நேபுகாத்நேச்சார் சொப்பனத்தில் கண்ட சிலை

நேபுகாத்நேச்சார் சொப்பனத்தில் கண்ட சிலை
தானியேல் 2ம் அதிகாரம்

Image

தானி 2:27-30.
உம்முடைய சொப்பனமும் உமது படுக்கையின்மேல் உம்முடைய தலையில் உண்டான தரிசனங்களும் என்னவென்றால்: ராஜாவே, உம்முடைய படுக்கையின்மேல் நீர் படுத்திருக்கையில், இனிமேல் சம்பவிக்கப்போகிறதென்ன என்கிற நினைவுகள் உமக்குள் எழும்பிற்று. அப்பொழுது மறைபொருள்களை வெளிப்படுத்துகிறவர் சம்பவிக்கப்போகிறதை உமக்குத் தெரிவித்தார். உயிரோடிருக்கிற எல்லாரைப்பார்க்கிலும் எனக்கு அதிக ஞானம் உண்டென்பதினாலே அல்ல. அர்த்தம் ராஜாவுக்குத் தெரியவரவும், உம்முடைய இருதயத்தின் நினைவுகளை நீர் அறியவும், இந்த மறைபொருள் எனக்கு வெளியாக்கப்பட்டது.








தானி 2:31. ராஜாவே, நீர் ஒரு பெரிய சிலையைக் கண்டீர். அந்தப் பெரிய சிலை மிகுந்த பிரகாசமுள்ளதாயிருந்தது. அது உமக்கு எதிரே நின்றது. அதின் ரூபம் பயங்கரமாயிருந்தது.

Image

தானி 2:32 அந்தச் சிலையின் தலை பசும்பொன்னும், 

Image

பாபிலோன் இராஜ்யம் - கி.மு 600
நேபுகாத்நேச்சார்


தானி 2:37-38 ராஜாவே, நீர் ராஜாதி ராஜாவாயிருக்கிறீர். பரலோகத்தின் தேவன் உமக்கு ராஜரீகத்தையும் பராக்கிரமத்தையும் வல்லமையையும் மகிமையையும் அருளினார். சகல இடங்களிலுமுள்ள மனுபுத்திரரையும் வெளியின் மிருகங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும் அவர் உமது கையில் ஒப்புக்கொடுத்து, உம்மை அவைகளையெல்லாம் ஆளும்படி செய்தார். பொன்னான அந்தத் தலை நீரே.தானி 2:32 அதின் மார்பும் அதின் புயங்களும் வெள்ளியும், 

தானி 2:32 அதின் மார்பும் அதின் புயங்களும் வெள்ளியும்,

Image

மேதிய பெர்சிய இராஜ்யம் - கி.மு 450
கோரேஸ், தரியு


தானி 2:39 உமக்குப்பிறகு உமக்குக் கீழ்த்தரமான வேறோரு ராஜ்யம் தோன்றும்.

தானி 2:32 அதின் வயிறும் அதின் தொடையம் வெண்கலமும், 

Image

கிரேக்க இராஜ்யம் - கி.மு 300
மகா அலெக்ஸாண்டர்


தானி2:39.பின்பு பூமியெல்லாம் ஆண்டுகொள்ளும் வெண்கலமான மூன்றாம் ராஜ்யம் ஒன்று எழும்பும்.

தானி 2:33 அதின் கால்கள் இரும்பும், 

Image

ரோம் இராஜ்யம் - கிறிஸ்துவின் காலம்
ராஜன் (சீசர்)


தானி 2:40. நாலாவது ராஜ்யம் இரும்பைப்போல உரமாயிருக்கும். இரும்பு எல்லாவற்றையும் எப்படி நொறுக்கிச் சின்ன பின்னமாக்குகிறதோ, அப்படியே இது நொறுக்கிப்போடுகிற இரும்பைப்போல அவைகளையெல்லாம் நொறுக்கித் தகர்த்துப்போடும்.

தானி 2:33 அதின் பாதங்கள் பாதி இரும்பும் பாதி களிமண்ணுமாயிருந்தது. 

Image

இந்த இராஜ்யம் இன்னும் ஏற்படுத்தப்படவில்லை
இப்போதைய EU நாடுகள்
(பத்து விரல்களும் ஒன்றோடு ஒன்று ஒட்டாது)


தானி2:41-43 பாதங்களும் கால்விரல்களும் பாதி குயவனின் களிமண்ணும், பாதி இரும்புமாயிருக்க நீர் கண்டீரே, அந்த ராஜ்யம் பிரிக்கப்படும். ஆகிலும் களிமண்ணோடே இரும்பு கலந்திருக்க நீர் கண்டபடியே இரும்பினுடைய உறுதியில் கொஞ்சம் அதிலே இருக்கும். கால்விரல்கள் பாதி இரும்பும் பாதி களிமண்ணுமாயிருந்தது என்னவென்றால், அந்த ராஜ்யம் ஒருபங்கு உரமும் ஒருபங்கு நெரிசலுமாயிருக்கும். நீர் இரும்பைக் களிமண்ணோடே கலந்ததாகக் கண்டீரே, அவர்கள் மற்ற மனுஷரோடே சம்பந்தங்கலப்பார்கள். ஆகிலும் இதோ, களிமண்ணோடே இரும்பு கலவாததுபோல அவர்கள் ஒருவரோடொருவர் ஒட்டிக்கொள்ளாதிருப்பார்கள்.

தானி2:34-35. நீர் பார்த்தக்கொண்டிருக்கும்போதே, கைகளால் பெயர்க்கப்படாத ஒரு கல்

Image

கல் இராஜ்யம்
இயேசு கிறிஸ்துவின் ஆட்சி


தானி2:34-35. நீர் பார்த்தக்கொண்டிருக்கும்போதே, கைகளால் பெயர்க்கப்படாத ஒரு கல் பெயர்ந்து உருண்டுவந்தது. அது அந்தச் சிலையை இரும்பும் களிமண்ணுமாகிய அதின் பாதங்களில் மோதி, அவைகளை நொறுக்கிப்போட்டது. அப்பொழுது அந்த இரும்பும் களிமண்ணும் வெண்கலமும் வெள்ளியும் பொன்னும் ஏகமாய்நொறுங்குண்டு, கோடைகாலத்தில் போரடிக்கிற களத்திலிருந்து பறந்துபோகிற பதரைப்போலாயிற்று. அவைகளுக்கு ஒரு இடமும் கிடையாதபடி காற்று அவைகளை அடித்துக்கொண்டுபோயிற்று. சிலையை மோதின கல்லோவென்றால், ஒரு பெரிய பர்வதமாகி பூமியையெல்லாம் நிரப்பிற்று.




தானி2:44. அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார். அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை. ஒரு கல் கையால் பெயர்க்கப்படாமல் மலையிலிருந்து உருண்டுவந்து, இரும்பையும் வெண்கலத்தையும் களிமண்ணையும் வெள்ளியையும் பொன்னையும் நொறுக்கினதை நீர் கண்டீரே, அப்படியே அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.

ஆமென்!!!


தலை - பசும்பொன் : பாபிலோனின் மகிமை, வல்லமை, பலம் ஆகியவற்றைக் குறிக்கிறது. இதன் பிரதான அரசன் நேபுகாத் நேச்சார். பெல்ஷாத்சார் என்பவர்கள். பாபிலோன் சாம்ராஜ்யத்தின் காலம் கி.மு 606-538. நோபுகாத்நேச்சாரின் சர்வாதிகாரமும், அகந்தையும், வீழ்ச்சியும், மறுபடியும் சிங்காசனத்தைப் பெறுதலும் (தானி 4:27-37). பாபிலோன் அரசு பெல்ஷாத்சாரின் காலத்தில் முடிவடைந்தது, அவன் மேதியா அரசனால் தரியுவால் கொல்லப்பட்டான் (தானி 5:17-31).

மார்பும் புயங்களும் - வெள்ளி : இது பாபிலோன் பேரரசுக்குப் பின் வந்த மேதியா, பெர்ஷியா பேரரசைக் குறிக்கிறது. பொன்னாலான பாபிலோனைவிட சற்று மட்டமானது. பொன்னின் அடர்த்தி எண் 19:3, வெள்ளியின் அடர்த்தி எண் 10:5 மட்டுமே. பாபிலோனைவிட மதிப்பிலும் பலத்திலும் சற்றுக் குறைந்தது. பிரதான அரசர்கள் மேதியனான தரியுவும், பெர்ஷியனான கோரேசும் ஆவர். தரியு பேரரசனாயினும், நேபுகாத் நேச்சாரைப் போன்று, தன்னிச்சையாகச் செய்யும் சர்வாதிகாரமுடையவனல்ல. மேதிய பெர்ஷியாவின் காலம் கி.மு 538-330. இது சீர்குலைந்தபின் கிரேக்கப் பேரரசு தோன்றிற்று.

வயிறும் தொடையும் - வெண்கலம் : இது உறுதியானதும் தீவிர வெற்றியடைந்ததுமான கிரேக்க சாம் ராஜ்ஜியத்தைக் குறிக்கிறது. அதன் புகழ் பெற்ற ஒரே அரசன் மகா அலெக்சாண்டர். இவனுடைய மகிமையும், வெற்றியும் இவனது சிறந்த படை பலத்தையும், தலைவர்களையும் காரணமாய்க் கொண்டிருந்தது. வெள்ளியின் அடர்த்தி எண் 8:8. ஆகவே கிரேக்க பேரரசின் காலம் கி.மு 330-323. அலெக்சாண்டர் மகத்தான வெற்றி பெற்று பாபிலோனை நோக்கி வரும்போது மரணமடைந்தான். அவன் மரித்த பின் அவனது விஸ்தாரமான இராஜ்யம் அவனது நான்கு சேனைத் தலைவரால் பிரித்துக் கொள்ளப்பட்டு, பின்னான காலத்தில் ரோமப் பேரரசால் விழுங்கப்பட்டது. கிரேக்க பேரரசு விழுந்தபின் சில காலம் பேரரசு எதுவும் தோன்றவில்லை. கி.மு 63இல் ரோம தலையெடுக்க ஆரம்பித்து, பின் பேரரசாக மாறியது.

கால்கள் - இருப்பு : இது ரோமப்பேரரசைக் குறிக்கிறது. ரகத்தில் வெண்கலமான கிரேக்க அரசைக் காட்டிலும் சற்று குறைந்திருந்தும் உறுதியும், கொடுமையுமாயிருந்தது. இரும்பின் அடர்த்தி எண் 7:8. இதன்அரசர்களான சீஷர்கள் மக்களால் தெரிந்தெடுக்கப்பட்டவர்கள். காலா காலங்களில் அவர்களது இராஜ்ஜியம் சீர்குலைந்து பிரி;ந்து போயிற்று. வேறெந்த பேரரசும் வேதத்தில் இதற்குப் பின் கூறப்படவில்லை.


பாதங்களும் 10 விரல்களும் : பாதி இரும்பும் பாதி களிமண்ணும் : இவை கிருபை யுகத்தில் இறுதி காலத்தில் வரவிருக்கும் பத்து இராஜ்ஜியங்களின் கூட்டு ஆட்சியைக் குறிக்கிறது. இந்நாடுகள் முன் காலத்தில் ரோமப் பேரரசிற்குள்ளிருந்த நாடுகளாகும். இரும்பும் களிமண்ணும் இவற்றின் ஒரு சில நாடுகளின் உறுதித்தன்மையையும், மற்றவற்றின் நெரிசல் தன்மையையும் காட்டுகிறது. இந்த பத்து நாடுகளிலும் இருந்து அந்திக்கிறிஸ்து தோன்றுவான். இப்பத்து நாடுகள் தற்காலத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஐரோப்பிய பொருளாதார சபை (European Economic Community) ஆனால் அந்திக்கிறிஸ்து எழும்பும்போது அது 10 நாடுகளின் கூட்டமாகவே இருக்கவேண்டும். (எந்த நாடு கூட்டப்படும் எந்தநாடு தள்ளப்படும் என்று தெரியாது)




கைகளால் பெயர்க்கப்படாத கல் : இது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைக் குறிக்கிறது. நேபுகாத்நேச்சார் இந்த உலோகச் சிலையைக் கனவில் கண்டபோது கைகளால் பெயர்க்கப்படாத கல் ஒன்று உருண்டு வந்து முழு சிலையையும் நொறுக்கிப்போட்டு பின் அந்தக் கல் பெரிதாகி பூமியை நிரப்பினதாகவும் கண்டான். அந்திக்கிறிஸ்து 10 இராஜ்ஜியத்தின் கூட்டின் தலைவனால் இவ்வுலகை 7 ஆண்டுகள் ஆண்டு முடியும்போது இயேசு கிறிஸ்துவாகிய கல் பரலோகத்திலிருந்து தமது பரிசுத்தவான்களோடு இறங்கி வந்து அந்தி கிறிஸ்துவையும் எல்லா உலக அரசுகளையும் அழித்துத் தாமே இந்த உலகம் முழுவதையும் ஆளுவார். அதோடு மனித ஆளுகை முடிந்து தெய்வீக ஆட்சி தொடங்கும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.