" என்று அழைக்கப்படுகிறது.
ஐந்து புத்தகங்கள் தோராவின் ஐந்து பகுதிகளாகும்.

லேவியராகமம் புஸ்தகத்தில் கர்த்தரைக்
குறிப்பதற்கு "யெகோவா" என்னும் பெயரைத்
தவிர, வேறு எந்தப் பெயரும் பயன்படுத்தப்பட
வில்லை. லேவியராகமத்தில் யெகோவா என்னும் பெயர் 305 தடவைகளும்
ஆதியாகமத்தில் 204 தடவைகளும் யாத்திராகமத்தில் 388 தடவைகளும் எண்ணாகமத்தில் 393 தடவைகளும்
உபாகமத்தில் 545 தடவைகளும் கர்த்தரைக்
குறிப்பதற்காகப் பயன்படுத்தப் பட்டிருக்கிறது.

கர்த்தர் ஆசரிப்புக்கூடாரத்திலிருந்து
மோசேயைக் கூப்பிடுகிறார். 

பரிசுத்த வேதாகமத்தில், கர்த்தர் மோசேயை கூப்பிட்ட வேறு சில சம்பவங்களும் சொல்லப்பட்டிருக்கிறது.  அதன் விவரம் வருமாறு

  1.  எரிகிற - முட்செடியிலிருந்து இஸ்ரவேலுக்குப் போகுமாறு தேவன் மோசே அழைத்தார் (லேவி 3:4)
  2.  சீனாய் மலையிலிருந்து இஸ்ர வேல் புத்திரரிடம் பேசுவதற்காகக் கூப்பிட்டார் (லேவி 19:31).
  3.  சீனாய் மலையிலிருந்து மலைக்கு மேலே வருமாறு கூறினார் (லேவி 19:20)
  4.  சீனாய் மலையிலிருந்து நெருங்கி வருமாறு கூறினார் (லேவி 24:16).
  5.  ஆசரிப்பு கூடாரத்திலிருந்து ஆராதனை செய்வது பற்றி இஸ்ரவேல் புத்திரரிடம் பேசுவதற்காகக் கூப்பிட்டார் (லேவி 1:1).

மோசே லேவியராகமம் புஸ்தகத்தின்
ஆசிரியர் என்று யூதமார்க்கத்தாரின்
பாரம்பரிய சரித்திரம் சொல்லுகிறது.
நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும்,
லேவியராகமம் புஸ்தகத்தின் ஆசிரியர்
மோசே தான் என்பதை அங்கீரிக்கிறார்.
இதற்கான காரணம் வருமாறு:

  1. விருத்தசேதனம் யோவான் 7:22-23) (லேவி 12:3
  2. குஷ்டரோகியைச் சுத்திகரித்தல்  (லேவி 14:1-32 மத் 8)
  3. சமுகத்தப்பம் (லேவி 24:5-9= மத் 12:4)
  4. பெற்றோரை - சபிக்கிறவர்களுக்கு மரண தண்டனை. (லேவி 20:9 மாற்கு 7:10)

கர்த்தர் ஆசரிப்புக் கூடாரத்திலிருந்து
மோசேயைக் கூப்பிடுகிறார். ஆசரிப்புக்
கூடாரம் ஸ்தாபனம்பண்ணப்பட்டவுடன்,
இதுவரையிலும் சீனாய் மலையிலிருந்து
பேசிய கர்த்தர் இப்பொழுது ஆசரிப்புக்
கூடாரத்திலிருந்து பேசுகிறார் (யாத் 40:33-38)

"ஒருவன் கர்த்தருக்குப் பலி செலுத்த
வந்தால் என்று கர்த்தர் தம்முடைய வார்த்தையை
மோசேக்கு சொல்லுகிறார். பிரமாணங்களில் "ஆல்" என்னும் வார்த்தை பல இடங்களில் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. தேவனுடைய
பிரமாணம் யார் மீதும் கட்டாயமாகத் திணிக்கப்படவில்லை. யாத் 20 உபா 34 ஆகிய அதிகாரங்களுக்கு இடையில் "-ஆல்" என்னும் வார்த்தை 372 தடவை பயன்படுத்தப் பட்டிருக்கிறது.

ஆதி - 1-யாத் 19 ஆகிய 69
அதிகாரங்களில் இந்த வார்த்தை 67
தடவைகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பிரமாணத்திற்குக் கீழ்ப்படியுமாறு யாரும்

கட்டாய படுத்தப்படவில்லை. கீழ்ப்படியாமைக்கு மரண தண்டனை நிச்சயம்.
ஆனால் கிருபையின் காலத்தில், கர்த்தரைச்
சேவிக்க வேண்டுமென்று யாரும்
கட்டாயப்படுத்தப்பட்ட மாட்டார்கள். ஆனால்
கர்த்தரைச் சேவிக்காதோருக்கு நரகம்
நிச்சயம் உண்டு. இரட்சிப்புக்கும், நித்திய
ஜீவனுக்கும் தேவனுடைய வார்த்தைக்குக்
கீழ்ப்படிதல் அவசியம்.

பரிசுத்த வேதாகமத்தில் பலிகளையும்
காணிக்கைகளையும் பற்றிச் சொல்லப் பட்டிருக்கிறது. அவை இரண்டு வகைப்படும். அவையாவன :

  1. சுகந்த -வாசனையான பலிகள் (லேவி 1:1-3:17)
  2. சுகந்த வாசனையல்லாத பலிகள் (லேவி 4:1-6:7)

சுகந்த வாசனையான பலிகளை
மூன்று விதமாக பிரிக்கலாம். அவை யாவன:

  1. சர்வாங்க தகனபலிகள் மிருகஜீவன்கள்
  2. சர்வாங்க தகனபலிகள் போஜனப்பலிகள்
  3. சமாதான பலிகள்

சர்வாங்க தகனபலிகளாக செலுத்தப்படும் மிருகஜீவன்களை மூன்று வகையாக பிரிக்கலாம் (லேவி 1:1-17) அவையாவன

  1. காளைகள் (லேவி 1:1-9)
  2. செம்மறியாடுகளும், வெள்ளாடுகளும் (லேவி 1:10-13)
  3. காட்டுப்புறாக்கள், புறாக்கள் (லேவி 1:14-17)

சர்வாங்க தகனபலிகளாக செலுத்தப்படும் போஜனபலிகளை ஐந்து வகையாக பிரிக்கலாம் அவையாவன (லேவி 2:1-16)

  1. மெல்லிய மாவு, எண்ணெய், தூபவர்க்கம் (லேவி 2:1-3)
  2. புளிப்பில்லா அதிரசங்கள் (லேவி 2:4)
  3. புளிப்பில்லா அடைகள் (லேவி 2:5-6)
  4. பொறிக்கும் சட்டியில் பாகம்பண்ணப்பட்ட 
அடைகள் (லேவி 2:7-9)
  1. முதற்கனிகள் (லேவி 2:12-16)

சமாதான பலிகள் மூன்று வகைப்படும்
அவையாவன: (லேவி 3:1-17)

  1. மாடு, காளை, பசு (லேவி 3:1-6)
  2. ஆட்டுக்குட்டிகள் (லேவி 3:7-11)
  3. வெள்ளாடுகள் (லேவி 3:12-17)

சுகந்த வாசனையல்லாத பலிகளை
இரண்டு பிரிவாகப் பிரிக்கலாம்
அவையாவன : (லேவி 4:1-6:7)

  1. பாவநிவாரண பலிகள் மிருகஜீவன்கள் மட்டும். (லேவி 4:1-35)
  2. குற்றநிவாரண பலிகள் (லேவி 5:1-6:7)

பாவநிவாரண பலிகளாக செலுத்தப்படும் மிருகஜீவன்களை நான்கு பிரிவாகப் பிரிக்கலாம். அவையாவன (லேவி 4:1-35)

  1. ஆசிரியருக்காக காளைகள் (லேவி 4:1-12)
  2. ஜனங்களுக்காக காளைகள் (லேவி 4:13-21)
  3. பிரபுக்கள் அறியாமல் செய்த பாவத்திற்காக இளங்கடா (லேவி 4:22-26)
  4. சாதாரண ஜனங்கள் அறியாமல் செய்த பாவத்திற்காக வெள்ளாடுகளின் பழுதற்ற பெண்குட்டி (லேவி 4:27-35)

குற்றநிவாரண பலி களை ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவையாவன (லேவி 5:1-6:7)

  1. ஐசுவரியவான் களுக்குக் குற்றநிவாரண பலியாக ஆடுகளிலாவது, வெள்ளாடுகளிலாவது ஒரு பெண்குட்டி (லேவி 5:1-6)
  1. ஏழைகளுக்குக் குற்றநிவாரண பலியாக இரண்டு காட்டுப்புறாக்கள், இரண்டு புறா குஞ்சுகள் - ஒன்று பாவநிவாரண பலியாகவும், மற்றொன்று சர்வா சர்வாங்க தகனபலியாக வும். (லேவி 5:7-10 )
  1. மிகவும் ஏழைகளுக்குக் குற்றநிவாரண பலியாக ஒரு எப்பா அளவான மெல்லிய மாவிலே பத்தில் ஒரு பங்கு (லேவி 5:11-13)
  1. அறியாமல் பாவத்திற்குட்பட்டவனுக்குக் குற்ற நிவாரண பலியாக பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவும், அவன்மீது சுமத்தப்படும் சேக்கல் கணக்கு அபராதமும் (வெள்ளி ). (லேவி 5:14-19)
  1. திருடுகிறவனுக்குக் குற்ற நிவாரண பலியாகத் திருட்டின் மதிப்புக்குச் சரியான பழுதற்ற ஆட்டுக்கடாவும், அவன்மீது சுமத்தப்படும் சேக்கல் கணக்கு அபராதமும் (வெள்ளி) (லேவி 6:1-7)

பரிசுத்த வேதாகமத்தில் பலிகளை பற்றி
ஒரு சில செய்திகள் சொல்லப்பட்டிருக்கிறது
அதன் விவரம் வருமாறு பலிகளில் இரண்டு வகைகள் உள்ளன.

  1.  சுகந்த வாசனையான பலிகள் 
  2.  சுகந்த வாசனையல்லாத பலிகள்.

பலிகளைச் செலுத்துகிறவர்களில்
இரண்டு பிரிவினர் உள்ளனர். 

  1. தனிநபர்கள் (லேவி 1:210; லேவி 2:1; லேவி 3:11
  2.  சபையார் எல்லோரும் (லேவி 4:13-21; லேவி 16:1-34; எண் 19)

பலிகளைச் செலுத்துவதற்கு இரண்டு
விதங்கள் உள்ளன. 

  1.  மனோற்சாகம் (லேவி 1:1-3:17) 
  2. 2. கட்டளையிடப் பட்டிருக்கிற பிரகாரம் (லேவி 4:1-6:7)

பரிசுத்த வேதாகமத்தில் பலிகளை
செலுத்தவேண்டிய விதம் பற்றியும்
சொல்லப்பட்டிருக்கிறது. அதன் விவரம்
வருமாறு

  1. சர்வாங்க தகனபலிகளை முழுவதுமாகக் தகிக்க வேண்டும். (லேவி 1:5-17; லேவி 6:8-12) அதன் ஒரு பகுதி ஆசாரியருடைய பாகமாக இருந்தால் அதை தரிக்கக்கூடாது.
  2. போஜனப்பலிகளின் ஒரு பகுதி தகனிக்கப்படவேண்டும் தகனிக்கப்படாத பகுதி ஆசாரியருக்குரியது (லேவி 2:1-16; லேவி 6:14-18)
  3. ஆசாரியருக்குரிய போஜனப்பலிகள்
முழுவதுமாகத் தகனிக்கப்பட வேண்டும்.
(லேவி 6:19-23)
  1. சமாதானப் பலிகளின் ஒரு பகுதி சுட்டெரிக்க பட வேண்டும் அதின் ஒரு பகுதியை ஆசாரியரும் பலி செலுத்துகிறவரும் புசிக்க வேண்டும். (லேவி 3:1-17; லேவி 7:11-2128-38)
  2. பாவநிவாரண பலியைப் பாளயத்திற்கு உள்ளே ஒரு பகுதியையும், பாளயத்திற்குப் புறம்பே ஒரு பகுதியையும் சுட்டெரிக்க வேண்டும். (லேவி 4:1-35; லேவி 6:24-30; லேவி 8:14-17)
  3. குற்ற - நிவாரண பலியின் ஒரு பகுதியைச் சுட்டெரிக்க வேண்டும் மற்றொரு பகுதியை புசிக்க வேண்டும். (லேவி 5:1-6:7; லேவி 7:1-10)

பரிசுத்த வேதாமகத்தில் பலியாக
செலுத்தப்படும் மிருகஜீவன்களை பற்றியும்
சொல்லப்பட்டிருக்கிறது. அதன் விவரம்
வருமாறு

  1. மந்தை (லேவி 1:1-9; லேவி 16:1-34 ; எண் 19)
  2. செம்மறியாடுகளும், ஆடுகளும் (லேவி 1:1-13; லேவி 3:7-11)
  3. வெள்ளாடுகளும், அதன் குட்டிகளும் (லேவி 1:10-13; லேவி 4:27-35)
  4. புறாக்கள் (லேவி 5:7-10; ஆதி 15:9)
  5. காட்டுப்புறாக்கள் (லேவி 5:7-10)

பரிசுத்த வேதாமகத்தில் காணிக்கையாக செலுத்தப்படும் மற்ற பொருட்களைப்பற்றியும்
சொல்லப்பட்டிருக்கிறது அதன் விவரம் வருமாறு

  1. மெல்லிய மாவு (லேவி 2:1-4)
  2. எண்ணெயும், தூபவர்க்கமும் (லேவி 2:1-4)
  3. வேவிக்கப்பட்ட அடைகளும், எண்ணெயில் பொரிக்கப்பட்ட அடைகளும் (லேவி 2:49)
  4. விளைச்சலின் முதற்கனிகள் (லேவி 2:12-16)
  5. வெள்ளி (லேவி 5:15)
  6. பானங்கள் (லேவி 23:13 லேவி 29:40-41)
  7. வஸ்துக்கள் (லேவி 27:1-34)

பலியாக செலுத்தப்படும் மிருகங்களைப்பற்றிய பிரமாணங்களையும் கர்த்தர் சொல்லியிருக்கிறார். அதன் விவரம் வருமாறு

  1. சுத்தமான மிருகஜீவன்களாக இருக்க வேண்டும். (ஆதி 8:20)
  2. பழுதற்ற மிருகஜீவன்களாக இருக்க வேண்டும். (லேவி 22:18-25)
  3. குறைந்தபட்சம் எட்டு வயது நிரம்பியதாக இருக்க வேண்டும். (லேவி 22:27; லேவி 23:12)


Pastor. Charles Sathish Kumar
ICA WMM Veppamkuppam
Vellore

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.